June 22, 2019

பரம்பொருள்-பதிவு-29


                      பரம்பொருள்-பதிவு-29

" இந்த உலகத்தில் உள்ள
அனைத்து இந்துமதக்
கோயில்களையும்
எடுத்துக் கொண்டால்
சிவலிங்கம் தவிர அனைத்து
கடவுள் சிலைகளும்
அருஉருவ நிலையை
வெளிப்படுத்தும் வகையில்
அமைந்திருக்கிறது ;
சிவலிங்கம் மட்டுமே
அருவ நிலையை
வெளிப்படுத்தும் வகையில்
அமைந்திருக்கிறது. ; "

" இந்த உலகம் முழுவதும்
அருவ நிலையில் நிறைந்து
இருக்கக்கூடிய இறைவனுடன்
தொடர்பு கொண்டு ;
தங்களுக்கு தேவையானதை
பெற்றுக் கொண்டு  
தங்களுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்ள
முடியாதவர்களும்
இறைவனுடன் தொடர்பு
கொண்டு ; - தங்களுக்கு
தேவையானதை
பெற்றுக் கொண்டு
தங்களுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்ள
வேண்டும் என்ற உயர்ந்த
நோக்கத்துடன் ;
உருவாக்கப்பட்டவைகள் தான்
இந்துமதக் கோயில்கள், " 

" இத்தகைய சிறப்புமிக்க
இந்துமதக் கோயில்களில்
செதுக்கி வைக்கப்பட்ட
கடவுள் சிலைகள் அருஉருவ
நிலையில் இருக்கின்றன ;
அதாவது அருவ நிலையையும் ,
உருவ நிலையையும் கொண்டு
பக்தர்களுக்கு அருள்
வழங்கிக் கொண்டிருக்கும்
செயலை இறைவன்
செய்து கொண்டிருக்கிறான் "

" உயிருள்ள கல்லைத்
தேர்ந்தெடுத்து - ஆகம
சாஸ்திர முறைப்படி  
கடவுள் சிலையாக
செதுக்குகிறார்கள்  
செதுக்கப்பட்ட
கடவுள் சிலையானது
உருவ நிலையை அடைகிறது ;
உருவ நிலையை அடைந்த
கடவுள் சிலைக்கு
பிராண பிரதிஷ்டையின்
மூலம் உயிரூட்டப்படுகிறது ;'"

" இந்த பிரபஞ்சம் முழுவதும்
அருவ நிலையில் நிறைந்து
இருக்கக்கூடிய இறைவனை ;
மனம், வாக்கு ஆகியவற்றிற்கு
எட்டாத இறைவனை ;
எல்லை என்ற ஒன்று
இல்லாத இறைவனை ;
பிறப்பு , இறப்பு அற்றவனை ;
ஆதி , அந்தம் இல்லாத
அருட்பெருஞ்ஜோதியை ;
கும்பாபிஷேகத்தின் மூலம்
உருவமுள்ள சிலைக்குள்
இறக்கி கடவுள் சக்தியை
இயங்க வைப்பதற்கான
செயல் செய்யப்படுகிறது "

" இத்தகைய செயல்களால்
உருவமுள்ள கடவுள் சிலைக்குள்
உருவமற்ற இறைவன் வாசம்
செய்கிறான் - இதனால்
கடவுள் சிலையானது
உருவமும் அருவமும்
நிறைந்து முழுமையடைந்த
கடவுள் சிலையாகிறது
அதாவது
கடவுள் சிலையானது
உருவ நிலையையும்
அருவ நிலையையும் கொண்டு
பக்தர்களுக்கு அருள் வழங்கும்
மிகப்பெரிய செயலைச்
செய்து கொண்டிருக்கிறது "

" இறைவன் இந்த உலகத்தில்
உள்ள ஒவ்வொரு அணுவிலும்
நீக்கமற நிறைந்திருந்து ;
அருவ நிலையில் இந்த
உலகத்தை தன்னுடைய
ஆளுகையின்கீழ் வைத்துக்
கொண்டு எப்படி வழிநடத்திக்
கொண்டு இருக்கிறானோ ?
அந்த நிலையிலேயே
உருவமுள்ள
கடவுள் சிலைக்குள்
உருவமற்ற நிலையில்
இருந்து கொண்டு ;
அருஉருவ நிலையில்
இறைவன் வெளிப்பட்டு
பக்தர்களுக்கு அருள்
வழங்கிக் கொண்டிருக்கிறான்"

"மனித இனம் நாகரிகத்தில்
வளர்ச்சி அடைந்ததற்கு
முக்கியக் காரணம்
அறிவியல் தான் ;
அறிவியல் இன்றி இந்த
உலகத்தில் உள்ள எந்த
ஒரு விஷயமும் நடைபெறாது ;
இன்று உலகம் இயங்கிக்
கொண்டிருப்பதே அறிவியலை
மையமாக வைத்துத்தான் ;
அறிவியல் தான் சிறந்தது ;
அறிவியல் தான் உயர்ந்தது ;
என்று அறிவியலை போற்றிப்
புகழ்பவர்கள் - அனைவரையும்
அழைத்துக் கொள்ளுங்கள் "

" உலகத்தில் உள்ள தலை
சிறந்த அறிவியலறிஞர்கள்
மற்றும் அறிவியலறிஞர்கள்
அனைவரையும்
அழைத்துக் கொள்ளுங்கள் "

பசிபிக் பெருங்கடலை ஒரு
குடுவைக்குள் அடைக்கச்
சொல்லுங்கள் அவர்களால்
அடைக்க முடியாது
ஒரு சாதாரண கடலையே
அறிவியலால் அடைக்க
முடியவில்லை என்றால்
அருவமற்ற இறைவனை  ஒரு
உருவத்திற்குள் அறிவியலால்
எப்படி அடைக்க முடியும்,

" இந்த உலகம் முழுவதும்
நிறைந்து இருக்கக் கூடிய
இறைவனை ;
எல்லையில்லாதவனை ;
உருவமற்றவனை ;
வாக்கு மனத்திற்கு
எட்டாதவனை ;
ஒரு உருவம் உள்ள
கடவுள் சிலைக்குள்
வாசம் செய்யும்படியான
செயல்களைச் செய்து வைத்து ;
அருஉருவ வடிவில் இறைவனை
கடவுள் சிலையில் திகழும்படி
செயல்களைச் செய்து வைத்து ;
தன்னை நம்பிய பக்தர்களுக்கு
அருள் வழங்கும்படியான
செயல்களைச் செய்து வைத்து ;
அதுவும் பல்லாயிரக் கணக்கான
ஆண்டுகளுக்கு முன்பாகவே
மெய்ஞ்ஞானத்தின் மூலம்
உண்மையினை உணர்ந்து
இத்தகைய உயர்ந்த செயலைச்
செய்து வைத்திருக்கும் - நம்
முன்னோர்களின் அறிவுத்
திறனை அறிவியலோடு
ஒப்பிடும்போது - அறிவியல்
நம் முன்னோர்களின்
கால் தூசுக்கு சமமாக
இருந்தது விளங்கும்

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 22-06-2019
//////////////////////////////////////////////////////////

June 20, 2019

பரம்பொருள்-பதிவு-28


                     பரம்பொருள்-பதிவு-28

“இறைவன் இந்த
பிரபஞ்சம் முழுவதும்
நீக்கமற நிறைந்திருந்து
மூன்று நிலைகளில்
எழுந்தருளி
அருள் பாலித்துக்
கொண்டிருக்கிறான் “

ஒன்று:  அருவ நிலை
இரண்டு: உருவ நிலை
மூன்று: அருஉருவ நிலை

பனிக்கட்டி--->உருவநிலை

“தண்ணீரை எடுத்துக்
கொள்வோம்,.
தண்ணீரை ஜீரோ (ZERO)
டிகிரி செல்சியஸ்
அளவிற்கு குளிர்படுத்தும்
போது தண்ணீரானது
பனிக்கட்டியாக
மாற்றம் அடைகிறது,
பனிக்கட்டியின்
இந்த நிலையைத் தான்
நாம் உருவநிலை
என்கிறோம்
அதாவது பனிக்கட்டியின்
நிலை என்பது
தண்ணீரின் உருவ
நிலையைக் குறிக்கும் “

ஆவியாதல்--->அருவநிலை

“ தண்ணீரை 100 டிகிரி
செல்சியஸ் அளவிற்கு
சூடேற்றி கொதிக்க
வைக்கும் போது
தண்ணீரானது ஆவியாகிறது
தண்ணீரின் ஆவியாகும்
இந்த நிலையைத் தான்
நாம் அருவ நிலை
என்கிறோம்,.
அதாவது ஆவியாகும்
நிலை என்பது தண்ணீரின்
அருவநிலையை அதாவது
தண்ணீரின் உருவமற்ற
நிலையைக் குறிக்கும் “

தண்ணீர்-->அருஉருவநிலை

“ தண்ணீரானது தன்னுடைய
இயல்பான நிலையில்
இருக்கும் போது
அருஉருவ நிலையில்
இருக்கிறது - அதாவது
தண்ணீர் என்பது
அருஉருவ நிலையில்
இருப்பதைக் குறிக்கும்
அதாவது தண்ணீர்
தன்னுடைய இயல்பான
நிலையில்
உருவமற்ற நிலையையும் ;
உருவமுள்ள நிலையையும் ;
கொண்டுள்ளது
என்பதைக் குறிக்கும் “

பனிக்கட்டி :
உருவ நிலையைக்
குறிக்கும்

தண்ணீர் :
உருவ நிலையையும்,
அருவ நிலையையும்
குறிக்கும்,

ஆவியாதல் :
உருவமற்ற நிலையைக்
குறிக்கும்,

“ இந்த பிரபஞ்சத்தில்
உள்ள எந்த ஒரு
பொருளை எடுத்துக்
கொண்டாலும்
அந்தப் பொருளினுடைய
இந்த மூன்று
நிலைகளையும்
தெரிந்து கொண்டாலன்றி
நம்மால் அந்த
பொருளைப் பற்றி
முழுமையாக தெரிந்து
கொள்ள முடியாது “

“ ஒரு பொருளைப் பற்றி
ஒருவன் முழுமையாக
தெரிந்து கொண்டவனாக
இருப்பானேயாகில்
அவன் அந்தப் பொருளின்
இந்த மூன்று
நிலைகளையும் தெரிந்து
கொண்டவனாய் தான்
இருப்பாய் “

“ உலகில் உள்ள எந்த
ஒரு பொருளின்
தன்மையைப் பற்றி
முழுமையாக அறிந்து
கொள்ள வேண்டும்
என்றால் - அந்தப்
பொருளினுடைய
அருஉருவ நிலையை
முதலில் அறிந்து
கொள்ள வேண்டும்
ஒரு பொருளின்
அருஉருவ நிலையை
அறிந்து கொண்டால்
மட்டுமே - அந்த
பொருளினுடைய
உருவ நிலையையும்
அருவ நிலையையும்
நம்மால் அறிந்து
கொள்ள முடியும் “

“ தண்ணீரின் இயல்பான
நிலை என்பது
அருஉருவ நிலை
என்பதை - நாம்
உணர்ந்து கொண்டால்
பனிக்கட்டி என்பது
தண்ணீரின் உருவநிலை
என்பதையும்
ஆவியாதல் என்பது
தண்ணீரின்
உருவமற்ற நிலை
என்பதையும்
நம்மால் உணர்ந்து
கொள்ள முடியும் ‘

“ தண்ணீரின்
அருஉருவ நிலையை
நாம் உணர்ந்து
கொள்ளும் போது
தண்ணீரின் உருவநிலை
மற்றும் தண்ணீரின்
அருவ நிலை
ஆகியவற்றை  எப்படி
உணர்ந்து கொள்ள
முடியுமோ
அப்படியே கடவுளை
உணர்ந்து கொள்ள
வேண்டும் என்றால்
கடவுளுடைய
அருஉருவ நிலை எது
என்பதை நாம் முதலில்
அறிய வேண்டியது
அவசியமாகும்

இறைவனின் அருஉருவ
நிலையை கண்டறிவது
எப்படி………………………………………..?

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 20-06-2019
//////////////////////////////////////////////////////////////


June 19, 2019

பரம்பொருள்-பதிவு-27


                       பரம்பொருள்-பதிவு-27

இரண்டு ;
 "ஆத்திகவாதிகள் என்றால்
கடவுளை உணர்ந்தவர்கள்
என்று பொருள் ; "

" நாத்திகவாதிகள் என்றால்
கடவுளை உணராதவர்கள்
என்று பொருள் ; "

" ஆனால் தற்போது
ஆத்திகவாதிகள் என்றால்
கடவுள் உண்டு என்று
சொல்பவர்கள் என்றும் ;
நாத்திகவாதிகள் என்றால்
கடவுள் இல்லை என்று
சொல்பவர்கள் என்றும் ;
தவறான பொருள்
கொள்ளப்பட்டு
இச்சமுதாயத்தில்
நடைமுறை வழக்கத்தில்
இருந்து வருகிறது "

" அதைப்போலத்தான்
பகுத்தறிவாதி என்ற
சொல்லும் தவறாக
பொருள் கொள்ளப்பட்டு
இச்சமுதாயத்தில்
தவறான வகையில்
நடைமுறை வழக்கத்தில்
இருந்து வருகிறது '

" இந்த பிரபஞ்சத்தில்
எந்த ஒரு நிகழ்வு
நடந்தாலும் - அந்த நிகழ்வில்
நல்லது எது ?
கெட்டது எது ? என்று
பேதம் பிரித்துப் பார்த்து
ஆராய்ந்து , அறிந்து
உணர்ந்து கொள்பவர்கள்
பகுத்தறிவாதிகள் எனப்படுவர் "

" ஆனால் தற்போது
பகுத்தறிவாதிகள் என்றால்
கடவுள் இல்லை என்று
சொல்பவர்கள் என்று
தவறாக பொருள்
கொள்ளப்பட்டு
இச்சமுதாயத்தில்
தவறான வகையில்
நடைமுறை வழக்கத்தில்
இருந்து வருகிறது "

"ஆகமொத்தம் கடவுள்
இல்லை என்று சொல்பவர்கள்
நாத்திகர்கள் என்றும் ;
பகுத்தறிவாதிகள் என்றும் ;
இச்சமுதாயத்தால் தவறாக
பொருள் கொள்ளப்பட்டு
வருகிறது "

" பகுத்தறிவு என்ற வார்த்தை
கடவுள் இல்லை என்பதற்கு
பயன்படுத்தும் ஒரு
வார்த்தை ஆகி விட்டது ;
அதைப்போல ,
பகுத்தறிவாதி என்ற
வார்த்தையும் கடவுள் இல்லை
என்று சொல்பவர்கள் மட்டுமே
பயன்படுத்தக் கூடிய ஒரு
வார்த்தையாகவும் மாறி விட்டது ;
இதனால் பகுத்தறிவாதி என்ற
வார்த்தையின் உண்மையான
அர்த்தம் சிதைந்து விட்டது ;"

" அரசியலை வைத்து
பிழைக்க முடியாதவர்கள் ;
திரையுலகில் இருந்து
ஓரம் கட்டப்பட்டவர்கள் ;
வேலை இல்லாமல் வெட்டியாக
ஊரைச் சுற்றிக் கொண்டு
ஒன்றுக்கும் உதவாத கதைகளை
பேசிக் கொண்டு திரிபவர்கள் ;
இவர்கள் தாங்கள்
வாழ வேண்டும்
என்பதற்காகவும் ;
தங்கள் பிழைப்பை ஓட்ட
வேண்டும் என்பதற்காகவும் ;
ஆளுமை என்ற ஒன்று
துளி கூட இல்லாமல்
அதிகாரத்தைக் கைப்பற்ற
வேண்டும் என்பதற்காகவும் ;
மக்கள் செல்வாக்கு இல்லாமல்
பதவி சுகம் அனுபவிக்க
வேண்டும் என்பதற்காகவும் ;
தகுதியில் ஒன்றைக் கூட
வளர்த்துக் கொள்ளாமல்
முயற்சியின் வித்தைக் கூட
விதைக்காமல் புகழ் தன்னை
அரவணைக்க வேண்டும்
என்பதற்காகவும் ;
நல்லவன் போல் தன்னை
வெளியில் காட்டிக் கொண்டு
பணத்தைச் சம்பாதிக்க
வேண்டும் என்பதற்காகவும் ;
மக்கள் மத்தியில் போலியாக
நடித்துக் கொண்டிருக்கும்
போலியான பகுத்தறிவாதிகள் ;
தவறான பகுத்தறிவாதிகள் ; "

"இந்தத் தவறான
பகுத்தறிவாதிகள்
அதிகாரம் ; பதவி ;
புகழ் ; பணம் ;
ஆகியவற்றிற்காக மானத்தைப்
பற்றிக்கூட கவலைப்படாமல்
பணக்காரர்களின்
அடிவருடிகளாக இருந்து
கொண்டு எதையும்
செய்யக்கூடியவர்கள் "

" பகுத்தறிவாதி  என்ற சொல்
எப்படி தவறான பொருள்
கொள்ளப்பட்டு
இச்சமுதாயத்தில் எப்படி
தவறாக நிலவி
வருகிறதோ அவ்வாறே
தங்களை பகுத்தறிவாதிகள்
என்று சொல்லிக் கொள்ளும்
தவாறான பகுத்தறிவாதிகள்
பின்னால் மக்கள் தவறாக
சென்று தவறு இழைத்ததின்
மூலம் மக்களும்
தவறானவைகளையே
செய்து வருகின்றனர் "

" உண்மையாகவே
பகுத்தறிவாதிகளாக
இருப்பவர்கள் உண்மையை
உணர்ந்து இச்சமுதாயத்திற்கு
எந்த எந்த செயல்களைச்
செய்ய வேண்டுமோ ?
அந்த அந்த செயல்களை
தேவைப்படும் காலங்களில்
தொடர்ந்து இச்சமுதாயத்திற்கு
செய்து கொண்டு
தான் வருகின்றனர் "

"உயிருள்ள கல்லானது
தேர்ந்தெடுக்கப்பட்டு ;
ஆகம சாஸ்திர முறைகளின்படி
கடவுள் சிலையாக
செதுக்கப்பட்டு ;
பிராண பிரதிஷ்டையின்
மூலம் உயிரூட்டப்பட்டு ;
கும்பாபிஷேகத்தின்
மூலம் இயங்கும்
சக்தியைப் பெற்று ;
தொடர்ந்து செய்யப்படும்
பூஜைகள் , அபிஷேகங்கள் ,
ஆகியவற்றின் மூலம்
கடவுள் சிலையானது
பக்தர்களுக்கு அருள்
வழங்கும் சக்தியைப் பெறும் ;
நிலையை அடைகிறது
என்பதை உணராத
கடவுளை வணங்குபவர்களில்
ஒரு சிலர் ;
கடவுளை வணங்காதவர்களில்
ஒரு சிலர் ;
ஆகியோர் தான் கல்லில்
கடவுள் இல்லை என்று
மூளையில்லாமல் உளறும்
சித்தபிரமை பிடித்து
அலைபவர்கள்
என்பதை நாம் நினைவில்
கொள்ள வேண்டும் "

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 19-06-2019
//////////////////////////////////////////////////////////////