April 13, 2020

பரம்பொருள்-பதிவு-193


             ஜபம்-பதிவு-441
           (பரம்பொருள்-193)

தர்மர் :
“பரமாத்மா ! அனைத்து
விஷயங்களையும்
அறிந்தவர் நீங்கள் ;
உங்களுக்கு தெரியாத
விஷயம் என்று
எதுவுமே இல்லை
இந்த உலகத்தில் ;
உங்களுக்கு தெரியாமல்
எந்த ஒரு விஷயமும்
இந்த உலகத்தில்
நடக்கவும் முடியாது ;
அனைத்து விஷயங்களும்
உங்களுக்கு தெரிந்திருந்தும்
ஏன் எங்கள் அனைவரையும்
அரவானுடைய தலையை
வெட்டச் சொல்லி
வற்புறுத்தினீர்கள் “

“அரவானுடைய தலையை
வெட்டச் சொல்லி
எங்களை வற்புறுத்தி
இருக்க வேண்டாமே “

கிருஷ்ணன் :
“இந்த உலகத்தில்
உள்ள யாராலும்
அரவானுடைய தலையை
வெட்ட முடியாது என்று
சோதிட சாஸ்திரம்
சொல்கிறது “

“அரவானுடைய தலையை
வெட்டக்கூடியவர்கள்
இந்த உலகத்தில்
யாரும் இல்லை என்றால்
அரவானை விட
உயர்ந்தவர்கள் இந்த
உலகத்தில் யாரும்
இல்லை என்பதே
அதற்கு பொருள் “

“இந்த உலகத்தில் தலை
சிறந்தவர்களாகக்
கருதப்படுபவர்கள்
பஞ்ச பாண்டவர்கள் “

“அவர்களுக்கு
நிகரானவர்கள் யாரும்
இல்லை என்பதை
தங்களுடைய செயல்களின்
மூலம் நிரூபித்து
இருக்கிறார்கள் “

“பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும் இந்த
உலகத்தில் தலை
சிறந்தவர்கள் என்பதை
இந்த உலகமே
ஏற்றுக் கொண்டு
இருக்கிறது “

“அதனால் தான் பஞ்ச
பாண்டவர்களை
அழைத்து அரவானுடைய
தலையை வெட்டச்
சொன்னேன் “

“பஞ்ச பாண்டவர்களில்
யாரேனும் ஒருவராவது
அரவானுடைய தலையை
வெட்டி இருந்தால்
அரவானை விட
பஞ்ச பாண்டவர்கள்
தான் உலகத்திலேயே
உயர்ந்தவர்கள் என்பதை
பஞ்ச பாண்டவர்கள்
நிரூபித்து இருப்பார்கள் “

“ஆனால் அவர்கள்
அவ்வாறு செய்யவில்லை “

“அரவானுடைய தலையை
பஞ்ச பாண்டவர்கள்
வெட்டவில்லை “

“பஞ்ச பாண்டவர்கள்
அரவானுடைய தலையை
வெட்டி இருந்தால்
அரவானுடைய ஜெனன
கால ஜாதகத்தையே
மாற்றி இருந்திருக்கலாம் “

“அரவானுடைய தலையை
வெட்டக் கூடியவர்கள்
இந்த உலகத்தில்
இருக்கிறார்கள் என்பதை
நிரூபித்து இருக்கலாம்  

“அரவானை விட
உயர்ந்தவர்கள்
இந்த உலகத்தில்
இருக்கிறார்கள் என்பதை
நிரூபித்து இருக்கலாம் “

“பஞ்ச பாண்டவர்கள்
அரவானை விட
உயர்ந்தவர்கள் என்று
நிரூபித்து இருக்கலாம் “

“ஆனால் பஞ்ச
பாண்டவர்களில் ஒருவர்
கூட அரவானுடைய
தலையை வெட்டவில்லை “

“அரவானை விட
பஞ்ச பாண்டவர்கள் தான்
உயர்ந்தவர்கள் என்பதை
நிரூபிப்பதற்கு அவர்களுக்கு
வழங்கப்பட்ட வாய்ப்பை
அவர்கள் பயன்படுத்தத்
தவறி விட்டார்கள் “

“காலம் அவர்களுக்கு
ஏற்படுத்திக் கொடுத்த
வாய்ப்பை அவர்கள்
சரியாக பயன்படுத்திக்
கொள்ளவில்லை  

“அரவானை விட தாங்கள்
உயர்ந்தவர்கள் என்பதை
நிரூபிக்க பஞ்ச
பாண்டவர்கள்
தவறி விட்டார்கள் “

“பஞ்ச பாண்டவர்களாலேயே
அரவானுடைய
தலையை வெட்ட
முடியவில்லை என்பதால்
பஞ்ச பாண்டவர்களை விட
அரவான் உயர்ந்தவன்
என்பது நிரூபணம்
ஆகிவிட்டது “

“சோதிட சாஸ்திரம்
சொன்னது
உண்மையாகி விட்டது “

“சோதிட சாஸ்திரப்படி
இந்த உலகத்தில் உள்ள
யாராலும் அரவானுடைய
தலையை வெட்ட
முடியாது என்பது
உண்மையாகி விட்டதால்
அரவான் தான் இந்த
உலகத்தில் உள்ள 
அனைவரையும் விட
பஞ்ச பாண்டவர்களையும்
விட உயர்ந்தவன் என்பது
உண்மையாகி விட்டது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 13-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment