August 05, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-55-சுபம்


         நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-55-சுபம்

உலகில்
மனிதர்கள் கொள்ளும்
உறவு முறைகளை
எல்லாம்
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று  : இரத்த சம்பந்தமுள்ள
          உறவு முறை

இரண்டு : இரத்த சம்பந்தமில்லாத
          உறவு முறை

இரத்த சம்பந்தமுள்ள
உறவு முறையில்
தந்தை, தாய்,
அண்ணன், தம்பி
அக்கா, தங்கை
சொந்தக் காரர்கள்
ஆகியோர் அடங்குவர்.

இரத்த சம்பந்தமில்லாத
உறவு முறையில்
நண்பர்கள்
மட்டுமே அடங்குவர்,

இரத்த சம்பந்தமில்லாத
உறவு முறையான
நண்பர்கள் கொள்ளும்
நட்பை இரண்டு
நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று  :  கற்புடைய நட்பு
இரண்டு : கற்பில்லாத நட்பு

எதிர்பார்ப்பு அற்று
நட்பு கொள்வது,
எந்த சூழ்நிலையிலும்
ஒரே மாதிரியாக
இருப்பது,
எத்தகைய விஷயத்தையும்
செய்வதற்குத் தயாராக
இருப்பது
ஆகியவற்றைக்
கொண்டிருக்கும் நட்பு
கற்புடைய நட்பு எனப்படும்.

எதிர்பார்ப்புடன்
நட்பு கொள்வது,
எந்த சூழ்நிலையிலும்
ஒரே மாதிரியாக
இல்லாமல் இருப்பது,
எத்தகைய
விஷயத்தையும்
செய்வதற்குத் தயாராக
இல்லாமல் இருப்பது,
ஆகியவற்றைக்
கொண்டிருக்கும் நட்பு
கற்பில்லாத நட்பு
எனப்படும்.

மனிதன்
மனிதனாக இருந்து
மனிதனுக்குரிய
உயர்ந்த குணங்களுடன்
மனிதனாக வாழ
வேண்டும் என்பதற்காக
உயர்ந்த கருத்துக்களையும்,
வாழ்வியல் நெறி
முறைகளையும்,
ஒழுக்கங்களையும்,
பழக்க வழங்கங்களையும்,
தங்களுடைய
எண்ணிக்கையில் அடங்காத
பழமொழிகள், பாடல்கள்
இலக்கியங்கள்
ஆகியவற்றின் மூலம்
நம் முன்னோர்கள்
சொல்லிச் சென்றுள்ளனர்.

அதில் முக்கியமான
ஒன்று தான்.
“””கொண்டு வந்தால் தந்தை ;
கொண்டு வந்தாலும்
வராவிட்டாலும் தாய் ;
சீர் கொண்டு
வந்தால் சகோதரி ;
கொலையும் 
செய்வாள் பத்தினி ;
உயிர் காப்பான் தோழன் ;””””
என்பதாகும்

இதில்
இரத்த சம்பந்தமுள்ள
உறவுகளான
தாய், தந்தை,
சகோதரி, மனைவி
ஆகியோரைக் குறிப்பிட்டு
அவர்களுக்குரிய
தன்மைகளைக்
குறிப்பிட்டு இருப்பார்கள்
ஆனால்,
இரத்த சம்பந்தமில்லாத
உறவான நண்பனைக்
குறிப்பிடும் போது
மட்டும் தான்
உயிர் காப்பான் தோழன்
என்று குறிப்பிட்டு
இருப்பார்கள்

உயிரைக் காக்கும்
மிகப்பெரிய பொறுப்பை
இரத்த சம்பந்தமில்லாத
உறவான
நண்பர்களிடம் தான்
கொடுத்து இருக்கிறார்கள்
இரத்த சம்பந்தமுடைய
உறவுகளிடம்
கொடுக்கவில்லை
என்பதை நாம்
உணர்ந்து கொண்டால்
நண்பன் கொள்ளும் நட்பு
எவ்வளவு உயர்ந்தது
புனிதமானது
என்பதை நாம்
அறிந்து கொள்ளலாம்.

இரத்த சம்பந்தமுள்ள
உறவில் பெரிய
அளவில் பாதிப்புகள்
ஏற்பட்டாலும்
பெரிதாக எடுத்துக்
கொள்ளப்படுவதில்லை
ஆனால்
இரத்த சம்பந்தமில்லாத
உறவான
நட்பில் சிறிதளவு
பாதிப்பு ஏற்பட்டாலும்
நட்பில் களங்கம்
ஏற்பட்டு விடும்

எனவே,
எதிர்பார்ப்புடன்
நட்பு கொண்டு,
எல்லா சூழ்நிலைகளிலும்
ஒரே மாதிரியாக
இல்லாமல்,
எந்த செயலையும்
செய்யத் தயாராக
இல்லாமல் இருக்கும்
கற்பில்லாத நட்பாக
நம்முடைய
நட்பு இல்லாமல்,
எந்தவிதமான
எதிர்பார்ப்பும் அற்று
எல்லா சூழ்நிலைகளிலும்
ஒரே மாதிரியாக இருந்து
எந்தச் செயலையும்
செய்யத் தயாராக
இருக்கும் நட்பு தான்
கற்புள்ள நட்பு என்பதை
நாம் புரிந்து கொண்டு
கற்புள்ள நட்பாக
நம்முடைய நட்பு
இருக்கும்படி பார்த்துக்
கொள்ள வேண்டும்.

மனிதன்,
மனிதனாக இருந்து,
மனிதனுக்குரிய
குணங்களைப் பெற்று,
மனிதனாக வாழ
வேண்டும் என்பதற்காக,
பின்பற்ற வேண்டிய
உயர்ந்த கருத்துக்களை,
சொல்லிச் சென்ற
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்
என்பதை நாம்
உணர்ந்து கொண்டு
அவர்களை வணங்குவோம்

---------நம் முன்னோர்கள்
     புத்திசாலிகள்-சுபம்

-----------05-08-2018
///////////////////////////////////////////////////////////


August 03, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-54



            நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-54

வடக்கிருக்கத்
துணிந்து செயலில்
இறங்கிய
கோப்பெருஞ்சோழன்
தன்னுடைய
உயிர் நண்பரான
பிசிராந்தையாரைப்
பார்க்காமலேயே
உயிரை விடப்
போகிறோமே என்று
மிகவும் மனம்
வருந்தினான்

தான் வடக்கிருக்கும்
செய்தியை
பிசிராந்தையார் அறிந்தால்
பிசிராந்தையாரும்
கண்டிப்பாகத்
தன்னுடன் வடக்கிருக்க
வருவார் என்று
கோப்பெருஞ்சோழனின்
உள் உணர்விற்குத்
தோன்றியதால்
மந்திரியிடமும்
மற்றையோரிடமும்
தன்னுடைய நண்பரான
பிசிராந்தையாருக்கும்
ஓர் இடத்தைத்
தயார் செய்யும்படி
வலியுறுத்திக் கூறினார்.

அரசனின் ஆணை
உடனடியாக
நிறைவேற்றப்பட்டது
ஆனால் பிசிராந்தையார்
அரசனுடன்
வடக்கிருக்க
வருவார் என்பதை
யாருமே நம்பவில்லை

பிசிராந்தையார்
வடக்கிருந்து
கோப்பெருஞ்சோழனுடன்
உயிரை
விடுவதற்கு துணிவாரா
அதுவும்
ஒருவரையொருவர்
பார்க்காமல் கொண்ட
நட்பிற்காக
இவ்வாறு செய்வாரா
ஒருவரை ஒருவர்
பார்த்து பழகும்
நட்பே ஆபத்து
என்றால் ஓடிவிடும்
நிலையில் இருக்கும்போது
ஒருவரையொருவர்
பார்க்காமல் செய்யும்
நட்பிற்கு எவ்வாறு
பிசிராந்தையார் வந்து
வடக்கிருந்து
உயிரை விடுவார்
என்று அனைவரும்
நினைத்தனர்

கோப்பெருஞ்சோழனின்
செயலை நினைத்து
மனதிற்குள்
அனைவரும்

சிரித்துக் கொண்டார்கள்

நாட்கள் நகர்ந்து
கொண்டே இருந்தது
பிசிராந்தையார்
வந்து விடுவார் என்று
அவர் வரும்
வழியைப் பார்த்துக்
காத்துக் கொண்டிருந்த
கோப்பெருஞ்சோழனும்
சோர்ந்து போனான்
பிசிராந்தையார்
வருவதாகத் தெரியவில்லை
அதனால் சோழன்
நண்பரைக் காணாமலேயே
வடக்கிருக்கும்
தவத்தை மேற்கொள்ளத்
தொடங்கினான்

ஆனால் சோழனின்
எண்ணப்படியே
செய்தியைக் கேள்விப்பட்டதும்
பிசிராந்தையார்
சோழ நாட்டை நோக்கி
ஓடோடி வந்தார்
நண்பனைக் கண்டார்
கண்ணீர் பெருகி நின்றார்

வேறு எதுவும் பேசவில்லை
எற்கனவே
அவருக்காகத் தயாராக
அமைக்கப்பட்டிருந்த
இடத்தில் போய்
உட்கார்ந்து
வடக்கிருந்து சோழனுடன்
தானும் தன் இன்னுயிரை
மாய்த்துக் கொண்டார்

பிசிராந்தையார்
என்ற புலவரும்
கோப்பெருஞ்சோழன்
என்ற மன்னனும்
ஒருவரை ஒருத்தர்
காணாமலேயே
நட்புக் கொண்டு
ஒன்றாகவே
உயிர்நீத்த நட்பின்
சிறப்பினை
பல இலக்கியங்கள்
நமக்கு எடுத்துக் காட்டுகின்றன
பொத்தியார் என்ற புலவர்
தன்னுடைய பாடலில்
இதனைப் பதிவு
செய்திருக்கிறார்

பிசிராந்தையாரும்
கோப்பெருஞ்சோழனும்
கொண்ட நட்பு எத்தகைய
விஷயத்தையும்
செய்யத் தயாராக 
இருக்கும் நட்பு

இராமரும், ஶ்ரீநிவாசனும்
கொண்ட நட்பு
எந்த சூழ்நிலையிலும்
ஒரே மாதிரியாக
இருக்கும் நட்பு
என்பதையும்
பிசிராந்தையாரும்,
கோப்பெருஞ்சோழனும்
கொண்ட நட்பு
எத்தகைய
விஷயத்தையும்
செய்வதற்குத் தயாராக
இருக்கும் நட்பு
என்பதையும்
நாம் உணர்ந்து
கொண்டால்
உண்மையான நட்பு
எதிர்பார்ப்பு அற்று
இருக்கும் என்பதை
நாம் உணர்ந்து
கொள்ளலாம்

இத்தகைய உயர்ந்த
நட்பின் பெருமையை
நாம் உணர்ந்து
கொள்ளாத
காரணத்தினால் தான்
துரியோதனனும்,
கர்ணனும் கொண்ட
எதிர்பார்ப்புடன்
கூடிய நட்பை
இச்சமுதாயத்தில்
உள்ளவர்கள்
பின்பற்றி வருகிறார்கள்

உயர்ந்த நட்பை
நாம் கவனிக்கத்
தவறி விட்ட
காரணத்தினால் தான்
சாதாரண நட்பை நாம்
உயர்ந்த நட்பாக
கருதி போற்றி
பின்பற்றி வருகிறோம்
என்பதை நாம்
நினைவில் கொள்ள
வேண்டும்.

----------இன்னும் வரும்
------------03-08-2018
///////////////////////////////////////////////////////////

August 02, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-53


            நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-53

பாண்டிய நாட்டில்
உள்ள
பிசிர் என்ற ஊரில்
ஆந்தையார் என்பவர்
வாழ்ந்து வந்தார்
அவருடைய ஊரின்
பெயரான பிசிர்
மற்றும்
அவருடைய
இயற்பெயரான
ஆந்தையார் ஆகிய
இரண்டையும்
சேர்த்து அவர்
பிசிராந்தையார் என்று
அழைக்கப்பட்டார்.


கோப்பெருஞ்சோழன்
சோழ நாட்டில்
உறையூர் என்னும்
பகுதியை ஆண்டு
கொண்டிருந்தான்

பிசிராந்தையார்
சோழ மன்னன்
கோப்பெருஞ்சோழன்
மீது  அளவற்ற
அன்பு கொண்டு
இருந்த காரணத்தினால்
கோப்பெருஞ்சோழனைப் பற்றி
நிறைய பாடல்களை
எழுதி இருந்தார்
கோப்பெருஞ்சோழனைக்
காண வேண்டும்
என்ற ஆவல் கொண்டு
தன்னுடைய
வாழ்க்கையின்
நாட்களை கழித்துக்
கொண்டு இருந்தார்
கோப்பெருஞ்சோழனைக்
காண வேண்டும்
என்ற ஆசையை
தன் வாழ்க்கையின்
லட்சியமாகக் கொண்டு
வாழ்ந்து கொண்டு
இருந்தார்

கோப்பெருஞ்சோழனைக்
காண வேண்டும்
என்ற ஆசை
பிசிராந்தையார்
மனதில் இருந்தாலும்
பிசிராந்தையாரால்
கோப்பெருஞ்சோழனை
சந்திக்க முடியவில்லை
ஏனெனில்
பிசிராந்தையாருடைய
ஊரானது
பாண்டிய நாட்டில்
இருந்தது
அது சோழ மன்னன்
கோப்பெருஞ்சோழன்
ஆளும்
சோழ நாட்டிலிருந்து
வெகு தொலைவில்
இருந்தததால்
பிசிராந்தையாரால்
உடனடியாக  
சோழ நாட்டிற்கு சென்று
கோப்பெருஞ்சோழனை
சந்தித்து
தன்னுடைய நட்பை
வெளிப்படுத்த
முடியவில்லை.
இந்த ஏக்கம்
பிசிராந்தையார்
மனதில் என்றும்
இருந்து கொண்டே
இருந்தது.

பிசிராந்தையாரின்
அளவற்ற புகழையும்,
வியக்க வைக்கும்
தமிழறிவையும்
கேள்விப்பட்ட
கோப்பெருஞ்சோழன்
பிசிராந்தையார் மீது
உண்மையான
நட்புக் கொண்டு
இருந்தார்
பிசிராந்தையாரைச்
சந்திக்க வேண்டும்
என்ற பேராவலைக்
கொண்டு இருந்தார்
இருந்தாலும்,
கோப்பெருஞ்சோழனுடைய
அளவுக்கு அதிகமான
வேலைப் பளுவின்
காரணமாக
பிசிராந்தையாரைச்
சந்திக்க முடியவில்லை

இருவரும் ஒருவரை
ஒருவர் பார்த்துக்
கொள்ளாமலேயே
அரசன், புலவன்
என்ற பேதம்
பாராட்டாமல்
உயர்வு, தாழ்வு
என்ற
மனப்பான்மை
கொள்ளாமல்
நட்புடன் பழகி
வந்தனர்.
அவர்கள் இருவரும்
தாங்கள் சந்தித்துக்
கொள்ளக்கூடிய
அந்த முக்கியமான
நாளை மிக ஆவலுடன்
எதிர்ப்பார்த்து
காத்துக் கொண்டிருந்தனர்

கோப்பெருஞ்சோழனின்
ஆட்சி நடந்து
கொண்டிருக்கும்போதே
அவருடைய இரண்டு
புதல்வர்களும்
ஆட்சியைக் கைப்பற்றி
அரியணை ஏறுவதற்காக
தன்னுடைய தந்தையான
கோப்பெருஞ்சோழனுக்கு
எதிராக போரிடத்
துணிந்தனர்,

இதனை
அறிந்து கொண்ட
கோப்பெருஞ்சோழன்
மன வேதனைப்பட்டு
ஆட்சியை விட்டு விட்டு
வடக்கிருந்து
உயிர் விடத்
துணிந்தான்

இவ்வுலகில்
வாழ்ந்தது
போதும் என்று
முடிவு செய்து,
இவ்வுலக
வாழ்க்கையைத் துறக்க
விரும்பும் அரசர்கள்
வடக்கிருந்து
உயிர் விடுதல்
என்பது
அக்காலத்திய மரபு

வடக்கிருத்தல் என்பது
தன்னுடைய
நாட்டில் உள்ள
ஆறு, குளம் போன்ற
நீர் நிலைகளுக்குச் சென்று
அதன் இடையே
மணல் திட்டு
ஒன்றை உருவாக்கி
வடக்கு திசை
நோக்கி
அமர்ந்தபடி
உண்ணா நோன்பிருந்து
மரணத்தை தழுவுவது
எனப்படும்

--------- இன்னும் வரும்
------------02-08-2018
//////////////////////////////////////////////