ஜபம்-பதிவு-443
(பரம்பொருள்-195)
கிருஷ்ணன் :
“அப்படி என்றால்
நான் சொல்லப்
போகிறவைகளை
நன்றாகக்
கேட்டு
மனதில்
நிறுத்திக்
கொள்
அரவான் “
“முதலில்
முட்டி போட்டுக்
கொண்டு
இருப்பதிலிருந்து
எழுந்திரு
! “
“நீ முட்டி
போட்டு
தலையை
காட்டும் போது
உன்னுடைய
தலையை
வெட்டுவதற்கு
தகுதி
படைத்தவர்கள்
இந்த
உலகத்தில்
யாரும் இல்லை
முதலில்
எழுந்திரு !
எழுந்து
நேராக நில்
! ! “
“காளிதேவியைப்
பார்த்தபடி
நில் ! “
“வேறு ஒருவர்
நம்முடைய
தலையை
வெட்டும் போது
அதற்கு
தைரியம்
மட்டும்
இருந்தால்
போதும்
அரவான் “
“ஆனால்
தன்னுடைய
தலையை தானே
வெட்டிக்
கொள்வதற்கு
தைரியம்
மட்டும்
இருந்தால்
போதாது “
“இந்த
உலகத்திலேயே
யாருக்கும்
இல்லாத
தைரியம்
இருக்க
வேண்டும் ;
இந்த
உலகத்திலேயே
யாருக்கும்
இல்லாத
மன உறுதி
இருக்க
வேண்டும் ;
இந்த
உலகத்திலேயே
யாருக்கும்
இல்லாத
வீரம் இருக்க
வேண்டும் ;
“
“ஆமாம் !
வேறு ஒருவர்
நம்முடைய
தலையை
வெட்டும் போது
நமக்கு
தைரியம்
மட்டும்
இருந்தால்
போதும் ;
ஆனால்
நம்முடைய
தலையை
நாமே
வெட்டிக்
கொள்வதற்கு
தைரியம் ;
மன உறுதி ;
வீரம் ;
ஆகிய
மூன்றுமே
ஒன்றாக
இருக்க
வேண்டும் “
“இந்த மூன்றும்
ஒன்றாக
இருந்தால்
மட்டுமே
தன்னுடைய
தலையை தானே
வெட்டிக்
கொள்ள முடியும்
“
“இத்தகைய
மூன்று
தன்மைகளையும்
ஒன்றாகக்
கொண்டவன்
தான் நீ “
“அதனால் தான்
உன்னை
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
காலம் உன்னை
தேர்ந்தெடுத்து
இருக்கிறது
“
“வாளை எடு
அரவான் !
வாளை எடு !
!
(அரவான்
சென்று
வாளை
எடுக்கிறான்)
“முதலில்
காளி தேவியின்
உருவத்தை
நெற்றி
பொட்டிற்கு
கொண்டு வந்து
அங்கு
காளிதேவியை
பிரதிஷ்டை
செய்து
மனதில்
காளிதேவியின்
மந்திரத்தை
தொடர்ந்து
உச்சாடனம்
செய்து
கொண்டே இரு”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
13-04-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment