March 06, 2020

பரம்பொருள்-பதிவு-148


                பரம்பொருள்-பதிவு-148

(கிருஷ்ணர் இருக்கும்
அறைக்குள் பஞ்சாங்கத்தை
கைகளில் ஏந்தியபடி
புரோகிதர் ஒருவர்
உள்ளே நுழைகிறார்)

புரோகிதர் :
“வணங்குகிறேன்! மதுசூதனா
நீங்கள்  அழைத்ததால்
ஓடோடி வந்தேன் ;
அழைத்ததின் காரணத்தை
நான் தெரிந்து கொள்ளலாமா ? “

கிருஷ்ணன் :
“நாளை அமாவாசை
அல்லவா அதனால்
தான் அழைத்தேன் “

புரோகிதர் :
“என்னது நாளை
அமாவாசையா?”

கிருஷ்ணன் :
“ஆமாம் ! நாளை
தானே அமாவாசை”

புரோகிதர் :
“கிடையாது நாளை
அமாவாசை கிடையாது”

கிருஷ்ணன் :
“என்னது நாளை
அமாவாசை கிடையாதா?”

புரோகிதர் :
“ஆமாம் நாளை
அமாவாசை கிடையாது ;
நாளை மறுநாள்
தான் அமாவாசை “

கிருஷ்ணன் :
“அப்படி என்றால் நாளை”

புரோகிதர் :
“நாளை சதுர்த்தசி திதி”

கிருஷ்ணன் :
“பஞ்சாங்கத்தை பார்த்து
நன்றாக கணித்தீர்களா ?
வேண்டுமானால்
இன்னொரு முறை
பஞ்சாங்கத்தை பார்த்து
கணித்து சொல்லுங்கள் “

புரோகிதர் :
“அன்றாடம் பஞ்சாங்கம்
பார்ப்பவன் நான் ;
பஞ்சாங்கத்தை நன்றாக
கணித்து விட்டுத்
தான் வந்திருக்கிறேன் ;
வேண்டுமென்றால்
உங்களுடைய
விருப்பத்திற்காக நான்
மீண்டும் ஒரு முறை
பஞ்சாங்கத்தை
கணித்து சொல்கிறேன் ; “

(என்று சொல்லி விட்டு
புரோகிதர் பஞ்சாங்கத்தை
கணிக்கிறார். பஞ்சாங்கத்தை
கணித்த பின் மீண்டும்
பேசத் தொடங்குகிறார்)

“நான் சொன்னபடி
அனைத்தும் சரி தான்  ;
பஞ்சாங்கத்தின்படி நாளை
சதுர்த்தசி திதி தான்
நாளை மறுநாள்
தான் அமாவாசை “

கிருஷ்ணன்  :
“அப்படி என்றால் நீங்கள்
எனக்காக ஒரு
விஷயத்தைச்
செய்ய  வேண்டும் “

புரோகிதர் :
“கட்டளையிடுங்கள்
காத்திருக்கிறேன் “

கிருஷ்ணன் :
“அமாவாசையன்று செய்ய
வேண்டிய பூஜைகளையும்  ;
நடத்த வேண்டிய
ஹோமங்களையும் ;
சொல்ல வேண்டிய
மந்திரங்களையும் ;
சதுர்த்தசி திதியான
நாளை செய்வதற்கு
தேவையான அனைத்து
ஏற்பாடுகளையும் நீங்கள்
செய்ய வேண்டும் ;”

புரோகிதர் :
“சதுர்த்தசி திதி அன்று
அமாவாசையன்று
செய்ய வேண்டிய
அனைத்து ஆன்மீக
விஷயங்களையும்
ஏன் செய்ய வேண்டும் “

கிருஷ்ணன் :
“ஏனென்றால் சதுர்த்தசி
திதியை அமாவாசையாக
மாற்ற வேண்டும் அதற்காக “

புரோகிதர்  :
“சதுர்த்தசி திதியை
எதற்காக அமாவாசையாக
மாற்ற வேண்டும் ? “

கிருஷ்ணன்  :
“நாளை மறுநாள் வருகின்ற
அமாவாசை தினத்தன்று
துரியோதனனுக்காக
அரவான் களப்பலியாவதாக
வாக்கு கொடுத்திருக்கிறான் ;
அன்றைய தினம்
துரியோதனனை தடுத்து
நிறுத்த முடியாது ;
துரியோதனனை
தடுப்பதற்காக எந்த
முயற்சியை எடுத்தாலும்
அது பல்வேறு
பிரச்சினைகளைக்
கொண்டு வந்து விடும் ;”

 “நாளை நடைபெற இருக்கும்
சதுர்த்தசி திதியை
அமாவாசையாக
மாற்றி விட்டு
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலியாகக்
கொடுக்கலாம் ; - அவ்வாறு
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலியாகக்
கொடுக்கும் போது
அரவான் களப்பலியை
யாராலும் தடுக்க முடியாது ;”

“ஏனென்றால் நாளை
மறுநாள் தான் அமாவாசை
என்ற காரணத்தினால்
துரியோதனன் நாளை
வரமாட்டான் - நாம்
எந்தவிதமான இடையூறும்
இல்லாமல் அரவானைக்
களப்பலியாகக் கொடுக்கலாம் ;”

“அரவான் களப்பலியை
யாராலும் தடுத்து நிறுத்த
முடியாது ;- எந்தவிதமான
பிரச்சினைகளும் ஏற்படாது  ;
என்ற காரணத்திற்காகத் தான்
சதுர்த்தசி திதியை
அமாவாசையாக
மாற்றப் போகிறேன் என்றேன் “

“ஆமாம் !
காலத்தை மாற்றப் போகிறேன் “

“சதுர்த்தசி திதியை
அமாவாசையாக
மாற்றப் போகிறேன் “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 05-03-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment