பரம்பொருள்-பதிவு-113
துரியோதனன்
:
“மகனே
அரவான் !
பாண்டவர்களுக்கும்
கௌரவர்களுக்கும்
இடையே
ஏற்பட்ட
பிரச்சினையைத்
தீர்ப்பதற்காக
பல்வேறு
வகையானவர்களால்
பல்வேறு
நிலைகளில்
நடத்தப்பட்ட
அனைத்து
சமாதானப்
பேச்சுவார்த்தைகளும்
தோல்வியில்
முடிந்துவிட்ட
காரணத்தினால்
,
சமாதானத்தின்
அனைத்து
கதவுகளும்
அடைக்கப்பட்டு
விட்டது “
“இதனால்
பாண்டவர்களுக்கும்
கௌரவர்களுக்கும்
இடையே
போர் நடப்பது
என்பது
முடிவாகி விட்டது ;
போரை
நடத்துவதற்குத்
தேவையான
அனைத்து
ஏற்பாடுகளையும்
இருவரும்
செய்து
கொண்டிருக்கிறார்கள்
என்பது
உனக்குத் தெரியும் ;”
“போரில்
நான் வெற்றி
பெற
வேண்டும்
என்பதற்காக
களப்பலி
கொடுப்பதற்கு
தீர்மானித்தேன் “
“32
லட்சணங்கள் உள்ளவராக
இருக்க
வேண்டும் ;
எதிர்ரோமம்
படைத்தவராக
இருக்க
வேண்டும்.;
ஆகிய
இரண்டு
தன்மைகளையும்
ஒருங்கே
கொண்டவரைத்
தான்
களப்பலியாகக்
கொடுக்க
வேண்டும்
என்பதையும் ;
அத்தகையவரை
களப்பலியாகக்
கொடுத்தால்
மட்டுமே
வெற்றி
பெற முடியும்
என்பதையும்
;
தெரிந்து
கொண்டேன் ”
“களப்பலியாக
கொடுப்பதற்கு
தகுதி
பெற்றவர்களில்
சிறந்த
ஒருவனாக நீ
இருக்கிறாய்
என்பதையும் ;
களப்பலியாக
கொடுப்பதற்கு
தகுதி
வாய்ந்தவர்களில்
உயர்ந்தவனாகக்
கருதப்படுவதும்
நீ
தான் என்பதையும் ;
தெரிந்து
கொண்டேன் “
“கேட்பவர்
எதிரியாக
இருந்தாலும்
;
கேட்கப்படுவது
எதுவாக
இருந்தாலும்
; - எந்தவித
மறுப்பும்
சொல்லாமல்
தானம்
தரக்கூடிய
உயர்ந்த
மனப்பான்மை
கொண்டவன்
நீ
என்பதையும்
நான்
தெரிந்து
கொண்டேன் “
“அதனால்
நானே உன்னை
நேரில்
சந்தித்து
போரில்
நான் வெற்றி
பெறுவதற்காக
களப்பலியாக
உன்னுடைய
உயிரை
எனக்குத்
தருவாயா ?
என்று
கேட்டு உன்னுடைய
சம்மதத்தைப்
பெறுவதற்காக
உன்னைத்
தேடி நானே
நேரில்
வந்தேன் ;
“களப்பலியாக
உன்னுடைய
உயிரை
எனக்குத்
தருவாயா
அரவான் ?”
(துரியோதனனின்
வார்த்தைகளைக்
கேட்ட
அரவானுக்கு
எந்தவிதமான
அதிர்ச்சியும்
ஏற்படவில்லை
சர்வ
சாதாரணமாக
பதில்
அளித்தான்)
அரவான்
:
“என்னுடைய
உயிரை
களப்பலியாகத்
தருகிறேன்
பெரிய
தந்தையே ! “
“களப்பலியாக
என்னுடைய
உயிரைத்
தருவதற்கு
சம்மதிக்கிறேன்
பெரிய
தந்தையே ! “
என்று
சொன்ன அரவானின்
வார்த்தைகளைக்
கேட்ட
துரியோதனன்………………………!
“ஆயிரம்
பேர் சுற்றி
வளைத்து
கொல்லத்
துடித்தாலும்
அத்தனை
பேர்களையும்
கொன்று
குவித்து
பகைவர்களை
கதி
கலங்கச் செய்வதற்கு
உலகத்திலேயே
பெரிய
வீரனாகவும்
;
அஞ்சா
நெஞ்சம்
கொண்டவனாகவும்
;
இருக்கவேண்டிய
அவசியமில்லை
“
“போர்க்களத்தில்
நின்று
கிழிந்து
தொங்கும்
சதையுடனும்
; - அறுந்து
கிடக்கும்
நரம்புகளுடனும் ;
உடலில்
வழியும்
ரத்தத்துடனும்
;
எதிரிகளுடன்
போரிடுவதற்கு
உலகத்திலேயே
பெரிய
வீரனாகவும்
; அஞ்சா
நெஞ்சம்
கொண்டவனாகவும் ;
இருக்க
வேண்டிய
அவசியமில்லை
“
“எங்கிருந்தோ
வந்த அம்பு
இதயத்தை
கிழித்து
முதுகின்
வழியாக
வெளியே
வந்து - நின்று
கொண்டிருந்த
போதும் ;
அதை
எடுத்து தூர
எறிந்து
விட்டு தொடர்ந்து
போர்
செய்வதற்கு
உலகத்திலேயே
பெரிய
வீரனாகவும் ;
அஞ்சா
நெஞ்சம்
கொண்டவனாகவும்
;
இருக்க
வேண்டிய
அவசியமில்லை
“
“ஆனால்
தன்னைத் தானே
களப்பலி
கொடுப்பதற்கு
உலகத்திலேயே
பெரிய
வீரனாகவும் ;
உலகத்திலேயே
அஞ்சா
நெஞ்சம்
கொண்டவனாகவும்
;
கண்டிப்பாக
இருந்தே
ஆக
வேண்டும் “
“இத்தகைய
இரண்டு
தன்மைகளைக்
கொண்டவனால்
மட்டுமே
தன்னைத்
தானே களப்பலி
கொடுக்க
முடியும் “
“களப்பலியாக
என்னுடைய
உயிரைத்
தருகிறேன்
என்று
அரவான்
சொன்ன
வார்த்தையிலிருந்து
அரவான்
- உலகத்திலேயே
பெரிய
வீரனாகவும் ;
உலகத்திலேயே
அஞ்சா
நெஞ்சம்
கொண்டவனாகவும்
;
இருக்கிறான்
என்பதைப்
புரிந்து
கொண்டான்
துரியோதனன்
“
“விண்ணை
முட்டும்
மலையாக
உயர்ந்து
நிற்கும்
அரவான் முன்பு
தான்
ஒரு சிறு குன்றாக
நிற்பதை
உணர்ந்து
கொண்டான்
துரியோதனன் “
----------
இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
----------
09-01-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment