பரம்பொருள்-பதிவு-49
திருஞான
சம்பந்தர் :
"நீங்கள்
ஏற்றுக் கொள்ள
நான்
என்ன செய்ய
வேண்டும்?"
மக்கள்
:
"இறந்த
பூம்பாவையை
உயிரோடு
எழுப்ப வேண்டும்"
"சிவம்
உண்மையான
கடவுள்
என்றால் ,
நீங்கள்
சிவத்தின்
உண்மையான
அடியவர்
என்றால்,
இறந்த
பூம்பாவையை
உயிரோடு
எழுப்ப
வேண்டும்"
"இறந்த
பூம்பாவையை
நீங்கள்
உயிரோடு
எழுப்பி
விட்டீர்கள் என்றால்
நாங்கள்
அனைவரும்
சிவத்தை
கடவுளாக
ஏற்றுக்
கொண்டு
சைவமதத்தை
தழுவி ;
சிவ
மந்திரத்தை
அனுதினமும்
உச்சரித்து ;
சைவ
நெறிகளை
பின்பற்றி
வாழ்கிறோம் ;"
"நாங்கள்
மட்டுமல்ல
இந்த
ஊர் மொத்தமும்
நீங்கள்
வணங்கும்
கடவுளான
சிவமே
உண்மையான
கடவுள்
என்று
ஏற்றுக் கொள்கிறோம் ;
அதைப்போல
உம்மையும்
அந்த
சிவத்தின் அருள்
பெற்றவர்
என்பதையும்
ஏற்றுக்
கொள்கிறோம் ;"
திருஞான
சம்பந்தர் :
"இறைவா
விதியின்
கைகளுக்குள்
என்னையும்
சிக்க
வைத்து விட்டாய் ;
இறந்த
பூம்பாவையை
உயிரோடு
எழுப்ப வேண்டும்
என்பது
தான் உன்னுடைய
சித்தம்
என்றால்
காலத்தின்
கட்டாயத்தைக்
கருத்தில்
கொண்டு ,
சூழ்நிலையின்
அவசியத்தை
கருத்தில்
கொண்டு ,
ஊழ்வினையின்
தாக்குதலை
கருத்தில்
கொண்டு ,
கர்மவினையின்
மிச்சத்தைக்
கருத்தில்
கொண்டு ,
இறந்த
பூம்பாவையை
உயிரோடு
எழுப்புகிறேன் !"
"அண்ட
சராசரங்கள்
அனைத்தையும்
படைத்து
; காத்து ;
அழித்து;
அருள் செய்து ;
மறைத்துக்
;
கொண்டிருப்பது
ஆதி
அந்தம் இல்லாத
பரம்பொருளான
சிவமே
என்பதை- இந்த
உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரும்
உணர்ந்து
கொள்ள
வேண்டும்
என்பதற்காக
இறந்த
பூம்பாவையை
உயிரோடு
எழுப்புகிறேன் !"
"உலகில்
உள்ள மதங்களில்
உயர்ந்த
மதம்
சைவமதமே
என்பதையும் ;
உலகில்
உள்ள மந்திரங்களில்
உயர்ந்த
மந்திரம்
சிவனுடைய
மந்திரமே
என்பதையும்
;
உலகில்
உள்ள புனிதமான
நூல்களில்
சைவ
மதத்தில்
உள்ள
நூல்களே
புனிதமான
நூல்கள்
என்பதையும் ;
இந்த
உலகத்தில் உள்ள
மக்கள்
அனைவரும்
உணர்ந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காக
இறந்த
பூம்பாவையை
உயிரோடு
எழுப்புகிறேன் !"
"உலகில்
உள்ள கோடிக்
கணக்கான
கடவுள்களில்
மெய்யான
கடவுள் சிவம்
மட்டுமே
என்பதையும் ;
உலகில்
உள்ள மக்கள்
அனைவருடைய
பாவங்களையும்
ஏற்றுக்
கொள்வது
சிவம்
மட்டுமே
என்பதையும் ;
உலகில்
உள்ள மக்கள்
அனைவருடைய
பாவங்களை
கழித்து ;
கர்மாவை
எரித்து ;
பிறப்பு
இறப்பு
சுழற்சியை
அறுத்து ;
ஞானத்தை
கொடுத்து ;
முக்தி
பேற்றை
அளிக்கக்
கூடிய சக்தி
சிவத்திற்கு
மட்டுமே
உள்ளது
என்பதையும் ;
இந்த
உலகத்தில் உள்ள
மக்கள்
அனைவரும்
உணர்ந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காக
இறந்த
பூம்பாவையை
உயிரோடு
எழுப்புகிறேன்!"
"தாய்
மதத்தில் தான்
வணங்கிய
கடவுளின்
சக்தியை
அறிவு பூர்வமாக
உணர்ந்து
கொள்ள
முடியாதவர்கள்
அந்நிய
மதத்திற்கு
சென்று அந்நிய
கடவுளை
வணங்கியவர்கள்
கூட
சைவமதத்தைத் தழுவி,
சிவத்தை
வணங்கி,
சிவ
மந்திரத்தை
அனுதினமும்
உச்சரிக்க
வைக்க
வேண்டும்
என்பதற்காக
இறந்த
பூம்பாவையை
உயிரோடு
எழுப்புகிறேன் "
"ஆம்
இறந்த
பூம்பாவையை
உயிரோடு
எழுப்புகிறேன்!"
(என்று
திருஞான
சம்பந்தர்
இறந்த
பூம்பாவையை
உயிரோடு
எழுப்புவதற்காக
பதிகம்
பாடத் தொடங்கினார்)
--------
இன்னும் வரும்
----------
K.பாலகங்காதரன்
---------
26-07-2019
//////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment