அன்பிற்கினியவர்களுக்கு ,
இந்த கட்டுரை என்னுடைய 100 வது ஆன்மீக கட்டுரை !
எனது உடலில் உயிர் தங்கி இருக்க , நான் இந்த கட்டுரைகளை எழுதுவதற்கு, முக்கிய காரணமாக இருந்தவர் இருவர்.
ஒன்று எனது அம்மா சொர்ணம் ; இரண்டு என்னுடைய மனைவி பிரதிபா; என்னுடைய அப்பா இறந்து எட்டு வருடங்கள் கடந்த நிலையில் சமுதாய சட்டதிட்டங்களாலும் , சம்பிரதாய நடைமுறைகளினாலும் ,இரக்கத்தை கொன்ற நெஞ்சங்களினாலும் ,உடல் உபாதைகளினாலும் ,மன வேதனைகளினாலும் ,கைவிடப்பட்ட அன்பினாலும் ,இரக்கத்தை கொன்ற உள்ளத்தினாலும் ,பாதிப்புக்கு உள்ளான எனது அம்மா நான் நல்ல நிலை அடைந்து விட வேண்டும் அதை தன் கண்ணால் பார்க்க வேண்டும் என்று அல்லும் ,பகலும் என்னையே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் எனது அம்மாவிற்கு நான் பட்ட கடனை இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் என்னால் அடைக்க முடியாது .
உயிர் என் உடலில் இருக்க காரணம் என் அம்மா என்றால் , உயிர் என் உடலில் இருந்து பிரியாமல் என்னை காத்து ஏழ்மையிலும் ,இல்லாமையிலும், வறுமையிலும், புன்முறுவலுடன் எத்தகைய இன்பத்தையும் எதிர்பார்க்காது என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது மனைவியையும் நினைத்து இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி செலுத்த கடமை பட்டிருக்கிறேன்.
என் எழுத்துக்களுக்கு ஆதரவளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலம் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் ,
இறைவனின் அருள் எனக்கு இருந்தால் ,
சித்தர்களின் வழிகாட்டுதல் எனக்கு இருந்தால் ,
என் பணி தொடரும் !
நன்றி !
என்றும் அன்புடன்,
கா.பாலகங்காதரன்.
இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-தன்னைத்தான்-பதிவு-45
“”பதிவு நாற்பத்திஐந்தை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
இயேசு கிறிஸ்து :
“உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால் , அதைத் தறித்துப்போடு ; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப் பார்க்கிலும் ,ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.”
- ------மாற்கு - 9 : 43
“உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் ,அதைத் தறித்துப் போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப் படுவதைப் பார்க்கிலும் ,சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும.”;
--------மாற்கு - 9 : 45
“உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால் ,அதைப் பிடுங்கிப் போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ,ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.”
-------மாற்கு - 9 : 47
பகுதி முழுமைக்குள் இருக்கிறது
முழுமைக்குள் பகுதி இருக்கிறது
பகுதி பாதிக்கப்பட்டால் ,களங்கப்பட்டால் , மாசுபட்டால்
முழுமை பாதிக்கப்படும்.
முழுமை களங்கப்படாமல் இருக்க வேண்டுமானால்,
பகுதி களங்கப்படாமல் ,பாதிக்கப்படாமல் ,பாதிப்பு அடையாமல்,
இருக்க வேண்டும்.
பகுதி களங்கமற்று இருந்தால்
முழுமையும் களங்கமற்று இருக்கும்.
பகுதி களங்கப்பட்டு விட்டால்
முழுமையும் களங்கப்படும் நிலைக்கு உள்ளாகி விடும்.
பகுதியை களங்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
அப்பொழுது தான் முழுமையும் களங்கப்படாமல் இருக்கும்.
பகுதி களங்கப் பட்டிருக்கிறது ;
கரை படிந்திருக்கிறது ;
அசுத்தத்தால் நிரம்பியிருக்கிறது ;
மாசுக்களால் சூழ்ந்திருக்கிறது ;
தவறுகளால் நிரப்பப்பட்டிருக்கிறது ;
என்ற உணர்வு ; என்ற விளக்கம் ;
என்ற அறிவு ; என்ற தெளிவு ;
வந்தால் ஒழிய ,
முழுமையை களங்கப்படாமல் காப்பாற்ற முடியும்
இல்லையென்றால் களங்கப்பட்ட பகுதியால்
முழுமை பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது.
பகுதி களங்கப்பட்டிருக்கிறது என்பதை
கண்டுபிடிக்கும் அறிவு முதலில் நமக்கு வர வேண்டும்.
களங்கப்பட்ட பகுதியை அப்படியே விட்டு விட்டால்
முழுமையும் பாதிக்கப்படும் என்ற தெளிவு நமக்கு வர வேண்டும்.
அப்பொழுது தான் களங்கப்பட்ட பகுதியை
முழுமையிலிருந்து பிரித்து நீக்க முடியும் .
முழுமையிலிருந்து களங்கப்பட்ட பகுதியை
எடுத்து விட்டால் முழுமை களங்கப்படாது.
பகுதி பாதிக்கப்பட்டால் முழுமை பாதிப்படையும்
பகுதி பாதிக்கப்பட வில்லையெனில்
முழுமை பாதிப்புக்கு உள்ளாகாது.
பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கி விட்டால்
முழுமை பாதிப்புக்கு உள்ளாகாது.
பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கா விட்டால
முழுமை பாதிப்புக்கு உள்ளாகும்.
பகுதியே முழுமையை பாதிக்கிறது ;
பகுதியே முழுமையை மாற்றுகிறது ;
பகுதியே முழுமையை கெடுக்கிறது ;
பகுதியே முழுமையை அழுக்காக்குகிறது ;
பகுதியே முழுமையை அழிக்கிறது ;
பாதிக்கப்பட்ட பகுதியை முழுமையிலிருந்து நீக்கும் திறனறிந்து ,
பகுதியை முழுமையிலிருந்து நீக்கா விட்டால்
முழுமை பாதிப்படைந்து இன்னல்களை விளைவிக்கும்.
நம்முடைய மனமானது நல்லவைகளால் நிரப்பப்பட்டு
களங்கமற்று இருக்கிறது அதாவது முழுமை
களங்கமற்று இருக்கிறது .
தீய எண்ணங்கள் ; தீய சொற்கள் ;
தீய செயல்கள் ஆகியவற்றால்
மனதின் ஒரு பகுதி கெட்டுப் போகிறது
அதாவது மனதின் ஒரு பகுதி
தீயவைகளால் கெட்டுப் போகிறது .
மனமானது நல்லவைகளால் நிரப்பப்பட்டு
முழுமையாக நல்ல தன்மை கொண்டு
நல்ல விதமாக இயங்கும் போது
மனதின் முழுமையும் நல்லவைகளால் நிரப்பப்பட்டிருக்கும் போது
தீயவைகள் மனதின் உள்ளே நுழைந்து
அதன் ஒரு பகுதியை களங்கப்படுத்தி விட்டால்
அதாவது மனதின் முழுமையான
நல்லவைகளின் ஒரு பகுதி தீயவைகளால் நிரப்பப்பட்டால்
நல்லவைகளின் ஒரு பகுதியை தீயவைகள் ஆக்ரமித்துக் கொண்டால்
களங்கமில்லாத முழுமையின் ஒரு பகுதி
களங்கப்படுத்தப் பட்டு விட்டால்
நல்லவைகளால் நிரப்பப்பட்ட முழுமையின் ஒரு பகுதி
தீயவைகளால் நிரப்பப்பட்டால்
முழுமை பகுதியால் பாதிக்கப்பட்டால்
முழுமை பகுதியால் களங்கப்படுத்தப் பட்டால்
முழுமை பகுதியால் அசுத்தப்படுத்தப் பட்டால்
முழுமை பகுதியால் பாதிக்கப்படும் நிலைக்கு உள்ளாகும்
களங்கமில்லாத மனம் களங்கப்பட்ட பகுதியால்
முழுமையாக பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படும்
ஆகவே தீயவைகள் மனதில் நுழையும் போதே
அதை கண்டறிய வேண்டும்.
நுழைய விடாமல் தடுக்க முயற்சி செய்ய வேண்டும்
நுழைந்து விட்டால் தீயவைகள் மனதில் நுழைந்து விட்டால்
மனதின் ஒரு பகுதியை பாதித்து விட்டால்
மனதின் முழுமையும் பாதிப்பு உள்ளாகாமல் இருக்க
பாதிக்கப்பட்ட பகுதியை எவ்வாறு அழிப்பது
பாதிக்கப்பட்ட பகுதியை எவ்வாறு கிள்ளி எறிவது
பாதிக்கப்பட்ட பகுதியை எவ்வாறு முழுமையிலிருந்து பிரித்து
வெளியே எறிவது என்பதை ஆராய வேண்டும்.
அப்படி எறியா விட்டால் மனம் முழுவதும் பாதிக்கப்படும் ;
தீயவைகளால் பாதிக்கப்படும் தீயவைகளால் நிரப்பப்படும் ;
நல்ல மனதை தீயவைகள் அழித்து விடும் ;
நல்லவைகளால் நிரப்பப்பட்ட மனதை தீயவைகள் அழித்து விடும் ;
அமைதியாக நல்லவனாக சமுதாயத்தில் வாழும் ஒருவன்
முழுமையாக நல்லவனாக இருக்கும் ஒருவன்
முழுமனதும் நல்லவைகளால் நிரப்பப்பட்ட ஒருவன்
ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு
நேர்;வழியில் செல்லாமல் தவறான வழியைத் தேர்ந்தெடுக்கும் போது
அவனுடைய ஒரு பகுதி களங்கப்பட்டு விடுகிறது
தன்னுடைய வழி தவறு என்று உணர்ந்து
களங்கப்பட்ட பகுதியை முழுமையிலிருந்து பிரித்து
துhக்கி எறியா விட்டால்
களங்கப்பட்ட மனமானது களங்கப்பட்ட மனதின்
முழுமையின் ஒரு பகுதியானது
தீயவைகளை எண்ணி ; தீயவைகளை பேசி ;
தீயவைகளை செய்து ;
சுயநல மிகுதியால் ஆணவத்துடன் அலைந்து
தலைகால் புரியாமல் ஆடி
முழுமையும் களங்கப்பட்டு முழுமையாக களங்கப்பட்டு
சமுதாயத்தால் ஏளனத்திற்கும் துhற்றுதலுக்கும் உள்ளாக நேரும்.
வாழ்க்கை இருள் நிறைந்ததாக மாறும்.
பகுதியால் முழுமை பாதிக்கப்பட்டால் இந்த நிலை தான் உண்டாகும்.
நல்லவைகளால் நிரப்பப்பட்ட மனதினுள் அதாவது
முழுமைக்குள் ஒரு பகுதி தீயவைகளால் பாதிக்கப்பட்டால்
முழுமையும் பாதிக்கப்படும்.
பாதிக்கப்பட்ட பகுதியை முழுமையிலிருந்து பிரித்து துhக்கி எறிவதன் மூலம்
முழுமையை பாதிப்பிலிருந்து காப்பாற்றலாம்
பாதிப்பு அடையாமல் பாதுகாக்கலாம்
என்பதைத் தான் இயேசு கீழ்க்கண்ட உவமை மூலம் விளக்குகிறார்.
இரண்டு கண்கள் முழுமை - அதில் ஒரு கண் பகுதி ,
இரண்டு கைகள் முழுமை- அதில் ஒரு கை பகுதி ,
இரண்டு கால்கள் முழுமை- அதில் ஒருகால் பகுதி ,
புறத்தே தெரியும் கண் கை கால் ஆகியவற்றை
முழுமையாக உருவகப் படுத்திய இயேசு ,
இரண்டு செவிகள் இரண்டு மூக்குத் துhவரங்கள்
ஆகியவற்றை முழுமைக்கு உருவகப்படுத்தவில்லை .
கண் பார்க்க வேண்டுமென்றால் இமைகளைத் திறக்கும் பார்க்கும் .
பார்க்க வேண்டாமென்றால் இமைகளை மூடிக் கொள்ளும்
கைகள் வேலை செய்யும் போது இயங்கும்
வேலை செய்யாத போது இயங்காது.
கால்கள் இயங்க வேண்டுமென்றால் இயங்கும்
இயங்க வேண்டாமென்றால் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும்.
காதுகள் இயக்கமற்று இருக்க நினைத்தால் அதை நிறுத்த
ஒலியை கேட்காமல் இருக்க கை விரல்கள் தேவைப்படுகிறது.
அதைப் போல்,
மூக்கின் துவாரங்கள் மணத்தை உணராமல் இருக்க
கை விரல்கள் தேவைப்படுகிறது.
இவைகள் இரண்டும் தன் இயக்க நிலையை தானே நிறுத்திக்
கொள்ளும் திறனைப் பெற்றிருக்க வில்லை.
மனமானது இமையை மூடி திறந்து கண்ணையும்,
கைகளையும், கால்களையும்
இயக்கமுள்ள நிலையிலும், இயக்கமற்ற நிலையிலும்
வைக்கும் வகையில் செயல்படுகிறது.
எனவே தான் இயேசு கண்கள் ,கைகள், கால்கள்
ஆகியவற்றை மட்டுமே
உவமை கூறி விளக்க பயன்படுத்துகிறார்.
உன் கண் உனக்கு இடையூறு உண்டாக்கினால்
அதை பிடுங்கி எறிந்து விடு என்றால்,
இரண்டு கண்கள் கொண்ட முழுமையில் ஒரு பகுதி
ஒரு கண் அதை பிடுங்கி எறிந்து விடு என்று பொருள்.
அதாவது பகுதி பாதிக்கப்பட்டால் முழுமையும் பாதிக்கப்படும்
முழுமை பாதிக்கப்படாமல் இருக்க பகுதியை பிடுங்கி
எறிந்து விடு என்று பொருள்.
முழுமையாக களங்கமற்று இருக்கும் மனமானது
களங்கத்தால் மனதின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டால்
அது முழு மனதையும் பாதிப்பு அடையச் செய்துவிடும்
எனவே களங்கப்பட்ட மனதின் ஒரு பகுதியை
முழுமையிலிருந்து பிரித்து பிடுங்கி எறிய வேண்டும்.
அதே விளக்கம் தான் கையைப் பிடுங்கி எறி,
காலைப் பிடுங்கி எறி என்று இயேசு சொன்னதற்கும்
அதே விளக்கம் தான்.
முழுவதும் நல்லவைகளால் நிரப்பப்பட்ட
மனிதனின் மனதின் ஒருபகுதியானது
தீயவைகளால் பாதிக்கப்படாமல் இருக்க
பாதிக்கப்பட்ட பகுதியை
மனதிலிருந்து நீக்கும் முறையறிந்து நீக்க வேண்டும்.
அப்படி நீக்கா விட்டால் முழு மனமும்
தீயவைகளால் நிரப்பப்பட்டு வாழ்க்கையானது
இருள் சூழ்ந்து நரகத்தில் தள்ளப்படும்.
வாழ்க்கை துன்பத்துடனும், வேதனையுடனும் ,
கவலையுடனும் இருக்கும் .
என்கிறார் இயேசு.
திருவள்ளுவர்:
“””தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்””
-----திருவள்ளுவர்----திருக்குறள்-----
ஏழையின் சிரிப்பு - பசியின் குமுறல்
பணக்காரனின் சிரிப்பு - இன்பத்தின் வெளிப்பாடு
அரசியல்வாதியின் சிரிப்பு - மக்களின் அறியாமை
தொண்டனின் சிரிப்பு - வெற்றி பெறும் போது
அறிஞனின் சிரிப்பு - தத்துவத்தின் ஆரம்பம்
விஞ்ஞானியின் சிரிப்பு - கண்டுபிடிப்பின் முடிவில்
பட்டதாரியின் சிரிப்பு - வேலை கிடைத்து விட்டதில்
திருடனின் சிரிப்பு - ஏமாற்றி விட்டதில்
தந்தையின் சிரிப்பு – சுற்றத்தார் வாழ்த்தும் போது
தாயின் சிரிப்பு - தான் பெற்ற மழலையைக் காணும் போது
மழலையின் சிரிப்பு - தாயைக் காணும் போது
டாக்டரின் சிரிப்பு - நோயாளி பிழைத்து விட்டதில்
கணவனின் சிரிப்பு - மனைவிக்கு மட்டுமே தெரியும்
மனைவியின் சிரிப்பு - கணவனின் அன்பு கிடைத்து விட்டதில்
ஆணின் சிரிப்பு - பெண்ணை மயக்குவதில்
பெண்ணின் சிரிப்பு - ஆணை மயக்கி விட்டதில்
மனிதர்கள் பலவிதம் சிரிப்பு அவர்களுக்கு ஏற்ற விதத்தில்
சிரிப்பு உண்மையின் தன்மையாக வெளிப்பட வேண்டும்
போலியின் உருவ நிலையுடன் வெளிப்படக் கூடாது.
உண்மையான சிரிப்பு ஒருவனின் ஆளுமைத் தன்மையை
படம் பிடித்துக் காட்டும்.
போலியான சிரிப்பு ஒருவனின் போலித் தன்மையை
படம் பிடித்துக் காட்டும்.
சிரிப்பை மறந்த ஒரு இனமாக மனித இனம்
மாறிக் கொண்டே வருகிறது.
சமுதாயம் சுட்டிக் காட்டும் ,
சமுதாயம் வழி நடத்தும் ,
சமுதாயம் பின்பற்றச் சொல்லும் ,
தவறான நடைமுறைகளே !
மனிதன் தன் சிரிப்பை உண்மை சிரிப்பை
மறந்து போலி சிரிப்பை வெளிப்படுத்தக் காரணம்
மனிதன் தன் சுயத்தை , மனிதன் தன் அடையாளத்தை,
கொஞ்சம் கொஞ்சமாக இழப்பதே மனிதன் உண்மையாக
சிரிக்க மறந்ததற்கு காரணம் ஆகும்.
அகம் துhய்மையானால் புறத்தில்
உண்மையான சிரிப்பு வெளிப்படும்.
அகம் களங்கமடைந்தால்
நிறைவேறாத ஆசைகளால் நிரப்பப்பட்டால் ,
தேவையானவை கிடைக்காமல் கலக்கமுற்றால் ,
எண்ணியவை கிடைக்காமல் ஏமாற்றமுற்றால் ,
விரும்பியவை கிடைக்காமல் விலகிச் சென்றால் ,
புறத்தில் போலியான சிரிப்பே வெளிப்படும்.
உண்மையான சிரிப்பு வெளிப்பட வேண்டுமானால்
அகம் களங்கமடையாமல் இருக்க வேண்டும்
அகம் களங்கமடையாமல் இருக்க வேண்டுமானல்
பேராசை , சினம் , கடும்பற்று , முறையற்ற பால் கவர்ச்சி,
உயர்வு - தாழ்வு மனப்பான்மை , வஞ்சம் ஆகிய
ஆறு குணங்கள் மூலமாக எழும்பும் ,
தான் என்னும் அதிகாரப்பற்று,
தனது என்னும் பொருட்பற்று ,
ஆகிய பற்றுகள் ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய ஒரு நிலையை அடைந்தவன் மட்டுமே
அகத்தை துhய்மையாக வைத்திருக்க முடியும்.
களங்கமில்லா மனித மனதினுள் ஆறு குணங்களில்
ஒரு குணம் நுழைந்தாலே,
அவன் முழு மனமும் களங்கப்பட்டு போவது போல்
அவனது வாழ்வும் நிம்மதியற்று சோகத்தின்
சாயலாக உலாவரும்.
பகுதி பாதிக்கப்படும் போது முழுமையும் பாதிக்கப்படும்.
களங்கமற்ற முழுமைக்குள் பகுதியாக
சினம் வந்தால் சினம் நுழைந்தால்
அது முழுமையை களங்கப்படுத்தும்
முழுமையை பாதிக்கும்.
சினமே பாவங்களுக்கு எல்லாம் மூலம் ,
சினமே குடியை கெடுக்கும் ,
சினமே துயரை கொடுக்கும் ,
சினமே பொல்லாதவைகளை வர வழைக்கும் ,
சினமே சீர்கேட்டை கொண்டு வரும் ,
சினமே உறவை அறுக்கும் ,
சினமே பழியை உருவாக்கும் ,
சினமே பகையை உண்டாக்கும் ,
சினமே கருணையை அழிக்கும் ,
சினமே அன்பை சிதைக்கும் ,
சினமே பண்பை புதைக்கும் ,
சினமே அறிவை மாய்க்கும் ,
சினமே சிரிப்பை குலைக்கும் ,
சினமே நிம்மதியை கெடுக்கும் ,
சினமே எவரையும் வெறுக்கும் ,
சினமே பகையை உண்டாக்கும் ,
சினமே கெடுதல்களை உறவாக்கும் ,
சினமே உறவுகளை பிரிவாக்கும் ,
சினத்தை ஒருவன் தனக்குள் அனுமதித்துவிட்டால்
தீயபலன்களை சந்திக்க நேரும் ;
துன்பங்களை சுவைக்க நேரும் ;
கண்ணீரை அடைய நேரும் ;
கருத்தினை இழக்க நேரும் ;
இன்பங்களை தொலைக்க நேரும் ;
பண்பை மறக்க நேரும் ;
தகுதியை உடைக்க நேரும் ;
முழுமை பாதிப்படையாமல் இருக்க வேண்டுமானால்
பகுதியாகிய சினம் மனித மனதினுள் உள்ளே நுழையாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆசைக்கு தடை ஏற்படும் போது
ஆசை நிறைவேறாமல் தடுக்கப்படும் போது
சினமானது ஏற்படுகிறது
சினமானது வெளிப்படுகிறது
சினம் நண்பர்களிடத்தில் , சுற்றாரிடத்தில்,
உறவினர்களிடத்தில், குடும்பத்தாரிடத்தில் தான்
ஏற்படுமே ஒழிய முகம் தெரியாத ஒருவரிடம் சினம் ஏற்படாது.
நம்மை விட வலிமை குன்றியவர்களிடத்தில்,
எதிர்ப்பை காட்ட முடியாதவர்களிடத்தில் ,
அடிமையாக இருப்பவர்களிடத்தில் ,
அறியாமை கொண்டோரிடத்தில் ,
கருணை உள்ளம் பெற்றவர்களிடத்தில் ,
அன்பால் நிரப்பப்பட்டவர்களிடத்தில் ,
தான் நம் சினம் பலிக்குமே தவிர ,நம்மை எதிர்த்து செயல்படக்
கூடியவர்களிடத்தில் நம்முடைய சினம் பலிக்காது .
நம்முடைய சினம் நண்பர்களிடத்தில், சுற்றத்தாரிடத்தில் நம்மீது
அன்பு கொண்டு நாம் நலம் பெற வேண்டும் .
நன்மைகள் பல பெற வேண்டும் .
உயர்வுகள் பல அடைய வேண்டும் .
இன்பங்கள் பல துய்க்க வேண்டும் .
என வாழ்ந்துகொண்டிருக்கும் நமது நலத்துக்காகவே
இயங்கிக் கொண்டிக்கும் கொண்டிருப்பவர்களிடத்தில்
தான் சினம் உண்டாகும் .
சினம் நம் உள்ளத்தை கெடுக்கிறது ;
பிறர் மனதை புண்படுத்துகிறது ;
பிறர் மனதையும் வருத்தத்தில் ஆழ்த்துகிறது;
உறவுகளிடையே பிரிவுகளை உண்டாக்குகிறது ;
நண்பர்களிடையே பகைமையை வளர்க்கிறது ;
இத்தகைய சினம் எவ்வளவு கொடியது
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .
பிறர் நம் மீது சினம் கொள்ளும் போது நம் மனம் எவ்வாறு
பாதிப்படைகிறது என்பதை நாம் உணர்ந்தால் சிந்தித்துப் பார்த்தால்
நாம் மற்றவர் மேல் சினம் கொண்டால் அவருடைய மனமும்
நம் மனம் அடைந்த துன்பத்தை வருத்தத்தை பாதிப்பை அடையும்
என்பதை உணர்ந்து கொண்டால்
நாம் பிறர் மீது சினம் காட்ட மாட்டோம் .
ஒருவர் நிம்மதியாக , சந்தோஷமாக,
அமைதியாக வாழ வேண்டுமானால்,
சினம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சினம் வந்து விட்டால் அது தன் வாழ்க்கையையே
அழித்து விடும் என்பதை உணர வேண்டும்.
முழுமையான களங்கமற்ற மனதிற்குள்
சினம் என்னும் பகுதி நுழைந்துவிட்டால்
முழுமை பாதிக்கப்படும் எனவே சினம்
மனதின் உள்ளே நுழையாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒருவன் தன்னை காக்க வேண்டும் என்று நினைத்தால்,
அதாவது தன்னுடைய வாழ்க்கை அமைதி தழுவியதாக
இருக்க வேண்டும் என்று நினைத்தால் ,
சினம் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சினம் எழுவதை தடுக்காமல் விட்டு விட்டால்
தன் வாழ்க்கையை அமைதி இல்லாமல் செய்து
நிம்மதியற்றதாக மாற்றி தன் வாழ்க்கையையே
அழித்து விடும்.
என்கிறார் திருவள்ளுவர்.
இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர்:
இயேசு,
களங்கப்பட்ட பகுதி முழுமையை களங்கப்படுத்தி விடும்
என்ற காரணத்தினால் ,
களங்கப்பட்ட பகுதியை தனியே பிரித்து
வெளியே எறிந்து விட வேண்டும் என்கிறார்.
அவ்வாறே,
திருவள்ளுவரும்,
மனித மனம் சினம் என்னும் ஒரு பகுதியால்
களங்கப்பட்டால் களங்கப்பட்ட பகுதியால்
மனித மனம் முழுமையையும் களங்கப்பட்டு விடும்
என்ற காரணத்தினால் களங்கப்பட்ட பகுதியை
உள்ளே இருந்து வெளியேற்றி விடுவதன் மூலம் மனித மனத்தை
முழுமையாக களங்கப்படுவதிலிருந்து காப்பாற்றலாம்,
பாதுகாக்கலாம் என்கிறார்
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
போற்றினேன் பதிவுநாற்பத்திஐந்து ந்தான்முற்றே “”