January 03, 2019

திருக்குறள்-பதிவு-79


                        திருக்குறள்-பதிவு-79

ஜியார்டானோ புருனோவால்
அற்புதம் என்றால் என்ன
என்று உணர்த்தப்பட்டு
அற்புதத்தை உணர்ந்து
அற்புதத்தில் அற்புதமாகவே
மாறிய பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோவால்
ஆன்ம ஒளி
ஏற்றி வைக்கப்பட்ட
பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோவை
கைதியாக ரோம்
நகருக்கு தொடர்
விசாரணைக்காக
அழைத்துச் செல்லக்கூடாது
என்பதற்காக போராடிய
பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோ
குற்றமற்றவர்
அவரை விடுதலை
செய்ய வேண்டும்
என்பதற்காக பல்வேறு
முயற்சிகள் எடுத்த
பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோ
என்பவர் எத்தகைய
தன்மைகளைக்
கொண்டவர் என்பதை
ஜியார்டானோ புருனோ
உயிருடன் வாழும்
காலத்திலேயே அவரை
முழுவதுமாக அறிந்து
வைத்து இருந்த
ஒரே பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோவை
ரோம் நகருக்கு
கைதியாக தொடர்
விசாராணைக்காக
அழைத்துச் செல்ல
காத்துக் கொண்டிருந்த
கப்பலுக்கு சற்று
தொலைவில்
நின்று கொண்டிருந்தார் ;

இந்த போஸ்காவைத்
(FOSCA) தான்
ஜியார்டானோ புருனோ
கப்பலில் ஏறுவதற்கு
முன்பு திரும்பி
புன்முறுவல் செய்தார் ;

ஜியார்டானோ புருனோ
போஸ்காவைப் (FOSCA)
பார்த்து சிந்திய
இந்த புன்முறுவலுக்கு
பின்னால் மறைந்திருந்த
ஆயிரக்கணக்கான
மறைபொருள் ரகசியங்கள் ;
வார்த்தைகளால்
வார்க்க முடியாத
உண்மைகள் ;
இவர்கள் இரண்டு
பேருக்கும் மட்டுமே தெரிந்த
ஒரு மாபெரும் ரகசியமாக
இருக்கும் படி
இந்த பிரபஞ்சம் செய்து
விட்டது ; என்பது
மறக்க முடியாத
உண்மை ; என்பதை
அனைவரும் நினைவில்
கொள்ள வேண்டும் ;

ஜியார்டானோ புருனோவை
கைதியாக ரோம்
நகருக்கு அழைத்து
செல்வதற்காக காத்துக்
கொண்டிருந்த கப்பலில்
ஜியார்டானோ புருனோ
ஏறும் போது ஜியார்டானோ
புருனோ தன்னுடைய
முதல் அடியை எடுத்து
அந்த கப்பலில் வைத்தார்

ஜியார்டானோ புருனோ
கப்பலில் எடுத்து
வைத்த முதல் அடி
அவருடைய இறுதி
யாத்திரைக்கான முதல்
அடியாக இருக்குமோ
என்று வெனிஸ் நகரத்தின்
மக்கள் எண்ணினர்.

ஏனென்றால்
ஜியார்டானோ புருனோ
வாழ்ந்த கால கட்டத்தில்
கைதியாக குற்றம்
சுமத்தப்பட்டு ரோம்
நகருக்கு அழைத்துச்
செல்லப் பட்டவர்களில்
பெரும்பாலானவர்கள்
நிரபராதி என்று தீர்ப்பு
வழங்கப்பட்டு விடுதலை
செய்யப்பட்டதாக
சரித்திரம் இல்லை.

குற்றம் சுமத்தப்பட்டு
கைதியாக வந்தவர்களை
ரோம் நகரம் முக்கியமாக
மூன்று நிலைகளில்
கொன்றிருக்கிறது

ஒன்று :
சிறையில் வைத்து
கொடுமையான
சித்தரவதை செய்து
கொன்றிருக்கிறது ;

இரண்டு :
வீட்டிக் காவலில் வைத்து
சித்திரவதைகளை அளித்து
கொன்றிருக்கிறது ;

மூன்று :
மனிதத் தன்மை
இல்லாமல் உயிரோடு
எரித்து கொன்றிருக்கிறது ;

இத்தகைய
காரணங்களினால் தான்
ஜியார்டானோ புருனோ
கைதியாக தொடர்
விசாரணைக்காக ரோம்
நகருக்கு செல்வதற்காக
கப்பலில் எடுத்து
வைத்த முதல் அடி
அவருடைய இறுதி
யாத்திரைக்கான
முதல் அடியாக
இருக்குமோ என்று
அங்கு கூடியிருந்த
மக்களை சந்தேகம்
கொள்ள வைத்தது

இருப்பினும்,
ஜியார்டானோ புருனோ
மீண்டும் திரும்பி வருவார்
என்ற நம்பிக்கையுடன்
வெனிஸ் நகரத்தில்
வாழும் மக்கள்
மட்டுமல்ல
வெனிஸ் நகரமே
ஜியார்டானோ புருனோ
வந்து விடுவார் என்ற
நம்பிக்கையுடன்
காத்துக் கொண்டிருந்தது

மிகப்பெரிய தத்துவ
மேதை சிறந்த
எழுத்தாளர்
மாபெரும் விஞ்ஞானி
என்று பல்வேறு
சிறப்புகளைக் கொண்ட
ஜியார்டானோ புருனோவை
சுமந்து கொண்டு கப்பல்
ரோம் நகரை நோக்கி
சென்று கொண்டிருந்தது

ஆமாம் ஜியார்டானோ
புருனோ கைதியாக
தொடர் விசாரணைக்காக
ரோம் நகரை நோக்கி
கப்பலில் பிரயாணம்
செய்து கொண்டிருந்தார்

---------  இன்னும் வரும்
---------  03-01-2019
///////////////////////////////////////////////////////////


January 02, 2019

திருக்குறள்-பதிவு-78


                        திருக்குறள்-பதிவு-78

"என்னால் அற்புதத்தை
தாங்க முடியவில்லை
புருனோ …………………………………………….!
நான் செத்துக் கொண்டு
இருக்கிறேன்……………………………………!
என்னை
காப்பாற்று புருனோ ……………!
நான் செத்துக் கொண்டு
இருக்கிறேன்……………………………………!
என்றாள் போஸ்கா (FOSCA)
என்ற அந்த பெண்

“இப்போது நீ !
அற்புதத்தை நேருக்கு
நேராக சந்தித்துக் கொண்டு
இருக்கிறாய்……………………………… !
அற்புதத்தை தரிசனம்
செய்து கொண்டு
இருக்கிறாய்………………………………..!
அற்புதம் என்றால் என்ன
என்று கொஞ்சம் கொஞ்சமாக
உணர்ந்து கொண்டு
வருகிறாய்………………………………….!
அற்புதமாகவே கொஞ்சம்
கொஞ்சமாக மாறிக்
கொண்டே வருகிறாய்……!.

“இந்த பிரபஞ்சத்தில்
உள்ள அனைத்தும்
எப்படி ஒன்றுடன் ஒன்று
இணைக்கப்பட்டுள்ளது
என்பதை கொஞ்சம்
கொஞ்சமாக அறிந்து
கொண்டே வருகிறாய்………!
அவைகள் எப்படி
இயக்க ஒழுங்கு மாறாமல்
இயங்கிக் கொண்டிருக்கிறது
என்பதை கொஞ்சம்
கொஞ்சமாக அறிந்து
கொண்டே வருகிறாய்……..!
இவைகள் அனைத்தையும்
தன்னுள் வைத்து
இயக்கிக் கொண்டிருப்பது
எது என்பதை கொஞ்சம்
கொஞ்சமாக உணர்ந்து
கொண்டே வருகிறாய்…….!”

இப்போது நீ அற்புதமாகவே
மாறி விட்டாய்………………………! "

"சிறிது நேர
மௌனத்திற்குப்பின்
ஜியார்டானோ புருனோ
மீண்டும் பேச ஆரம்பித்தார்."

"இப்போது நீ படிப்படியாக
மாற்றம் அடைந்து கொண்டே
வருகிறாய்…………………………………….!
உன் சுவாசம் அற்புதத்தின்
மையத்தை விட்டு வெளி
வருகிறது………………………………………..!
இப்போது நீ பழைய
நிலைக்கு கொஞ்சம்
கொஞ்சமாக மாறிக்
கொண்டே வருகிறாய்……..!
நீ பழைய நிலைக்கு
மாறுவதை உன்னால்
உணர முடிகிறது அதை
கொஞ்சம் கொஞ்சமாக
உணர்ந்து கொண்டே
வருகிறாய்…………..!

"கொஞ்சம் கொஞ்சமாக
சுவாசம் உன்னுள் ஓட
ஆரம்பிக்கிறது………………………….!
உட்சுவாசம்
வெளி சுவாசம் என மாறி
மாறி ஓட ஆரம்பிக்கிறது…..! "

"அற்புதத்தின் மூலம்
கிடைத்த சக்தி
உன் உடல் முழுவதும்
கொஞ்சம் கொஞ்சமாக
பரவ ஆரம்பிக்கிறது………………….!
உன்னுடைய தலையில்
இருந்து படிப்படியாக
கீழே இறங்கி உன்னுடைய
கழுத்திற்கு வருகிறது…….………!
கழுத்தில் இருந்து
படிப்படியாக கீழே இறங்கி
உன்னுடைய தோளுக்கு
வருகிறது…………………………………………..!
தோளில் இருந்து
படிப்படியாக கீழே இறங்கி
உன்னுடைய இடுப்பிற்கு
வருகிறது…………………………………………..!
இடுப்பிலிருந்து
படிப்படியாக கீழே இறங்கி
உன்னுடைய கால்களுக்கு
வருகிறது…………………………………………..!
அற்புதத்தின் அற்புத சக்தி
அற்புதத்தின் அளப்பறிய
சக்தி உன்
உடல் முழுவதும்
கொஞ்சம் கொஞ்சமாக
பரவுகிறது………………………………………!
பரவிக் கொண்டே
வருகிறது………………………………………..!
இப்போது நீ அற்புதத்தால்
முழுவதும் நிரப்பப்பட்டு
விட்டாய்……………………………………………!!
இப்போது நீ
அற்புதம் என்றால் என்ன
என்பதை உணர்ந்து
கொண்டு விட்டாய்" என்றார்
ஜியார்டானோ புருனோ

"ஜியார்டானோ புருனோ
தன்னுடைய ஆன்ம ஒளியை
போஸ்கா (FOSCA) என்ற
அந்த பெண்ணின் உயிரில்
ஏற்றி வைத்தார்".

ஜியார்டானோ புருனோ
பேச ஆரம்பித்தார்,
"அற்புதம் என்றால் என்ன
என்பதை நான் உனக்கு
காட்டி விட்டேன் !
அற்புதம் என்றால் என்ன
என்பதை இந்நேரம் நீ
உணர்ந்து கொண்டு இருப்பாய்…?
இனிமேல் அற்புதம்
அற்புதம் என்று
அற்புதத்தை தேடி
அலையாதே" என்று
போஸ்கா (FOSCA) என்ற
அந்த பெண்ணிடம் பேசி
விட்டு ஜியார்டானோ
புருனோ கதவை திறந்து
கொண்டு வெளியே
சென்று விட்டார்.

அற்புதத்தை நேரில் சந்தித்து
அந்த அற்புதமாக
மாறி விட்ட போஸ்கா (FOSCA)
அற்புதம் என்றால் என்ன
என்பதை ஜியார்டானோ
புருனோவின் மூலமாக
முதன் முதலாக
தெரிந்து கொண்டாள்.

"அற்புதத்தை முதன்
முதலாக தரிசிக்கும் போது
போஸ்காவிற்கு (FOSCA)
ஏற்பட்ட அச்சத்தின் பாதிப்பு
அவளை மிரட்சியடைய
வைத்து விட்டதால்
அவளையும் அறியாமல்
அவள் கண்களிலிருந்து
கண்ணீர் அரும்பியது
தன்னை மறந்து அவள்
கதறி அழுதாள் ;
தேம்பி தேம்பி அழுதாள் ;
மனம் விட்டு அழுதாள் ;
அவளுடைய அழுகுரலின்
ஒலி அந்த வீட்டையே
அதிர வைத்தது ;தன்னை
மறந்து அந்த பெண்
சத்தம் போட்டு அழுது
கொண்டு இருந்தாள் ;
அற்புதத்தை உணர்ந்த
நிலையை
போஸ்காவால் (FOSCA)
வார்த்தைகளால் வெளிப்
படுத்த முடியவில்லை !
கண்ணீரால் மட்டுமே
வெளிப்படுத்த முடிந்தது !! " .

---------  இன்னும் வரும்
---------  02-01-2019
///////////////////////////////////////////////////////////



January 01, 2019

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்-01-01-2019


           ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் - 01-01-2019 !!!

அன்பிற்கினியவர்களே !

""தாய்க்குப்
பின் தாரம்"""
              
என்ற பழமொழி
எவ்வளவு உயர்ந்த
அர்த்தங்களை
தன்னுள் கொண்டுள்ளது
என்பது எத்தனை
பேருக்குத் தெரியும்

கடவுளின் குணங்களாக
முக்கியமாக இரண்டைக்
குறிப்பிடலாம்

 ஒன்று  : அன்பு
இரண்டு : கருணை

மாமரத்தில் உள்ள
மாங்காயை மாமரம்
தன்னுடைய காம்பின்
மூலம் கீழே விழாமல்
தாங்கி பிடித்துக்
கொண்டு இருக்கிறது.
இதற்குப் பெயர்
தான் அன்பு ;

மாங்காய்க்கு
தேவையானதை
மாமரம் அந்த
காம்பு வழியாக
அளித்துக் கொண்டு
இருக்கிறது
இதற்குப் பெயர்
தான் கருணை ;

மனிதரில் இந்த
இரண்டு உயர்ந்த
குணங்களும் உலகில்
இரண்டு நபர்களுக்கு
மட்டுமே அதிகமான
அளவில் உள்ளது.

   ஒன்று  : தாய்
  இரண்டு  : தாரம்

ஒரு தாய்
தான் பெற்றெடுத்த
பிள்ளையை
பாதுகாப்பாக வைத்துக்
கொண்டு பராமரித்துக்
கொண்டு வருகிறாள்
இதற்குப் பெயர்
தான் அன்பு ;

அந்த பிள்ளை
தன்னுடைய அன்றாடக்
கடமைகளைத்
தானே செய்யத்
துவங்குவதற்கு முன்பும் ;
தன்னுடைய கடமைகளைத்
தானே செய்யத்
துவங்கிய பின்பும் ;
அந்த பிள்ளைக்கு
உடல் நிலை
சரியில்லாத போது
தன்னுடைய
அத்தியாவசிய
அன்றாடக் கடமைகளைத்
தானே செய்ய
முடியாமல் போகும் போதும் ;
தாயானவள் தன்னுடைய
பிள்ளைக்குத் தேவையான
அத்தனை செயல்களையும்
செய்கிறாள். இதற்குப்
பெயர் தான் கருணை ;

அந்த ஆண் குழந்தை
பெரியவனாக வளர்ந்து
திருமணம் நடந்து
முடிந்து கணவன்,
மனைவி என்ற
உறவிற்குள்
நுழைந்த பிறகு
மனைவியானவள்
கணவனை மிகுந்த
அன்புடன் பார்த்துக்
கொள்கிறாள்
இதற்குப் பெயர்
தான் அன்பு ;

கணவனுக்கு உடம்பு
சரியில்லை என்ற
நிலை வரும்போது ;
தன்னுடைய அன்றாட
அத்தியாவசிய
கடமைகளைத்
தன்னால் செய்ய
முடியாத நிலை
கணவருக்கு வரும்போது ;
மனைவியானவள்
கணவனுக்கு செய்ய
வேண்டிய அன்றாட
அத்தியாவசியமானக்
கடமைகளைச் செய்கிறாள் ;
இதற்குப் பெயர்
தான் கருணை ;

ஒரு ஆண் பிள்ளையாக
இருக்கும் போதும் ;
உடல் நிலை குன்றி
இருக்கும் போதும் ;
தன் அன்றாடக்
கடமைகளை தானே
செய்ய முடியாமல்
இருக்கும் போதும் ;
தாய் எப்படி தன்னுடைய
பிள்ளைக்குச் செய்ய
வேண்டிய அன்றாட
அத்தியாவசியக்
கடமைகளைச் செய்ய
அன்பையும் ;
கருணையையும் ;
வாரி வழங்குகிறாளோ !

அவ்வாறே,
அந்த ஆண் பிள்ளை
திருமணம் முடிந்து
கணவன், மனைவி
என்ற பந்தத்திற்குள்
நுழைந்த பிறகு,
உடல் நிலை
குன்றிய நிலைக்கு
ஆளாகும் போது ;
தன்னுடைய அன்றாட
அத்தியாவசியக்
கடமைகளைத் தானே
செய்ய முடியாமல்
போகும் போது ;
மனைவி தன்னுடைய
கணவனுக்குத் தேவையான
கடமைகளைச் செய்ய
அன்பையும் ;
கருணையையும் ;
வாரி வழங்குகின்றாள்

இத்தகைய
காரணங்களினால்
தான் நாம்
“ தாய்க்கு பின் தாரம் “
என்கிறோம்

இது வரை
நாம் தாயையும்,
தாரத்தையும் மதித்துப்
போற்றவில்லை என்றால்
இந்த ஆங்கிலப்
புத்தாண்டு
01-01-2019 ஆம் ஆண்டில்
இருந்தாவது அவர்களை
மதித்துப் போற்றுவோம்

ஆங்கில புத்தாண்டு
வாழ்த்துக்கள் !!
01-01-2019

-------என்றும் அன்புடன்
-------K.பாலகங்காதரன்
-------01-01-2019
/////////////////////////////////////////////////