May 01, 2021

பதிவு-3-இடுக்கண்- வருங்கால் நகுக- திருக்குறள்.

 பதிவு-3-இடுக்கண்-

வருங்கால் நகுக-

திருக்குறள்.

 

இதனால் நிலத்தைப்

பெற்ற அந்த

ஏழை விவசாயி

மற்றும்

விவசாயினுடைய

குடும்பம் முழுவதும்

மகிழ்ச்சி அடைகிறது.

 

வாழ்வதற்கு

வழியில்லாமல்

அவதிப்பட்டுக்

கொண்டு இருந்த ;

சாப்பிடுவதற்கு

சாப்பாடு இல்லாமல்

கஷ்டப்பட்டுக்

கொண்டு இருந்த ;

அந்த ஏழை

விவசாயியும்

அந்த ஏழை

விவசாயினுடைய

குடும்பமும்

மிகுந்த மகிழ்ச்சி

அடைகிறது ;

சந்தோஷத்தை

அடைகிறது.

 

இந்த நிகழ்வில்

பணக்காரன் ஏழை

விவசாயிடமிருந்து

அபகரித்து வாங்கி

வைத்துக் கொண்ட

நிலத்தை

பணக்காரனிடம்
இருந்து அபகரித்து

மீண்டும் அந்த

ஏழை விவசாயியிடம்

கொடுப்பது

என்பது செயல் ;

நாம் செய்த

இந்த செயலின்

விளைவால்

ஏழை விவசாயி

மற்றும்

ஏழை

விவசாயினுடைய

குடும்பம் முழுவதும்

மகிழ்ச்சி அடைகிறது ;

நாம் செய்த

செயலின் விளைவால்

நமக்கு

புண்ணியம்

என்பது கிடைக்கிறது.

 

இந்த நிகழ்வில்

புண்ணியம் என்பது

செய்த செயலால்

ஏற்படவில்லை ;

செயத செயலுக்குரிய

விளைவினால் தான்

புண்ணியம் என்பது

ஏற்பட்டது.

 

நிலத்தை

மீட்டுத் தருவதால்

புண்ணியம் என்பது

ஏற்படவில்லை ;

ஏழை விவசாயி

மற்றும்

ஏழை விவசாயினுடைய

குடும்பம் முழுவதும்

மகிழ்ச்சி அடைந்தது

என்ற விளைவானது

உண்டானது அல்லவா

அந்த

விளைவினால் தான்

புண்ணியம் என்பது

ஏற்பட்டது ;

அதாவது செய்த

செயலுக்குரிய

விளைவானது

நன்மையைத் தருகிறது ;

நன்மையைத் தருவதாக

அமைகிறது.

 

செய்த செயலுக்குரிய

விளைவானது

நல்ல விளைவாக

இருப்பதால்

அந்த செயலைச்

செய்தவருக்கு

புண்ணியம்

கிடைக்கும்

புண்ணியப் பதிவுகள்

பதியும்.

 

நிகழ்வு-1-ல் ஏழை

விவசாயிடமிருந்து

நிலத்தை நாம்

அபகரித்தது

என்பது செயல் ;

இந்த செயலால்

ஏழை விவசாயி

மற்றும் அவனுடைய

குடும்பம்

பாதிக்கப்பட்டது

என்பது விளைவு ;

இதனால் உண்டானது

பாவம்.

 

நிகழ்வு-2-ல் பணக்காரன்

அபகரித்து வாங்கி

வைத்திருந்த ஏழை

விவசாயினுடைய

நிலத்தை

பணக்காரனிடமிருந்து

அபகரித்து மீண்டும்

அந்த ஏழை

விவசாயியிடம்

கொடுக்கும் போது

அது செயல் ;

அதனால் ஏழை

விவசாயி மற்றும்

ஏழை

விவசாயினுடைய

குடும்பம் மகிழ்ச்சி

அடைந்தது என்பது

விளைவு ;

இதனால் உண்டானது

புண்ணியம்.

 

இரண்டு நிகழ்வுகளும்

வேறு வேறு

என்றாலும்

செயல் ஒன்று தான்;

அதாவது

நிலத்தை அபகரிப்பது ;

ஆனால் உண்டான

விளைவுகள்

என்பது தான்

வேறு வேறு.

 

செய்த செயல்

பாவத்தையும்

புண்ணியத்தையும்

உண்டாக்கவில்லை ;

செய்த செயலின்

விளைவு தான்

பாவத்தையும்

புண்ணியத்தையும்

உண்டாக்கி

இருக்கிறது.

 

செய்த செயல்

ஒன்று தான்

ஆனால்

அதனால் உண்டான

விளைவுகள்

தான் வேறு.

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

------01-05-2021

//////////////////////////////////////

No comments:

Post a Comment