May 26, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-12


              நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-12

அம்மை நோய்
வந்து விட்டால்
அதனை குணமடையச்
செய்வதற்கு
ஆங்கில மருத்துவத்தில்
அன்றும் இன்றும்
மருந்து கண்டு
பிடிக்கப்படவில்லை
உலகில் எங்குமே
அம்மை நோய்க்கு
மருந்து கண்டுபிடிக்கப்
படவில்லை

அம்மை மருந்து
கண்டுபிடிக்கப்படாத
அந்த காலத்திலும் சரி
இந்த காலத்திலும் சரி
அம்மை நோய்
வந்து விட்டால்
அதனை போக்குவதற்கு
பயன்படுத்திக் கொண்டு
இருப்பது தான் வேப்பிலை

வேப்பிலை
ஒரு மிகச் சிறந்த
கிருமி நாசினி ஆகும்

அம்மை நோய்க்கு
மருந்து கண்டுபிடிக்கப்படாத
அந்தக் காலங்களில்
அம்மை நோய்
ஏற்பட்டு விட்டால்
அம்மை நோயிலிருந்து
குணமடைவதற்கும்
அம்மை நோய்
பரவாமல்
பாதுகாப்பதற்கும்
பயன்படுத்தப்பட்டது
தான் வேப்பிலை

அம்மை நோயைக்
குணப்படுத்தும் சக்தியும்
அம்மை நோயைப்
பரவாமல் தடுக்கும்
சக்தியும்
வேப்பிலையில்
உள்ளதை கண்டுபிடித்த
நம் முன்னோர்கள்
அம்மை நோயைக்
குணப்படுத்த
வேப்பிலையைப்
பயன் படுத்தினர்

அம்மை ஆரம்பித்தது
முதல் குணமாகி
நோயாளி எழுந்திருக்கும்
நிலை உருவாகும் வரை
வேப்பிலையை
பல்வேறு விதங்களில்
பயன்படுத்தினர்
நம் முன்னோர்கள்

அம்மை வந்து விட்ட
வீட்டிலின் வாசலில்
வேப்பிலையை
சொருகி வைப்பார்கள்
அதற்கு அர்த்தம்
இந்த வீட்டில் ஒருவருக்கு
அம்மை நோய் வந்திருக்கிறது
ஆகவே சுத்தமாக
இருப்பவர்கள் மட்டுமே
வீட்டிற்குள்
வர வேண்டும்
என்று பொருள்

அதுமட்டுமல்ல
அம்மை நோயினால்
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து
வெளிக்கிளம்பும் கிருமிகள்
வேப்பிலையில் பட்டு
கிருமிகள் இறந்து விடும்
இதனால் அம்மை நோய்
வெளியில் பரவி
மற்றவர்களுக்கு இந்த
அம்மைநோய்
பரவாமல் தடுக்கப்படும்,

வெள்ளைத்
துணியின் மேல்
வேப்பிலையைப் பரப்பி
அம்மை நோயால்
பாதிக்கப்பட்டவரை
படுக்க வைப்பார்கள்

மேலும்
நோயாளியைச் சுற்றிலும்
வேப்பிலையை
போட்டு வைப்பார்கள்
வேப்பிலையை
நோயாளியின் மேல்
காற்று படுமாறு
எடுத்து வீசுவார்கள்

கீழே உள்ள
வேப்பிலையிலிருந்து
எழும் காற்றும்
சுற்றியுள்ள வேப்பிலையிலிருந்து
எழும் காற்றும்
வேப்பிலையை பயன்படுத்தி
வீசும் போது எழும் காற்றும்
உடலின் வெளிப்புறத்தில்
உள்ள நோய்க்கிருமிகளைக்
கொல்வதோடு
உடலின் உள்புறத்தில்
உள்ள நோய்க்கிருமிகளைக்
கொல்லும் சக்தியையும்
கொண்டது வேப்பிலை

தலைக்கு தண்ணீர்
விடும் போது
தண்ணீரில்
வேப்பிலையைப் போட்டு
வெயிலில் சிறிது நேரம்
வைத்து விட்டுத் தான்
பிறகு அம்மை நோய்
பாதிக்கப்பட்டவருக்கு
தலைக்கு தண்ணீர்
விடுவார்கள்.
இதனால் உடலில்
உள்ள கிருமிகள்
கொல்லப்படுவதோடு
உடல் எரிச்சலையும்
தடுக்கும்

இவ்வாறு அம்மை
நோய் பாதித்தவருக்கு
வேப்பிலையை
பயன்படுத்தி செய்யும்
செயல்கள் யாயும்
நாம் பார்த்து இருப்போம்

இந்த செயல்கள் எல்லாம்
அம்மை நோய் பாதிக்கப்பட்டவருக்கு
அம்மை நோய் குணமாகுவதற்கும்,
அம்மை நோய் மற்ற
இடங்களுக்கு பரவாமல்
தடுப்பதற்கும்
செய்யப்படுவது ஆகும்

உலகத்திற்கே
மருத்துவம்
சொல்லிக் கொடுத்தவர்கள்
நம் முன்னோர்கள்
நம்மைச் சுற்றியுள்ள
இயற்கை வளத்தை வைத்தே
நோயைக் குணப்படுத்தக்
கூடிய முறைகளை
சொல்லிச் சென்று
அதை இன்றும்
கடைப்பிடிக்க வைத்த 
நம் முன்னோர்கள் 
புத்திசாலிகள்

--------- இன்னும் வரும்
////////////////////////////////////////////


No comments:

Post a Comment