February 13, 2020

பரம்பொருள்-பதிவு-130


            பரம்பொருள்-பதிவு-130

(கிருஷ்ணன்
பாண்டவர்களை
சந்திக்க செல்கிறார்
பாண்டவர்கள்
கிருஷ்ணனை
வரவேற்று உபசரித்து
அவரிடம் பேசத்
தொடங்குகின்றனர்)

பீமன் :
“எல்லாம்
நல்லபடியாக
முடிந்ததா பரந்தாமா ?”

கிருஷ்ணன் :
“நல்லது எது
என்பதை புரிந்து
கொள்ள முயற்சி
செய்யாதவர்கள்
இருக்கும் போது
எப்படி அனைத்தும்
நல்லபடியாக முடியும் ?”

பீமன் :
“நல்லதை
சொல்வதற்கு நீங்கள்
இருந்துமா
இப்படி நடக்கிறது “

கிருஷ்ணன் :
“நல்லது சொல்வதற்கு
நான் எப்போதும்
தயாராகத் தான்
இருக்கிறேன்
ஆனால் - அதைக்
கேட்டு நடப்பதற்கத்
தான் யாரும்
தயாராக இல்லை.”

பீமன் :
“அரவானை
சந்தித்தீர்களா  ?”

கிருஷ்ணன் :
“சந்தித்தேன்”

பீமன்:
“துரியோதனனுக்காக
களப்பலி ஆக
வேண்டாம் என்று
சொன்னீர்களா  ? “

கிருஷ்ணன் :  
“துரியோதனனுக்காக
களப்பலி ஆகாதே
என்று நான் எப்படி
சொல்ல முடியும்  ?  “

“அரவான்
துரியோதனனுக்காக
களப்பலியாவதாக வாக்கு
கொடுத்திருக்கிறான்
அரவானால்
கொடுத்த வாக்கை
மீற முடியாது  ;
நானும் கொடுத்த
வாக்கை மீறச்
சொல்ல முடியாது ;”

“அதனால் அரவான்
துரியோதனனுக்காக
களப்பலியானான்
என்றால் எத்தகைய
விளைவுகள் ஏற்படும்
என்பதையும்  ;
பாண்டவர்களுக்காக
களப்பலியானான்
என்றால் எத்தகைய
விளைவுகள் ஏற்படும்
என்பதையும் ;
எடுத்துச் சொன்னேன் “

“நான் சொன்னதில்
உள்ள நியாய
தர்மங்களைப்
புரிந்து கொண்ட
அரவான்
வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன்
அரவானைக்
களப்பலியாக கேட்டு
வரவில்லையென்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறேன்
என்று எனக்கு வாக்கு
கொடுத்திருக்கிறான் “

தர்மர் :
“ஏதேனும் ஒரு
செயலைச் செய்து
பச்சிளம் பாலகனான
அரவானை
களப்பலியாகக்
கொடுக்காமல்
இருப்பதற்குரிய
செயலைச் செய்ய
முடியாதா பரந்தாமா ? “

“போரில் வெற்றி
பெறுவதற்காகத்
தானே களப்பலி
கொடுக்கிறோம்
அதற்கு காட்டெருமை
யானை பன்றி
குதிரை ஆடு
கோழி மான்
போன்றவைகளை
பலி கொடுக்கலாமே ?”

“எதற்காக அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்க வேண்டும் ? “

கிருஷ்ணன் :
“ஆடு மாடுகளை
பலியாகக்
கொடுப்பதற்கு
இந்த போரை என்ன
சாதாரணமான போர்
என்று நினைத்து
விட்டாயா ? - தர்மா
நடைபெறப்போவது
குருஷேத்திரப் போர் “

“போரின் முடிவு
எப்படி இருக்கும்
என்பதை யாராலும்
கற்பனை செய்து கூட
பார்க்க முடியாத
குருஷேத்திரப் போர் “

“இந்த உலகம்
இதுவரை கண்டிராத
இனியும் காண
முடியாத
மிகப்பெரிய
குருஷேத்திரப் போர் “

“உலகமே
இரண்டாகப் பிரிந்து
கெளரவர்கள் அணி
ஒரு புறமாகவும் ;
பாண்டவர்கள் அணி
ஒரு புறமாகவும்
நின்று போர்
செய்யப் போகும்
மிக உக்கிரமான
குருஷேத்திரப் போர் “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------13-02-2020
//////////////////////////////////////////

February 12, 2020

பரம்பொருள்-பதிவு-129


            பரம்பொருள்-பதிவு-129

கிருஷ்ணன்  :
"தான் பெற்றெடுத்த
மகனை
களப்பலியாகக்
கொடுப்பதற்குரிய
தைரியமும்  ;
மனபக்குவமும் ;
உன்னிடம்
மட்டுமே இருக்கிறது "

"உன்னால் மட்டுமே
பெற்ற மகனை
களப்பலியாகக்
கொடுக்க முடியும் "

"உன்னைத் தவிர
பெற்ற மகனை
களப்பலியாகக்
கொடுப்பதற்குத்
தகுதி படைத்தவர்கள்
இந்த உலகத்தில்
யாருமே கிடையாது "

"அதனால் தான்
காலம் உன்னை
அரவானுக்கு தாயாக
தேர்ந்தெடுத்திருக்கிறது "

"அதனால் தான்
அரவான் உனக்கு
மகனாகப்
பிறந்திருக்கிறான் "

"அரவான்
களப்பலியாவதற்கென்று
பிறந்திருக்கிறான் "

"களப்பலி
கொடுப்பதற்கென்றே
வளர்ந்திருக்கிறான் "

"நாளைய உலகம்
எப்படி இருக்க
வேண்டும் என்பதை
தீர்மானிக்கும்
மிகப்பெரிய
சக்தியாக
அரவான் வாழ்ந்து
கொண்டிருக்கிறான். "

"உலூபி !  நீ
அனைத்தும்
அறிந்தவள் "

"நான் சொல்லி
நீ தெரிந்து
கொள்ள வேண்டிய
அவசியம்
இல்லை "

"அதனால் தான்
கேட்கிறேன் "

"என்ன முடிவு
எடுத்திருக்கிறாய்  ?"

"ஒப்புக் கொள்கிறாயா "

"நான் கேட்டதற்கு
ஒப்புதல் அளிக்க
உனக்கு சம்மதமா "

உலூபி  :
"என்னுடைய
முடிவு மட்டும்
இருந்தால் போதுமா ?
அரவானின்
தந்தையின்
முடிவு வேண்டாமா ?"

"அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
அரவானின்
தந்தை ஒப்புதல்
அளிக்கிறாரா ?
இல்லையா ?
என்பதைத்
தெரிந்து கொள்ள
வேண்டாமா ?"

கிருஷ்ணன் :
"தந்தையை விட
பெற்றெடுத்த
தாய்க்குத் தான்
பிள்ளையின் மேல்
முழு அதிகாரம்
உண்டு - அதனால்
தான் ஒப்புதல்
பெறுவதற்காக
நான் உன்னைத்
தேடி வந்தேன் "

"உன்னிடம்
ஒப்படைக்கப்பட்ட
பொறுப்புக்கு - நீ
எந்தவிதமான
முடிவையும்
எடுக்காமல்
பொறுப்பிலிருந்து
நழுவுவதற்காக
அரவானின்
தந்தையின் மேல்
அந்த பொறுப்பை
சுமத்தி - நீ
பொறுப்பிலிருந்து
தப்பிக்கப் பார்க்கிறாய் ? "

"இருந்தாலும் நீ
விருப்பப் பட்டு
விட்டாய் - உன்
விருப்பத்தை
நிறைவேற்ற நான்
முடிவு செய்து விட்டேன் "

"அரவானின்
தந்தையிடம் மட்டுமல்ல
அரவானின் இரத்த
சம்பந்தம் கொண்ட
உறவுகளிடம் கூட
ஒப்புதல் பெற்று
விட்டு வந்து
உன்னை சந்திக்கிறேன் "

"தற்போது  
உன்னிடமிருந்து
விடை பெறுகிறேன் "

"மீண்டும் வந்து
உன்னை
சந்திப்பேன்
அப்படி
சந்திக்கும்போது
நீ ஒப்புதல்
அளிப்பாய் என்று
நம்புகிறேன் "

"சென்று வருகிறேன்
உலூபி "

(கிருஷ்ணன்
சென்று
கொண்டிருக்கும்
திசையையே
பார்த்துக்
கொண்டிருந்தாள்
உலூபி)

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------12-02-2020
//////////////////////////////////////////

February 11, 2020

பரம்பொருள்-பதிவு-128


             பரம்பொருள்-பதிவு-128

கிருஷ்ணன் :
“வாழ்வு அல்லது
சாவு இரண்டில்
எது கிடைக்கும்
என்று தெரியாமல்
போர்க்களத்திற்கு
சென்று
போரிடுவதற்கு வீரம்
தேவையில்லை ;
ஆனால்
களப்பலியாகப்
போகிறோம் என்று
தெரிந்தும்
களப்பலியாக
செல்வதற்கு வீரம்
கண்டிப்பாகத் தேவை ; “

“போர்க்களத்திற்கு
சென்று போரிட்டால்
எப்போது ?
எந்த நேரத்தில் ?
எந்த ஆயுதத்தால் ?
எப்படி ?
யாரால் ?
மரணம் ஏற்படும்
என்று தெரியாமல்
போரிடுவதற்கு வீரம்
தேவையில்லை ;
ஆனால்
களப்பலியாகப்
போகிறவருடைய
தலையை
தாய் தந்தை
அல்லது
இரத்த சம்பந்தம்
கொண்டவர்கள்
வெட்ட வேண்டும் ;
அவர்களில் யாரும்
களப்பலியாகப்
போகிறவரின்
தலையை
வெட்டவில்லை
என்றால்
களப்பலியாகப்
போகிறவர்
தன்னுடைய
தலையை
தானே வெட்டி
காளி தேவிக்கு
படைக்க வேண்டும்
என்ற விவரம்
தெரிந்தும்
களப்பலியாகச்
செல்வதற்கு வீரம்
கண்டிப்பாகத் தேவை ; “

“என்ன நடக்கும்
என்று விடை
தெரிந்து கொள்ள
முடியாமல்
நடைபெறக்கூடிய
செயலில் ஒருவர்
ஈடுபடுவதற்கு-வீரம்
தேவையில்லை ;
ஆனால்
இது தான் நடக்கும்
என்று விடை தெரிந்து
கொள்ளக் கூடிய
வகையில்
நடைபெறக்கூடிய
செயலில் ஒருவர்
ஈடுபடுவதற்கு வீரம்
கண்டிப்பாகத் தேவை ;”

“அதனால் தான்
சொல்கிறேன் உலூபி
களப்பலியாகப்
போகிறோம் என்று
தெரிந்தும்
களப்பலிக்கு
செல்வதற்கு வீரம்
தேவை என்பதை
உணர்ந்து கொள் ”

“களப்பலியாவதற்கு
வீரம் மட்டும்
இருந்தால் போதாது  ;
அதிக அளவு
தைரியம் ;
அதிக அளவு
நெஞ்சுரம் ;
ஆகியற்றையும்
கொண்டவராக
இருக்க வேண்டும் ;’

“வீரம், தைரியம்,
நெஞ்சுரம் ஆகிய
அனைத்து
தன்மைகளையும்
கொணடவன் தான்
அரவான் “

“போர்க்களத்திற்கு
சென்று  வீரத்துடன்
போரிட்டு மடிவதற்கு
இந்த உலகத்தில்
லட்சக் கணக்கில்
மக்கள்
இருக்கின்றனர் ;
ஆனால்
களப்பலியாக
கொடுப்பதற்கு
அனைத்து
தகுதிகளையும் பெற்று
களப்பலியாவதற்கு
தயாராக இருப்பது
அரவான் மட்டுமே “

“அரவான்
களப்பலியாவதை
யாராலும் தடுக்க
முடியாது என்ற
காரணத்திற்காகத் தான்
அரவான் களப்பலி
பாண்டவர்களுக்காக
நடக்க வேண்டும்
என்று முயற்சி செய்து
கொண்டிருக்கிறேன் “

உலூபி :
“அரவான்
களப்பலியை
நியாயப்படுத்தி - பேசிக்
கொண்டிருக்கும்
நீங்களே சொல்லுங்கள் ?
உலகில் எந்தத்
தாயாவது தான்
பெற்றெடுத்த மகனை
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
சம்மதிப்பாளா ?”

“யாரால்
சம்மதிக்க
முடியும் ? “

கிருஷ்ணன் :
“உன்னால் முடியும் ? “

“உன்னால்
மட்டுமே முடியும் ? “

“உன்னால் மட்டுமே
சம்மதிக்க முடியும் ? ”

“உன்னைத் தவிர
இந்த உலகத்தில்
வேறு யாராலும்
சம்மதிக்க முடியாது
உலூபி “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------11-02-2020
//////////////////////////////////////////