ஜபம்-பதிவு-451
(பரம்பொருள்-203)
கிருஷ்ணன் :
“இந்த இடத்தில்
இருந்து கொண்டு
குருஷேத்திரப் போர்
முழுவதையும்
அரவான்
பார்ப்பதற்கு
வசதியாக
அரவானுடைய
தலையை
இந்த இடத்தில்
கம்பத்தில்
பொருத்தி
வைக்க
வேண்டும் “
“அரவானுடைய
தலையை
இந்த இடத்தில்
கம்பத்தில்
பொருத்தி
வைப்பதற்கு
வசதியாக
கம்பத்தை
எடுத்து வந்து
இந்த இடத்தில்
நட்டு
வையுங்கள் “
(பஞ்ச
பாண்டவர்கள்
அனைவரும்
கம்பத்தை
எடுத்து வந்து
நட்டு வைக்க
கிருஷ்ணன்
அரவானுடைய
தலையை அந்த
கம்பத்தில்
பொருத்தி
வைத்தார்
அரவானின்
தலை
குருஷேத்திரப்
போரை
பார்க்கும்
வகையில்
அந்தக் கம்பத்தில்
பொருத்தி
வைத்தார்)
தர்மர் :
“இப்போது
சொல்லுங்கள்
நீங்கள் என்ன
செய்து
கொண்டிருக்கிறீர்கள் “
கிருஷ்ணன் :
“அரவான்
களப்பலியாவதற்கு
முன்பு
என்னிடம்
இரண்டு
வரங்களைக்
கேட்டான் “
“நான் ஒரு
பெண்ணை
திருமணம்
செய்து கொண்டு
அவளுடன்
ஓர் இரவு
தாம்பத்ய சுகம்
அனுபவிக்க
வேண்டும் என்று
அரவான் கேட்ட
இரண்டாவது
வரத்தை
அரவான்
களப்பலியாவதற்கு
முன்பு
நிறைவேற்றி
விட்டேன் “
“நான் களப்பலி
ஆனாலும்
வெட்டுப்பட்ட
என் தலைக்கு
உயிர் இருக்க
வேண்டும்;
வெட்டுப்பட்ட
என்னுடைய
தலையில் உள்ள
கண்களின் மூலம்
குருஷேத்திரப் போர்
முழுவதையும்
பார்க்கும்
சக்தியை
எனக்குத்
தர வேண்டும்
என்று அரவான்
முதல் வரத்தைக்
கேட்டான் “
“அரவானுடைய
முதல் வரத்தை
நிறைவேற்ற
வேண்டும்
என்பதற்காகத்
தான் நான்
இங்கே
வந்திருக்கிறேன் “
“இந்த இடத்தில்
இருந்து கொண்டு
குருஷேத்திரப்
போர்
முழுவதையும்
அரவான்
பார்ப்பதற்கு
வசதியாக
இந்த இடத்தில்
கம்பத்தை நட்டு ;
அந்த கம்பத்தில்
அரவானுடைய
தலையை
பொருத்தி வைத்து ;
அரவானுடைய
தலைக்கு
உயிர் கொடுத்து ;
அரவானுடைய
கண்களின்
மூலமாக
குருஷேத்திரப்
போர்
முழுவதையும்
பார்க்க
வைப்பதற்காகத்
தான் நான் இங்கு
வந்திருக்கிறேன்”
தர்மர் :
“அரவான் செய்த
தியாகத்திற்கு
நீங்கள்
அரவானுடைய
உடலுக்கும்
தலைக்கும்
சேர்த்தே உயிர்
கொடுக்கலாமே-ஏன்
அரவானுடைய
தலைக்கு மட்டும்
உயிர் கொடுக்க
வேண்டும்
என்கிறீர்கள் “
கிருஷ்ணன் :
“ஏனென்றால்
அரவான்
தன்னுடைய
தலைக்கு
உயிர் கொடுங்கள்
என்று தானே
கேட்டான் “
----------- ஜபம் இன்னும்
வரும்
----------- K.பாலகங்காதரன்
----------- 20-04-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment