May 31, 2020

திருக்குறள்-குணனும்-பதிவு-2


                பதிவு-2

“தன்னுடைய
குடும்பத்தைத்
தவிர்த்து
பிறருக்கு துன்பம்
ஏற்படும் போது
ஓடிச் சென்று
ஆறுதல் சொல்வார்கள் ;

துன்பத்தில்
இருக்கிறார் என்பதை
உணர்ந்து
ஓடிச் சென்று
உதவி செய்வார்கள் ;

பிறருடைய
துன்பத்தை
தன்னுடைய
துன்பமாக
ஏற்றுக் கொண்டு
அந்த துன்பத்தில்
பங்கேற்பார்கள் ;”

“நமக்கு துன்பம்
வரும் போது
சுயநலத்துடன்
வாழ்பவர்கள்
தாமாகவே தெரிந்து
கொண்டாலும்
நாமாக
வலியச் சென்று
சொன்னாலும்
ஒரு பயனும்
ஏற்படப்
போவதில்லை
அவர்கள்
தன்னைப் பற்றியும்
தன்னுடைய
குடும்பத்தைப் பற்றியும்
மட்டுமே
நினைத்துக்
கொண்டிருப்பவர்கள் ;
மற்றவருடைய
துன்பத்தை
ஒரு பொருட்டாக
நினைத்து
உதவி செய்ய
மாட்டார்கள் ;”

“ஆனால் நமக்கு
துன்பம் வரும் போது
பொது நலத்துடன்
வாழ்பவர்கள்
தாமாகவே தெரிந்து
கொண்டாலும்  
நாமாக
வலியச் சென்று
சொன்னாலும்
ஓடி வந்து  
நம்முடைய
துன்பத்தில்
பங்கேற்பார்கள்
அதனை
துடைப்பதற்கு
உதவுவார்கள்
ஏனென்றால்
அவர்கள் தன்னுடைய
குடும்பத்தின்
நலனை மட்டும்
நினைக்காமல்
பிறருடைய
நலனைப் பற்றியும்
நினைப்பவர்கள்
மற்றவருடைய
துன்பத்தை
தன்னுடைய
துன்பமாக நினைத்து
ஓடி வந்து
உதவி செய்வார்கள் “

“ஒருவரை நட்பாக
வைத்துக்
கொள்வதற்கு
முன் அவர்
சுயநலத்துடன்
வாழ்பவரா
அல்லது
பொது நலத்துடன்
வாழ்பவரா
என்று அறிந்து
சுய நலத்துடன்
வாழ்பவரை விலக்கி
பொது நலத்துடன்
வாழ்பவரை
நட்பு கொண்டால்
மட்டுமே
நமக்கு துன்பம்
வரும் போது
நம்முடைய
துன்பத்தை துடைக்க
போராடுவார்
சுயநலத்துடன்
வாழ்பவரை
நட்பு கொண்டால்  
நமக்கு துன்பம்
நேரும் போது
ஓடிச் சென்று
ஒளிந்து கொள்வார்  
சுயநலத்துடன்
வாழ்பவர்கள் யார் ?
பொதுநலத்துடன்
வாழ்பவர்கள் யார் ?
என்பதை உணர்ந்து
அவர்களுடன் தான்
நட்பு கொள்ள வேண்டும் “
என்பதைத் தான்
திருவள்ளுவர்

“குணனும் குடிமையும்
குற்றமும் குன்றா
இனனும்
அறிந்துயாக்க நட்பு”

என்ற திருக்குறளின்
மூலம் விளக்குகிறார்
திருவள்ளுவர்”

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------31-05-2020

/////////////////////////////////////////

திருக்குறள்-குணனும்-பதிவு-1


                  பதிவு-1

                   “குணனும் குடிமையும்
                    குற்றமும் குன்றா
                    இனனும் அறிந்துயாக்க நட்பு”

                                 -------திருக்குறள்
                             --------திருவள்ளுவர்

“நமக்கு துன்பம் வரும்
போது அதை இரண்டே
இரண்டு குணம்
கொண்டவர்களிடம் தான்
சொல்ல முடியும் “

ஒன்று :
சுயநலத்துடன் வாழ்பவர்கள்

இரண்டு :
பொது நலத்துடன்
வாழ்பவர்கள்

“தன்னுடைய நலத்திற்காகவும்
தன்னுடைய குடும்பத்தின்
நலத்திற்காகவும்
வாழ்பவர்கள்
சுயநலத்துடன்
வாழ்பவர்கள் “

“தான் தனது குடும்ப
நலம் மட்டுமின்றி
பிறருடைய நலத்திற்காகவும்
வாழ்பவர்கள்
பொது நலத்துடன்
வாழ்பவர்கள் “

“தன்னுடைய கணவன்
தன்னுடைய மனைவி
தன்னுடைய குழந்தைகள்
என்று ஒரு எல்லை
வகுத்துக் கொண்டு
தங்களுடைய
குடும்ப நலனுக்காக
மட்டுமே வாழ்பவர்கள்
சுயநலத்துடன் வாழ்பவர்கள் “

“தன்னுடைய குடும்பம்
என்று ஒரு எல்லை
வகுத்துக் கொண்டு
வாழாமல் - இந்த
பிரபஞ்சத்தில் உள்ள
அனைவருடைய
குடும்பத்திற்காகவும்
வாழ்பவர்கள்
பொதுநலத்துடன்
வாழ்பவர்கள் “

“தன்னுடைய கணவனுக்கோ
தன்னுடைய மனைவிக்கோ
தன்னுடைய
குழந்தைகளுக்கோ துன்பம்
ஏற்பட்டால் மட்டும்
துடிப்பவர்கள் - அந்த
துன்பத்தை மட்டுமே
துன்பம் என்று நினைத்துக்
கொண்டிருப்பவர்கள் “

“மற்றவர்களுடைய
துன்பங்களை ஒரு
துன்பமாகவே நினைத்துப்
பார்க்காதவர்கள் “

“பிறருடைய துன்பங்களைக்
கண்டு கலங்காதவர்கள் “

“தன்னுடைய குடும்பம்
மட்டுமே சந்தோஷமாக
இருக்க வேண்டும்
என்பதற்காக செயல்களைச்
செய்து கொண்டிருப்பவர்கள் “

“தன்னுடைய குடும்பத்தை
வாழ வைக்க வேண்டும்
என்பதற்காக-பிறருடைய
குடும்பத்தை அழிக்கவும்
தயங்காதவர்கள் “

“பிறருடைய குடும்பத்தை
அழித்தாவது தன்னுடைய
குடும்பத்தை வாழ
வைக்க வேண்டும் என்று
நினைப்பவர்கள் “

“பிறர் துன்பப்படும் போது
அதைக் கண்டு சிரிப்பவர்கள்
ஓடி வந்து உதவி
செய்யாதவர்கள் ;
உதவி செய்ய
வருபவர்களையும்
உதவி செய்ய
விடாமல் தடுப்பவர்கள் ; “

“இவர்கள் தான்
சுயநலத்துடன்
வாழ்பவர்கள் “

“பொது நலத்துடன்
வாழ்பவர்கள்- மூன்று
செயல்களைச் செய்வார்கள்

ஒன்று :
துன்பத்தில் இருப்பவருக்கு
ஆறுதல் சொல்வார்கள்

இரண்டு :
துன்பத்தில் இருப்பவருக்கு
ஓடி வந்து உதவி செய்வார்கள்

மூன்று :
துன்பத்தில் இருப்பவருடைய
துன்பத்தில் பங்கேற்பார்கள்

இத்தகைய மூன்று
உயர்ந்த குணங்களைக்
கொண்டவர்கள் தான்
பொதுநலத்துடன் வாழ்பவர்கள்

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------31-05-2020

/////////////////////////////////////////

May 29, 2020

500- வது பதிவு !


                       500- வது பதிவு !

அன்பிற்கினியவர்களே

“29-05-2020-ம் தேதி
வெள்ளிக் கிழமை
அன்று
ஜபம் தன்னுடைய
500-வது பதிவை
தொட்டிருக்கிறது “

“என்னுடைய
வாழ்க்கையின்
இரண்டு
கண்களாக
என்றும்
திகழ்ந்து
கொண்டிருக்கும்
என்னுடைய
தாய் திருமதி
K.சொர்ணம்
காசிநாதன்
மற்றும்
என்னுடைய
மனைவி
திருமதி.
P.பிரதீபா
பாலகங்காதரன்
ஆகிய
இருவரும் தான்
இதற்கு
மூலக் காரணமும்
முதற் காரணமும்
முழுக் காரணமும்
அடிப்படைக்
காரணமும்
ஆவர் “

“என்னுடைய
உயிரில்
உயிர்த்து
இயக்கத்தில்
பரிணமித்து
சிந்தனையில்
துளிர்த்து
என்றும்
என்னுடன்
பிணைந்து
இருக்கும்

என்னுடைய
சகோதரர்களான
திரு,K.தில்லைராஜ்
திரு.K.தர்மேந்திரராஜ்
ஆகியோரின்
பாசக் கரம் ;

சீடர்களின்
உதவிக் கரம் ;

உறவினர்களின்
உறவுக் கரம் ;

நண்பர்களின்
நட்புக் கரம் ;

சுற்றத்தார்களின்
ஆதரவுக் கரம் ;

சித்தர்களின்
ஞானக் கரம் ;

இறைவனின்
அருட் கரம் ;

ஆகிய
அனைவருடைய
அன்புக் கரங்களே
என்னுடைய
இந்த
வெற்றிக்குக்
காரணம் “

“இவர்கள்
அனைவரையும்
வணங்கி
என்னுடைய
நன்றியினைத்
தெரிவித்துக்
கொள்கிறேன் “

“என்னுடைய
உயிர்த்தன்மை
இறை நிலையுடன்
இரண்டறக் கலந்து
அதுவாகவே
மாறும் வரை
என்னுடைய
கலைப்பணி
தொடரும்
ஜபம் இன்னும் வரும்
என்பதைத்
தெரிவித்துக்
கொள்கிறேன் “

நன்றி !

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 29-05-2020
//////////////////////////////////////////













அறிய வேண்டியவை-பதிவு-8


               500-வது பதிவு !

               ஜபம்-பதிவு-500
          (அறிய வேண்டியவை-8)

“திரௌபதியின்
சேலையை
துச்சாதனன்
உருவும் போது
திரௌபதி தன்னுடைய
மானத்தைக்
காக்க வேண்டும்
என்று கிருஷ்ணனை
அழைத்தாள் ;
திரெளபதி
கிருஷ்ணனை
அழைத்தபோது
கிருஷ்ணன் வந்து
சேலையைக் கொடுத்து
திரௌபதியின்
மானத்தைக்
காப்பாற்றினார் ;
என்பது
அனைவருக்கும்
தெரியும் ; 
ஆனால்
கிருஷ்ணன்
எப்போது வந்தார் ;
எப்போது சேலை
கொடுத்து உதவினார் ;
எப்போது
திரௌபதியின்
மானத்தைக்
காப்பாற்றினார் ;
என்பது எத்தனை
பேருக்கு தெரியும் ;”

“துச்சாதனன்
திரௌபதியின்
சேலையை
உருவும் போது
திரௌபதி
தன்னுடைய
இரண்டு கைகளாலும்
தன்னுடைய
மார்புகளை
மூடிக் கொண்டு
கிருஷ்ணா
என்னை காப்பாற்று
என்று கிருஷ்ணனை
அழைத்தாள் ;
அப்போது
கடவுளாகிய
கிருஷ்ணன்
வரவில்லை “

“தொடர்ந்து
துச்சாதனன்
திரௌபதியின்
சேலையை
உருவிக்
கொண்டிருக்கும் போது
திரௌபதி
தன்னுடைய
ஒரு கையால்
தன்னுடைய
மார்புகளை
மூடிக் கொண்டு
மற்றொரு கையை
மேலே தூக்கி
கிருஷ்ணா
என்னை
காப்பாற்று என்று
கிருஷ்ணனை
அழைத்தாள் ;
அப்போதும்
கடவுளாகிய
கிருஷ்ணன்
வரவில்லை ;”

“தொடர்ந்து
துச்சாதனன்
திரௌபதியின்
சேலையை
உருவிக்
கொண்டிருக்கும் போது
திரௌபதி
தன்னுடைய
இரண்டு கைகளையும்
மேலே தூக்கி
கிருஷ்ணா
என்னை
காப்பாற்று என்று
கிருஷ்ணனை
அழைத்தாள்   ;
அப்போது
கடவுளாகிய
கிருஷ்ணன் வந்தார் ;
சேலை தந்தார் ;
திரௌபதியின்
மானத்தைக் காத்தார் ; “

“அதாவது  
தன்னுடைய
மானத்தை
தன்னுடைய
இரண்டு கைகளாலும்
காப்பாற்றிக்
கொள்ள  முடியும்
என்று திரௌபதி
நினைத்து
செயல்பட்ட போது
கடவுளாகிய
கிருஷ்ணன்
வரவில்லை “

“தன்னுடைய
மானத்தை
தன்னுடைய
ஒரு கையால்
காப்பாற்றிக்
கொள்ள முடியும்
என்று திரௌபதி
நினைத்து
செயல்பட்ட போது
கடவுளாகிய
கிருஷ்ணன்
வரவில்லை “

“தன்னால்
தன்னுடைய
மானத்தைக்
காப்பாற்றிக்
கொள்ள முடியாது
மனித சக்திக்கு
அப்பாற்பட்ட
கடவுள் சக்தியால்
மட்டுமே
தன்னுடைய
மானத்தைக்
காப்பாற்ற முடியும்
என்று உணர்ந்து
தன்னுடைய
இரண்டு கைகளையும்
மேலே தூக்கி
கிருஷ்ணா
என்னை காப்பாற்று
என்று கிருஷ்ணனை
அழைத்த போது
கடவுளாகிய
கிருஷ்ணன் வந்தார் “

“மனிதனால்
ஒரு செயலைச்
செய்ய முடியும்
என்ற நிலை
இருக்கும் வரை
கடவுள் வரமாட்டார் ;

“மனிதனால்
ஒரு செயலைச்
செய்ய முடியாது
கடவுளால் மட்டுமே
அந்தச் செயலைச்
செய்ய முடியும்
என்ற நிலை
இருக்கும் போது
தான் கடவுள்
வருவார் என்பதே
இந்த கதையின்
மூலம் நாம்
அறிய வேண்டிய
உண்மை ஆகும் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 29-05-2020
//////////////////////////////////////////