May 01, 2021

பதிவு-4-இடுக்கண்- வருங்கால் நகுக- திருக்குறள்.

 பதிவு-4-இடுக்கண்-

வருங்கால் நகுக-

திருக்குறள்.

 

மனிதன் செய்த

செயலின் விளைவைப்

பொறுத்து உண்டாகும்

பாவமும் புண்ணியமும்

மனிதனுடைய

ஆன்மாவில்

பாவப் பதிவுகளாகவும்

புண்ணியப்

பதிவுகளாகவும்

கர்மாவாகப்

பதிவாகிறது.

 

பதிந்த ஒவ்வொரு

பதிவுக்கும் காலம்

என்பது உண்டு.

அந்தப் பதிவுகள்

காலத்தால் எழுந்து

பதிவுக்குரிய

பலன்களைக் கொடுக்கும்

 

இடம், தொடர்பு

கொள்ளும் பொருள்,

காலம், நோக்கம், திறமை,

ஆகியவற்றைப் பொறுத்து

மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

பாவப்பதிவுகளையும்,

புண்ணியப் பதிவுகளையும்

கொண்ட கர்மாவானது

தன்னுடைய பலனைக்

கொடுக்கிறது.

 

மனிதன் இந்த

உலகத்தில் வாழும் போது

தன்னுடைய கர்மாவான

பாவப் பதிவுகளுக்குரிய

பலன்களையும்,

புண்ணியப் பதிவுகளுக்குரிய

பலன்களையும்

அனுபவிக்கிறான்.

 

மனிதன் இந்த

உலகத்தில் வாழும் போது

தன்னுடைய வாழ்க்கையில்

தான் செய்த

புண்ணியப் பதிவுகளுக்காக

இன்பத்தை

அனுபவிக்கும் போது

சுவர்க்க வாழ்க்கையையும்,

தான் செய்த

பாவப் பதிவுகளுக்காக

துன்பத்தை

அனுபவிக்கும் போது

நரக வாழ்க்கையையும்

பெறுகிறான்

 

இது தான்

சுவர்க்கமும்

நரகமும் ஆகும்

சுவர்க்கம் நரகம்

என்ற ஒன்று

தனியாக இல்லை.

 

மனிதன் இந்த

உலகத்தில்

பிறக்கிறான் என்றால்

அந்த மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாவின்

காரணமாகத் தான்

இந்த உலகத்தில்

பிறக்கிறான்

என்று பொருள்.

 

மனிதன் இந்த

உலகத்தில்

பிறக்கிறான் என்றால்

அந்த மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்களையும்

அந்த கர்மாவில்

உள்ள பாவத்தையும்

புண்ணியத்தையும்

கழிப்பதற்காக

பிறக்கிறான்

என்று பொருள்,

 

மனிதனுடைய

ஆன்மாவில் கர்மா

இருக்கின்ற

காரணத்தினால் தான்

மனிதன் இந்த

உலகத்தில் பிறக்கிறான் ;

மனிதனுடைய

ஆன்மாவில்

கர்மா இல்லை என்றால்

மனிதன் இந்த

உலகத்தில்

பிறக்கவே மாட்டான்.

மனிதன் இந்த

உலகத்தில் பிறக்காமல்

இருக்க வேண்டுமானால்

மனிதனுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்கள் அனைத்தும்

முழுவதுமாக கழிந்து

இருக்க வேண்டும்.

 

மனிதனுடைய

ஆன்மாவில் கர்மா

கழியாமல் இருந்தால்

இந்த உலகத்தில்

மனிதன் தொடர்ந்து

பிறந்து

கொண்டே இருப்பான் ;

பிறவிகள் பல

எடுத்துக் கொண்டே

இருப்பான்.

 

இந்த உலகத்தில்

பிறந்த மனிதன்

தன்னுடைய

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்களை

கழித்துவிட்டால்

அந்த மனிதனின்

ஆன்மாவிற்கு

இறப்பு என்பது

இல்லை ;

இறப்பு என்பது

இல்லை என்றால்

பிறப்பு

என்பதும் இல்லை;

 

இறப்பு எந்த

ஆன்மாவிற்கு

இல்லையோ? அந்த

ஆன்மாவிற்கு பிறப்பு

என்பதும் இல்லை;

பிறப்பு எந்த

ஆன்மாவிற்கு

இல்லையோ? அந்த

ஆன்மாவிற்கு இறப்பு

என்பதும் இல்லை;

 

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்களை

கழித்து விட்டால்

ஆன்மாவிற்கு

பிறப்பு என்பது இல்லை ;

இறப்பு என்பது இல்லை ;

பிறவித் தொடர்

என்பது இல்லை ;

வாழ்க்கைச் சுழற்சி

என்பது இல்லை ;

 

மனிதன் இந்த

உலகத்தில் மீண்டும்

பிறக்காமல் இருக்க

வேண்டுமானால்

முதலில் மனிதன்

தன்னுடைய ஆன்மாவில்

பதிந்துள்ள

கர்மாக்களைக்

கழிக்க வேண்டும்.

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

------01-05-2021

//////////////////////////////////////

No comments:

Post a Comment