ஜபம்-பதிவு-453
(பரம்பொருள்-205)
“யாரையும்
யாரையும்
சார்ந்து
யாரும்
பிறப்பதுவும்
இல்லை “
“யாரையும்
யாரையும்
சார்ந்து
யாரும்
வாழவும்
இல்லை “
“அனைவரும்
தனியாகத்
தான் வந்தோம் ;
தனியாகத்
தான் போகப்
போகிறோம் ;
என்பதை
உணராதவர்கள்
தான்
மரணத்தைப்
பார்த்து
பயப்படுவார்கள் “
“மரணத்தைப்
பார்த்து
பயப்படுபவர்கள்
தங்களைப்
பற்றியும்
தங்கள்
குடும்பத்தைப்
பற்றியும் தான்
நினைப்பார்கள்
அவர்களுக்காக
மட்டுமே
வாழ்வார்கள் “
“மரணத்தைப்
பார்த்து
பயப்படாதவனாக
இருந்தால்
மட்டுமே
மக்களுக்காக
வாழ முடியும் ;
மக்களுக்காக
தன்னையே
ஒப்படைக்க
முடியும் “
“அரவான்
மரணத்தைப்
பார்த்து
பயப்படாதவன் “
“அதனால்
தான் இந்த
உலகத்திற்காக
தன்னையே
அர்ப்பணித்தான் “
“இந்த உலகத்திற்காக
தன்னையே
ஒப்படைத்தான் “
“தன்னையே
களப்பலியாகக்
கொடுத்தான் “
“மரணத்தைப்
பார்த்து
பயப்படாதவனால்
மட்டுமே
களப்பலியாக
முடியும் “
“மரணத்தைப்
பார்த்து
பயப்படாமல்
களப்பலியானவன்
மீண்டும் எப்படி
வாழ வேண்டும்
என்று
ஆசைப்படுவான் “
“அதனால் தான்
அரவான்
தான் உயிர்
பெற்று வாழ
வேண்டும் என்று
கேட்கவில்லை “
“நான் களப்பலி
ஆனாலும்
வெட்டுப்பட்ட
என் தலைக்கு
உயிர் இருக்க
வேண்டும் ;
வெட்டுப்பட்ட
என்னுடைய
தலையில் உள்ள
கண்களின் மூலம்
குருஷேத்திரப் போர்
முழுவதையும்
பார்க்கும்
சக்தியை
எனக்குத்
தர வேண்டும் ;
என்ற வரத்தைத்
தான் கேட்டான் “
“அதைக் கூட
ஏன் கேட்டான்
என்றால்
துன்பச் சகதியில்
சிக்கித் தவித்துக்
கொண்டிருக்கும்
மக்கள் அந்த
துன்பச்
சகதியிலிருந்து
விடுதலை பெற்று
இன்பம் என்னும்
நீரில் நீந்தி
விளையாடுவதை
பார்க்க வேண்டும்
என்பதற்காகத்
தான் கேட்டான் “
“அரவான் கேட்ட
முதல் வரத்தை
நிறைவேற்றுவதற்காக
இப்போது நான்
அரவானுடைய
தலைக்கு உயிர்
கொடுக்கப்
போகிறேன் “
“ஆமாம் !
அரவானை
உயிர்த்தெழ
வைக்கப்
போகிறேன் “
“ஆமாம் !
அரவான்
உயிர்த்தெழப்
போகிறான் “
----------- ஜபம் இன்னும்
வரும்
----------- K.பாலகங்காதரன்
----------- 20-04-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment