பதிவு-3
கண்ணதாசன் பாடல்
“தூய்மையான
வெள்ளைத் துணியில்
அழுக்கு படிந்து
தூய்மையான
வெள்ளைத் துணி
எப்படி
அழுக்குத் துணியாக
மாறுகிறதோ
அதைப் போல
தூய்மையான
ஆன்மாவில்
கர்மாக்கள் பதிந்து
தூய்மையான
ஆன்மா
அழுக்கடைந்த
ஆன்மாவாக
மாறுகிறது”
“அழுக்குத் துணியில்
படிந்துள்ள அழுக்கை
நீக்குவதற்கு எப்படி
சோப்பை
பயன்
படுத்துகிறோமோ
அதைப் போல
அழுக்கடைந்த
ஆன்மாவில்
பதிந்துள்ள
கர்மாக்களை
நீக்குவதற்கு
வாசியோகத்தைப்
பயன்
படுத்துகிறோம் “
“அழுக்கு
நீக்கப்பட்ட
துணியை
தண்ணீரில்
முக்கி
எடுக்கும் போது
எப்படி
அழுக்கடைந்த
துணியானது
தூய்மையடைந்த
துணியாக
அதாவது
வெள்ளைத்
துணியாக
மாறுகிறதோ
அதைப்போல
அழுக்கு நீக்கப்பட்ட
ஆன்மாவை
இறைவனுடன்
இரண்டறக் கலக்கச்
செய்யும் போது
அழுக்கடைந்த
ஆன்மாவானது
தூய்மையடைந்த
ஆன்மாவாக
அதாவது
பிறவாத நிலையை
அடைகிறது”
“தூய்மையான
வெள்ளைத்
துணியில்
அழுக்கு படிந்து
அழுக்குத்
துணியாக
மாறும் போது
அந்த
அழுக்குத் துணியை
சோப்பு கொண்டு
தேய்த்து அழுக்கை
நீக்கி தண்ணீரில்
முக்கி
எடுக்கும் போது
அழுக்குத்
துணியானது
தூய்மையான
வெள்ளைத்
துணியாக மாற்றம்
அடைகிறது
அதைப்போல
தூய்மையான
ஆன்மாவில்
கர்மாவானது படிந்து
அழுக்கடைந்த
ஆன்மாவாக
மாறும் போது
அந்த
அழுக்கடைந்த
ஆன்மாவை
வாசியோகம்
கொண்டு
பயிற்சி செய்து
கர்மாவை நீக்கி
இறைவனுடன்
இரண்டறக் கலக்கச்
செய்யும் போது
அழுக்கடைந்த
ஆன்மாவானது
தூய்மையான
ஆன்மாவாக
மாற்றம் அடைந்து
பிறவா நிலையை
அடைகிறது”
என்பதைத் தான்
உயிரே
அழுக்குத் துணி
என்ற
பாடல் வரிகள்
மூலம்
கண்ணதாசன்
விளக்குகிறார்
----------என்றும் அன்புடன்
----------K.பாலகங்காதரன்
------------09-08-2020
/////////////////////////////////////////////
No comments:
Post a Comment