August 05, 2020

அறிய வேண்டியவை-பதிவு-137


ஜபம்-பதிவு-629 

(அறிய வேண்டியவை-137)

"ஆனால்

கெட்டவன் என்று

பெயரை

எடுத்து விட்டால்

கெட்டவன் எந்த

ஒரு நல்ல

விஷயத்தைச்

செய்தாலும்

அதை இந்த உலகம்

பெரிய விஷயமாக

எடுத்துக் கொள்ளாது

கெட்டவன்

என்ற பெயரில்

அவர்கள் செய்த

நல்ல செயல்கள்

மறைந்து விடும்"

 

"பிறரிடம்

பணிவாக இருப்பது

பிறர் சொல்லும்

சொல்லைக்

கேட்டு நடப்பது

பிறருடைய

விஷயத்தில்

தலையிடாமல்

இருப்பது

என்ற மூன்று

செயல்களை

யார் செய்கிறார்களோ

அவர்களை

இந்த உலகம்

நல்லவன் என்று

சொல்லும்

சுருக்கமாக

சொன்னால்

நல்லவன் என்பவன்

அடிமையாக

இருக்க வேண்டும்"

 

"பிறர் சொல்லும்

பேச்சுகளைக்

கேட்டுக் கொண்டு

அமைதியாக

இருக்க வேண்டும்

பிறர் சொல்லும்

பேச்சுக்களில் உள்ள

தவறுகளை

அவர்களுக்கு

சுட்டிக்

காட்டக் கூடாது

பிறர் செய்யும்

தவறான

காரியங்களில்

தலையிட்டு

அதை தடுக்க

முயற்சிக்கக் கூடாது

இந்த விஷயங்களை

செய்பவரே இந்த

உலகத்தில்

நல்லவராக

கருதப் படுகிறார்கள்"

 

"நல்லது

செய்பவர்கள்

நல்லவர்கள் என்ற

நிலை மாறி

இப்போது

அடிமையாக

இருப்பவர்களே

நல்லவர்கள்

என்ற நிலை

இந்த சமுதாயத்தில்

உருவாகி விட்டது"

 

"இந்த விஷயத்தை

சரியாக

கடைபிடிப்பவர்கள்

பாண்டவர்கள்

அவர்கள்

பீஷ்மர் விதுரன்

ஆகியோர் பேசும்

பேச்சுக்களை

அமைதியாக

கேட்டுக்

கொண்டிருப்பார்கள்

அவர்கள் பேச்சில்

தவறு இருந்தாலும்

அதை தவறு என்று

சுட்டிக் காட்ட

மாட்டார்கள்

அவர்களுக்கு

பணிந்து நடப்பார்கள்

அவர்களுடைய

விஷயத்தில்

தலையிட்டு

அதை தடுக்க

மாட்டார்கள்

சுருக்கமாக

சொன்னால்

பாண்டவர்கள்

அனைவரும்

பீஷ்மருக்கும்

விதுரனுக்கும்

பணிந்து அடிமையாக

இருக்கிறார்கள்

அதனால் தான்

பீஷ்மரும் விதுரனும்

ஒன்றாகச் சேர்ந்து

யுதிஷ்டிரனை

இளவரசனாக்கி

விட்டார்கள்

அடுத்து யுதிஷ்டிரனை

அரசனாக்க முயற்சி

செய்வார்கள்"

 

"ஆனால் நீயோ

பீஷ்மர் விதுரன்

ஆகியோர்

பேசும் போது

இடை மறித்து

பேசுகிறாய்

அவர்கள்

பேச்சுக்களில்

தவறு இருக்கிறது

என்று

சுட்டிக் காட்டி

அவர்களை

கோபப்படுத்துகிறாய்

அவர்களை நீ

மரியாதையுடன்

நடத்துவதில்லை

அவர்கள் முன்னால்

கோபம் கொள்கிறாய்

அவர்களுடைய

விஷயத்தில்

தலையிட்டு

அதை தடுக்க

முயற்சி செய்கிறாய்

அதனால் தான்

உன்னையும்

உன்னைச்

சேர்ந்தவர்களையும்

கெட்டவன் என்று

அனைவரும் முடிவு

செய்து விட்டார்கள்

இந்த உலகமும்

உன்னையும்

உன்னைச்

சேர்ந்தவர்களையும்

கெட்டவன்

என்று சொல்லிக்

கொண்டு இருக்கிறது"

 

"பாண்டவர்களை

நல்லவர்கள்

என்றும்

நீயும் உன்னைச்

சேர்ந்தவர்களையும்

கெட்டவர்கள் என்றும்

இந்த உலகம்

சொல்லிக்

கொண்டு இருக்கிறது"

 

"பாண்டவர்கள்

நல்லவர்கள்

என்ற பெயரை

எடுத்து விட்ட

காரணத்தினால்

பாண்டவர்களை

அரியணையில்

அமர்த்துவதற்கு

பீஷ்மரும் விதுரனும்

இந்த உலகத்தில்

உள்ள சிலரும்

அவர்களுக்கு

ஆதரவாக

செயல்பட்டுக்

கொண்டிருக்கிறார்கள்"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

----------- 05-08-2020

/////////////////////////////////


அறிய வேண்டியவை-பதிவு-136

ஜபம்-பதிவு-628

(அறிய வேண்டியவை-136)

 

"பாண்டவர்களைக்

கொல்வதற்காக

திட்டத்தை தீட்டி

ரகசியமாக

செயல்படுத்தியது

நீங்கள் தான்

என்று இந்த

நாட்டில் உள்ள

மக்கள் அனைவரும்

அறிந்து கொள்ளாமல்

இருக்க வேண்டும்

என்ற

காரணத்திற்காகவும் ;

 

"நீ செய்த தவறினால்

குற்றவாளியாக

அனைவரும்

மாட்டிக்

கொள்ளக் கூடாது

என்ற

காரணத்திற்காகவும்;

 

"திருதராஷ்டிரன்

துரியோதனன்

சகுனி ஆகிய

மூவரும் தான்

பாண்டவர்களைக்

கொல்ல

சதித்திட்டத்தை

தீட்டி

செயல்படுத்தியது

என்று இந்த

நாட்டில் உள்ள

மக்கள் அனைவரும்

சொல்லாமல்

இருக்க வேண்டும்

என்ற

காரணத்திற்காகவும்;

 

"நாளை இந்த

உலகம் நம்மை
குற்றவாளி

என்று குற்றம்

சொல்லக்கூடாது

என்ற

காரணத்திற்காகவும் ;

தான்

அஸ்தினாபுரத்திற்கு

பாண்டவர்களை

அழைத்து வருவதற்கு

ரகசியமாக

விதுரனை

அனுப்பி வைத்தேன் "

 

துரியோதனன்

"விதுரரை அனுப்பி

வைப்பதற்கு முன்

என்னுடைய

மனதில் உள்ளதையும்

கேட்டு தெரிந்து

கொண்டு இருக்கலாம்

அல்லவா"

 

திருதராஷ்டிரன் :

"உன்னுடைய மனதில்

உள்ளதை

நான் மட்டுமல்ல

பீஷ்மரும் விதுரரும்

அறிந்து

வைத்திருக்கின்ற

காரணத்தினால் தான்

பாண்டவர்களை

அஸ்தினாபுரத்திற்கு

அழைத்து

வருவதற்கு

விதுரனை அனுப்பி

வைக்கும் திட்டம்

ரகசியமாக

செயல்படுத்தப்பட்டது"

 

துரியோதனன் :

"நீங்கள் ஏன் அந்த

திட்டத்தை

தடுக்கவில்லை"

 

திருதராஷ்டிரன் :

"தடுக்க முடியாத

நிலையில்

நான் இருந்தேன்"

 

துரியோதனன் :

"உங்களை

தடுத்தது எது?"

 

திருதராஷ்டிரன் :

"பீஷ்மரின் அதிகாரம்

நிறைந்த வார்த்தைகள்

விதுரனின் சாதுர்யம்

நிறைந்த

ஆலோசனைகள்"

 

துரியோதனன் :

"அவைகளை உங்களால்

புறக்கணிக்க முடியாதா?"

 

திருதராஷ்டிரன் :

"புறக்கணிக்க முடியாது"

 

துரியோதனன் :

"ஏன் முடியாது?"

 

திருதராஷ்டிரன் :

"இருவரும் தான்

அஸ்தினாபுரத்தின்

ஆணிவேர்கள்

அவர்களை

புறக்கணிக்கவும்

முடியாது

விலக்கி

வைக்கவும் முடியாது"

 

துரியோதனன் :

"அதற்காக அவர்கள்

சொல்வதை எல்லாம்

கேட்டு விட்டு அதை

செயல்படுத்த

வேண்டுமா?"

 

திருதராஷ்டிரன் :

"எல்லா நேரங்களிலும்

செயல்படுத்த

வேண்டிய அவசியம்

கிடையாது

ஒரு சில நேரங்களில்

அவர்கள் இருவரும்

சொல்வதைத் தான்

கேட்டு நடக்க

வேண்டும்"

 

"இப்போது அந்த

அவசியம்

ஏற்பட்டிருக்கிறது

அதனால் அவர்கள்

இருவரும் சொன்ன

சொல்லைக் கேட்டு

பாண்டவர்களை

அழைத்து வருவதற்கு

விதுரனை அனுப்பி

வைத்திருக்கிறேன்"

 

துரியோதனன் :

"தாங்கள் செய்த

செயல் தங்களுக்கே

சரியெனப் படுகிறதா?"

 

திருதராஷ்டிரன் :

"சரியெனப் பட்டதால்

தான் செய்தேன்

துரியோதனா"

 

"ஒன்றைத் தெரிந்து

கொள் மகனே

இந்த உலகத்தில்

நல்லவன்

என்று பெயர்

எடுப்பது கஷ்டம்

நல்லவன் என்று

பெயரை எடுத்து

விட்டால்

நல்லவன்

எந்த கெட்ட

விஷயத்தை

செய்தாலும்

அதை இந்த உலகம்

பெரிய விஷயமாக

எடுத்துக் கொள்ளாது

நல்லவன் என்ற

பெயரில் அவர்கள்

செய்த கெட்ட

செயல்கள்

அனைத்தும்

மறைந்து விடும்"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

----------- 05-08-2020

/////////////////////////////////


அறிய வேண்டியவை-பதிவு-135

                 ஜபம்-பதிவு-627

         (அறிய வேண்டியவை-135)

 

(பாண்டவர்களை

அஸ்தினாபுரத்திற்கு

அழைத்து

வருவதற்காக

ரகசியமாக

விதுரரை

அனுப்பி

வைத்திருக்கிறார்கள்

என்பதைக்

கேள்வி பட்ட

துரியோதனன்

தனக்குக் கூட

சொல்லாமல்

தன்னைக் கூட

கலந்து

ஆலோசிக்காமல்

பாண்டவர்களை

அழைத்து

வருவதற்காக

விதுரரை

ரகசியமாக அனுப்பி

வைத்ததற்கு

என்ன காரணம்

என்பதை

அறிந்து கொள்ள

முடியாமல்

தவித்துக்

கொண்டிருந்த

துரியோதனனுக்கு

சகுனியின்

வார்த்தைகள்

ஒரு வழியைக்

காட்டியது

 

பாண்டவர்களை

அஸ்தினாபுரத்திற்குள்

வர விடாமல்

தடுத்து

நிறுத்துவதற்கு

எத்தகைய

செயல்களைச்

செய்வதென்று

தெரியாமல்

தவித்துக்

கொண்டிருந்த

துரியோதனனுக்கு

சகுனியின்

வார்த்தைகள் ஒரு

வழியைக் காட்டியது

 

போராக

இருந்தாலும் சரி

சதித் திட்டமாக

இருந்தாலும் சரி

இரண்டில் எந்த

ஒன்றை

செயல் படுத்தினாலும்

இப்போது

பலனளிக்காது

என்பதை உணர்ந்து

கொண்டதால் என்ன

செய்வதென்று

தெரியாமல்

தவித்துக்

கொண்டிருந்த

துரியோதனனுக்கு

சகுனியின்

வார்த்தைகள் ஒரு

வழியைக் காட்டியது

 

தன்னுடைய மாமா

சகுனி சொன்னபடி

தன்னுடைய

தந்தையான

திருதராஷ்டிரனைச்

சந்திப்பதே

சரியான

வழி என்று

முடிவெடுத்து

தன்னுடைய

தந்தையைக்

காணச் சென்றான்

துரியோதனன்)

 

துரியோதனன்:

"வணங்குகிறேன்

தந்தையே!"

 

திருதராஷ்டிரன் :

"நலமுடன்

வாழ்க மகனே!"

 

(ஆசிர்வதிக்கிறார்)

 

துரியோதனன் :

"தந்தையே நான்

எதற்காக தங்களை

சந்திக்க வந்திருக்கிறேன்

என்றால்………………………………?"

 

திருதராஷ்டிரன் :

"நீ எதைப் பற்றி

கேட்க

வந்திருக்கிறாய்

என்பதை நான்

நன்றாக

அறிவேன் மகனே

என்னுடைய

மகனின்

உள்ளத்தில்

என்ன இருக்கிறது

என்பது

ஒரு தந்தையான

எனக்குத்

தெரியாதா?"

 

துரியோதனன் :

"என் உள்ளத்தில்

உள்ளதை நீங்கள்

தெரிந்து

வைத்திருந்தால்

என்னிடம் கூட

கேட்காமல்

பாண்டவர்களை

அழைத்து

வருவதற்கு

விதுரரை

ரகசியமாக

அனுப்பி

வைத்திருக்க

மாட்டீர்கள்"

 

திருதராஷ்டிரன்

"வாரணாவதத்தில்

பாண்டவர்கள்

தங்கி இருந்த

அரக்கு

மாளிகையை

எரித்து

பாண்டவர்களை

கொல்வதற்காக

நீங்கள் தீட்டிய

திட்டத்தை

செயல்படுத்துவதற்கு

முன்

என்னை

கேட்டிருந்தால்

நான் வேண்டாம்

என்று

சொல்லியிருப்பேன்"

 

"என்னிடம் கூட

கேட்காமல்

ரகசியமாக

நீங்கள் தீட்டி

செயல்படுத்திய

திட்டம்

வெற்றி

அடைந்திருந்தால்

நான்

கவலைப்பட்டு

இருக்க மாட்டேன்"

 

"ஆனால்

என்ன ஆனது

நீங்கள் தீட்டி

செயல்படுத்திய

சதித்திட்டம்

தோல்வியில்

முடிந்து இருக்கிறது

பாண்டவர்கள்

இப்போது உயிரோடு

இருக்கிறார்கள்"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

----------- 05-08-2020

/////////////////////////////////