May 31, 2019

பரம்பொருள்-பதிவு-19


                       பரம்பொருள்-பதிவு-19

4.மிருத்ஸங்கிரஹணம்

“மிருத்ஸங்கிரஹணம்
என்ற செயலும்  ;
அங்குரார்ப்பணம்
என்ற செயலும் ;
ஒன்றொன்றுக்கொன்று
தொடர்புடையவை ;”

“மிருத்ஸங்கிரஹணம்
என்றால்
மண் எடுத்தல்
என்று பொருள் “

“அங்குரார்ப்பணம்
என்றால்
முளையிடுதல்
என்று பொருள்”

“மிருத்ஸங்கிரஹணம்
அங்குரார்ப்பணம்
என்றால்
மண்ணை எடுத்து
எடுத்த மண்ணில்
முளையிடுவது
என்று பொருள்”

“அங்குரார்ப்பணத்துக்குத்
தேவையான
மண்ணை எடுப்பதற்குப்
பெயர் தான்
மிருத்ஸங்கிரஹணம்”

“அங்குரார்ப்பணத்துக்குத்
தேவையான மண்ணை
எடுப்பதற்கு என்று
நிர்ணயிக்கப்பட்ட
குறிப்பிட்ட திக்கு
சரியான இலட்சணம்
பொருந்திய
இடத்திலிருந்து
அதாவது எந்தவிதமான
குறைபாடும்
இல்லாத இடத்திலிருந்து
மண்ணை
வெட்டியெடுக்க
வேண்டும்”

“மண்ணை வெட்டி
எடுப்பதற்கு முன்னர்
பூமாதேவியையும்
பூமா தேவிக்கு
அதிபர்களான பிரமன்,
அஷ்டதிக்குப்
பாலகர்கள்
ஆகியோரை வழிபட்டுப்
பூமியை வெட்ட
வேண்டிய
அவசியத்துக்காக
மன்னிப்பு
கேட்டுக் கொண்டு
அவர்களிடம்
பூமியை வெட்டி
மண்ணை
எடுப்பதற்கான
உத்திரவினைப் பெற்ற
பின்னரே
பூமியை வெட்டி
மண்ணை தோண்டி
எடுக்க வேண்டும்”

“பூமியை வெட்டிய
தோஷம் நீங்குவதற்காக
வெட்டி எடுக்கப்பட்ட
பள்ளத்தில்
ஏழு கடலால்
அபிஷேகம்
செய்ய வேண்டும்”

“ஏழு கடல்
அபிஷேகமாவது
பால், தயிர்,
நெய், கருப்பஞ்சாறு,
தேன், உவர்நீர், நன்னீர்
ஆகியவை ஆகும்”

“உவர் நீருக்குப்
பதிலாக இளநீரை
உபயோகிப்பார்கள்
இவைகளை
வெட்டிய பள்ளத்தில்
மந்திரக்கிரியா
பூர்வமாக விட
வேண்டும்”

“மண் வெட்டியினுடைய
அளவு அதனுடைய
பிடி அது
எந்த மரத்தால்
செய்யப்பட்டிருக்க
வேண்டும் ;
மண்ணை ஏந்தும்
பாத்திரம் - இவற்றின்
இலட்சணம் ;
இவை யாவும்
சாத்திரங்களில்
சொல்லப்பட்டிருக்கின்றன ;

5.அங்குரார்ப்பணம்:
“அங்குரார்ப்பணம்
என்பதற்கு முளையிடுதல்
என்பது பொருளாகும்”

“எடுத்த மண்ணை
உரிய மந்திரத்தோடு
பாலிகைகளில் இட்டு
நவதானியங்களைத்
தெளித்து
முளைப்பாலிகை
அமைக்க வேண்டும்”

“இது செய்ய இருக்கும்
செயல்கள் எத்தகைய
தன்மைகளைக்
கொண்டிருக்கிறது
என்பதை அறிவதற்காக
ஏற்படுத்தப்பட்டது”

“மண்ணில் முளையானது
பசுமையாக ஓங்கி
வளர்ந்தால்
செய்யப்பட்ட செயல்கள்
அனைத்தும் சீராக
நடந்தன என்று
பொருள் கொள்ள
வேண்டும்”

“அப்படி
நடக்கவில்லையாயின்
மந்திரதோஷம்
ஏற்பட்டுள்ளது என்றும் ;
செயல்களில் குறைபாடு
ஏற்பட்டுள்ளது என்றும் ;
ஆசௌசம் (தீட்டு)
ஏற்பட்டுள்ளது என்றும் ;
உணர்ந்து
அதற்குத் தகுந்தவாறு
பிராயச் சித்தங்களைச்
செய்ய வேண்டும் ;
என்பது
ஆகம விதியாகும் “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 31-05-2019
/////////////////////////////////////////////////////


May 30, 2019

பரம்பொருள்-பதிவு-18


                     பரம்பொருள்-பதிவு-18

(1) அனுக்ஞை
(அனுமதி வாங்குதல்)
“கும்பாபிஷேகம்
தொடங்குவதற்கு முன்பு 
கும்பாபிஷேகத்தை
முன்னால் நின்று
நடத்தி வைப்பதற்கு
தகுதி வாய்ந்த
ஒருவரை  ;
ஆன்மீகத்தில்
நாட்டம் கொண்ட
ஒருவரை ;
ஆன்மீக செயலில்
உயர்ந்த ஒருவரை ;
பொது மக்கள்
தேர்ந்து
எடுக்கிறார்கள் “

“இவ்வாறு
பொது மக்களால்
தேர்ந்தெடுக்கப் பட்டவர்
கும்பாபிஷேகத்தை
தலைமையேற்று
முன்னால் நின்று
நடத்தி வைப்பதற்கு ;
எல்லாம் வல்ல
இறைவனின்
அனுமதியைப்
பெற வேண்டும் ;
இதற்கு அனுக்ஞை
என்று பெயர் ;”

(2) விக்னேஸ்வர பூஜை
“கும்பாபிஷேகம்
எந்தவிதமான
இடையூறும்
இல்லாமல் ;
எந்தவிதமான
தடையேதும்
இல்லாமல் ;
எந்தவிதமான
பிரச்சினையும்
இல்லாமல் ;
நடைபெறுவதற்காக
விநாயகப் பெருமானை
வழிபடுகிறார்கள் “

“விநாயகப் பெருமானை
வழிபடுவதற்கு
கணபதி ஹோமம்
செய்கிறார்கள் ;
இச்செயலுக்கு
அக்னியைப் பயன்
படுத்த வேண்டும்
என்று ஆகமங்கள்
எடுத்து உரைக்கின்றன ;”

“பூதகணங்களால்
இடையூறுகள்,
தாக்குதல்கள்
ஏற்படாதவாறு
கணங்களின்
தலைவனாகிய
மகாகணபதியை
நினைத்து அவருக்குப்
பிரியமான பொருளை
அக்னியில் சமர்ப்பிக்கும்
வேள்விதான்
மகாகணபதி ஹோமம் “

(3)வாஸ்து சாந்தி
“ஆகமங்களிலும்
சிவமகா புராணத்திலும்
வாஸ்து புருஷனைப்
பற்றிக் கூறப்பட்டுள்ளது “

“அந்தகாசுரன்
என்பவனை
கொல்வதற்காக
தேவர்கள்
சிவபெருமானிடம்
கோரிக்கை வைத்தனர் ;
சிவபெருமானுடைய
வியர்வைத் துளி
நிலத்தில் விழுந்தது
அதிலிருந்து
மூவுலகத்தையும்
விழுங்கத்தக்க
ஒரு பூதம்
தோன்றியது ;”

“அந்த பூதம்
சிவனுடைய
அருளைப் பெற்று
அந்தகாசுரனுடைய
உதிரத்தைக் குடித்து
அதைக் கொன்றது”

“பின்னர் அந்த பூதம்
சிவபெருமானை
நோக்கித் தவம்
இருந்து பல
வரங்கள் பெற்று
உலகத்தை மிகப்
பெரும் துன்பத்திற்கு
உள்ளாக்கியது ;
சிவபெருமான் அக்கிரமம்
செய்து கொண்டிருக்கும்
அந்த பூதத்தை அடக்க
வேண்டும் என்பதற்காக
அதிபவன் என்பவரை
சிருஷ்டித்து
அனுப்பினார் ; “

“அதிபவன் அந்தப்
பூதத்தை மாயா
பாசங்களால் கட்டிக்
கீழே தள்ளினார் ;
பின்னர்- அந்த
பூதத்தின் உடலின்
மீது 53 தேவதைகளை
வசிக்கச் செய்தார் ;
அவர்களும்
அந்தப் பூதத்துக்குக்
கெடுதி செய்யாமல்
அதனைப் பாதுகாத்து
வருகின்றனர் ;”

“தேவர்கள் அந்த அரக்கன்
மீது வசித்ததால்  
அந்த அரக்கனுக்கு
வாஸ்து புருஷன்
எனப் பெயர்
கிடைத்தது “

“இந்த வாஸ்து புருஷனால்
குடமுழுக்கு செயலுக்கு
கெடுதி வராமல்
இருக்க வேண்டும்
என்பதற்காக -  அந்த
53 தேவதைகளுக்கும்
பூஜை பலி ஹோமம்
ஆகியவற்றால்
சாந்தி செய்யும்
செயலுக்கு
வாஸ்து சாந்தி
எனப் பெயர் “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 29-05-2019
/////////////////////////////////////////////////////


May 28, 2019

பரம்பொருள்-பதிவு-17


                       பரம்பொருள்-பதிவு-17

“பிராண பிரதிஷ்டை
மூலம்
உயிரூட்டப்பட்டு
உயிர்ப்பெற்ற
கடவுள் சிலை ;
கும்பாபிஷேகத்தின்
மூலம்
இயங்கும் சக்தியைப்
பெறுகிறது ;”

“ஒரு சாதாரண காகிதம்
சாதாரண காகிதமாக
இருக்கும் போது
அதை யாரும்
மதிப்பது இல்லை ;
அரசாங்கம் அந்த
காகித்தை அச்சடித்து
பணமாக
வெளியிடும் போது
அதன் மதிப்பு
கூடுகிறது ;
அனைவரும்
பணத்தை மதித்து
போற்றுகின்றனர் ; “

“சாதாரணமான
காகிதமாக
இருக்கும் போது
காகிதத்தை மதிக்காத
இந்த உலகம் காகிதம்
அச்சடிக்கப்பட்டு
பணமாக மாற்றப்பட்ட
பின்பு இந்த
உலகம் மதிக்கிறது”

“சாதாரணமாக
இருக்கும் போது
அதற்குப் பெயர்
காகிதம் ;
பணமாக மாற்ற
அச்சடிக்கப்பட்ட
பின்பு அதற்குப்
பெயர் பணம் ; “

“அதைப்போலத் தான்
சாதாரணமாக
இருக்கும் போது
அதற்குப் பெயர் கல் ;
கும்பாபிஷேகம்
முடிந்த பின்
அதற்குப் பெயர்
கடவுள் ; “

“இதிலிருந்து
கும்பாபிஷேகம்
எவ்வளவு மதிப்பு
வாய்ந்தது என்பதைத்
தெரிந்து கொள்ளலாம் “

“கும்பாபிஷேகம்
செய்வதற்கு
செய்ய வேண்டிய
செயல்கள்
64 - என்றும்
55 - என்றும்
பல்வேறு
ஆகமங்களில்
கூறப்பட்டுள்ளன ;
இருந்தாலும்
கும்பாபிஷேகம்
செய்வதற்கு
முக்கியமாக
13 - செயல்கள்
பின்பற்றப்படுகின்றன ; “

“இந்த
13 செயல்களைச்
செய்யாமல்
எந்த ஒரு
கும்பாபிஷேகமும்
நடைபெறுவதும்
இல்லை - எந்த ஒரு
கும்பாபிஷேகமும்
முழுமை
அடைவதும் இல்லை”

“கும்பாபிஷேகத்தின்
போது செய்யப்படும்
13 முக்கிய செயல்கள்”

(1) அனுக்ஞை
(அனுமதி வாங்குதல்)
(2) விக்னேஸ்வர பூஜை
(3) வாஸ்து சாந்தி
(4) மிருத்ஸங்கிரஹணம்
(மண் எடுத்தல்)
(5) அங்குரார்ப்பணம்
(முளையிடுதல்)
(6) ரசஷாபந்தனம்
(காப்பு கட்டுதல்)
(7) கும்பஸ்தாபனம்
(8) கலாகர்ஷணம்
(சக்தி அழைத்தல்)
(9) யாகசாலை
(10) ஸ்பர்சாஹீதி
(11) கும்பாபிஷேகம்
(குடமுழுக்கு)
(12) மகாபிஷேகம்
(13) மண்டலாபிஷேகம்
“இந்த
13 - செயல்களைப்
பின்பற்றி செய்யப்படும்
எந்த ஒரு
கும்பாபிஷேகமும்
முழுமையடைகின்ற
காரணத்தினால்
கடவுள் சிலை
இயங்கும் சக்தியைப்
பெறுகிறது”

“கும்பாபிஷேகத்தை
பார்ப்பதற்கு
வாழ்க்கையில்
புண்ணியம்
செய்திருக்க வேண்டும் ;
தன் வாழ்நாளில்
கும்பாபிஷேகத்தைப்
பார்ப்பவர்களுக்கு
இறைவனின் அருள்
முழுமையாக
கிடைக்கும் ;”

“இத்தகைய சிறப்புகள்
பலவற்றைத்
தன்னுள் கொண்ட
கும்பாபிஷேகம் எப்படி
செய்யப்படுகிறது
என்பதைப் பற்றிப்
பார்ப்போம் “

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 28-05-2019

/////////////////////////////////////////////////////


May 27, 2019

பரம்பொருள்-பதிவு-16


அன்பிற்கியவர்களே,

அந்தம்+ஆதி=
அந்தாதி எனப்படும்

அந்தம் என்றால்
முடிவு என்று பொருள்
ஆதி என்றால்
தொடக்கம்
என்று பொருள்

முதற்பாவின்
ஈற்றடியில்
முடியும் எழுத்து
அசை, சீர் , சொல்
அடுத்து வரும்
பாவின் முதலடியில்
தொடங்கி ஒன்றாக
அமைதலையே
அந்தாதி என்கிறார்கள்

அந்தாதி என்றால்
முடிகின்ற ஒன்றாலேயே
அடுத்து தொடங்குவது
எனலாம்

அந்தாதியில் பாடல்
கட்டுரை எழுதுவது
என்பது அவ்வளவு
எளிதானதல்ல
கடினமானது

நான் இந்தக் கட்டுரை
முழுவதையும்
அந்தாதியைப்
பயன்படுத்தியே
எழுதியிருக்கிறேன்

அந்தாதியைப்
பயன்படுத்தி
எழுத வேண்டும்
என்பதற்காக- நான்
பரம்பொருள்
கட்டுரையையும்
கருத்தையும்
சிதைத்துவிடவில்லை
என்பதைத் தெரிவித்துக்
கொள்கிறேன்

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்
///////////////////////////////////

                      பரம்பொருள்-பதிவு-16

இரண்டு

“கடவுள் சிலையை”
கர்ப்ப கிரகத்தில்
நிறுவ வேண்டும்
என்பதற்காக
கடவுள்
சிலையை
நிறுவுவதற்கு
தேவையான
நடவடிக்கைகள்
எடுத்து
முதலில்
உயிருள்ள
கல்லானது
“தேர்ந்தெடுக்கப்படுகிறது“

“தேர்ந்தெடுக்கப்பட்ட“
உயிருள்ள
கல்லிடம்
உயிருள்ள
கல்லை
கடவுள் சிலையாக
செதுக்குவதற்கு
தேவையான
அனுமதி
“பெறப்படுகிறது“

“பெறப்பட்ட“
அனுமதியின்
அடிப்படையில்
கல்லானது
ஆகம சாஸ்திர
முறைகளின்படி
கடவுள் சிலையாக
“செதுக்கப்படுகிறது“

“செதுக்கப்பட்ட“
கடவுள் சிலைக்கு
பிராண பிரதிஷ்டை
மூலம் உயிர்
“கொடுக்கப்படுகிறது“

“கொடுக்கப்பட்ட“
உயிரினால்
கடவுள்
சிலையானது
கடவுளாகவே
“மாற்றப்படுகிறது“

“மாற்றப்பட்ட“
கடவுள் சிலை
மந்திரம்
யந்திரம்
தந்திரம்
ஆகிய மூன்றின்
மூலம்
அஷ்டபந்தனம்
செய்யப்பட்டு
கடவுள் சிலை
பீடத்துடன்
இணைக்கப்பட்டு
“நிறுவப்படுகிறது“

“நிறுவப்பட்ட“
கடவுள் சிலை
கடவுளாகவே
“மாற்றமடைகிறது“

“மாற்றமடைந்த“
கடவுள் சிலைக்கு
கும்பாபிஷேகம்
“செய்யப்படுகிறது“

“செய்யப்பட்ட“
கும்பாபிஷேகத்தின்
மூலம்
கடவுள்
சிலையானது
“இயங்குகிறது“

“இயங்குவதற்கான“
தன்மையைப் பெற்ற
கடவுள் சிலைக்கு
அன்றாடம்
மந்திரங்கள்
மூலம் பூஜைகள்
“செய்யப்படுகிறது“

“செய்யப்படும்“
பூஜைகள் மூலம்
மந்திரம்,
யந்திரம்,
தந்திரம்
ஆகிய மூன்றும்
ஒன்றாகச்
செயல்பட்டு
சக்தியானது
“உற்பத்தியாகிறது“

“உற்பத்தியாகும்“
சக்தியானது
யந்திரத்தின்
மூலம்
கடவுள்
சிலைக்கு
“செலுத்தப்படுகிறது“

“செலுத்தப்பட்ட“
சக்தியை
கடவுள் சிலை
பெற்று
பெற்ற சக்தியை
கோயிலுக்குள்
செலுத்துவதன்
மூலம்
கோயிலுக்குள்
சக்தியானது
“உற்பத்தியாகிறது“

“உற்பத்தி“
செய்யப்பட்ட
சக்தியானது
கோயிலுக்குள்
பரவி
கோயில்
முழுவதும்
சக்தியானது
“நிரப்பப்படுகிறது“

“நிரப்பப்பட்ட“
சக்தியின் மூலம்
கோயிலானது
ஒரு சக்தி மிக்க
ஆற்றல் களமாக
மாறுவதுடன்
கோயிலானது
மாபெரும்
“சக்தியாகிறது“

“சக்தி“
அனைத்தையும்
பெற்று
சக்தியின்
மையமாக
கோயிலானது
திகழ்வதற்கு
காரணம்
கர்ப்பகிரகத்தில்
செதுக்கி
வைக்கப்பட்டுள்ள
“கடவுள் சிலை“

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 27-05-2019
/////////////////////////////////////////////////////