April 13, 2020

பரம்பொருள்-பதிவு-194


             ஜபம்-பதிவு-442
           (பரம்பொருள்-194)

”பஞ்ச
பாண்டவர்களாலேயே
அரவானுடைய
தலையை வெட்ட
முடியவில்லை என்றால்  
இந்த உலகத்தில்
உள்ள வேறு யாராலும்
அரவானுடைய
தலையை வெட்ட
முடியாது என்பதை
இந்த உலகம்
உணர்ந்து கொள்ள
வேண்டும்
என்பதற்காகத் தான்
பஞ்ச பாண்டவர்களை
அழைத்து
அரவானுடைய
தலையை
வெட்டச் சொன்னேன் “

“அது மட்டுமல்ல
அரவானுடைய
தலையை
வெட்டுவதற்கு
தங்களுக்கே
தகுதியில்லை என்பதை
பஞ்ச பாண்டவர்கள்
உணர்ந்து கொள்ள
வேண்டும்
என்பதற்காகவும் ;
அரவானுடைய தலையை
வெட்டுவதற்கு
இது வரை
இந்த உலகத்தில்
யாரும் பிறக்க வில்லை
என்பதை இந்த
உலகத்தில் உள்ள
மக்கள் அனைவரும்
தெரிந்து கொள்ள
வேண்டும்
என்பதற்காகவும் ;
இப்போது இந்த
உலகத்தில்
வாழக்கூடியவர்களில்
அரவானுடைய
தலையை
வெட்டுவதற்கு தகுதி
படைத்தவர்கள் யாரும்
இல்லை என்பதை
அனைவரும் அறிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காகவும் ;
தான் பஞ்ச
பாண்டவர்களை
அழைத்து
அரவானுடைய
தலையை
வெட்டச் சொன்னேன் “

“இப்போது பஞ்ச
பாண்டவர்கள்
அனைவரும்
அரவானுடைய மதிப்பை
தெரிந்து கொண்டு
இருப்பார்கள் “

“அரவானை விட
சிறந்தவன் இந்த
உலகத்தில் யாரும்
இல்லை என்பதை
உணர்ந்து இருப்பார்கள் “

“பஞ்ச பாண்டவர்களும்
இந்த உலகத்தில்
உள்ள அனைவரும்
அரவானுடைய
பெருமையை
உணர வேண்டும்
என்பதற்காகத் தான்
பஞ்ச பாண்டவர்களை
அழைத்து
அரவானுடைய
தலையை வெட்டச்
சொன்னேன் “

“இப்போது பஞ்ச
பாண்டவர்கள் மட்டுமல்ல
இந்த உலகத்தில்
உள்ள அனைவரும்
அரவானுடைய
பெருமையை
புரிந்து இருப்பார்கள் “

அரவான் :
“இப்போது என்ன
செய்வது பரந்தாமா ? “

“இந்த உலகத்தில்
உள்ள யாராலும்
என்னுடைய தலையை
வெட்ட முடியாது
என்றால் என்னுடைய
தலையை யார்
தான் வெட்டுவது “

கிருஷ்ணன் :
“அதைத் தான் நான்
ஏற்கனவே சொல்லி
விட்டேனே
அரவானுடைய
தலையை யாராலும்
வெட்ட முடியாது என்று “

“அரவானுடைய
தலையை வெட்டக்
கூடியவர்கள் யாரும்
பிறக்கவில்லை என்று “

“அரவானுடைய
தலையை வெட்டுவதற்கு
தகுதி படைத்தவர்கள்
யாரும் இந்த
உலகத்தில் இப்போது
இல்லை என்று “

“இதிலிருந்து ஒரு
உண்மை உனக்குத்
தெரியவில்லையா
அரவான் “

“அரவானுடைய தலையை
அரவான் தான் வெட்ட
வேண்டும் என்று “

“ஆமாம் ! உன்னுடைய
தலையை நீ தான்
வெட்ட வேண்டும்
அரவான் “

“உன்னுடைய தலையை
வெட்டுவதற்கு - இந்த
உலகத்தில் யாரும்
இல்லை யாரும்
வரவும் மாட்டார்கள் “

“அதனால் உன்
தலையை நீ தான்
வெட்ட வேண்டும் “

“உன்னுடைய தலையை
நீயே வெட்டிக்
கொள்வதற்கு - நீ
இப்போது தயாராக
இருக்கிறாயா
அரவான் ;
தயாராக
இருக்கிறாயா ? “

அரவான் :
“நான் தயாராக
இருக்கிறேன் பரந்தாமா “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 13-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment