April 13, 2020

பரம்பொருள்-பதிவு-191


             ஜபம்-பதிவு-439
            (பரம்பொருள்-191)

“குந்தி தாயின் வாரிசான
அரவானை களப்பலியாகக்
கொடுக்கலாம் என்று
அண்ணன் துரியோதனன்
அவர்களுக்கு குறித்துக்
கொடுத்தது மாத்ரி தாயின்
வாரிசான நான் தான்
அதை நான்
ஏற்றுக் கொள்கிறேன் “

“ஆனால் நான் தான்
அரவானுடைய தலையை
வெட்ட வேண்டும் என்று
நீங்கள் சொன்னதைத்
தான்  என்னால்
ஏற்றுக் கொள்ள
முடியவில்லை “

“நான் ஏன்
அரவானுடைய தலையை
வெட்ட வேண்டும் “

“அரவானுடைய தலையை
என்னால் வெட்ட முடியுமா ?”

“அரவானுடைய தலையை
என்னால் வெட்ட முடியாது
என்பது எனக்குத் தெரியும் ”

“சோதிட சாஸ்திரப்படி
அரவானுடைய
தலையை நான்
வெட்ட மாட்டேன்
என்பதும் எனக்கு தெரியும் “

“அரவானுடைய
தலையை யார்
வெட்டுவார்கள்
யார் வெட்ட
மாட்டார்கள் என்பது
சோதிட சாஸ்திரப்படி
நான் தெரிந்து
வைத்திருக்கிறேன் ;
நான் அரவானுடைய
தலையை வெட்ட
முடியுமா என்பதையும்
முடியாதா என்பதையும்
நான் அரவானுடைய
தலையை வெட்டுவேனா
என்பதையும்
வெட்ட மாட்டேனா
என்பதையும்
சோதிட சாஸ்திரப்படி
தெரிந்து வைத்திருக்கிறேன் ;”

“அரவானுடைய
தலையை நான்
வெட்ட மாட்டேன்
என்பதை
சோதிட சாஸ்திரப்படி
தெரிந்து வைத்திருக்கும்
என்னால் எப்படி
அரவானுடைய தலையை
வெட்ட முடியும்  

“சோதிட சாஸ்திரப்படி
அரவானுடைய தலையை
யார் வெட்டுவார்கள்
என்பதை தெரிந்து
வைத்திருக்கும் நான்
அரவானுடைய தலையை
வெட்ட மாட்டேன்
என்பதற்கு நான்
ஏன் காரணங்களைத்
தேட வேண்டும்  

“நடக்காத விஷயத்திற்கு
நான் ஏன்
காரணங்களைத்
தேட வேண்டும் “

“அரவானுடைய தலையை
வெட்ட மாட்டேன்
என்பதற்கு நான் ஏன்
காரணங்களைச்
சொல்ல வேண்டும் “

“அதனால் தான்
சோதிட சாஸ்திரப்படி
நடக்கவிருக்கும்
உண்மையைச் சொன்னேன் ;
சோதிட சாஸ்திரப்படி
அரவானுடைய
தலையை வெட்டுவதற்கு
உரியவன் நான்
இல்லை என்பதும்
அரவானுடைய தலையை
வெட்டுவதற்கு
தகுதியுடையவர் யார்
என்பதும் பரமாத்வாகிய
உங்களுக்குத் தெரியும் “

“அனைத்தையும் அறிந்த
தாங்கள் அரவானுடைய
தலையை வெட்டுவதற்காக
என்னை அழைக்காதீர்கள் “

“அரவானுடைய
தலையை வெட்டுவற்கு
பிறந்தவன் நான் இல்லை
என்பதை உணர்ந்து
கொண்டு என்னை
அரவானுடைய தலையை
வெட்டுவதற்காக
அழைக்காதீர்கள் “

“சோதிட சாஸ்திரப்படி
நான் சொன்னவைகள்
அனைத்தும் உண்மை
என்பதை உணர்ந்திருக்கும்
தாங்கள் தயவு செய்து
அரவானுடைய தலையை
வெட்டுவதற்காக
என்னை அழைக்காதீர்கள் “

கிருஷ்ணன்  :
“சோதிட சாஸ்திரப்படி
அரவானுடைய தலையை
வெட்டக் கூடியவர்
நீ இல்லை என்றால்
சோதிட சாஸ்திரப்படி
அரவானுடைய தலையை
வெட்டக் கூடியவர் யார் ?“

சகாதேவன்  :
“அவர் யார் என்பது
உங்களுக்கே தெரியும் “

கிருஷ்ணன்  :
“அரவானுடைய தலையை
வெட்ட மாட்டேன்
என்பதற்கு நகுலன்
சொன்ன காரணத்தை
திரும்ப சொல்லக்
கூடாது என்பதற்காக
சோதிட சாஸ்திரத்தைக்
காரணம் காட்டி
அரவானுடைய தலையை
வெட்ட மாட்டேன்
என்கிறாய் “

“பரவாயில்லை “

“அரவானை களப்பலி
கொடுப்பதற்கான நேரம்
போய்க் கொண்டே இருக்கிறது
என்பதை அனைவரும்
உணர்ந்து கொள்ளுங்கள் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 13-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment