February 29, 2024

பட்டினத்தார்-(10)-ஞானம் அடைந்தவர்கள் பிச்சை எடுக்கக் கூடாது-29-02-2024

 

பட்டினத்தார்-(10)-ஞானம் அடைந்தவர்கள் பிச்சை எடுக்கக் கூடாது-29-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

புத்த மதத்திலும்,

ஜைன மதத்திலும்,

பிச்சை எடுப்பது

முக்கியமான ஒன்றாக

வலியுறுத்தப்பட்டது

 

பிச்சை எடுப்பது

அவ்வளவு எளிதான

ஒன்றல்ல

 

அனைவராலும்

பிச்சை எடுக்க முடியாது

 

பணம் பதவி அதிகாரம்

படைத்தவர்கள்

பிச்சை எடுப்பதின் மூலம்

ஆணவம் அழியும்

என்பதையும்,

இந்த உலகம் அழியக்கூடியது

என்பதையும்,

எல்லாம் மாயை

என்பதையும்,

உணர்ந்து கொள்ள வேண்டும்

என்பதற்காக

பிச்சை எடுக்க வேண்டும்

என்பது முக்கியமான

ஒன்றாக வலியுறுத்தப்பட்டது

 

ஆனால் இப்போது

உள்ள மதங்கள்

தங்கள் மதம் தான்

உயர்ந்தது என்பதையும்,

தங்கள் கடவுள் தான்

உயர்ந்தது என்பதையும்,

ஆணவத்தோடு

வலியுறுத்துவதால்

மனிதத் தன்மை

இறந்து போய்

மதவெறி மேலோங்கி

நிற்கிறது

 

பிச்சை யார் எடுக்க

வேண்டும் என்பதையும்

யார் எடுக்கக் கூடாது

என்பதையும்

பட்டினத்தார்

வாழ்க்கை மூலம்

தெரிந்து கொள்ளலாம்

 

நன்றி

 

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

-------29-02-2024

-------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////




February 27, 2024

பட்டினத்தார்-(9)-ஆவியோடு காயம் அழிந்தாலும், மேதினியில் பாவியென்று நாமம் படையாதே-27-02-2024

 பட்டினத்தார்-(9)-ஆவியோடு காயம் அழிந்தாலும், மேதினியில் பாவியென்று நாமம் படையாதே-27-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

நாம் செத்த பிறகு

நம்முடைய பிணத்தைப் பார்த்து

அழுவதற்கு நான்கு பேராவது

வர வேண்டும் என்று

சொல்வது தவறானது

 

நாம் செத்த பிறகு

நான்கு பேர் வந்தால் என்ன

நான்காயிரம் வேர் வந்தால் என்ன

நான்கு லட்சம் பேர் வந்தால் என்ன

பிணத்திற்கு ஒன்றும் தெரியாது

 

இருக்கும் போது நமக்கு

உதவிகள் செய்ய

எத்தனை பேர்கள்

வந்தார்கள் என்பது

தான் முக்கியம்

அதற்கு ஆட்கள்

சேர்க்க வேண்டும்

எப்படி என்பதைப்

பட்டினத்தார் பாடல்

மூலம் தெரிந்து

கொள்ளலாம்

 

 

நன்றி

 

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

-------27-02-2024

-------செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////





February 25, 2024

பட்டினத்தார்-(8)-பத்திரிகிரியாருக்கு ஞான தீட்சை அளித்த பட்டினத்தார்-25-02-2024

 பட்டினத்தார்-(8)-பத்திரிகிரியாருக்கு ஞான தீட்சை அளித்த பட்டினத்தார்-25-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

பத்திரிகிரியாரை சீடனாக

ஏற்றுக் கொண்ட

பட்டினத்தார்

பத்திரிகிரியாருக்கு

ஞான தீட்சை

அளித்தார்

 

தீட்சை மூன்று

வகைப்படும்

ஸ்பரிச தீட்சை

சட்சு தீட்சை

ஞான தீட்சை

 

இவைகள் என்ன

இதன் அர்த்தம்

என்ன

இந்த தீட்சைகளை

எப்படி கொடுக்க

வேண்டும்

என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

-------25-02-2024

-------ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////



February 23, 2024

பட்டினத்தார்-(7)-என் செயலாவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே-23-02-2024

 

பட்டினத்தார்-(7)-என் செயலாவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே-23-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

கர்மா உண்டு என்பதையும்,

அது பூமியில் பிறந்த

அனைத்து மனிதர்களுக்கும்

உண்டு என்பதையும்,

 

அந்த கர்மா கழிந்தால்

பிறப்பில்லை என்பதையும்,

 

கர்மா கழியவில்லை

என்றால் பிறவி

உண்டு என்பதையும்,

 

கர்மா மனிதனுடைய

வாழ்க்கையில் எத்தகைய

விளைவுகளை

ஏற்படுத்தும் என்பதையும்

 

பட்டினத்தார் பாடிய

பாடலான

என் செயலாவது யாதொன்றும்

இல்லை இனித்தெய்வமே

என்ற பாடலில் உள்ள

அர்த்தத்தின் மூலம்

தெரிந்து கொள்ளலாம்

 

நன்றி

 

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

-------23-02-2024

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////





February 21, 2024

பட்டினத்தார்-(6)-தன் வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்-21-02-2024

 

பட்டினத்தார்-(6)-தன் வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்-21-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

தன்வினை தன்னைச் சுடும்

ஓட்டப்பம் வீட்டைச் சுடும்

என்பதற்கு அர்த்தம் தெரிய வேண்டுமானால்

 

முதலில் வினை என்றால் என்ன

என்று தெரிய வேண்டும்

 

வினை எப்படி பாதிப்பை

உண்டாக்கும் என்பது

தெரிய வேண்டும்

 

பாதிப்பிலிருந்து எப்படி தப்பிப்பது

என்பது தெரிய வேண்டும்

 

இது தெரிந்தால் பிறவாநிலை

தெரியும்

பிறவா நிலை தெரிந்தால்

இறவா நிலை தெரியும்

 

இறவா நிலை தெரிந்தால்

பரம்பொருள் தெரியும்

 

பரம்பொருள் தெரிய

வேண்டுமானால்

பட்டினாத்தார் வாழ்க்கைக்குள்

செல்வோம்

 

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

-------21-02-2024

-------புதன் கிழமை

///////////////////////////////////////////////





February 19, 2024

பட்டினத்தார்-(5)-ஒன்பது வாய்த்தோல்பைக்கு ஒரு நாளைப் போலவே அன்பு வைத்து நெஞ்சே அலைந்தாயே-19-02-2024

 பட்டினத்தார்-(5)-ஒன்பது வாய்த்தோல்பைக்கு ஒரு நாளைப் போலவே அன்பு வைத்து நெஞ்சே அலைந்தாயே-19-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

பானையில்

ஒரு ஓட்டை இருந்தாலே

அது பயனற்ற பொருள்

என்று சொல்பவர்கள்,

 

ஒன்பது ஓட்டை

இருக்கும் மனிதனை

பயனற்றவன் என்று

யாரும் சொல்வதில்லை

 

ஏன் மனிதனே

மனிதனை

இவ்வாறு

சொல்வதில்லை

 

மனிதன் எப்படி

இருக்க வேண்டும்

என்பதை இப்பாடல்

சொல்கிறது

என்ன சொல்கிறது

என்று பார்ப்போம்

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 19-02-2024

-------திங்கட் கிழமை

////////////////////////////////////////////////////////////