May 01, 2021

பதிவு-7-இடுக்கண்- வருங்கால் நகுக- திருக்குறள்.

 பதிவு-7-இடுக்கண்-

வருங்கால் நகுக-

திருக்குறள்.

 

மனிதன் ஞானம்,

சமாதி, முக்தி என்ற

மோட்ச நிலை என்ற

ஆன்மீகத்தின் மூன்று

உயர் நிலைகளை

அறிந்தால் மட்டுமே

மனிதன்

இறவா நிலையையும் ;

பிறவா நிலையையும் ;

அடைய முடியும்

 

ஞானம் என்றால் என்ன?

சமாதி என்றால் என்ன?

முக்தி என்றால் என்ன ?

என்பதை எளிதான

உதாரணம் மூலம்

தெரிந்து கொள்ளலாம்.

 

ஒரு கிணற்றில்

தண்ணீர் இருக்கிறது

என்பது தெரிந்து

அந்த கிணற்றுக்குள்

எட்டிப்பார்த்து

கிணற்றுக்குள்

தண்ணீர் இருக்கிறது

என்பதை

அறிந்து கொண்டால்

அதற்கு பெயர் ஞானம்.

 

கிணற்றில்

வாளியை விட்டு

அந்த தண்ணீரை எடுத்து

தேவைப்படும்

நேரத்தில் அருந்தினால்

அதற்குப் பெயர் சமாதி.

 

நாமே கிணற்றில் விழுந்து

நாமே தண்ணீராகவே

மாறி விடுவது

முக்தி அல்லது

மோட்சம் எனப்படும்.

 

இது தான்

ஞானம் ;  சமாதி ;

முக்தி அல்லது மோட்சம் ;

என்பதற்கான விளக்கம்.

 

கர்மா என்றால்

என்ன என்பதையும்,

கர்மாவின் வகைகள்

எவை என்பதையும்,

கர்மா நம்முடைய

வாழ்க்கையில் எத்தகைய

விளைவுகளை

ஏற்படுத்துகிறது என்பதையும்,

கர்மா நம்முடைய

வாழ்க்கையில் எப்போது

வெளிப்படுகிறது என்பதையும்,

ஒவ்வொரு கர்மாவும்

எவ்வளவு காலம்

நம்முடைய வாழ்க்கையில்

பாதிப்புகளை உண்டாக்கும்

என்பதையும்,

எவ்வளவு நாட்கள்

கர்மா நம்முடைய

வாழ்க்கையில்

நீடிக்கிறது என்பதையும்,

கர்மா எப்போது

ஆரம்பித்து எப்போது

முடிகிறது என்பதையும்,

மூன்று கர்மாக்களில்

எந்த கர்மா

தன்னுடைய பலனைக்

கொடுக்கிறது என்பதையும்,

கர்மாவின் கால நேரம்

எவ்வளவு என்பதையும்,

யார் ஒருவர்

உணர்ந்திருக்கிறாரோ

அவரால் மட்டும் தான்

கர்மாக்களை தானே

செயல்களைச் செய்து

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்களை

முற்றிலுமாக

கழிக்க முடியும்

 

மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்களை

நாம் நமது

செயல்களின் மூலம்

மூன்று முறைகளைப்

பயன்படுத்தி கழிக்கலாம்

அதாவது இயற்கையாக

கழியும் கர்மாவை

நாமே நம்முடைய

செயல்களின்

மூலம் கழிக்கலாம்

 

ஒன்று

பிராயச்சித்தம்

 

இரண்டு

மேல் பதிவு

 

மூன்று

அடியோடு அழித்தல்

 

பிராயச் சித்தம்,

மேல் பதிவு ஆகிய

இரண்டு முறைகளின்

மூலம் மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்களை

முழுமையாக

கழிக்க முடியாது.

 

ஆனால்

அடியோடு அழித்தல்

என்ற முறையின் மூலம்

மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்களை

முழுமையாக கழிக்கலாம்.

 

பிராயச்சித்தம்

எந்தெந்தத்

தவறுகளால் பிறருக்குத்

துன்பமும் வருத்தமும்

வந்ததோ அந்த

வருத்தத்தை நீக்கியும்

இழப்பு வந்தால்

ஈடு செய்தும்

ஆறுதல் சொல்லக்கூடிய

அளவிற்கு நம்

மனம் மாறி செயல்

புரிவோமானால்

அதுவே பிராயச்சித்தம்

எனப்படும்.

 

மேல் பதிவு

கெட்ட எண்ணங்களைத்

தவிர்த்து நல்ல

எண்ணங்களையே மனதில்

நினைத்து தொடர்ந்து

நன்மைகள் செய்து

கொண்டிருப்பதால்

உண்டாகும் விளைவினால்

புண்ணியப் பதிவுகள்

உண்டாகும். தொடர்ந்து

நல்லவற்றை செய்து

வரும் போது

புண்ணியப் பதிவுகள்

ஒன்றன் மேல்

ஒன்றாக பதிந்து

கொண்டே வரும்.

இந்த புண்ணியப்

பதிவுகள்

பாவப்பதிவுகள் எழா

வண்ணம் செய்யும்.

இதனால்

பாவப்பதிவுகள் எழாது.

தன்னுடைய

பலன்களைத் தராது.

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

------01-05-2021

//////////////////////////////////////

No comments:

Post a Comment