February 02, 2019

திருக்குறள்-பதிவு-95


                       திருக்குறள்-பதிவு-95

"நடுத்தர வயதுப்பெண்
ஒருவர் கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
கருத்து சொன்னார்  
என்பதற்காக - அவர்
சொன்ன கருத்தை
சரியானதா? தவறானதா?
என்று கூட ஆராய்ந்து
பார்க்காமல் - அந்த
பெண்ணை சூன்யக்காரி
என்று பழி சுமத்தி   
அவரை சித்திரவதை செய்து
உயிரோடு எரித்து
கொல்வதற்காக ,சென்று
கொண்டிருந்த கூட்டத்துடன்
சேர்ந்து - அந்த செயலைச்
செய்வதற்கு இளவயது
ஜியார்டானோ புருனோ
அவர்களை நோக்கி
ஓடிக் கொண்டிருந்தார் "

"ஜியார்டானோ புருனோ
செய்யத் துணிந்த - அந்த
பாவப்பட்டசெயலைத் தான்
செய்யாதே என்று சொல்லிக்
கொண்டே - ஜியார்டானோ
புருனோவின் மேல் அன்பு
கொண்ட ஒரு ஆண்
ஜியார்டானோ புருனோவை
துரத்திக் கொண்டு அவர்
பின்னால் ஓடிக்
கொண்டிருந்தார் "

" நான்கு ஆண்கள்
படிக்கட்டின் மீது 
விரைவாக ஓடி ஏறி
முதல் மாடியை
அடைந்தனர் ;கதவை
தள்ளினர் - அங்கே
தனியாக பார்ப்பதற்கே
பாவமாக உட்கார்ந்து
கொண்டிருந்த - அந்த
நடுத்தர வயதுப் பெண்ணை
தூக்கி நிறுத்தி - வெளியே
இழுத்து வந்த போது
அந்த பெண் கால்
தடுமாறி கீழே விழுந்தாள் :
வேண்டாம்..! வேண்டாம்..!
என்று அந்த பெண்
அலறினாள். "

" கால் தடுமாறி படிக்கட்டில்
தலை கீழாக விழுந்து
கிடந்த அந்த பெண்ணின்
தலைமுடியை பிடித்து
இழுத்துக் கொண்டே
படிக்கட்டில் ஒருவன்
கீழே இறங்கினான் "

" அங்கே மதவாதிகள்
மேடைமேல் பலர் நின்று
கொண்டு - நடந்து
கொண்டிருந்த அந்த
பாவப்பட்ட செயலை
ஊக்குவித்து வழிநடத்திக்
கொண்டு இருந்தனர் "

" பலர் ஒன்றாகக் கூடி அந்த
பெண்ணை நிற்க வைத்து
நடக்க வைத்து இழுத்து
சென்று அங்கே தனியாக
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
கம்பத்தில் அவளை நிற்க
வைத்து இரண்டு பேர்
அவளை கெட்டியாகப்
பிடித்துக் கொண்டனர் "

 " அந்த கூட்டத்தில் ஒருவன்
ஒரு வீட்டின் மாடியில்
விரைவாக ஏறினான் - அந்த
நெருப்பில் ஒரு தடிமனான
இரும்புக் கம்பி பழுகக்
காய்ச்சப்பட்டுக்
கொண்டிருந்தது
பழுகக் காய்ச்சப்பட்ட அந்த
இரும்புக் கம்பியை எடுத்துக்
கொண்டு அவன் விரைவாக
கீழே இறங்கினான் "

"ஒருவன் அந்த பெண்ணின்
மேலாடையைக் கிழிக்க
அந்த பழுகக் காய்ச்சப்பட்ட
இரும்புக் கம்பியைக்
கொண்டு வந்தவன்
அந்த பெண்ணின் நெஞ்சில்
சூடு வைத்தான் - அந்த
பெண் அலறிய ஒலி அங்கே
கூடியிருந்தவர்களுக்கும்
ஜியார்டானோ
புருனோவுக்கும் கேட்கவில்லை "

"ஆனால் இப்போது அந்த
பெண் அலறிய அந்த ஒலி
ஜியார்டானோ புருனோவின்
காதில் கேட்க ஆரம்பித்தது."

" ஜியார்டானோ
புருனோவிற்கு சிறிது
சிறிதாக நினைவு வர
அவர் சிந்திக்க ஆரம்பித்தார்
ஒரு பெண் சொன்ன
கருத்து கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
இருக்கிறது என்று
குற்றம் சாட்டப்பட்டு அது
சரியானதா? தவறானதா?
என்று கூட ஆராய்ந்து
பார்க்காமல் சித்திரவதை
செய்து கொல்வதற்காக
சென்ற கூட்டத்துடன்
தானும் சென்று செய்த
செயலை நினைத்தார் "

" தான் சொன்ன கருத்து
கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக
இருக்கிறது என்று குற்றம்
சாட்டப்பட்டு அது சரியானதா ?
தவறானதா ? என்று கூட
ஆராய்ந்து பார்க்காமல்
சித்திரவதை செய்து
கொல்வதற்காக தனக்கு
எதிராக செய்ப்பட்டுக்
கொண்டிருக்கும்
செயல்களை நினைத்தார் "

" சிறிய வயதில் அந்த
பெண்ணிற்கு தான் செய்த
சித்திரவதையையும் ;
தற்போது பிறர் தனக்கு
செய்து கொண்டிருக்கும்
சித்திரவதையையும் ;
ஒப்பிட்டு நோக்கினார் ;  
ஜியார்டானோ புருனோவிற்கு
ஒரு உண்மை
புரிய ஆரம்பித்தது. "

செய்த பாவம்
செய்தவனை சும்மா
விடாது என்பதை
உணர்ந்து கொண்டார் "

" பாவத்தைச் செய்து விட்டு
பாவத்தின் விளைவிலிருந்து
யாரும் தப்ப முடியாது
என்பது அவருக்கு
புரிய ஆரம்பித்தது "

" நீங்கள் உங்கள்
பாவங்களில் சாவீர்கள்
என்று இயேசு கிறிஸ்து
சொன்ன கருத்து அவர்
காதில் விழுந்து
எதிரொலித்துக்
கொண்டே இருந்தது. "

" ஜியார்டானோ புருனோ
உங்களுக்கு கொஞ்சம்
கொஞ்சமாக நினைவு
திரும்பி கொண்டு
இருக்கிறது - நீங்கள்
நான் பேசுவதை கேட்டுக்
கொண்டு இருக்கிறீர்கள் என்று
பாதர் டிராகாக்லியோலோ
சொல்லிக் கொண்டிருக்கும்
போது ஜியார்டானோ
புருனோவை ஒரு பலகையில்
படுக்க வைத்து அவருடைய
சிறை அறைக்கு தூக்கிக்
கொண்டு சென்று கொண்டிருந்தனர்.

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  02-02-2019
/////////////////////////////////////////////////////////////



No comments:

Post a Comment