April 01, 2019

6-ஜியார்டானோ புருனோ உருவான கதை


          6-ஜியார்டானோ புருனோ உருவான கதை

அன்பிற்கினியவர்களே,

வினை விதைத்தவன்
வினை அறுப்பான்
திணை விதைத்தவன்
திணை அறுப்பான்
அதாவது,
நாம் எந்த செயலைச்
செற்கிறோமோ அந்த
செயலுக்குரிய விளைவு
தான் கிடைக்கும்
புண்ணியம் தரக்கூடிய
செயலைச் செய்தால்
இன்பமும்
பாவத்தை தரக்கூடிய
செயலைச் செய்தால்
துன்பமும் கிடைக்கும்
என்பதே இதற்குப் பொருள்

ஒவ்வொரு செயலுக்கும்
விளைவு உண்டு - ஒரு
செயலைச் செய்து விட்டு
அதன் விளைவிலிருந்து
யாரும் தப்பிக்க முடியாது
நாம் எந்த செயலைச்
செய்கிறோமோ - அந்த
செயலுக்குரிய விளைவை 
நாம் அனுபவித்தே ஆக
வேண்டும்

புண்ணியத்தைத் தரக்கூடிய
செயலைச் செய்தால்
இன்பமும் ;  - பாவத்தைத்
தரக்கூடிய செயலைச் செய்தால்
துன்பமும் ; கிடைக்கும்  
நாம் அனுபவிக்கும்
அனைத்து நல்லவைகளும்
கெட்டவைகளும் - நாம்
செய்த புண்ணியச் செயலையும்,
பாவச் செயலையும்
சார்ந்தே இருக்கும்

எந்தச் செயலாக இருந்தாலும்
சரி ஒரு செயலைச் செய்து
விட்டு அதன் விளைவிலிருந்து
யாரும் தப்பிக்க முடியாது,.
ஆனால் அதிலிருந்து தங்களை
காத்துக் கொள்வதற்காக - மூன்று
விதமான முறைகளை
மக்கள் கையாள்கின்றனர்

ஒன்று  :பிராயச்சித்தம்
இரண்டு :மேல்பதிவு
மூன்று :அடியோடு அழித்தல்

பிராயச்சித்தம்
என்பது செய்த பாவத்தின்
துன்பம் தன்னை பாதிக்காமல்
இருப்பதற்காக பலவிதமான
நல்ல காரியங்கள் செய்வது 
அதாவது அன்னதானம் செய்வது
ஏழைப் பெண்களுக்கு
திருமணம் செய்வது போன்ற
செயல்களைக் குறிக்கும்

இந்த செயல் துன்பதைக்
குறைக்க மட்டுமே செய்யும்
நமக்கு ஏற்படக்கூடிய
துன்பம் முழுவதையும்
நீக்காது

எனவே பிராயச்சித்தத்தை
நாம் துன்பத்தை நீக்குதற்கு
பயன்படுத்த முடியாது
குறைப்பதற்கு மட்டுமே
பயன்படுத்த முடியும்

மேல்பதிவு
என்பது செய்த பாவத்தின்
துன்பம் நம்மை பாதிக்காமல்
இருப்பதற்காக தொடர்ந்து
புண்ணியம் தரும் செயல்களை
மட்டுமே செய்து கொண்டிருப்பது

தொடர்ந்து நாம் புண்ணியத்தை
தரக்கூடிய செயல்களை மட்டுமே
செய்து கொண்டிருந்தால்
பாவத்தின் விளைவால் எழுந்த
துன்பம் மிகப்பெரிய அளவில்
பாதிப்பை ஏற்படுத்தாது

ஆனால் நல்ல செயல்களைத்
தொடர்ந்து நம்மால் செய்து
கொண்டிருக்க முடியாது.
ஆதலால் துன்பத்தை நீக்க
நாம் மேல்பதிவைப்
பயன்படுத்த முடியாது
துன்பத்தை குறைப்பதற்கு
மட்டுமே பயன்படுத்த
முடியும்

அடியோடு அழித்தல்
என்பது துன்பத்திற்கு
காரணமான பாவத்தை
முற்றிலாக அழித்து விடுவது

பாவத்தினால் ஏற்படக்கூடிய
துன்பத்தை எப்படி குறைப்பது
அதன் தாக்கத்திலிருந்து எப்படி
தப்பித்துக் கொள்வது என்று
சிந்திப்பதை விட அந்த
துன்பத்திற்கு காரணமான
பாவத்தை அழித்து
விட்டால் நல்லது என்று
யோசித்து அதை பாவத்தை
அழிப்பதற்காக தவங்கள்
செய்து அந்த பாவத்தை
முற்றிலும் அழித்தனர்

பாவத்தை முற்றிலுமாக
அழிப்பதற்கு அனைவராலும்
முடியவில்லை என்ற
காரணத்தினால் மக்களால்
இதை பயன்படுத்த
முடியவில்லை

அடியோடு அழித்தல் என்பதை
சாதாரண மனிதர்களால்
செய்யமுடியாது -ஆனால்
பிராயச்சித்தம் மேல்பதிவு
ஆகியவற்றை சாதாரண
மனிதர்களால் செய்ய முடியும்

பிராயச்சித்தம் மேல்பதிவு
இரண்டும் பாவத்தால்
எழும் துன்பங்களின்
தாக்கத்தை குறைக்கத்
தான் முடியுமே தவிர
துன்பத்தை முற்றிலுமாக
நீக்க முடியாது

இதிலிருந்து ஒன்றை நாம்
தெரிந்து கொள்ளலாம்
பிராயச்சித்தம் மேல்பதிவு
ஆகியவற்றைப்
பயன்படுத்தினாலும் செய்த
செயலுக்குரிய விளைவிலிருந்து
யாரும் தப்ப முடியாது
என்பதை நாம்
தெரிந்து கொள்ளலாம்

ஜியார்டானோ புருனோவை
சிறையில் சித்திரவதை செய்து
கொண்டிருந்த போது அவர்
சிறு வயதில் கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்ட ஒரு பெண்ணை
துன்பப் படுத்திய நிகழ்வை
நினைத்துக் கொண்டார்,
அவர் செய்த அந்த
பாவத்தின் செயலுக்கு
இப்போது விளைவானது
துன்பமாக வந்திருக்கிறது
அதாவது கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்ட காரணத்திற்காக
தான் தற்போது
துன்பப்படுத்தப் படுவதை
நினைத்துக் கொணடார்

செய்த வினை
செய்தவனை சும்மா விடாது
செய்த பாவத்திலிருந்து
யாரும் தப்ப முடியாது
என்பதையும்
ஊழ்வினை உறுத்து
வந்து ஊட்டும் என்பதையும்
தெரிந்து கொண்டார்

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்
//////////////////////////////////////////

ஜியார்டானோ புருனோ
சிறையில் சித்திரவதை
செய்யப்பட்டுக்
கொண்டிருந்தபோது
தான் சிறிய வயதில்
செய்த பாவத்தின்
விளைவு தற்போது
துன்பமாக வந்து
தன்னை சித்திரவதை
செய்து கொண்டிருக்கிறது
என்பதை உணர்ந்து
கொண்ட காட்சி

/////////////////////////////



March 31, 2019

5-ஜியார்டானோ புருனோ உருவான கதை

            5-ஜியார்டானோ புருனோ உருவான கதை

அன்பிற்கினியவர்களே,

“போராளிகள்
தோற்பதில்லை
போராட்டங்கள் தான்
தோற்று இருக்கின்றன”
என்ற வரலாற்று உண்மை
ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கைக்கு மிகத்
தெளிவாக பொருந்தும்

உலகில் எந்த ஒரு
இடத்திலும்
மக்களுக்கு எதிரான
வன்முறைகள் கட்டவிழ்த்து
விடப்பட்டாலோ
மக்களை இழிவாக
நினைத்து நடைமுறைக்கு
ஒவ்வாத செயல்கள்
அரங்கேற்றப் பட்டாலோ
மக்களை
அடிமைப்படுத்துவதற்குத்
தேவையான சதித்திட்டங்கள்
தீட்டப்பட்டாலோ
அங்கெல்லாம்
அநியாயங்களை தட்டிக்
கேட்பதற்கு உண்மையான
ஒரு போராளி அந்த
இடத்தில் உருவாகுகிறான்

மக்களை அடிமைப்படுத்த
நினைப்பவர்களுக்கு
எதிராக - அந்த போராளி
பல்வேறு விதமான
போராட்டங்களை
முன்னிறுத்தி
நடத்துகிறான் - ஆனால்
பல போராட்ங்கள்
வெற்றி பெறாமல்
தோற்று விடுகின்றன

அந்த போராளி
சொல்லும் கருத்துக்கள்
உண்மையானவைகளைத்
தன்னுள் கொண்டவைகளாக
இருக்கின்றன - என்று
மக்கள் அவர்
பின்னால் அணிவகுத்து
நிற்கின்றனர்
அவரை முழுவதுமாக
நம்பி அவர் பின்னால்
மக்கள் செல்லத்
தயாராகி விட்டனர்

என்பதை உணர்ந்த
மக்களை அடிமைப்படுத்த
நினைக்கும் ஆதிக்க
வர்க்கம்- இந்த போராளி
உயிரோடு இருந்தால்
நமக்கு ஆபத்து என்று
பயந்து பல்வேறு
குற்றச்சாட்டுக்களை
அவர் மேல் சுமத்தி
சிறையில் அடைத்து
சித்திரவதை செய்து
கொன்று விடுகிறது

மக்களுக்காக உண்மையாக
உழைக்கும் போராளிகளை
யாரும் விலை குடுத்து
வாங்க முடியாது
அதனால் அத்தகைய
போராளிகளை
கொன்று விடுகிறார்கள்

அந்தப் போராளியைக்
கொன்றாலும் - அவர்
சொல்லிச் சென்ற
கருத்துக்கள்  - அவர்
விட்டுச் சென்ற
செயல்கள் - அவர்
நடத்திய போராட்டங்கள்
ஆகியவற்றை மக்கள்
கொண்டு செல்வர்
மீண்டும் போராட்டங்களை
நடத்தத் துணிவர்

பல நூற்றாண்டுகள்
கடந்து அவரை நினைத்து
அவருடைய கருத்தைப்
பின்பற்றும் மக்கள்
அவரை நினைத்து
போற்றுவர்
அவர் முன்னெடுத்துச்
சென்ற போராட்டங்களை
நடத்த முற்படுவர்

மக்களை அடிமைப்படுத்த
நினைப்பவர்களை எதிர்த்து
போராட்டம் நடத்திய
போராளியின் போரட்டம்
வெற்றி பெறவில்லை
என்றாலும் அவர்
கொல்லப்பட்ட பிறகும்
மக்கள் அவருடைய
கருத்தை பின்பற்றி
நடந்து அவர் பின்னால்
நடக்கிறார்கள் என்றால்
அந்த போராளி
தோற்காமல்
மக்கள் மனதில்
என்றும் இருந்து
கொண்டு இருக்கிறார்
என்று பொருள்

அதைப் போல் தான்
ஜியார்டானோ புருனோ
என்ற போராளி மக்களை
அடிமைப்படுத்துவதற்கு
தேவையான முயற்சிகளை
செய்து கொண்டிருக்கும்
கிறிஸ்தவ மதம்
தன் முயற்சிகளை
நிறுத்த வேண்டும்

கிறிஸ்தவ மதம்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை
சர்ச்சுகள்
பைபிள்
ஆகியவற்றில் சீர்திருத்தம்
கொண்டு வர வேண்டும
என்று போராடியதால்
கிறிஸ்தவ மதத்தினரால்
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டார்

அவர் நடத்திய
போராட்டங்கள்
தோல்வியுற்றாலும்
அவர் பல நூற்றாண்டுகள்
கடந்தும் இன்னும் மக்கள்
மனதில் இருக்கிறார்

ஆம் ஜியார்டானோ
புருனோ என்ற போராளி
தோற்கவில்லை
அவர் நடத்திய போரட்டம்
மட்டுமே தோற்றது
என்பதை உணரும்போது
ஜியார்டானோ புருனோ
என்ற போராளியின்
போராட்ட வாழ்க்கை
நமக்கு புரிய
ஆரம்பிக்கும்

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்
//////////////////////////////////////////

கிறிஸ்தவ மதத்தில்
சீர்திருத்தம் செய்ய
வேண்டும் என்று
ஜியார்டானோ புருனோ
என்ற போராளி
நடத்திய போராட்டம்
வெற்றி பெறவில்லை
என்றாலும்
ஜியார்டானோ புருனோ
என்ற போராளி
தோற்கவில்லை
என்பதற்கு அவரை
சிறையில் வைத்து
சித்திரவதை செய்து
மன்னிப்பு கேட்கச்
சொல்லியும் அவர்
மன்னிப்பு கேட்காமல்
இருந்ததே சாட்சி
என்பதை இந்த
வீடியோவின் மூலம்
தெரிந்து கொள்ளலாம்
/////////////////////////////////



March 29, 2019

4-ஜியார்டானோ புருனோ உருவான கதை

              4-ஜியார்டானோ புருனோ உருவான கதை

அன்பிற்கினியவர்களே,

இந்து மதத்தில் சாதி
என்ற ஒன்றை
பயன்படுத்தி
மனிதர்களுக்குள் ஏற்றத்
தாழ்வுகளை உருவாக்கி
மனிதனை மனிதன்
அடிமைப்படுத்தும் மிகவும்
இழிவான செயல் நடை
பெற்றுக் கொண்டிருந்ததை
கடுமையாக எதிர்த்தார்
(1879-1973) இடைப்பட்ட
காலத்தில் வாழ்ந்த
தந்தை பெரியார்

இந்த மதத்தில் நடை
பெற்று வரும் இத்தகைய
செயல்கள் திருத்தப்பட்டு
இந்து மதம் சீர்திருத்தப்பட
வேண்டும் என்றார்

“இந்து மதக் கோயில்களில்
காலம் காலமாக கடை
பிடிக்கப்பட்டு வரும்
மத பழக்க வழக்கங்களில்
உள்ள மூட நம்பிக்கைகள்
தகர்த்தெறியப்பட வேண்டும்
என்றார் ;”

“ இந்துக்களின் புனித
நூல்களில் உள்ள தவறுகள்
களைந்தெறியப்பட
வேண்டும் என்றார் ;”

“இந்துக்கள் கடை பிடித்து
வரும் வழிபாட்டு
முறைகளில் மாற்றங்கள்
கொண்டு வரப்பட
வேண்டும் என்றார்”

“இந்துக்களில் இந்து
மதத்தன்மை
கொண்டவர்கள்
தவிர்த்து - இந்து
மதப்பற்று
கொண்டவர்கள் அனைவரும்
தந்தை பெரியாரை
எதிர்த்தனர்;’

இந்து மதத்தை
எதிர்த்த காரணத்திற்காக
(1879-1973) இடைப்பட்ட
காலத்தில் வாழ்ந்த
தந்தை பெரியாரையே
இந்து மதப்பற்று
கொண்டவர்கள்
அவரை எதிர்த்து அவரை
இழிவு படுத்தினார்கள்
என்றால் (1548-1600)-ல்
உலகையே தன்
ஆளுகையின் கீழ்
வைத்திருந்த கிறிஸ்தவ
மதத்தை எதிர்த்த
ஜியார்டானோ
புருனோவை
எவ்வளவு எதிர்த்து
இருப்பார்கள் - இழிவு
படுத்தி இருப்பார்கள்

அதுவும் கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்படுகிறவர்களை
சிறையில் அடைத்து
சித்திரவதை செய்வதும் ;
உயிரோடு எரித்துக்
கொல்லப்படுவதும் ;
போன்ற தண்டனைகள்
நிறைவேற்றப்பட்டுக்
கெண்டிருந்த காலத்திலேயே
ஜியார்டானோ புருனோ

“கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை நடைமுறைப்
படுத்தி வைத்திருக்கும்
பழக்க வழக்கங்களில்
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்று
சொன்னார் என்றால் ; ‘

“ சர்ச்சுகளில் கடை
பிடிக்கப்பட்டு
வரும் மத பழக்க
வழக்கங்களில்
மாற்றம் கொண்டு வர
வேண்டும் என்று
சொன்னார் என்றால் ;”

“பைபிளில் உள்ள
கருத்துக்கள் தவறாக
உள்ள காரணத்தினால்
அவைகள் திருத்தப்பட
வேண்டும் என்று
சொன்னார் என்றால் ;’

“ கிறிஸ்தவர்கள் பின்பற்றி
வரும் இறை வழிபாட்டில்
உ.ள்ள குறைகள்
நிவர்த்தி செய்யப்பட
வேண்டும் என்று
சொன்னார் என்றால் ;”

“ ஜியார்டானோ புருனோ
எத்தகைய நெஞ்சுரம்
படைத்தவராக இருந்திருக்க
வேண்டும் ;

மரணத்தைக் கண்டு
பயப்படாத மாமனிதராக
இருந்திருக்க வேண்டும் ;

தன்னுடைய கொள்கைக்காக
எல்லாவற்றையும்
இழக்கத் துணிந்த
பேராற்றல் படைத்தவராக
இருந்திருக்க வேண்டும் ;

கிறிஸ்தவ மதத்தால்
மக்களை
அடிமைப்படுத்துவதற்காக
செய்யப்படும் செயல்கள்
அனைத்தும் தடுக்கப்பட
வேண்டும் என்ற
காரணத்திற்காக - கிறிஸ்தவ
மதத்தையே எதிர்க்கத்
துணிந்த மனதைரியம்
படைத்த ஒருவராக
இருந்திருக்க வேண்டும் ;

பிற உயிர்கள் வாழ்வதற்காக
தன்னுடைய உயிரை
தரத் தயாராக இருந்த
கருணை உள்ளம்
கொண்டவராக
இருந்திருக்க வேண்டும் ;

என்பதை நாம் சற்று
சிந்தித்துப் பார்த்தோமேயானால்
ஜியார்டானோ புருனோவைப்
பற்றி நாம் தெள்ளத்
தெளிவாக புரிந்து
கொள்ள முடியும் !

ஜியார்டானோ புருனோவின்
புரட்சிகரமான வாழ்க்கை
வரலாறு நிறைவு
பெற்றாலும்-அவர்
விட்டுச் சென்ற நினைவுகள்
நம் மனதை விட்டு
என்றும் அகலாது

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்