March 29, 2022

ஜபம்-பதிவு-721 (சாவேயில்லாத சிகண்டி-55)

 ஜபம்-பதிவு-721

(சாவேயில்லாத

சிகண்டி-55)

 

நாம் செய்த

செயல்களின்

விளைவினால்

உண்டான பாவம்

புண்ணியம் சேர்ந்த

கர்மவினையின்

விளைவை

மட்டும் நாம்

அனுபவிப்பதில்லை

தாயின்

கர்மவினையின்

விளைவினையும்

தந்தையின்

கர்மவினையின்

விளைவினையும்

சேர்த்துத்தான்

அனுபவிக்கிறோம்

 

உன்னுடைய

தாய் தந்தை

இருவரும்

சேரவில்லை என்றால்

அம்பையே

நீ பிறந்திருக்கவே

முடியாது

நீ பிறப்பதற்கு

இருவர் தேவை

தாயின் கர்மவினையும்

தந்தையின்

கர்மவினையும்

சேர்ந்து தான்

நீ பிறந்திருக்கிறாய்

 

தாயின் கர்மவினை

என்றால்

தாயின் கர்மவினையை

மட்டும் குறிப்பிடாது

தாயின் பெற்றோர்கள்

தாயின் முன்னோர்கள்

என்று

ஆதி முதல்

பல பிறவிகளின்

தொடர்பாக

கருத்தொடராக வந்த

கர்மவினைகளைக்

குறிக்கும்

 

அதைப்போல

தந்தையின்

கர்மவினை என்றால்

தந்தையின்

கர்மவினையை

மட்டும் குறிப்பிடாது

தந்தையின்

பெற்றோர்கள்

தந்தையின்

முன்னோர்கள் என்று

ஆதி முதல்

பல பிறவிகளின்

தொடர்பாக

கருத்தொடராக வந்த

கர்மவினைகளைக்

குறிக்கும்

 

தாய் தந்தை இருவரின்

கர்மவினையின்

விளைவில் தான்

நீ  பிறந்திருக்கிறாய்

தாயின் வயிற்றில்

நீ கருக்கொண்டு

உருக்கொள்ளும் போது

ஆணா பெண்ணா

என்று முடிவெடுத்து

குழந்தையை

உருவாக்குவதும்

அவர்கள்

இருவரில் பதிந்துள்ள

கர்மவினைகள் தான்

 

இருவருடைய

கர்மவினையும்

இல்லை என்றால்

தாயின் வயிற்றில்

கருக்கொண்டு

உருக்கொண்டு

குழந்தை

வளர முடியாது

 

தாயின்

கர்மவினையையும்

தந்தையின்

கர்மவினையையும்

கொண்டு இந்த

உலகத்தில் குழந்தை

பிறக்கும் போது

முந்தைய பல

பிறவிகளில்

சேர்த்து வைத்துள்ள

நல்ல மற்றும்

தீய கர்மாக்களின்

மொத்த மூட்டையான

சஞ்சித கர்மாவைக்

கொண்டு தான்

குழந்தை பிறக்கும்

 

இந்த உலகத்தில்

பிறந்தது முதல்

உயிரோடு வாழ்ந்த

காலம் வரை நாம்

செய்த செயல்களின்

விளைவுகள்

பிராரப்த கர்மம்

எனப்படும்

சஞ்சித கர்மாவின் 

ஒரு சிறு பகுதி தான்

பிராரப்த கர்மா.

இது இந்தப்

பிறவியில்

அனுபவிக்க வேண்டிய

நல்ல மற்றும்

தீய பலன்கள்

 

இந்தப் பிறவியில்

செய்யும்

நல்ல மற்றும்

தீய கர்மாக்கள்

ஆகாம்ய கர்மா

எனப்படும்.

இவை

இந்தப் பிறவியின்

இறுதியில்

சஞ்சித கர்மாவோடு

சேர்க்கப்படும்

 

இந்த மூன்று விதமான

கர்மாக்களைக்

கொண்டு தான்

இந்த உலகத்தில்

வாழும் அனைத்து

மனிதர்களும்

வாழ வேண்டும்

நீயும்

இப்படித் தான்

வாழ்ந்து

கொண்டிருக்கிறாய்

 

நீ கஷ்டப்படுவதற்கு

காரணம்

சஞ்சித கர்மாவாக

இருக்கலாம்

அல்லது

பிராரப்த கர்மாவாக

இருக்கலாம்

அல்லது

ஆகாம்ய

கர்மாவாக

இருக்கலாம்

 

இந்த மூன்று

கர்மாக்களில்

எந்த கர்மாவினால்

கஷ்டப்படுகிறாய்

என்பதை உணர்ந்து

கொள்வது கடினம்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----29-03-2022

-----செவ்வாய்க்கிழமை

////////////////////////////////////////

ஜபம்-பதிவு-720 (சாவேயில்லாத சிகண்டி-54)

 ஜபம்-பதிவு-720

(சாவேயில்லாத

சிகண்டி-54)

 

கர்மவினையைப்

பற்றி

எத்தனை நூல்கள்

படித்தாலும்

எத்தனை பேர்

விளக்கினாலும்

கர்மவினையைப்

பற்றி

புரிந்து கொள்ள

முடியாது

கர்மவினையைப்

பற்றி

உணர்ந்தால் மட்டுமே

கர்மவினையைப்

பற்றி

புரிந்து கொள்ள

முடியும்

 

கர்மவினை எப்படி

செயல்படுகிறது

என்பது தெரியாமல்

கர்மவினையைப்

பற்றி உணராமல்

யாராலும்

ஆன்மீகத்தில்

உயர்நிலை

அடைய முடியாது

 

கர்மவினை எப்படி

செயல்படுகிறது

என்பதை

உணர்ந்தவர்களால்

மட்டுமே

ஞானம், சமாதி.

முக்தி

ஆகியவற்றை

அடைய முடியும்

 

இந்த உலகத்தில்

எந்த ஒரு

குழந்தையும்

எந்த ஒரு இடத்தில்

பிறந்தாலும்

அந்த குழந்தை

அதனுடைய

கர்மவினையைத்

தீர்த்து

பிறவிச் சுழற்சியை

நிறுத்தி

பிறப்பு இறப்பு

அற்ற நிலையை

அடைவதற்காகத்

தான் பிறக்கிறது

என்று பொருள்

 

கர்மவினை எந்த

குழந்தைக்கு

இருக்கிறதோ

அந்த குழந்தை

மட்டுமே

இந்த உலகத்தில்

பிறக்கிறது

கர்மவினை

எந்த குழந்தைக்கு

இல்லையோ

அந்த குழந்தை

இந்த உலகத்தில்

பிறப்பது இல்லை

 

ஒரு குழந்தை

இந்த உலகத்தில்

பிறக்கிறது

என்றால்

அது தன்னுடைய

கர்மவினையைச்

சுமந்து கொண்டு

தான் பிறக்கிறது

 

கர்மாக்கள் தான்

ஒரு குழந்தை

பிறப்பதற்கு

காரணம் ஆகிறது

கர்மாக்கள் தான்

ஒருவருடைய

வாழ்க்கையை

நடத்துகிறது

கர்மாக்கள் தான்

ஒருவருடைய

இன்பத்திற்கும்

துன்பத்திற்கும்

காரணமாக

இருக்கிறது

கர்மாக்கள் தான்

ஒருவர்

இறப்பதற்கும்

இறப்பு இல்லாமல்

இருப்பதற்கும்

ஆதாரமாக

இருக்கிறது

 

நாம் செய்த

செயல்களின்

விளைவுகள்

பாவத்தை உண்டு

பண்ணினால்

நாம் கஷ்டத்தை

அனுபவிப்போம்

அது பாவத்தினால்

வந்த பலன்

 

நான் செய்த

செயல்களின்

விளைவுகள்

புண்ணியத்தை

உண்டு

பண்ணினால்

நாம் இன்பத்தை

அனுபவிப்போம்

அது

புண்ணியத்தினால்

வந்த பலன்

 

நாம் கஷ்டப்படும்

போது பாவத்தினால்

கஷ்டப்படுகிறோம்

என்று

நினைக்கிறோம்

அவ்வாறு

நினைக்கக்கூடாது

நாம் கஷ்டப்படும்

போது

கர்மவினையில்

பாவம் ஒன்று

கழிகிறது என்று

எடுத்துக் கொள்ள

வேண்டும்

 

நாம் இன்பமாக

இருக்கும் போது

எதைப்பற்றியும்

கவலைப்

படுவதில்லை

நமக்கு இன்பம்

நடக்கும் போது

நாம் செய்த

புண்ணியத்தின்

பலனில் ஒன்று

கழிகிறது என்பதைத்

தெரிந்து கொள்ள

வேண்டும்

 

கஷ்டப்படும் போது

எப்படி பாவம்

கழிகிறதோ

அப்படியே இன்பமாக

இருக்கும் போது

புண்ணியமும்

கழிகிறது

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----29-03-2022

-----செவ்வாய்க்கிழமை

////////////////////////////////////////

ஜபம்-பதிவு-719 (சாவேயில்லாத சிகண்டி-53)

 ஜபம்-பதிவு-719

(சாவேயில்லாத

சிகண்டி-53)

 

ஆனால் நான்

எந்த ஒரு பாவமும்

செய்யவில்லை

அப்படி

இருக்கும் போது

எனக்கு ஏன்

இத்தனை கஷ்டங்கள்

எதற்காக இப்படி

கஷ்டப்படுகிறேன்

நான் ஏன்

கஷ்டப்பட வேண்டும்

 

ஹோத்திரவாஹனர் :

அம்பையே

உனக்கு நேர்ந்த

இந்த கஷ்டங்கள்

சென்ற பிறவிகளில்

நீ செய்த

கர்ம வினையினால்

உனக்கு நேர்ந்த

கஷ்டங்களாக

இருக்கலாம்

 

அல்லது

 

உன்னுடைய

பெற்றோர்கள்

உன்னுடைய

முன்னோர்கள்

செய்த செயல்களால்

உண்டான

கர்மவினையின்

விளைவாகக்

கூட இருக்கலாம்

 

அம்பை :

நான் செய்த

கர்மவினையின்

விளைவுகளை

நான் அனுபவித்தால்

ஏற்றுக் கொள்ளலாம்

அதை சரி என்று

கூட சொல்லலாம்

 

ஆனால்

மற்றவர்கள் செய்த

கர்மவினையின்

விளைவுகளை

நான் ஏன் ஏற்றுக்

கொள்ள வேண்டும்

அது தவறல்லவா

 

எனக்கு சம்பந்தம்

இல்லாத

கர்மவினையின்

விளைவுகளை

நான் ஏன்

அனுபவிக்க

வேண்டும்

 

ஹோத்திரவாஹனர் :

அம்பையே

கர்மவினையைப்

பற்றி நீ கேட்ட

இந்த

கேள்வியைத் தான்

இந்த உலகத்தில்

உள்ள

அனைவரும்

கேட்டுக்

கொண்டிருக்கிறார்கள்

 

இந்த கேள்விக்கான

பதிலை கேட்டுத்

தெரிந்து

கொள்ள முடியாது

உணர்ந்து தான்

தெரிந்து

கொள்ள முடியும்

 

கர்மவினையைப்

பற்றி

படித்தவர்களால்

இந்த கேள்விக்கு

பதிலளிக்க

முடியாது

கர்மவினையைப்

பற்றி

உணர்ந்தவர்கள்

மட்டுமே இந்த

கேள்விக்கு

பதிலளிக்க முடியும்

 

கர்மவினையைப்

பற்றி

உணர்ந்தவர்கள்

சொன்னாலும்

உணர்ந்தால்

மட்டுமே

கர்மவினையைப்

பற்றி

மற்றவர்கள் புரிந்து

கொள்ள முடியும்

உணராமல்

கர்மவினையைப்

பற்றி புரிந்து

கொள்ளவே முடியாது

 

கர்மவினையைப்

பற்றி

பெரும்பாலும்

யாரும்

எழுதியிருக்க

மாட்டார்கள்

கர்மவினையைப்

பற்றி

கேள்விகள்

கேட்டால்

பெரும்பாலானவர்கள்

பதில் தெரியாததால்

சொல்லவும்

மாட்டார்கள்

கர்மவினையைப்

பற்றி

கேள்விகள் கேட்டாலே

பெரும்பாலானவர்கள்

அதைத் தவிர்த்து

விட்டுச் சென்று

விடுவார்கள்

 

ஆன்மீகத்தில்

உயர்நிலையில்

இருப்பதாக தங்களைக்

காட்டிக் கொள்பவர்கள்

கர்மவினை

சம்பந்தப்பட்ட

கேள்விகளை மட்டும்

கேட்காதீர்கள்

என்று தடையே

போட்டு

வைத்திருப்பவர்களும்

உண்டு

 

கர்வினையைப் பற்றி

கேள்விகள் கேட்டாலே

ஓடி ஒளிந்து

கொள்பவர்களும்

உண்டு 

 

ஆன்மீகத்தில்

உயர்ந்தவர்கள் என்று

தங்களைச் சொல்லிக்

கொள்பவர்களில்

பெரும்பாலானவர்கள்

கர்மவினையைப்

பற்றி

உணராதவர்களாகத்

தான் இருக்கிறார்கள்

ஏனென்றால்

கர்மவினையைப்

பற்றி

அறிந்தவர்கள் அதிகம்

உணர்ந்தவர்கள்

குறைவு

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 -----29-03-2022

-----செவ்வாய்க்கிழமை

////////////////////////////////////////

ஜபம்-பதிவு-718 (சாவேயில்லாத சிகண்டி-52)

 ஜபம்-பதிவு-718

(சாவேயில்லாத

சிகண்டி-52)

 

(ராஜரிஷியும் தவசியுமான

ஹோத்திரவாஹனர்

அம்பை

தங்கியிருக்கும்

ஆசிரமத்திற்கு

வந்தார்.

அம்பையைப் பற்றிய

அனைத்து

விவரங்களையும்

கேட்டறிந்த

ஹோத்திரவாஹனர்

அம்பையிடம் பேசத்

தொடங்கினார்.)

 

ஹோத்திரவாஹனர் :

அம்பையே

உன்னைப் பற்றிய

விவரங்கள்

அனைத்தையும்

கேட்டுத் தெரிந்து

கொண்டேன்

 

நீ யார்

என்பதைத் தெரிந்து

கொண்டேன்

 

நீ என்னுடைய

பரம்பரை என்பதைத்

தெரிந்து கொண்டேன்

 

உனக்கும் எனக்கும்

இரத்த சம்பந்தம்

இருக்கிறது என்பதைத்

தெரிந்து கொண்டேன்

 

ஆமாம்

அம்பையே

உன்னுடைய

தாய் புராவதி

என்னுடைய மகள்

நீ என்னுடைய

மகளுடைய மகள்

 

கர்மவினையினால்

உன் தாயை

விட்டுப் பிரிந்திருக்க

வேண்டிய சூழ்நிலை

எனக்கு ஏற்பட்டு

விட்டது

அதே கர்மவினை

தான் உன்னையும்

என்னையும்

இப்போது ஒன்றாக

சேர்த்திருக்கிறது

 

ஒரு குடும்பத்தில்

உள்ள ஒருவர்

தவம் செய்தால்

அவர் தவம்

செய்ததினால்

அவருக்குக் கிடைத்த

தவசக்திகள்

அவர் சார்ந்த

குடும்பத்தில்

உள்ளவர்கள்

யாரேனும்

கஷ்டப்பட்டால்

அவர்கள்

எங்கிருந்தாலும்

எந்த

இடத்திலிருந்தாலும்

அவர்களை

அந்த

கஷ்டத்திலிருந்து

காப்பாற்றுவதற்காக

தவம்

செய்தவருடைய

தவசக்திகள்

உதவும் என்று

ஆன்மீக நூல்கள்

கூறுகின்றன

 

நம்முடைய

குடும்பத்தில்

நான் தவம்

செய்ததினால்

எனக்குக் கிடைத்த

தவசக்திகள்

எங்கோ

கஷ்டப்பட்டுக்

கொண்டிருந்த

உ.ன்னுடைய

கஷ்டத்தைப்

போக்குவதற்காக

உன்னை என்னிடம்

கொண்டு வந்து

சேர்த்திருக்கிறது

 

கர்மவினையில்

உண்டாகும்

விளைவின்

தாக்கத்தைத்

தடுக்க முடியாது

ஆனால்

அதனுடைய

தாக்கத்தைக்

குறைக்கலாம்

 

கர்மவினையினால்

அல்லலுறும்

உன்னுடைய

கஷ்டங்களை

நான் போக்குவேன்

அதற்கு எத்தகைய

செயல்களைச்

செய்ய வேண்டுமோ

அதைச் செய்வேன்

 

உன்னை

கஷ்டத்திலிருந்து மீட்டு

வருவதற்கு

என்னால் என்ன

செய்ய முடியுமோ

அதைச் செய்வேன்

 

அம்பை :

பெற்றோர்களுடனும்

காதலனுடனும்

உறவுகளுடனும்

தோழிகளுடனும்

அன்பால் பிணைந்து

இளவரசியாக

வாழ்ந்த நான்

இப்போது யாரும்

இல்லாத

அனாதையாக

நிர்க்கதியாய்

நிற்பதற்குக்

காரணம் என்ன

 

என்னுடைய இந்த

அவல நிலைக்குக்

காரணம் என்ன

 

நான் பிறந்தது முதல்

இப்போது வரை

யாருக்கும் துரோகம்

செய்ததில்லை

 

யாருடைய

குடியையும்

கெடுத்ததில்லை

மனதால் கூட

யாரும் கெட்டுப்

போக வேண்டும்

என்று

நினைத்ததில்லை

 

பாவம்

செய்திருந்தால்

கர்மவினையின்

விளைவானது

என்னை பாதித்து

இருக்க வேண்டும்

 

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----29-03-2022

-----செவ்வாய்க்கிழமை

////////////////////////////////////////