August 27, 2018

திருக்குறள்-பதிவு-8


                        திருக்குறள்-பதிவு-8

பாண்டிய மன்னன்
தமிழ்ச் சங்கத்தில்
உள்ள புலவர்களைப்
பார்த்து புலவர்களே
தமிழ் மூதாட்டி
ஔவையார்
இந்த சங்கத்திற்கு
வந்திருக்கிறார்
வள்ளுவர் குறள்
அனைத்து மக்களுக்கும்
தேவையான
உயர்ந்த படைப்பு என்று
அவர் கூறுகிறார்
வள்ளுவர் குறளை
சங்கம் கேட்க வேண்டும்
என்று அவர்
கேட்டுக் கொண்டுள்ளார்
என்றான்
பாண்டிய மன்னன்

தமிழ்ச்சங்கத்தில்
உள்ள புலவர்கள்
திருவள்ளுவரை நோக்கி
திருவள்ளுவரே
உமக்கு
இலக்கணம் தெரியுமா
அந்தாதி பாடுவீரா     
உமக்கு சிலேடை
வருமா என்று
பல்வேறு விதமாக
கேள்விகளைக் கேட்டு
திருவள்ளுவரை
அவமானப்படுத்த
வேண்டும்
என்ற நோக்கத்தில்
பல்வேறு விதமான
கேள்விகளைக்
கேட்டனர்

இந்நிகழ்வு நடந்து
கொண்டிருக்கும் சமயத்தில்
பாண்டிய மன்னன்
வள்ளுவர் இயற்றிய
நூலை கேட்கலாம்
என்று கேட்டுக்
கொண்டதற்கிணங்க
வள்ளுவர் திருக்குறளை
வாசிக்கத் தொடங்கினார்

திருக்குறளின்
ஒரு பாடலைக்
கேட்டவுடனேயே
தமிழ்ச்சங்கத்தில்
உள்ளவர்கள் திருக்குறளை
ஆடசேபம்
செய்யத் தொடங்கினர்
இது செய்யுள்
இலக்கணத்தை
மீறி இருக்கிறது
வெண்பா என்றால்
நான்கு அடி இருக்க
வேண்டும்
ஈரடி வெண்பாவை
ஏற்க முடியாது
சங்கத்தின் விதிகளுக்கு
முரண்பாடாக இருக்கிறது
திருக்குறளை ஏற்றுக்
கொள்ளவே
முடியாது என்று
தமிழ்ச்சங்கத்தில்
உள்ள தமிழ்ப் புலவர்கள்
பல்வேறு குற்றச்
சாட்டுக்களையும்,
பல்வேறு குறைகளையும்
சுட்டிக் காட்டி
திருக்குறளை
அவமானப்படுத்தி
திருவள்ளுவரை
இழிவு படுத்தி
திருக்குறளை
அரங்கேற்றம்
செய்யவிடாமல்
தடுத்தனர்.

தமிழ்ச்சங்கத்தில்
உள்ள தமிழ்ப்புலவர்கள்
செய்த செய்கைகளை
கண்டு வெகுண்டெழுந்த
ஔவையார்

மதுரை தமிழ்ச்சங்கத்தில்
உள்ள தமிழ்ப்
புலவர்களைப் பார்த்து
தன்னலம் மிக்க
புலவர்களே
உங்களுடைய
தன்னலம் மிக்க
செயல்பாட்டால்
திருக்குறளை
அரங்கேற்றம் செய்ய
விடாமல் தடுத்து
மக்களுக்கு
கிடைக்க வேண்டிய
உயர்ந்த படைப்பை
கிடைக்க விடாமல்
செய்கிறீர்கள்
இந்தச் சங்கத்தில்
உள்ள புலவர்களிடம்
தன்னலம் தான்
நிரம்பி இருக்கிறது
இந்த தன்னலம்
மிக்க புலவர்களிடம்
பேசிக் கொண்டிருப்பதால்
ஒரு பயனும்
விளையப் போவதில்லை

இதற்கு மேல்
பேசி பயன் இல்லை
நான் பொற்றாமரையை
பொங்கச் செய்கிறேன்
சங்கப்பலகையை
வரவழைக்கின்றேன்
அதில் வள்ளுவர்
குறளை வைப்போம்
அந்த ஈசன் என்ன
சொல்கிறார் பார்ப்போம்
என்றார் ஔவையார்

ஔவையார்
சொன்னவாறே
பொற்றாமைரையை
பொங்கச் செய்தார்
சங்கப்பலகை
திருக்குறளை
ஏற்றுக் கொண்டது
ஈசன் அருட்குரல்
கேட்டது
வள்ளுவன் வாக்கு
என் வாக்கு என்று
கேட்டது

ஈசனே ஏற்றுக் கொண்ட
பிறகு எந்தவித
தடையும் இல்லை
என்ற முடிவு
அனைவராலும்
எடுக்கப்பட்டு
மதுரை தமிழ்ச்சங்கத்தில்
திருக்குறள்
திருவள்ளுவரால்
அரங்கேற்றம் செய்யப்பட்டது

இன்று உலகப்பொதுமறை
என்று அனைவராலும்
பெருமையாக
அழைக்கப்படும் திருக்குறள்
உலகம் முழுவதும்
அதிக மக்களால் படித்து
பின்பற்றப்படும் திருக்குறள்
அன்றைய தமிழ்ச்சங்கத்தால்
ஏற்றுக் கொள்ளப்படவிலை
மனிதர்களால்
புறக்கணிக்கப்பட்டது என்பது
எத்தனை பேருக்குத்
தெரியும்

மனிதர்களால்
புறக்கணிக்கப்பட்ட
திருக்குறள்
இறைவனால் ஏற்றுக்
கொள்ளப்பட்டது
என்பதை நினைத்தாலே
திருக்குறளின்
பெருமை நமக்கு
தெள்ளத் தெளிவாக
விளங்கும்

---------  இன்னும் வரும்
---------  27-08-2018
///////////////////////////////////////////////////////////






August 26, 2018

திருக்குறள்-பதிவு-7


                        திருக்குறள்-பதிவு-7

உலகத்தில் படைக்கப்படும்
படைப்புகள் அனைத்தையும்
மூன்று நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : எழுத்து மூலம்
        படைக்கப்படும்
        படைப்புகள்

இரண்டு :சொல் மூலம்
         படைக்கப்படும்
         படைப்புகள்

மூன்று : செயல் மூலம்
         படைக்கப்படும்
         படைப்புகள்

எழுத்து மூலம்
படைக்கப்படும்
படைப்புகளுக்கு
கதை, கவிதை, கட்டுரை
ஆகியவற்றை
குறிப்பிடலாம்

சொல் மூலம்
படைக்கப்படும்
படைப்புகளுக்கு
பாடுவது, பேசுவது
ஆகியவற்றை
குறிப்பிடலாம்

செயல் மூலம்
படைக்கப்படும்
படைப்புகளுக்கு
கட்டிடம் கட்டுதல்,
சிற்பம் செதுக்குதல்
மற்றும் அனைத்தையும்
இந்தப் பிரிவில்
குறிப்பிடலாம்

எழுத்து, சொல்
செயல் மூலம்
படைப்புகள்
படைக்கப்பட்டாலும்,
படைக்கப்பட்ட
படைப்புகள் அனைத்தும்,
இரண்டு நிலைகளைத்
தன்னுள் கொண்டு
இருக்கும்

ஒன்று : உயிருள்ள படைப்பு
இரண்டு:  உயிரற்ற படைப்பு

உயிருள்ள படைப்பு
என்பது
காலத்தால்
அழியாத படைப்பு

உயிரற்ற படைப்பு
என்பது
காலத்தால் அழியும்
படைப்பு

காலத்தால் அழியாத
உயிருள்ள படைப்புக்கு
திருக்குறள்,
பகவத் கீதை,
இராமாயணம்,
மகாபாரதம்
ஆகியவற்றைக்
குறிப்பிடலாம்

எந்த படைப்பு
காலத்தால் அழியாமல்
மக்களால்
காலம் காலமாக
நினைக்கப்பட்டு
பேசப்பட்டு
பின்பற்றப்பட்டு
வருகிறதோ
அது தான்
காலத்தால்
அழியாத படைப்பு;
உயிருள்ள படைப்பு;

எந்த படைப்பு
காலத்தால் அழிந்து
மக்களால்
நினைக்கப்படாமல்,
பேசப்படாமல்,
பின்பற்றப்படாமல்,
இருக்கிறதோ
அது தான்
காலத்தால்
அழியும் படைப்பு;
உயிரற்ற படைப்புl;

திருக்குறள் காலத்தால்
அழியாத
உயிருள்ள படைப்பு
இத்தகைய உயர்ந்த
சிறப்பைப் பெற்றது
திருக்குறள்

திருக்குறளை
எழுதி முடித்ததோடு
என் கடமை
முடிந்து விட்டது
இனி திருக்குறளை
ஏற்றுக் கொள்வதும்
ஏற்றுக் கொள்ளாததும்
இச்சமுதாயத்தை
சார்ந்தது என்று சொன்ன
திருவள்ளுவரை நோக்கி
ஒளவையார்
சொன்னார்

நாம் நமக்காக
செல்லவில்லை
தமிழுக்காக செல்கிறோம்
புலவர்கள் மறுத்தாலும்
அல்லது
பாண்டியனே தடுத்தாலும்
உலகில் உள்ள
அனைத்து மக்களும்
மனிதன்
மனிதனாக இருந்து
மனிதனாக வாழ்வதற்கு
தேவையான அனைத்து
கருத்துக்களையும்
தன்னுள் கொண்ட
திருக்குறள்
மக்கள் கையில்
சேர வேண்டும்
மக்களுக்காக பாடப்பட்ட
திருக்குறள்
மக்களுக்கு
கிடைக்க வேண்டும்
அதற்காக
எப்பாடு பட்டேனும்
திருக்குறளை அரங்கேற்றம்
செய்ய வேண்டியது
என்னுடைய பொறுப்பு
தாங்கள் தயவு செய்து
என்னுடன் வாருங்கள்
என்று திருவள்ளுவரை
அழைத்துக் கொண்டு
பாண்டிய மன்னனை
காணச் சென்றார்
ஔவையார்

ஔவையார்
பாண்டிய மன்னனை
பார்க்க வந்திருக்கிறார்
என்று தெரிந்தும்
ஔவையாரை
பாண்டிய மன்னனின்
அமைச்சர் தடுத்தார்
அமைச்சரின்
தடைகளைத் தகர்த்து
ஔவையார்
கடந்து சென்றார்
ஔவையார் இறுதியில்
பாண்டிய மன்னனைக்
கண்டார்

ஔவையார்
பாண்டிய மன்னனிடம்.
திருவள்ளுவரின்
அரிய நூலான
திருக்குறளை
சங்கத்தில்
கேட்காமலேயே மறுத்து
விட்டார்களாம்
மீண்டும்
சங்கத்தை கூட்டி
நூலைக் கேட்க
வேண்டும் என்றார்

ஔவையாரின்
வேண்டுகோளுக்கிணங்க
தமிழ்ச்சங்கம்
மதுரையில்
திருவள்ளுவரின்
திருக்குறளை
அரங்கேற்றம்
செய்வதற்கு
பாண்டிய மன்னனால்
கூட்டப்பட்டது

--------  இன்னும் வரும்
---------  26-08-2018
/////////////////////////////////////////////////


August 25, 2018

திருக்குறள்-பதிவு-6



                       திருக்குறள்-பதிவு-6

ஔவையார் நேரில்
திருவள்ளுவரைச் சந்தித்து
திருவள்ளுவரிடம்
மதுரைத் தமிழ்ச் சங்கத்தில்
தாங்கள் பாடிய திருக்குறளை
அரங்கேற்றம் செய்கிறார்கள்
என்று கேள்விப்பட்டு
ஓடோடி வந்தேன்
திருக்குறள் சங்கத்தில்
அரங்கேற்றம் ஆகிவிட்டதா
என்று ஔவையார்
திருவள்ளுவரை
நோக்கி கேட்டார்

மதுரை தமிழ்ச் சங்கத்தில்
தான் இயற்றிய
திருக்குறள் நூல்
அரங்கேற்றப்படவில்லை
என்று திருவள்ளுவர்
ஔவையாரிடம் கூறினார்

அதற்கு ஔவையார்
திருக்குறள் தமிழ்ச் சங்கத்தில்
அரங்கேற்றப்படவில்லை
என்றால் அது திருக்குறள்
என்ற நூலுக்கு இழுக்கல்ல
அது தமிழுக்கே இழுக்கு
வாருங்கள் நாம் இருவரும்
ஒன்றாகச் சென்று
பாண்டிய மன்னனை சந்தித்து
மதுரை தமிழ்ச்சங்கத்தை
கூட்டி திருக்குறளை
எப்படியும் அரங்கேற்றம்
செய்யலாம் வாருங்கள்
என்று அழைத்தார்

அதற்கு திருவள்ளுவர்
சொல்லிய வார்த்தை
மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தது
திருவள்ளுவர் சொல்கிறார்

“””ஔவையே
திருக்குறளை நான்
எப்போது எழுதி முடித்து
இச்சமுதாயத்திற்கு
எப்போது அளித்தேனோ
அப்போதே என்னுடைய
கடமையை நான் செய்து
முடித்து விட்டேன்
திருக்குறளை
ஏற்றுக் கொள்வதும்
ஏற்றுக் கொள்ளாததும்
இந்தச் சமுதாயத்தைச்
சார்ந்தது
அதற்காக நான் ஏன்
பதற வேண்டும் என்று
திருவள்ளுவர்
சொல்லிய சொல்லில்
பல அர்த்தங்கள்
மறைந்து உள்ளன”””””

என் மூலம்
இச் சமுதாயத்திற்கு
என்ன வழங்கப்பட
வேண்டுமோ
அது என் மூலமாக
வழங்கப்பட்டு விட்டது
அதை ஏற்றுக் கொள்வதும்
ஏற்றுக் கொள்ளாததும்
இச் சமுதாயத்தைப்
பொறுத்தது
நான் அதைப் பற்றி
கவலைப்பட வேண்டிய
அவசியமில்லை
என்னுடைய படைப்பு
உயர்ந்த படைப்பு என்று
உணர்ந்து தகுதி
வாய்ந்தவர் வரும் பட்சத்தில்
என்னுடைய படைப்பு
அவருக்கு கிடைக்கும்
உயர்ந்த படைப்பைத்
தேடி வரும்
நாட்டம் உள்ளவர்களுக்கு
நான் இயற்றிய
திருக்குறள் கிடைக்கும்

உலகின் எந்த
கோடியில் இருந்தாலும்
படைக்கப்பட்ட
உயர்ந்த படைப்பை
தேடுபவர்களுக்கு
உயர்ந்த படைப்பு
கிடைத்தே ஆக வேண்டும்
என்பது தான் திருவள்ளுவர்
சொன்னதற்கு அர்த்தம்

உயர்ந்த படைப்புகளைப்
படைப்பவர்கள்
உயர்ந்த படைப்புகளைப்
படைத்து
உயர்ந்த படைப்புகளை
இச்சமுதாயத்திற்காக
அளித்து விடுவார்கள்
இச்சமுதாயம்
ஏற்றுக் கொள்கிறதா
ஏற்றுக் கொள்ளவில்லையா
எனபதைப் பற்றி
அவர்கள் கவலைப்பட
மாட்டார்கள்

உயர்ந்த படைப்புகளை
ஏற்றுக் கொள்ளும்
தகுதி உடையவர்கள்
அதை தேடி வருவார்கள்
அதை ஏற்றுக் கொள்வார்கள்
யாருக்கு உயர்ந்த
படைப்புகள் கிடைக்க
வேண்டுமோ அவர்களுக்கு
கண்டிப்பாக கிடைக்கும்

உயர்ந்த படைப்புகளில்
உள்ள ரகசியங்கள்
நமக்கு புரிய வேண்டுமானால்
நாம் அந்த உயர்ந்த படைப்பின்
உயர்ந்த நிலைக்கு
செல்ல வேண்டும்

உயர்ந்த படைப்புகளை
படைப்பவர்கள்
தங்களால்
படைக்கப்பட்ட உயர்ந்த
படைப்புகளை
தங்கள் படைப்பு என்று
விளம்பரப்படுத்திக் கொண்டு
புகழைத் தேடியும்
பணத்தைத் தேடியும்
ஓட மாட்டார்கள்

உயர்ந்த படைப்புகள்
உயர்ந்தவர்களால்
படைக்கப்படும்போது
உயர்ந்த படைப்புகளை
இவை உயர்ந்தவர்களால்
படைக்கப்பட்ட
உயர்ந்த படைப்புகள் என்று
புரிந்து கொண்டால்
உயர்ந்த படைப்புகள்
பயனைத் தரும்
உயர்ந்த படைப்புகளை
உயர்ந்தவர்களால்
படைக்கப்பட்ட
உயர்ந்த படைப்புகள்
என்பதை புரிந்து
கொள்ளாமல்
உயர்ந்த படைப்புகளை
இழிவு படுத்தினால்
இழப்பு படைத்தவருக்கும்
படைக்கப்பட்டதற்கும்
இல்லை
சமுதாயத்திற்கு தான் இழப்பு
உயர்ந்த படைப்புகளை
புரிந்து கொண்டு
உயர்ந்த படைப்புகளை
படைத்தவர்களை
புரிந்து கொண்டு
உயர்ந்த படைப்புகளை
அனைவரும் ஏற்றுக் கொண்டு
பின்பற்ற முன்வர
வேண்டும் அப்போது தான்
உயர்ந்த படைப்புகள்
படைக்கப்பட்டதின்
நோக்கம் நிறைவேறும்
உயர்ந்த படைப்புகள்
அனைவருக்கும் பயன்பட்டு
நன்மை தரும்

அதனால் தான் திருவள்ளுவர்
நூலைப் பாடியதோடு
என் கடமை முடிந்து விட்டது
அதை ஏற்றுக் கொள்வதும்
ஏற்றுக் கொள்ளாததும்
இச்சமுதாயத்தைப்
பொறுத்தது என்றார்

---------  இன்னும் வரும்
---------  25-08-2018
///////////////////////////////////////////////////////////