May 01, 2021

பதிவு-6-இடுக்கண்- வருங்கால் நகுக- திருக்குறள்.

 பதிவு-6-இடுக்கண்-

வருங்கால் நகுக-

திருக்குறள்.

 

மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

சஞ்சித கர்மா

பிராரப்த கர்மா

ஆகாம்ய கர்மா

என்ற மூன்று கர்மாக்களும்

எப்படி இயற்கையாக

தானாகவே கழிகிறதோ

அதைப் போல

நாமும் அந்த மூன்று

கர்மாக்களை கழிப்பதற்குரிய

செயல்களைச் செய்து

மூன்று கர்மாக்களையும்

நாம் நமது

செயல்களின்

மூலம் கழிக்கலாம்.

 

நாம் நம்முடைய

செயல்களின் மூலம்

சஞ்சித கர்மா

பிராரப்த கர்மா

ஆகாம்ய கர்மா

ஆகிய மூன்றையும்

கழிக்க வேண்டும்

என்றால்

அதற்கு ஞானம்

என்பது வேண்டும்.

 

ஞானம் என்பது

இருந்தால் மட்டுமே

நம்முடைய

வாழ்க்கையில்

வெளிப்படும்

மூன்று கர்மாக்களான

சஞ்சித கர்மா

பிராரப்த கர்மா

ஆகாம்ய கர்மா

ஆகியவற்றை

நாமே நம்முடைய

செயல்களின் மூலம்

கழிக்க முடியும்

 

ஞான நிலையில்

கர்மாக்களைக் கண்டறிந்து,

கர்மாக்களை

கழிக்கும் உபாயமறிந்து,

கர்மாக்களைக் கழித்து,

சமாதி நிலையை

அடைந்து

அந்த நிலையில்

கர்மாக்களைக் கழித்து,

இறுதியாக

ஆன்மாவை தூய்மை

அடையச் செய்தால்

ஆன்மாவானது

முக்தி என்ற

மோட்ச நிலையை

அடைகிறது.

அதாவது மனிதனுடைய

ஆன்மாவில்

பதிந்துள்ள

கர்மாக்கள் கழிந்து

ஆன்மாவானது

தூய்மையடைந்து

முக்தி என்ற

மோட்ச நிலையை

அடைய வேண்டும்

என்றால்

ஆன்மாவானது

ஞானம்; சமாதி;

என்ற வரிசையில்

சென்றால்

தான் முடியும்.

 

அதற்கு முதலில்

ஞானம் சமாதி

முக்தி என்ற மோட்சம்

என்றால் என்ன

என்பது

தெரிந்திருக்க வேண்டும்.

 

கடவுள் நமது

சிரசில் எந்த

இடத்தில் இருக்கிறார்?

கடவுளை

அடையக்கூடிய வழி எது?

கடவுளை

அடைவதற்காக

பயன்படுத்தக்

கூடியது எது?

என்பதை உணர்ந்து

யார் ஒருவர்

பயன்படுத்துகிறாரோ ?

அவர் ஞானம்

அடைந்து விட்டார்

என்று பொருள்.

 

நமது சிரசில்

கடவுள் இருக்கக்கூடிய

இடத்தை அறிந்து ;

கடவுளை அடையக்கூடிய

வழியை அறிந்து ;

கடவுளை அடையக்கூடிய

பொருளைப் பயன்படுத்தி ;

செயலைச் செய்யும் போது

தேவைப்படும் நேரத்தில்

கடவுளை தொட்டு

தொட்டு வந்து

விடுவதற்குப்

பெயர் சமாதி.

 

சமம் + ஆதி = சமாதி

ஆதி நிலை என்று

சொல்லப்படக்கூடிய

இறைவனுடைய

நிலைக்குச் சமமாக

மனிதன் உயர்வது

என்று பொருள்.

 

மனிதனுடைய ஆன்மாவானது

இறைவனுடன்

இரண்டறக்

கலக்கும் போது

மனிதனுடைய

ஆன்மாவானது

இறைவனாகவே

மாறி விடுகிறது ;

அது அதுவாகவே

மாறி விடுகிறது ;

எது எங்கிருந்து

வந்ததோ ?

அது அதுவாகவே மாறி

அதன் நிலையை

அடைந்து விடுகிறது. ;

 

மனிதனுடைய

ஆன்மாவானது

தன்னுடைய நீண்ட

பயணத்தை

முடித்துக் கொள்கிறது ;

தன்னுடைய பிறவிச்

சுழலை நிறுத்திக்

கொள்கிறது ;

இதனால்

மனிதனுடைய ஆன்மா

இறவா நிலையை

அடைந்து விடுகிறது ;

ஆன்மா

இறவா நிலையை

அடைந்து விடும் போது

இனி பிறவா நிலையை

அடைந்து விடுகிறது.

 

இப்படித் தான்

மனிதனுடைய

ஆன்மாவானது

தன்னுடைய

கர்மாக்களைக் கழித்து

இறைவனுடன்

இரண்டறக் கலந்து

இறைவனாகவே

மாறி விடுகிறது ;

இறவா நிலையையும் ;

பிறவா நிலையையும் ;

அடைந்து விடுகிறது.

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

------01-05-2021

//////////////////////////////////////

No comments:

Post a Comment