July 16, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-43


               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-43

கிருஷ்ணருக்கு சுதாமா
என்ற ஒரு
நண்பர் இருந்தார்
அவர் அழுக்கு
உடைகளை அணிந்து
இருந்ததால் ஊரிலுள்ளோர்
அவரை குசேலர்
என்று அழைத்தனர்  
கிருஷ்ணரும், குசேலரும்
உஜ்ஜையினில் உள்ள
சாந்தீபனி முனிவரின்
ஆசிரமத்தில்
ஒன்றாகக் குருகுலக்
கல்வி பயின்றார்கள்
இருவரும் குருகுலக்
கல்வியை முடித்தவுடன்
தனித்தனியாக பிரிந்து
தங்களுடைய
இருப்பிடங்களுக்குச் சென்றனர்.

குசேலர் மனைவியின்
பெயர் சுட்சாமா
சுட்சாமா என்றால்
ஒட்டிய வயிறை
உடையவர் என்று
பொருள்.
சுட்சாமா சுசீலை
என்றும் அழைக்கப்பட்டார்

குசேலர் பரம ஏழை
தனது மனைவி
மக்களுடன்
ஏழ்மையில் வாடினார்.
குழந்தைகள் படும்
துன்பத்தைப் பார்க்க
முடியாமல்
ஒருநாள் சுசீலை
குசேலரிடம் நெருங்கி
பகவான் கிருஷ்ணர்
ஒரு சமயம் உங்கள்
நண்பராக இருந்தார்
என்று தாங்கள்
ஏற்கனவே கூறியுள்ளீர்கள்
துவாரகை நகரில்
இருக்கும் கிருஷ்ணரைப்
பார்த்து நம் வறுமை
நீங்குவதற்கு ஏதேனும்
உதவி கேட்டால்
என்ன என்று கேட்டாள்.

அதற்கு குசேலர்
எனக்கும் கிருஷ்ணருக்கும்
உள்ள உறவு
எதிர்பார்ப்பு
இல்லாத உறவு
எனக்கு வேண்டும்
என்று நான்
இதுவரை கிருஷ்ணரிடம்
எதையும் கேட்டதில்லை
என்றார் குசேலர்.

அதற்கு சுசீலை
உங்களுக்காக கேட்க
வேண்டாம்
நம்முடைய குழந்தைகளின்
பசியை போக்குவதற்காக
அவரை பார்த்து விட்டு
வாருங்கள் என்றாள்

தன்னுடைய மனைவி
மக்களுக்காக கிருஷ்ணரை
சந்திக்கச் செல்வதாக
ஒப்புக் கொண்டார் குசேலர்.
அவருக்கு காணிக்கையாக
கொடுக்க வீட்டில்
ஏதேனும் இருக்கிறதா
வெறும் கையுடன்
நான் என் நண்பனை
எப்படி பார்க்க முடியும்
என்றார் குசேலர்.

கொடுப்பதற்கு வீட்டில்
ஒன்றும் இல்லை
இருந்தாலும் சுசீலை
பக்கத்து வீடுகளுக்கு
சென்று நான்கு
பிடி நெல்
கடன் வாங்கி வந்து
அதை இடித்து
அவலாகச் செய்து
தன்னுடைய வீட்டில்
உள்ள கிழிசலான
புடவையை எடுத்து
அதை சிறியதாக
கிழித்து எடுத்து
அவலை அதில்
வைத்து கட்டினாள்
அதை தன்
கணவரிடம் கொடுத்து
அனுப்பினாள்

அதை எடுத்துக் கொண்டு
குசேலர் துவாரகை
நோக்கி நடந்தார்.
துவாரகைக்கு நடை
பயணமாக சென்றார்.
கிருஷ்ணருடன் தான்
பழகிய நாட்களை
நினைத்தபடியே நடந்தார்

துவாரகையில் உள்ள
கோபுரங்களையும்
அதன் செழிப்பையும்
கண்டு வியந்து நடந்தார்.
கிருஷ்ணர் ராஜாவாக
இருக்கிறாரே
தன்னை அடையாளம்
கண்டு கொள்வாரா
அரண்மனைக்குள்
செல்ல முடியுமோ
முடியாதோ
என்னை உள்ளே
செல்வதற்கு
அனுமதிப்பார்களா
என்று சிந்தனை
செய்து கொண்டு
அரண்மனையை
நெருங்கினார்.

அரண்மனை வாயிற்
காவலர்களை நெருங்கினார்
தான் கிருஷ்ணரை
பார்க்க வந்த
செய்தியை சொன்னார்
நீங்கள் அரண்மனைக்குள்
செல்லலாம்
உங்களைப் போல
சாதுக்கள் வந்தால்
நேராக வரச்சொல்லி
கிருஷ்ணர்
ஆணையிட்டிருக்கிறார்
என்ற விவரத்தைச் சொல்லி
அவரை வாயிற்காவலன்
அழைத்துக்
கொண்டு சென்று
ஒரு இடத்தில்
குசேலரை நிற்க
வைத்து விட்டு
கிருஷ்ணர் இருக்கும்
இடம் நோக்கி
சென்றார்

கிருஷ்ணரிடம்
தங்களைப் பார்க்க
ஒருவர் வந்திருக்கிறார்
தங்களோடு படித்தவராம்
பெயர் சுதாமாவாம்
என்று சொல்லி
முடிக்கும் முன்பே
கிருஷ்ணர் துள்ளிக்
குதித்து எழுந்து ஓடி
குசேலர் இருக்கும்
இடம் சென்று
அவரைக் கட்டி
அணைத்து
ஆனந்தக் கண்ணீர்
வடித்தார் கிருஷ்ணர்.

கிருஷ்ணர் தன்னுடைய
நண்பர் குசேலரை
அரண்மனைக்குள்
அழைத்து வந்து
உயர்ந்த ஆசனத்தில்
அமர வைத்து
ராஜ உபசாரம்
செய்தார்
கிருஷ்ணருடன்
அவரது மனைவி
ருக்மணியும் சேர்ந்து
குசேலருக்கு
பணிவிடை
செய்தார்கள்

----------இன்னும் வரும்
---------16-07-2018
//////////////////////////////////////////////////////////

July 15, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-42



              நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-42

“””””உயிர் காப்பான் தோழன்””””

உலகம் முழுவதும்
எடுத்துக் கொண்டால்
பிறருடன் நட்பு
கொள்பவர்களின்
நட்பை இரண்டு
நிலைகளில்
பிரித்து விடலாம்

   ஒன்று  எதிர்பார்ப்புடன்
           நட்பு கொள்பவர்கள்

   இரண்டு எதிர்பார்ப்பு
            அற்று
            நட்பு கொள்பவர்கள்

எதிர்பார்ப்புடன் நட்பு
கொள்பவர்களை
ஆதாயத்திற்காக
நட்பு கொள்பவர்கள்
என்றும்
எதிர்பார்ப்பு அற்று
நட்பு கொள்பவர்களை
ஆதாயம் இல்லாமல்
நட்பு கொள்பவர்கள்
என்றும் சொல்லலாம்

எதிர்பார்ப்பு அற்று
நட்பு கொள்பவர்களின்
எண்ணிக்கையை விட
எதிர்பார்ப்புடன்
நட்பு கொள்பவர்களின்
எண்ணிக்கையே அதிகம்

பெரும்பாலானவர்கள்
பிறருடன் நட்பு
கொள்ளும் போது
இவரால் தனக்கு
எத்தகைய லாபங்கள்
கிடைக்க வாய்ப்பு
இருக்கிறது என்பதை,
கணக்கில் எடுத்துக்
கொண்டு நட்பு
கொள்கின்றனர்.
இவ்வாறு நட்பு
கொள்கிறவர்கள்
எதிர்பார்ப்புடன் நட்பு
கொள்பவர்கள்

துரிபோதனன் கர்ணன்
நட்பு எதிர்பார்ப்புடன்
கூடிய நட்பு

துரியோதனன், கர்ணனிடமும்
கர்ணன், துரியோதனனிடமும்
நட்பு கொண்டிருந்தது
ஏதோ ஒன்றை
எதிர்பார்த்துத்தான்
கர்ணன் போர்க் கலைகளில்
வல்லவனாக இருக்கிறான்
என்ற காரணத்தினாலும்,
அர்ஜுனனை
எதிர்த்து போர் புரியக்கூடிய
ஆற்றல் கர்ணனிடம்
இருக்கிறது என்ற
காரணத்தினாலும்,
அர்ஜுனனை அழிக்கக்
கூடிய சக்தி
கர்ணனிடம் இருக்கிறது
என்று நினைத்த
காரணத்தினாலும்
தான் துரியோதனன்
கர்ணனிடம் நட்பு
கொண்டான்.
அதைப்போல கர்ணனும்
தன்னுடைய
விரோதியாகக் கருதிய
அர்ஜுனனை அழிக்க
வேண்டும் என்ற
காரணத்திற்காகவும்,
அரச நிலையில் இருக்கும்
அர்ஜுனனை அழிக்க
வேண்டுமானால்
அரசனுடைய உதவி
தேவைப்படும் என்ற
காரணத்தினாலும் தான்
துரியோதனனுடன் கர்ணன்
நட்பு கொண்டான்,

துரியோதனன் கர்ணன்
நட்பு எதிர்பார்ப்புடன்
கூடிய நட்பு

துரியோதனன் தவறு
செய்த போதெல்லாம்
அவன் செய்யும் தவறுகளை
சுட்டிக் காட்டி
அவனை திருத்த முயற்சி
செய்யாமல்
அவனுடன் இருந்து
அவன் செய்த அனைத்து
தவறான செயலுக்கும்
துணையாக இருந்தான்
கர்ணன்

நண்பன் தவறு
செய்யும் போது
அவன் செய்யும்
தவறுகளை சுட்டிக் காட்டி
அவனை திருத்த முயற்சி
செய்பவனே
உண்மையான நண்பன்
ஆனால் கர்ணன்
அதைச் செய்யவில்லை
துரியோதனனை திருத்த
முயற்சி செய்யவில்லை

கர்ணன் நண்பனுக்காக
உயிரை கொடுத்தான்
உயிர் காப்பான் தோழன்
என்பதற்கு கர்ணன்
எடுத்துக் காட்டு
என்று சொல்ல முடியாது
தவறான நண்பர்களுடன்
சேர்ந்தது மட்டுமல்லாமல்
அவர்கள் செய்த
தவறுகளை சுட்டிக்காட்டி
அவர்களை திருத்த
முயற்சி செய்யாமல்
தானும் சேர்ந்து
தவறு செய்த
காரணத்தினால் தான்
கர்ணன் இறந்தான்
என்று தான் எடுத்துக்
கொள்ள வேண்டும்
நண்பனுக்காக உயிரைக்
கொடுத்தான்
என்று எடுத்துக்
கொள்ள முடியாது

எதிர்பார்ப்புடன் நட்பு
கொள்பவர்களை
உயிர் காப்பான் தோழன்
என்று சொல்ல முடியாது
ஆனால்
எதிர்பார்ப்பு இல்லாமல்
நட்பு கொள்பவர்களை
உயிர் காப்பான் தோழன்
என்று சொல்ல முடியும்

நண்பன் ஒருவன்
நான் கஷ்டத்தில்
இருக்கிறேன் எனக்கு
உதவி செய் என்று
கேட்கும் போது
உதவி செய்பவனும்,
நண்பன் ஒருவன்
நான் கஷ்டத்தில்
இருக்கிறேன் எனக்கு
உதவி செய் என்று
கேட்காவிட்டாலும்
நண்பன் கஷ்டத்தில்
இருக்கிறான்
என்பதை அறிந்து
ஓடிச்சென்று
உதவி செய்பவனும்
தான் உண்மையான நண்பன்
அவன் தான்
உயிர் காப்பான் தோழன்

நண்பன் கஷ்டத்தில்
இருக்கும் போது
எனக்கு உதவி செய்
என்று கேட்டும்
உதவி செய்யாமல்
இருப்பவனும் நண்பன்
கஷ்டத்தில் இருக்கிறான்
என்பதை உணர்ந்தும்
அவனுக்கு
உதவி செய்யாமல்
எதுவும் தெரியாதது போல்  
கண்டு கொள்ளாமல்
இருப்பவனும்,
உயிர் காப்பான்
தோழன் இல்லை

----------இன்னும் வரும்
----------15-07-2018
///////////////////////////////////////////////////////////

July 12, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-41


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-41

ஆறாவது நாள்
திண்ணனார்
வேட்டையாடி
ஊனமுது, நீர், பூ
எடுத்துக் கொண்டு
திருக்காளத்தியப்பரிடம்
வந்தார்.

காளத்தியப்பர்
திண்ணனாருடைய
பக்தியை முனிவருக்குக்
காட்டும் பொருட்டு
தனது ஒரு கண்ணில்
இரத்தம் வருமாறு செய்தார்.

இக்காட்சியைக் கண்ட
திண்ணனார் ஐயோ
என்று அலறினார்
மயங்கி கீழே விழுந்தார்
வாயில் கொண்டு வந்த
அபிஷேக நீர் சிந்தியது
கையிலிருந்து ஊனும்
வில்லும் விழுந்தது
தலையிலிருந்த
மலர்கள் சிந்தின.

திண்ணனார் எழுந்தார்
இத்தகைய செயலைச்
செய்தது யார்
விலங்குகள் செய்தனவா
வேறு வேடர்கள்
யாரேனும் செய்தார்களா
என்று வருந்தினார்
என்ன செய்தால் இந்த
இரத்தம் நிற்கும்
என்று யோசித்தார்

அரிய வகை
மூலிகைகளைக் கொண்டு
வந்து கண்ணில் அதனுடைய
சாற்றைப் பிழிந்தார்
இரத்தம் வருவது
நிற்கவில்லை

“””ஊனுக்கு ஊன்
உற்றநோய் தீர்க்கும்”””” என்ற
பழமொழி திண்ணனார்
நினைக்கு வந்தது

என்னுடைய கண்ணை
எடுத்து அப்பினால்
இறைவன் கண்ணுக்கு
மருந்தாகி இரத்தம் நிற்கும்
என்று துணிந்து
அம்பினை எடுத்துத்
தனது வலக்கண்ணை தோண்டி
எடுத்து அப்பினார்
இரத்தம் நின்று விட்டது

அதைக் கண்ட
மகிழ்ச்சியில் திண்ணனார்
தன்னை மறந்து ஆடினார்.
திண்ணனாருடைய
பக்தியை மேலும்
சிவகோசரியாருக்கு
காட்டுவதற்காக இறைவன்
தன்னுடைய மற்றொரு
கண்ணிலும் இரத்தம்
வருமாறு செய்தார்.

இதனைக் கண்ட
திண்ணனார்
இதற்கெல்லாம் நான்
கலங்க மாட்டேன்
எனக்கு மேலும்
ஒரு கண் இருக்கிறது
அதை எடுத்து அப்புவேன்
என்று கண்ணை
பிடுங்கி எடுக்க தயாரானார்.

கண்ணை பிடுங்கி விட்டால்
சிவலிங்கத்தில் இரத்தம்
வழியும் கண்
எங்கே இருக்கிறது
என்று தெரியாது
என்பதற்காக தன்
இடக் காலை
சிவலிங்கத்தின் இரத்தம்
வரும் கண்ணில்
அழுத்தி வைத்து
அம்பினால் இரண்டாவது
கண்ணையும் பிடுங்குவதற்கு
அம்பை கண்ணில்
ஊன்றினார்.

காளத்தியப்பர்
நேரில் தோன்றி
திண்ணனாருடைய
கையைப் பிடித்து
நில்லு கண்ணப்பா
நில்லு கண்ணப்பா
என்று தடுத்து அருளினார்

கண்ணப்பா என்றும்
என் வலப்பக்கம் நிற்பாய்
என்று அருள் புரிந்தார்.

கண்ணப்ப நாயனார்
வெறியுடன்
கடவுளை வணங்கவில்லை
பக்தியுடன் கடவுளை
வணங்கினார்

பக்தியுடன் கடவுளை
வணங்குபவர்களுக்கே
அனைத்து உயிர்களிலும்
கடவுள் இருக்கிறான்
என்பதையும்
அனைத்து பொருள்களிலும்
கடவுள் இருக்கிறான்
என்பதையும்
உணர்ந்து கொள்ள முடியும்

அதனால் தான்
கண்ணப்ப நாயனார்
கல்லிலும் கடவுளைக்
கண்டார்.

அனைத்து உயிர்களிலும்
அனைத்து பொருள்களிலும்
கடவுள் இருக்கிறான்
என்பதை யார் ஒருவர்
உணருகின்றாரோ
அவரே பக்தியுடன்
கடவுளை வணங்குபவர்

இத்தகையவர் தான்
தன் கடவுள்
மேல் வைத்திருக்கும்
பக்தியைப் போன்றே
பிற கடவுள்களின் மேலும்
பக்தியை வைத்திருப்பார்
பிற கடவுளை
இழிவு படுத்தும்
வகையில் நடந்து
கொள்ள மாட்டார்

அனைத்து உயிர்களிலும்
அனைத்து பொருள்களிலும்
கடவுள் இருக்கிறான்
என்பதை யார் ஒருவர்
உணரவில்லையோ
அவர் தான் வெறியுடன்
கடவுளை வணங்குபவர்

இத்தகையவர் தான்
தான் வணங்கும்
கடவுளே உயர்ந்தது
தான் வணங்கும்
கடவுளே உண்மையானது
என்று சொல்லிக் கொண்டு
பிற கடவுளை
இழிவு படுத்தும்
வகையில் நடந்து கொள்வர்

வெறியுடன் கடவுளை
வணங்குபவர்களால் தான்
இந்த உலகத்தில்
சண்டையும் அமைதி
இன்மையும் ஏற்படுகிறது

பக்தியுடன் கடவுளை
வணங்கினால் மட்டுமே
இந்த உலகத்தில்
அமைதி நிலவும்
சமத்துவ, சமதர்ம
சமுதாயம் மலரும்
என்பதை உணர்ந்து
கடவுளை வெறியுடனும்
வணங்கக் கூடாது
கடவுளை பயத்துடனும்
வணங்கக் கூடாது
கடவுளை பக்தியுடன் தான்
வணங்க வேண்டும் என்று
சொல்லிச் சென்ற
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

----------இன்னும் வரும்
///////////////////////////////////////////////