ஜபம்-பதிவு-454
(பரம்பொருள்-206)
தர்மர் :
“என்ன அரவான்
உயிர்த்தெழப்
போகிறானா ? “
கிருஷ்ணன் :
“ ஆமாம் !
அரவான்
உயிர்த்தெழப்
போகிறான் ;
நான் தான்
அவனை
இப்போது
உயிர்த்தெழ
வைக்கப்
போகிறேன் ; “
தர்மர் :
“உயிர்த்தெழ
வைப்பதின்
அர்த்தம்
எனக்குப்
புரியவில்லை “
கிருஷ்ணன் :
உயிர்த்தெழுவது
என்றால்
என்ன என்று
முதலில் தெரிந்து
கொள் தர்மா “
“இந்த உலகத்தில்
உயிர்த்தெழுதல்
இரண்டு
வகைகளில்
நடைபெற்று
வருகிறது “
“புற உயிர்களால்
தாக்கப்பட்டு
அதன் மூலமாக
மரணமடைந்தவர்களை
கடவுள் அருள்
பெற்றவர்கள்
உயிர்ப்பித்தால்
அது முதல் வகை
உயிர்த்தெழுதல் “
“புற உயிர்களால்
தாக்கப்பட்டு
அதன் மூலமாக
மரணமடைந்த
கடவுள் அருள்
பெற்றவர் - தானே
உயிர்த்தெழுந்து
வந்தால் அது
இரண்டாவது வகை
உயிர்த்தெழுதுல் “
“இதுவரை நடந்த
உயிர்த்தெழுதல்
இந்த இரண்டு
வகைகளுக்குள் தான்
நடந்தது - இனி
நடக்கப்போகும்
உயிர்த்தெழுதலும்
இந்த இரண்டு
வகைகளுக்குள் தான்
நடக்கப்போகிறது “
“புற உயிர்களால்
தாக்கப்படாமல்
தானே தன்
தலையை
வெட்டிக் கொண்டு
களப்பலியானவன்
அரவான் “
“அரவானுடைய
தலைக்கு நான்
உயிர் கொடுத்து
உயிர்த்தெழ
வைத்தால் - அந்த
உயிர்த்தெழுதலே
இது வரை
நடக்காத
உயிர்த்தெழுதல் ;
இந்த
இரண்டு வகை
உயிர்த்தெழுதலிலும்
சேராத
உயிர்த்தெழுதல் ;
இனி யாராலும்
செய்ய முடியாத
உயிர்த்தெழுதல் ;
புனிதத்
தன்மை வாய்ந்த
சிறப்பு மிக்க
உயிர்த்தெழுதல் “
“இத்தகைய ஒரு
உயிர்த்தெழுதலைத்
தான் அரவானுக்கு
நான் இப்போது
செய்யப் போகிறேன் “
“இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவருடைய
பாவங்களையும்
ஏற்றுக் கொண்டு
பிறருக்காக
தன்னுடைய
இரத்தத்தையே
கொடுத்தவன்
அரவான் “
“இந்த
உலகத்தில் உள்ள
அனைவருடைய
பாவங்களையும்
தீர்ப்பதற்காக
தன்னுடைய
இரத்தத்தையே
கொடுத்தவன்
அரவான் “
“பாவப்பட்ட
மக்களின்
பாவங்களை
நீக்குவதற்காக
தன்னுடைய
இரத்தத்தையே
இந்த உலகத்திற்கு
அளித்து
தன்னுடைய
இரத்தத்தால்
இந்த உலகத்தையே
காப்பாற்றப்
போகிறவன்
அரவான் “
----------- ஜபம் இன்னும்
வரும்
----------- K.பாலகங்காதரன்
----------- 20-04-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment