பரம்பொருள்-பதிவு-95
“ஆண் குழந்தையை
தாய் தான் வளர்க்க
வேண்டும் என்று
நம்முடைய
முன்னோர்கள் சொல்லி
விட்டு சென்றதற்கு
பல்வேறு காரணங்கள்
இருக்கிறது”
“ஆண்குழந்தை
பிறந்து வளரும் போதே
இயல்பாகவே தைரியம்
கொண்டதாக இருக்கும் ;”
“வீரத்தை வெளிப்படுத்தக்
கூடிய செயல் எதுவாக
இருந்தாலும் - அந்தச்
செயலில் வீரத்தை
வெளிப்படுத்தும் வகையில்
செயல்களைச் செய்து
கொண்டே இருக்கும் ;”
“சிந்தித்து
செயல்படக்கூடிய
செயல்களில்
சில நேரங்களில்
சிந்திக்காமல் தைரியத்தை
வெளிப்படுத்துவதாக
நினைத்துக் கொண்டு
செயல்களை தவறாக
செய்து சிக்கலில்
மாட்டிக் கொள்ளும் ;”
“அதனால் ஆண்
குழந்தைக்கு
முதலில்
வீரத்தை
ஊட்டக் கூடாது
அப்படி வீரத்தை
ஊட்டினால்
அந்த ஆண் குழந்தை
வளர வளர பிறரிடம்
சண்டை போடுவது ;
பிரச்சினையை
கொண்டு வருவது ;
கோபத்தை பிறர் மேல்
பிரயோகப் படுத்துவது ;
பிறரை மதிக்காத
தன்மையைக்
கொண்டு இருப்பது ;
என்று பல்வேறு
தவறான பழக்க
வழக்கங்களை
வெளிப்படுத்தி
வாழ்க்கையைத்
தொலைத்து விட்டு
வாழ்க்கையைத் தேடி
அலைந்து
கொண்டிருக்கும் ;”
“அதனால் தான்
ஆண் குழந்தைக்கு
வீரத்தை ஊட்டாமல்
முதலில்
அன்பை
ஊட்ட வேண்டும் ;
இதனால் அந்த
ஆண் குழந்தை
அன்பு என்றால்
என்ன என்பதையும் ;
பிறரிடம் எப்படி
அன்புடன் பழக
வேண்டும் என்பதையும் ;
தனக்கு கஷ்டம்
ஏற்படும் போது தனக்கு
எத்தகைய வேதனை
ஏற்படுகிறதோ அதே
வேதனை தான்
மற்றவர்களுக்கும்
ஏற்படும் என்பதை
உணர்ந்து
பிறருக்கு தீங்கு
செய்யாமல் இருக்க
வேண்டும் என்பதையும் ;
தன்னைப் போல
பிறரையும் எண்ண
வேண்டும் என்பதையும் ;
கற்றுக் கொள்ளும் ;”
“அன்பைப் பற்றி
தெரிந்து கொண்ட பிறகு
இரண்டாவதாக
அறிவை
ஊட்ட வேண்டும் ;
இதனால் அந்த
ஆண் குழந்தை - இந்த
சமுதாயத்தில் தான்
எப்படி வாழ வேண்டும்
என்பதையும் ;
தன்னுடைய
வாழ்க்கைத் தரத்தை
எப்படி உயர்த்த
வேண்டும் என்பதையும் ;
தன்னுடைய
வாழ்க்கைத் தரத்தை
உயர்த்துவதற்கு
எத்தகைய செயல்களைச்
செய்ய வேண்டும்
என்பதையும் ;
கற்றுக் கொள்ளும் ;”
“அறிவைப் பற்றி
தெரிந்து கொண்ட பிறகு
மூன்றாவதாக
வீரத்தை
ஊட்ட வேண்டும் ;
இதனால் அந்த
ஆண் குழந்தை
தன்னுடைய வாழ்க்கையில்
எத்தகைய காலத்தில் ;
எத்தகைய நேரத்தில் ;
எத்தகைய சூழ்நிலையில் ;
எத்தகைய செயலில் ;
வீரத்தை வெளிப்படுத்த
வேண்டும் என்பதையும் ;
தேவையற்ற
செயலுக்கெல்லாம்
வீரத்தை வெளிப்படுத்தக்
கூடாது என்பதையும் ;
பிறருக்கு உதவிகரமாக
இருக்கும் என்றால்
வீரத்தை வெளிப்படுத்த
வேண்டும் என்பதையும் ;
பிறருக்கு துன்பத்தை
ஏற்படுத்தும் என்றால்
வீரத்தை வெளிப்படுத்தக்
கூடாது என்பதையும் ;
கற்றுக் கொள்ளும் ;”
“இத்தகைய
காரணங்களினால் தான்
ஆண் குழந்தையை
தாய் வளர்க்க வேண்டும்
என்பதையும் ;
ஒரு தாய்
ஆண் குழந்தையை
வளர்க்கும் போது
ஆண் குழந்தைக்கு
அன்பு ; அறிவு ; வீரம் ;
என்ற வரிசையில்
குணநலன்களை
ஊட்டி வளர்ப்பாள்
என்பதையும் ;
நம்முடைய
முன்னோர்கள் சொல்லி
விட்டு சென்றிருக்கிறார்கள் “
“அவ்வாறே
உலூபியும் தன்
மகன் அரவானை
தன்னுடைய நேரடி
கண்காணிப்பில்
வைத்துக் கொண்டு
முதலில்
அன்பை
ஊட்டி வளர்த்தாள் ;
இரண்டாவதாக
அறிவை
ஊட்டி வளர்த்தாள் ;
மூன்றாவதாக
வீரத்தை
ஊட்டி வளர்த்தாள் ;
---------- இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்
---------- 10-12-2019
//////////////////////////////////////////
No comments:
Post a Comment