October 31, 2018

திருக்குறள்-பதிவு-43


                     திருக்குறள்-பதிவு-43

இத்தாலி நாட்டிலுள்ள
பைசா நகரத்தில்
கி.பி.1564-ஆம் ஆண்டு
பிப்ரவரி 15-ம் நாள்
வின்சென்சோ கலிலி
என்பவருக்கும்
குயுலியோ அம்மன்னடி
என்பவருக்கும்
ஆறு பிள்ளைகளில்
மூத்த மகனாகப் பிறந்து
விஞ்ஞான உலகில்
புரட்சியை ஏற்படுத்திய
அந்த விஞ்ஞானி தான்
கலிலியோ கலிலீ,
(Galileo Galilei)

அதிகமாக
சிந்திக்கும் திறனும்,
ஆழமாக யோசிக்கும்
தன்மையும்,
இளமையில் இயல்பாகவே
பெற்றிருந்தார் கலிலியோ
கலிலியோ
17 வது வயதை
அடைந்த போது
பிசா பல்கலைக் கழகத்தில்
(University of Pisa)
சேர்ந்தார்
கணிதத்தையும்,
இயற்பிலையும்
கற்றார்
அந்த பல்கலைக்
கழகத்தில் அதிகமான
கேள்விகளைக்
கேட்ட மாணவர்களில்
முதல் மாணவனாக
இருந்தவர் கலிலியோ

மாணவர்களுக்கு
கற்பிக்கப்பட்ட அறிவியல்
கோட்பாடுகளை
மற்ற மாணவர்கள்
எந்தவிதமான
கேள்விகளையும்
கேட்காமல்
அப்படியே ஏற்றுக்
கொண்டு மறுப்பு
ஏதும் சொல்லாமல்
கல்வியை
கற்றுக் கொண்டு
வந்த சூழலில்
கலிலியோ மட்டும்
அறிவியல் கோட்பாடுகளுக்கான
ஆதாரங்களைக் கேட்பார்
ஆதாரங்கள் இல்லாத
அறிவியல் கோட்பாடுகளை
ஏற்றுக் கொள்ள மறுப்பார்

கலிலியோவிற்கு
கற்பிக்கப்பட்ட அறிவியல்
கோட்பாடுகளில் ஒன்றான
அரிஸ்டாட்டிலின் விதி
வெவ்வேறு
எடையுடைய இரண்டு
பொருட்களை
உயரத்திலிருந்து
கீழே போட்டால்
அதிக எடையுடைய
பொருள் முதலிலும்
லேசான பொருள்
பின்னரும் தரையில்
விழும் என்று
கற்பிக்கப்பட்டது

அரிஸ்டாட்டில்
கூறியிருந்த இந்த
விதியை
கலிலியோ ஏற்றுக்
கொள்ளவில்லை
ஒருவர் சொன்ன
விஞ்ஞான கருத்து
உண்மை என்று நம்பி
நாம் அப்படியே
ஏற்றுக் கொள்ளக்
கூடாது
விஞ்ஞானக் கருத்துக்களை
நாம் ஏற்றுக் கொள்ள
வேண்டுமானால்
அந்த விஞ்ஞானக்
கருத்துக்கள்
அறிவியல்பூர்வமாக
நிரூபிக்கப்பட்டிருக்க
வேண்டும் என்று
கூறிய கலிலியோ
அரிஸ்டாட்டில்
கூறிய இந்த விதியை
ஏற்றுக் கொள்ளவில்லை
இதனால் ஆசிரியர்களின்
கடுமையான கோபத்திற்கு
ஆளாகக்கூடிய நிலை
கலிலியோவிற்கு ஏற்பட்டது.

பட்டம் பெற்ற
கலிலியோ
தன்னுடைய 25-ம் வயதில்
அதே பல்கலைக்கழகத்தில்
கணித ஆசிரியராக
சேர்ந்தார்

படிக்கும் காலத்தில்
தவறான விதி
என்று கலிலியோவால்
நம்பப்பட்ட
அரிஸ்டாட்டிலின் விதியை
ஆசிரியராக மாறிய
கலிலியோ
தவறு என்று
சோதனை மூலம்
நிரூபிக்க முயன்றார்

அதற்காக நிறைய
மக்களை அழைத்து
பைசா நகரத்தின்
சாய்ந்த கோபுரத்தின்
தரையில் நிற்க
வைத்து விட்டு
பிசாவின் சாய்ந்த
கோபுரத்தின் மீது
ஏறி நின்று மேலிருந்து
வெவ்வேறு
எடையுள்ள இரண்டு
குண்டுகளை
ஒரே சமயத்தில்
கீழே விழ விட்டு
அவை இரண்டும்
ஒரே சமயத்தில்
பூமியில் வந்து
விழுவதை
தனது சோதனை மூலம்
நிரூபித்துக் காட்டி
அரிஸ்டாட்டில்
சொன்ன விதியை
தவறு என்று
நிரூபித்தார்

அறிவியல் கருத்துக்கள்
தத்துவ ரீதியாக
சொல்லப்பட்டு வந்த
நிலையில்
முதன் முதலாக
சோதனையின் மூலம்
செயல்முறை விளக்கங்கள்
மூலம் அறிவியல்
கருத்துக்களை
வெளியிட்ட பெருமை
கலிலியோவையேச் சாரும்

இந்த நிகழ்ச்சியைத்
தொடர்ந்து
கலிலியோவால்
பிசா பல்கலைக்
கழகத்தில் பணியாற்ற
முடியவில்லை
University of Padua
பல்கலைக் கழகத்தில்
ஆசிரியராகச் சேர்ந்தார்

அரிஸ்டாட்டிலின்
ஒரு சிறிய விதியை
தவறு என்று
நிரூபிக்கவே கலிலியோ
கஷ்டப்பட வேண்டி
இருந்தது
அப்படி இருக்கையில்
உலகம் முழுவதும்
பல ஆண்டுகளாக
மக்களால் சரி
என்று ஏற்றுக்
கொள்ளப்பட்டு
பின்பற்றப்பட்டு வந்த
ஒரு முக்கியமான
விதியை தவறு என்று
நிரூபிப்பதற்கும்,
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
கருத்தை சொல்லி
அதை நிரூபிப்பதற்கும்,
கலிலியோ அதிக
கஷ்டங்களை அனுபவிக்க
வேண்டி இருந்தது
கலிலியோ பட்ட
கஷ்டங்கள் என்ன
என்பதைப் பற்றி
இனி பார்ப்போம்

---------  இன்னும் வரும்
---------  31-10-2018
///////////////////////////////////////////////////////////


October 30, 2018

திருக்குறள்-பதிவு-42

                      திருக்குறள்-பதிவு-42

உலகில் எந்த
ஒரு இடத்திலும்,
எந்த செயல்
நடைபெற்றாலும்,
அந்த இடத்தில்
இரண்டு பேர்கள்
இருப்பார்கள்

ஒன்று  : ஆதரிப்பவர்கள்
இரண்டு : எதிர்ப்பவர்கள்

அதைபோலத்தான்
பைசா நகரத்தின்
சாய்ந்த கோபுரத்தின்
உச்சியின் மேல் நின்று
மேலிருந்து
வெவ்வேறு
எடையுள்ள இரண்டு
குண்டுகளை
ஒரே சமயத்தில்
கீழே விழ விட்டு
அவை இரண்டும்
ஒரே சமயத்தில்
பூமியில் வந்து
விழுவதை
தனது சோதனை
மூலம் நிரூபித்துக்
காட்டி
அரிஸ்டாட்டில்
சொன்ன விதியை
தவறு என்று
நிரூபித்த
அந்த விஞ்ஞானியின்
சோதனையைக் கண்ட
மக்களில்
ஒரு பிரிவினர்
அந்த விஞ்ஞானியை
ஆதரித்தனர்
மற்றொரு பிரிவினர்
அந்த விஞ்ஞானியை
எதிர்த்தனர்.

பல்லாண்டு காலமாக
மக்களால் சரி
என்று நம்பப்பட்டு
வந்த ஒரு விதியை
எளிமையான
சோதனை மூலம்
தவறு என்று
நிரூபித்த அந்த
விஞ்ஞானியை
எதிர்ப்பவர்கள்
சொன்னார்கள்
இவர் செய்த
சோதனையில்
ஏதோ மாயமந்திரம்
இருக்கிறது;
இயற்கைக்கு
மாறானதாக இருக்கிறது;
இது நடைபெறுவதற்கு
சாத்தியமே இல்லை;
இவர் ஏதோ
பித்தலாட்ட வேலை
செய்து இருக்கிறார்;
ஏமாற்று வேலை
செய்து இருக்கிறார்;
சூழ்ச்சி வேலை
செய்து இருக்கிறார்;
மாபெரும்
விஞ்ஞானியான
அரிஸ்டாட்டில்
எவ்வாறு தவறு
செய்திருக்க முடியும்;
அரிஸ்டாட்டில் தவறு
செய்திருக்க
வாய்ப்பேயில்லை;
இவர் செய்த
சோதனை தான்
தவறானது;
ஏமாற்று வேலையைக்
கொண்டது;
பித்தலாட்டங்களைக்
கொண்டது;
என்று பலவாறாக
அந்த விஞ்ஞானியை
இழிவு படுத்தி பேசினர்
அந்த விஞ்ஞானியை
எதிர்ப்பவர்கள்

அந்த விஞ்ஞானி
செய்து காட்டிய
சோதனையை
ஆச்சரியத்துடன்
பார்த்துக் கொண்டிருந்த
மக்களில்
ஒரு பிரிவினர்
அந்த விஞ்ஞானியின்
சோதனையைக்
கண்டு வியந்தனர்;
அரிஸ்டாட்டில்
என்னும் மாபெரும்
அறிஞர் சொன்ன
விதியையே தவறு
என்று சொல்லி
அதை எளிமையான
சோதனை மூலம்
நிரூபித்த
இந்த விஞ்ஞானி
சாதாரணமானவராக
இருக்கவே முடியாது;
பெரிய அறிவாளியாகத்
தான் இருக்கமுடியும்;
சிறந்த விஞ்ஞானியாகத்
தான் இருக்க முடியும்;
இந்த விஞ்ஞானி
செய்த சோதனை
வியப்பிற்குரியது;
என்று அந்த
விஞ்ஞானியை
ஆதரிப்பவர்கள்
அந்த விஞ்ஞானியைப்
புகழ்ந்தார்கள்.

அந்த விஞ்ஞானி
இயற்பியலார்,
கணிதவியலார்,
வானியல் அறிஞர்,
தத்துவஞானி,
என்று பல்வேறு
பெயர்களில்
அழைக்கப்படுபவர்.

அது மட்டுமல்ல
நவீன வானியல்
ஆய்வுகளின் தந்தை,
நவீன
இயற்பியலின் தந்தை,
அறிவியலின் தந்தை,
நவீன
அறிவியலின் தந்தை
என்று பல்வேறு
நிலைகளில் சிறப்பித்துக்
கூறப்படுபவர் தான்
அந்த விஞ்ஞானி

கடந்த நூற்றாண்டுகளில்
தெரியாமல்
மறைந்திருந்த
பல மகத்தான
காட்சிகளை, நான்
மட்டும் முதலில்
காணும்படி
வாய்ப்பளித்த கடவுளின்
பேரருளுக்கு
அளவற்ற எனது
நன்றியைக் கூறுகிறேன்
என்று சொன்னவர்
தான் அந்த விஞ்ஞானி

அரிஸ்டாட்டிலின்
விளக்கத்தைத் தவிர
வேறு எதையும்
நாங்கள் ஏற்க
மாட்டோம் என்று
சொன்ன மக்களிடம்
உண்மைகள் பிறப்பது
அதிகாரத்தின்
அதட்டலிலிருந்து அல்ல
நடைமுறை
அனுபவங்களிலிருந்து
தான் அவை
உதிக்கின்றன என்று
சொன்னவர் தான்
அந்த விஞ்ஞானி

---------  இன்னும் வரும்
---------  30-10-2018
///////////////////////////////////////////////////////////


திருக்குறள்-பதிவு-41


                     திருக்குறள்-பதிவு-41

பல ஆண்டு காலமாக
மக்களால் சரி என்று
ஏற்றுக் கொள்ளப்பட்டு
உண்மை என்று
நம்பப்பட்டு வந்த
ஒரு விதியை தவறு
என்று நிரூபிப்பதற்காக
பைசா நகரத்து
சாய்ந்த கோபுரத்தின்
உச்சிக்கு ஒரு
விஞ்ஞானி ஏறிச் சென்று
கொண்டு இருந்தார்

மாபெரும் விஞ்ஞானி
அரிஸ்டாட்டில்
அவர்களின் விதியை
தவறு என்று
நிரூபிப்பதற்காக
அந்த விஞ்ஞானி
பைசா நகரத்து
சாய்ந்த கோபுரத்தின்
உச்சிக்கு ஏறிச் சென்று
கொண்டு இருந்தார்

இயேசு கிறிஸ்து
பிறப்பதற்கு
400 வருஷங்களுக்கு
முன்னர்
மகா அலெக்ஸாண்டர்
கீரிஸ் தேசத்தில்
அரசாண்டு கொண்டு
இருந்த போது
அவருக்கு ஆசிரியராக
இருந்தவர் தான்
இந்த அரிஸ்டாட்டில்
என்ற பேரறிஞர்
அவர் உலகப் புகழ்
பெற்ற பெரியவர்களில்
ஒருவர் அவர்
பல்வேறு துறைகளிலும்
ஆராய்ச்சிகள் பல
செய்து தான் கண்ட
ஆராய்ச்சிகளைப் பற்றியும்
ஆராய்ச்சியின்
முடிவுகளைப் பற்றியும்
நூல்கள் பல
எழுதி உள்ளார்

அரிஸ்டாட்டில் ஆராய்ச்சி
செய்து கண்ட
முடிவுகளையே அந்தக்
காலத்து மக்கள்
மற்றும் அறிஞர்கள்
எல்லோரும்
மறுக்க முடியாத
உண்மைகள் என்று
ஏற்றுக் கொண்டு
வந்து உள்ளனர்
அவருடைய ஆராய்ச்சிகள்
அனைத்தும்
இந்தக் காலத்திலும்
அனைத்து தரப்பினரும்
வியக்க வைக்கும்
விதத்தில் அமைந்து
இருப்பது அவருடைய
கண்டுபிடிப்பின்
சிறப்பாகும்

அத்தகைய உயர்ந்த
விஞ்ஞானியான
அரிஸ்டாட்டில் சொன்ன
விதி இது தான்

“”வெவ்வேறு
எடையுடைய
இரண்டு பொருட்களை
ஒரே உயரத்திலிருந்து
ஒரே நேரத்தில்
கீழே போட்டால்
அதிக எடையுடைய
பொருள் முதலிலும்,
லேசான பொருள்
பின்னரும்
தரையில் விழும்

அதாவது
ஒரே உயரத்திலிருந்து
கீழே விழும் இரண்டு
பொருட்களின்
எடைக்கு ஏற்றபடி
பூமியைத் தொடும்
காலம் மாறும் என்பது
தான் அரிஸ்டாட்டிலால்
சொல்லப்பட்டவிதி 

அரிஸ்டாட்டிலால்
சொல்லப்பட்ட இந்த
விதியைத் தான்
இந்த உலகம்
1900 வருடங்களாக
தவறு கண்டுபிடிக்காமல்
சரி என்று நம்பிக்
கொண்டு இருந்தது

அரிஸ்டாட்டிலின்
இந்த விதி தவறு
என்று அந்த
விஞ்ஞானி கருதினார்,

வெவ்வேறு எடை
கொண்ட இரண்டு
பொருட்கள்
ஒரே நேரத்தில்
மேலிருந்து
கீழே விழும்போது
அவை ஒரே நேரத்தில்
பூமியை அடையும்
என்று கூறினார்
அதை இந்த உலகம்
ஏற்றுக் கொள்ள மறுத்தது

அரிஸ்டாட்டில்
சொன்ன விதி தவறு
என்று நிரூபிக்க
விரும்பினார்
அந்த விஞ்ஞானி
நிறைய பார்வையாளர்களை
தன்னுடன் அழைத்துக்
கொண்டு சென்று
அவர்களை தரையில்
நிறுத்தி விட்டு
உலகப் புகழ்பெற்ற
பைஸா நகரத்தின்
சாய்ந்த கோபுரத்தின்
உச்சிக்கு ஏறிப்போனார்
அங்கிருந்து இரண்டு
இரும்பு குண்டுகளை
ஒரே சமயத்தில்
கீழே விழச் செய்தார்

ஒரு குண்டு
10 ராத்தல் எடை
கொண்டதாகவும்,
ஒரு குண்டு
ஒரு ராத்தல் எடை
கொண்டதாகவும் இருந்தன
அரிஸ்டாட்டில்
சொன்ன விதி
சரியாக இருக்குமானால்
ஒரு ராத்தல் குண்டு
தரையைத் தொட
10 நிமிடங்கள்
எடுத்துக் கொண்டால்
10 ராத்தல் குண்டு
ஒரு நிமிடம் எடுத்துக்
கொள்ள வேண்டும்
ஆனால் இரண்டு
குண்டுகளும் ஒரே
சமயத்தில் தரையில்
வந்து விழுந்தன

மேலிருந்து இரண்டு
வெவ்வேறு எடையுள்ள
குண்டுகளை
ஒரே சமயத்தில்
கீழே விழ விட்டு
அவை இரண்டும்
ஒரே சமயத்தில்
பூமியில் வந்து
விழுவதை
எடுத்துக் காட்டினார்
அந்த விஞ்ஞானி

அந்த விஞ்ஞானி
செய்த இந்த சோதனை
வெவ்வேறு எடை
கொண்ட இரண்டு
பொருட்கள்
ஒரே நேரத்தில்
மேலிருந்து
கீழே விழும்போது
அவை வெவ்வேறு
நேரத்தில்
பூமியை அடையும்
என்ற அரிஸ்டாட்டிலின்
விதியினை தவறு
என்று நிரூபித்ததன்
மூலம் விஞ்ஞானத்திற்கு
புதிய அறிவுக் கதவு
திறக்கப்பட்டது

---------  இன்னும் வரும்
---------  30-10-2018
////////////////////////////////////////////////////