October 27, 2020

அறிய வேண்டியவை-152

 

ஜபம்-பதிவு-644

(அறிய வேண்டியவை-152)

 

"உன்னால்

எல்லா

இடங்களிலும்

நல்லவனாக

இருக்க

முடியவில்லையே?"

 

"நன்றாக

ஒன்றை ஞாபகம்

வைத்துக் கொள்

கர்ணா

நல்லவராக

இருக்கும்

ஒருவர்

எல்லா

இடங்களிலும்

நல்லவராக

இருக்க முடியாது ?"

 

"அப்படி

நல்லவராக

இருக்க

ஒருவர்

முயற்சி செய்தால்

அவரால்

இந்த உலகத்தில்

நிம்மதியாக

வாழவே முடியாது

என்பதை

ஞாபத்தில்

வைத்துக் கொள்

கர்ணா"

 

கர்ணன் :

"அப்படி என்றால்

நல்லவர்கள்

இந்த

உலகத்தில்

எல்லா

இடங்களிலும்

நல்லவர்களாக

வாழவே

முடியாதா?"

 

சகுனி :

"ஆமாம்

வாழவே

முடியாது"

 

கர்ணன் :

"நல்லவர்கள்

எல்லா

இடங்களிலும்

நல்லவர்களாக

வாழ முடியாது

என்றால்

கெட்டவர்கள்

எல்லா

இடங்களிலும்

கெட்டவர்களாக

வாழ முடியுமா?"

 

சகுனி :

"கெட்டவர்களும்

இந்த

சமுதாயத்தில்

எல்லா

இடங்களிலும்

கெட்டவர்களாக

வாழ முடியாது."

 

"நல்லவர்கள்

எப்படி

சில இடங்களில்

கெட்டவர்களாக

வாழ்கிறார்களோ

அப்படியே

கெட்டவர்களும்

சில இடங்களில்

நல்லவர்களாக

வாழ்ந்து தான்

ஆக வேண்டும்"

 

"அப்படி

இருந்தால்

மட்டுமே

அவர்களாலும்

இந்த

சமுதாயத்தில்

வாழ முடியும்"

 

கர்ணன் :

"இந்த

சமுதாயத்தில்

ஒருவராலும்

எல்லா

இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழ முடியாதா?"

 

சகுனி :

"ஏன் முடியாது

வாழ முடியும்

ஆனால் நாம்

வாழ்வதில்லை"

 

கர்ணன் :

"நாம்

வாழ்வதில்லை

என்றால்

யார்

வாழ்கிறார்கள் ?"

 

சகுனி :

"இந்த உலகத்தில்

எல்லா

இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழ்பவர்கள்

இந்த

உலகத்தில்

வாழ்ந்து

கொண்டு தான்

இருக்கிறார்கள்"

 

கர்ணன் :

"யாரைச்

சொல்கிறீர்கள்"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------27-10-2020

/////////////////////////////////

அறிய வேண்டியவை-151

 

ஜபம்-பதிவு-643

(அறிய வேண்டியவை-151)

 

கர்ணன் :

"ஏன் இல்லை

நான் எல்லா

இடங்களிலும்

ஒரே

மாதிரியாகத் தானே

வாழ்ந்து

கொண்டிருக்கிறேன்"

 

சகுனி :

"கர்ணா

நீ அவ்வாறு

வாழவில்லை"

 

கர்ணன் :

"நீங்கள் தவறாக

சொல்கிறீர்கள்"

 

சகுனி :

"நான்

சரியாகத் தான்

சொல்கிறேன்"

 

கர்ணன் :

"எதை சரி

என்கிறீர்கள்?"

 

சகுனி :

"நீ நல்லவனாக

எல்லா

இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழவில்லை

என்று தான்

சொல்கிறேன்"

 

கர்ணன் :

"ஏன் அவ்வாறு

சொல்கிறீர்கள்?"

 

சகுனி :

"உண்மையாகவே நீ

நல்லவனாக

இருந்திருந்தால்

பாண்டவர்களுக்கு

எதிராக நாங்கள்

சதித்திட்டங்களைத்

தீட்டி அதனை

செயல்படுத்தும்

போதெல்லாம்

அதனை

தடுத்து நிறுத்தி

நாங்கள் அதை

செயல்படுத்தாமல்

செய்திருக்க

வேண்டும்.

ஆனால் நீ

அவ்வாறு

செய்யவில்லையே?"

 

"நீ நல்லவனாக

இருந்திருந்தால்

எல்லா

இடங்களிலும்

ஒரே மாதிரியாக

நல்லவனாக

வாழ்பவனாக

இருந்திருந்தால்

நாங்கள் செய்த

செயல்களை

தடுத்திருக்க

வேண்டும்

ஆனால் நீ

அவ்வாறு

செய்யவில்லையே.?"

 

"நாங்கள்

பாண்டவர்களுக்கு

எதிராக தீட்டிய

சதித்திட்டங்கள்

அனைத்திற்கும்

நீ உடந்தையாகத்

தானே இருந்தாய்

நீ எங்களுக்குத்

துணையாகத் தானே

இருந்தாய்? "

 

"நீ செய்த செயலை

என்னவென்று

சொல்வது

என்ன செயல்

என்று சொல்வது "

 

"நீ செய்த

செயலை

நல்ல செயல் என்று

சொல்ல முடியுமா?

அல்லது

உன்னை நல்லவன்

என்று சொல்ல

முடியுமா ?

அல்லது

நல்லவன்

செய்த செயல்

என்று சொல்ல

முடியுமா ? "

 

"எந்த இடத்தில்

நீ நல்லவனாக

இருந்திருக்க

வேண்டுமோ

அந்த இடத்தில்

நீ நல்லவனாக

இல்லையே

கெட்டவனாகத் தானே

இருந்திருக்கிறாய்"

 

 

"நீ நல்லவனாக

இருந்திருந்தால்

பாண்டவர்களுக்கு

எதிராக நாங்கள்

சதித்திட்டத்தை

தீட்டி அதை

செயல்படுத்தும்

போதேல்லாம்

அந்த இடங்களில்

எல்லாம் நீ

நல்லவனாகத் தானே

இருந்திருக்க

வேண்டும்

ஆனால் நீ

அவ்வாறு

நல்லவனாக

இருக்கவில்லையே

எங்களுக்கு

உடந்தையாக

கெட்டவனாகத் தானே

இருந்திருக்கிறாய்?"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------27-10-2020

/////////////////////////////////

 

அறிய வேண்டியவை-150

 

ஜபம்-பதிவு-642

(அறிய வேண்டியவை-150)

 

கர்ணன் :

"என் நண்பன்

துரியோதனனுக்கு

கிடைக்க

வேண்டிய

நீதியை

பெறுவதற்காக

நீங்கள் செய்யும்

செயல்கள் தான்

தவறாக

இருக்கிறது

என்று

சொல்கிறேன்"

 

"நீங்கள்

கெட்ட

செயல்களைச்

செய்வதால் தான்

உங்களை

கெட்டவன் என்று

இந்த உலகம்

நினைக்கிறது"

 

"இடத்திற்கு

தகுந்தபடி மாறிக்

கொண்டிருப்பவர்

என்கிறது

இந்த உலகம்"

 

"இடத்திற்கு

தகுந்தபடி

குணங்களை

மாற்றுபவர்

என்கிறது

இந்த உலகம்"

 

"வாழ்க்கையை

வெவ்வேறு

கோணத்தில்

வாழ்பவர் நீங்கள்

என்கிறது

இந்த உலகம்"

 

"ஏன் நீங்கள்

உங்கள்

வாழ்க்கையை

உண்மையாக

வாழக்கூடாது

போலியாக

வாழ்வதை விட

உண்மையாக

வாழ்வது

சிறந்ததல்லவா"

 

சகுனி :

"எதை

உண்மையுள்ள

வாழ்க்கை

என்கிறாய் கர்ணா"

 

கர்ணா :

"நல்லவர்கள்

எல்லா

இடங்களிலும்

நல்லவர்களாக

வாழ்வதைத் தான்

உண்மையான

வாழ்க்கை

என்கிறேன்"

 

சகுனி :

"நல்லவர்கள்

எல்லோரும்

எல்லா

இடங்களிலும்

ஒரே மாதிரியாகத்

தான் வாழ்ந்து

கொண்டிருக்கிறார்களா?"

 

கர்ணன் :

"ஆமாம் நல்லவர்கள்

எப்போதும்

எல்லா

இடங்களிலும் ஒரே

மாதிரியாகத் தான்

வாழ்கிறார்கள் ;

வாழ்ந்து

கொண்டு தான்

இருக்கிறார்கள் ;

அவர்கள்

இடத்திற்கு

தகுந்த படி

வாழ மாட்டார்கள் ;

அவர்கள்

உண்மையாகத்  

தான் வாழ்வார்கள் ; "

 

சகுனி :

"கர்ணா நீ

நல்லவனா

கெட்டவனா?"

 

கர்ணன் :

"இதிலென்ன சந்தேகம்"

 

சகுனி :

"கேட்ட

கேள்விக்கு பதில்

சொல் கர்ணா

நீ நல்லவனா

கெட்டவனா?"

 

கர்ணன் :

"ஆமாம் நான்

நல்லவன் தான்"

 

சகுனி :

"நல்லவன்

என்று

உன்னை

சொல்லிக்

கொள்ளும்

நீ எல்லா

இடங்களிலும்

இடங்களிலும்

நல்லவனாகத் தான்

வாழ்கிறாயா

ஒரே மாதிரியாகத்

தான் வாழ்கிறாயா?"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------27-10-2020

/////////////////////////////////

அறிய வேண்டியவை-149

 

ஜபம்-பதிவு-641

(அறிய வேண்டியவை-149)

 

கர்ணன் :

"நீங்கள்

வித்தியாசமாக

சிந்திக்கிறீர்கள் ;

மயக்கும் விதத்தில்

பேசுகிறீர்கள் ;

ஆனால் செய்யும்

செயல்கள் தான்

ஏற்றுக்

கொள்ளத்தக்கதாக

இல்லை"

 

சகுனி :

"எதைச்

சொல்கிறாய்?"

 

கர்ணன் :

"பாண்டவர்களுக்கு

எதிராக

நீங்கள் செய்யும்

செயல்களைத் தான்

சொல்கிறேன்"

 

சகுனி :

"நான் பாண்டவர்களுக்கு

எதிராக செயல்களைச்

செய்யக்கூடாதா?"

 

கர்ணன் :

"நீங்கள்

பாண்டவர்களுக்கு

எதிராக செயல்களைச்

செய்ய வேண்டாம்

என்று சொல்ல

வரவில்லை.

அவர்களுக்கு எதிராக

சதித்திட்டம் தீட்டி

கெட்ட செயல்களைச்

செய்ய வேண்டாம்

என்று தான்

நான் சொல்ல

வருகிறேன்  "

 

சகுனி :

"எதை

கெட்ட செயல்

என்கிறாய் கர்ணா"

 

"என் மருமகனுக்கு

உரிய நாட்டை

என் மருமகனிடம்

ஒப்படைப்பதற்காக

நான் செய்யும்

செயல்களை

கெட்ட செயல்

என்கிறாயா?"

 

(அல்லது)

 

"கௌவரவர்களுக்கு

கிடைக்க

வேண்டிய

அரசுரிமையை

பெற்றுத்

தருவதற்காக

நான் போராடிக்

கொண்டிருக்கிறேனே

அந்த செயல்களை

கெட்ட செயல்

என்கிறாயா?"

 

"எதை கெட்ட

செயல் என்கிறாய்?"

 

கர்ணன் :

"நீங்கள்

பாண்டவர்களுக்கு

எதிராக செய்யும்

செயல்களை நான்

கெட்ட செயல்

என்று

சொல்ல

வரவில்லை “

 

“நீங்கள்

பாண்டவர்களுக்கு

எதிராக

சதித்திட்டங்களைத்

தீட்டி

செயல்படுத்துவதைத்

தான் நான்

கெட்ட செயல்

என்கிறேன் "

 

சகுனி :

"என் மைத்துனர்

திருதராஷ்டிரருக்கு

கிடைக்க

வேண்டிய

நீதியை

தடுத்து விட்டு;

என் தங்கைக்கு

கிடைக்க வேண்டிய

மரியாதையை

கிடைக்க

விடாமல்

செய்து விட்டு;

என் மருமகன்

துரியோதனனை

அரியணை

ஏற விடாமல்

தடுத்து விட்டு;

கௌரவர்களுக்கு

முறைப்படி

கிடைக்க

வேண்டியவைகளை

கிடைக்க விடாமல்

செய்து விட்டு;

கௌரவர்களை

வாழ விடாமல்

செயல்களைச்

செய்து

கொண்டிருப்பவர்களுக்கு

எதிராக நான் எந்த

செயல்களையும்

செய்யக்கூடாது

என்கிறாயா?"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------27-10-2020

/////////////////////////////////