May 22, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-8


               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-8

மகாபாரதத்தில்
அரிய,
அபூர்வமான,
ஆழமான,
கருத்துக்கள்
நிறைந்து இருக்கிறது.

திரௌபதியின் சேலையை
துச்சாதனன் துகில்
உரியும் போது
கடவுள்
எப்போது வந்தார்
தெரியுமா?

திரௌபதியின் சேலையை
துச்சாதனன் துகில்
உரியும் போது
திரௌபதி தன்னுடைய
இரண்டு கைகளாலும்
தன்னுடைய மார்பை
மூடிக் கொண்டு
கடவுளே காப்பாற்று
என்றாள்
கடவுள் வரவில்லை

திரௌபதி தன்னுடைய
ஒரு கையால்
தன்னுடைய மார்பை
மூடிக் கொண்டு
கடவுளே காப்பாற்று
என்றாள்
கடவுள் வரவில்லை

திரௌபதி தன்னுடைய
இரண்டு கைகளையும்
தலைக்கு
மேலே தூக்கி
கடவுளே
என்னை காப்பாற்று
என்றாள்

அப்போது தான்
கடவுள் வந்து
புடவை கொடுத்து
திரௌபதியைக்
காப்பாற்றினார்,

ஒரு செயல்
மனிதனால்
செய்ய முடியும்
என்ற நிலை
இருக்கும் வரை
கடவுள் என்பவர்
வர மாட்டார்
ஒரு செயல்
மனிதனால் முடியாது
என்ற நிலை
வரும்போது தான்
கடவுள் வருவார்

திரௌபதி தன்னுடைய
இரண்டு கைகளாலும்
தன்னுடைய மார்பை
மூடிக் கொண்டு
தன்னுடைய
மானத்தை
காப்பாற்றிக்
கொள்ள முடியும்
என்று நினைத்து
கடவுளை வேண்டினாள்
கடவுள் வரவில்லை

திரௌபதி தன்னுடைய
ஒரு கையால்
தன்னுடைய
மார்பை மூடிக் கொண்டு
தன்னுடைய
மானத்தை காப்பாற்றிக்
கொள்ள முடியும்
என்று நினைத்து
கடவுளை வேண்டினாள்
கடவுள் வரவில்லை

திரௌபதி தன்னுடைய
மானத்தை
தன்னால் காப்பாற்றிக்
கொள்ள முடியாது
அதாவது தன்னுடைய
மனித சக்தியால்
முடியாது
மனித சக்தியை
தாண்டிய ஒரு சக்தி
அதாவது
கடவுள் சக்தியால்
தான் முடியும்
என்று நினைத்து
தன்னுடைய
இரண்டு கைகளையும்
தலைக்கு
மேலே தூக்கி
கடவுளே காப்பாற்று
என்று வேண்டினாள்
அப்போது தான்
கடவுள் வந்து
திரௌபதியை காப்பாற்றினார்

மனித சக்தியால்
முடியாது
என்ற நிலை
வரும்போது தான்
கடவுள் சக்தி
நம்மை காப்பாற்றும்

இதைத் தான்
பரிபூரண சரணாகதி
என்று கூறுவோம்
கடவுளிடம்
நூறு சதவீதம்
நம்மை ஒப்படைத்து
விட்டோமானால்
அதற்குப் பெயர் தான்
பரிபூரண சரணாகதி

திரௌபதி தன்
இரண்டு கைகளையும்
மேலே தூக்கி
தன்னை காப்பாற்று
என்று
கடவுளிடம்
தன்னை முழுமையாக
ஒப்படைத்து விட்ட
இந்த செயல் தான்
பரிபூரண சரணாகதி
என்பதை
அபூர்வமான
கதையின் மூலம்
நமக்கு எளிமையாக
உணர்த்திச் சென்ற
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

----------இன்னும் வரும்
/////////////////////////////////////////////


May 21, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-7


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-7

“”கொண்டு வந்தாலும்,
வராவிட்டாலும் தாய்””

ஒரு தாயினுடைய
பிள்ளைகளில்
ஒரு ஆணுக்கு
உடம்பு சரியில்லை
மருத்துவ மனையில்
சேர்த்து வைத்தியம்
பார்க்கிறார்கள்
என்ற செய்தியைக்
கேள்விப் பட்ட தாய்
உடம்பு சரியில்லாத
தன் மகனை
பார்ப்பதற்காக
உடனே கிளம்பி
மருத்துவ மனை
செல்கிறாள்.

மருத்துவ மனையில்
படுக்கையில்
படுத்துக் கொண்டிருந்த
தன் மகனைப்
பார்த்த தாய்
துயரம் அடைகிறாள்

மகன் கூடவே
மருத்துவமனையில்
இருந்து
மகனுக்கு எத்தகைய
உதவிகள் தேவையோ
அந்த உதவிகளை
அந்தத் தாய் செய்கிறாள்

மகன் உடம்பு
சரியில்லாமல்
மருத்துவ மனையில்
படுத்து இருக்கிறானே
என்று வருத்தப்பட்டு
சாப்பாடு கூட
சாப்பிடாமல்
மன வருத்தத்துடனும்
தன் மகன்
உடல் நலம் பெற்று
விரைவில் குணமாக
வேண்டும் என்று
ஒவ்வொரு கணமும்
கடவுளை வேண்டியும்
மருத்துவ மனையில்
மகனுக்கு
செய்ய வேண்டிய
அனைத்து உதவிகளையும்
செய்கிறாள்

மகனும் கொஞ்சம்
கொஞ்சமாக
குணம் அடைந்து
கொண்டு வருகிறான்

மகன் பூரணமாக
குணம் அடைந்தவுடன்
வீட்டில் கொண்டு
வந்து விட்டு விட்டு
மகன் கூட
சில நாட்கள்
இருந்து விட்டு
மகன் முழுவதுமாக
குணம் அடைந்தவுடன்
தன் ஊருக்கு
கிளம்புகிறாள்
அந்தத் தாய்

அவ்வாறு
ஊருக்கு கிளம்பும்போது
தான் தாய்
தன் மகனைப் பார்த்து
சொல்கிறாள்
உனக்கு உடம்பு
சரியில்லை என்ற
செய்தியைக் கேட்டவுடன்
நான் அவசரம்
அவசரமாக
கிளம்பி இங்கே
வந்து விட்டேன்

உனக்கும்
பேரன், பேத்திகளுக்கும்
ஒன்றும் வாங்காமல்
வந்து விட்டேன்
அதனால் இந்த
பணத்தை வைத்துக்
கொள் என்கிறாள்

குணமடைந்த மகன்
தன் தாயைப் பார்த்து
சொல்கிறான்
அம்மா நீங்கள்
வந்த போதே
என் மனம்
ஆறுதல் அடைந்து
குணம் அடைந்துவிட்டது
இப்போது தான்
என் உடல் குணம்
ஆனது

நீங்கள் வந்ததே
எனக்கு போதும்
நீங்கள் ஒன்றும்
எதுவும்
வாங்கி வர
வேண்டிய
அவசியம் இல்லை
நீங்கள் வந்ததே
எனக்கு போதும்
என் மனம்
சந்தோஷப்பட்டது
என்கிறான் மகன்

இந்த சொல்லை
தாயைத் தவிர
வேறு யாரையும்
பார்த்து சொல்ல
முடியாது

உலகில் உள்ள
அனைத்து உயிர்களும்
செலுத்தும் அன்பிற்கு
ஒரு விலை உண்டு
ஆனால்
தாயின் அன்பிற்கு
மட்டும் விலை 
என்பது கிடையாது
தாயின் அன்பை
எந்த விலைக்குள்ளும்
அடக்க முடியாது
அதனால் தான்
கொண்டு வந்தாலும்
வரா விட்டாலும் தாய்
என்று சொன்ன
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////

May 20, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-6


               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-6

தமிழில்  எண்களை
எடுத்துக் கொண்டால்
அவைகளை வார்த்தையில்
உச்சரிக்கும் போது
உள்ள அர்த்தம்
சரியானதா? தவறானதா?
என்பதை அறியாமல்
நாம் பயன்படுத்தி
வருகிறோம்

எண்களை
10-பத்து
20-இருபது
30-முப்பது
என்று வரிசையாக
சொன்னால்
70-எழுபது
80-எண்பது
90-தொண்ணூறு
100-நூறு
என்று வரும்

இந்த வரிசையை
நன்றாக உற்றுக்
கவனித்தால்
நூறு வருவதற்கு
முன்பாகவே
நுறு என்ற உச்சரிப்பில்
90-தொண்ணூறு என்ற
எண் வந்திருப்பதை
நாம் அறியலாம்

அதாவது
100-நூறுக்கு முன்பாக
நூறு என்ற
உச்சரிப்பில்
90-தொன்ணூறு
வந்திருப்பதை
அறியலாம்

80-எண்பது
அடுத்து
90-தொண்பது
அல்லது
வேறு ஏதேனும்
உச்சரிப்பில் தான்
தான் வரவேண்டும்
நூறுக்கு முன்னாடியே
தொண்ணூறு
வந்திருக்கிறது

90-தொண்ணூறு என்றால்
ஒன்பது நூறு என்று
பொருள்
இந்த இடத்தில்
தவறான உச்சரிப்பில்
வந்து இருக்கிறது

அதைப்போல்
100-நூறு
200-இருநூறு
300-முன்னூறு
என்ற வரிசையில்
800-எண்ணூறு
900-தொள்ளாயிரம்
1000-ஆயிரம்
என்ற வரிசை
வருவதைப்
பார்க்கலாம்

1000-ஆயிரம்
வருவதற்கு
முன்பே
ஆயிரம் என்ற
உச்சரிப்பில்
900-தொள்ளாயிரம்
வந்து உள்ளதை
நாம் பார்க்கலாம்

இந்த இடத்தில்
900-தொள்ளாயிரம்
என்றால்
ஒன்பது ஆயிரம்
என்று பொருள்படும்
இந்த இடத்தில்
தொண்ணூறு என்ற
உச்சரிப்பு தான்
வர வேண்டும்
தொண்ணூறு என்றால்
ஒன்பது நூறு
தொண்ணூறு
என்று பொருள்படும்
அது தான் இங்கு சரி
800-எண்ணூறு என்றால்
எட்டு நூறு
என்று பொருள்
தொண்ணூறு என்றால்
ஒன்பது நூறு
என்று பொருள்

எனவே வார்த்தையில்
உச்சரிக்கும் போது
800-எண்ணூறு அடுத்து
900-தொண்ணூறு தான்
வர வேண்டும்

அதைப்போல்
1000-ஆயிரம்
2000-இரண்டாயிரம்
3000-மூவாயிரம்
என்ற வரிசையில்
8000-எட்டாயிரம்
9000-ஒன்பதாயிரம்
10000-பத்தாயிரம்
என்று வருகிறது

இந்த இடத்தில் தான்
8000-எட்டாயிரம்
அடுத்து
9000-தொள்ளாயிரம்
வர வேண்டும்
தொள்ளாயிரம் என்றால்
ஒன்பது ஆயிரம்
என்று பொருள்

எண்கள் வார்த்தையில்
வரும் போது
மாறி அமைந்து விட்டது

80-எண்பது
90-தொன்பது
100-நூறு


800-எண்ணூறு
900-தொண்ணூறு
1000-ஆயிரம்

8000-எட்டாயிரம்
9000-தொள்ளாயிரம்
10000-பத்தாயிரம்

என்பதே எண்களுக்கு
கொடுக்கப்பட்ட வேண்டிய
சரியான வார்த்தைகள்

எண்களில் உள்ள
வார்த்தைகளின்
அர்த்தம் தெரியாமலேயே
சரியா தவறா
என்று புரியாமலேயே
நாம் எண்களைப்
பயன்படுத்தி வருகிறோம்
என்பதை நாம் நினைவில்
கொள்ள வேண்டும்

---------- இன்னும் வரும்
////////////////////////////////////////////////


May 19, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-5


              நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-5

வாழ்க்கைக்குத் தேவையான
ஐந்து கருத்துக்களை
ஐந்து வாக்கியங்கள்
மூலம்
நம் முன்னோர்கள்
கொடுத்து இருக்கிறார்கள்
அதனை எழுதியவர்
யார் என்று தெரியவில்லை

இருந்தாலும்
உயர்ந்த கருத்துக்கள்
வாழ்க்கையில்
பின்பற்ற வேண்டிய
கருத்துக்கள்
போன்றவற்றை
சொன்னவர்களுடைய
பெயர் தெரியவில்லை
என்றாலும்
பரவாயில்லை
நாம் அதில் சொல்லப்பட்ட
கருத்துக்களை எடுத்துக்
கொண்டு வாழ்க்கையில்
பின்பற்ற வேண்டும்

இந்த ஐந்து வாக்கியங்களில்
சொல்லப்பட்ட கருத்துக்கள்
ஒவ்வொருவருடைய
வாழ்க்கையிலும்
ஒன்றோ அல்லது
இரண்டோ அல்லது
அதற்கு மேற்பட்டோ
நடந்து தான் இருக்கும்
இதில் எதுவுமே
என் வாழ்க்கையில்
எதிர்ப்படவில்லை
நடக்கவில்லை என்று
சொல்பவர்கள்
இந்த சமுதாயத்தில்
இருக்கவே முடியாது
அதில் முதல் வாக்கியத்தை
நாம் பார்ப்போம்

“”“கொண்டு வந்தால் தந்தை”””

அன்றும் இன்றும்
குடும்பத் தலைவர்
என்றால் தந்தையைத்
தான் குறிக்கும்
தந்தையைத் தான்
நாம் குடும்பத் தலைவராக
எடுத்துக்  கொண்டு
இருக்கிறோம்

ஒரு குடும்பம் நன்றாக
சிறப்பாக கவலையற்று
மானத்தோடு இருக்க
வேண்டும் என்றால்
குடும்பத் தலைவர்
ஒழுக்கமாக இருக்க
வேண்டும்

ஒரு வீட்டில்
குடும்பத் தலைவர்
சம்பாதிக்கமால்
குடித்து விட்டு
வீட்டிற்கு வந்து
மனைவியிடமும்,
பிள்ளைகளிடமும்
அனுதினமும்
சண்டையிட்டு கொண்டு
தொடர்ந்து குடிப்பதற்கு
பணம் கேட்டு நச்சரித்து
அது போதாதென்று
தனக்கு தெரிந்தவர்களிடமும்
நண்பர்களிடமும்
சொந்தக்காரர்களிடமும்
கடன் வாங்கி
குடித்து விட்டு
வீட்டை கவனிக்காமல்
இருந்தால்
குடும்பம் எப்படி
நிம்மதியாக
இருக்க முடியும்
இதனால்
குடும்பத்தில்
எப்பொழுதும்
சண்டை சச்சரவு
இருந்து கொண்டே
தான் இருக்கும்
குடும்பத்தில் நிம்மதி
இல்லாமல் தான்
இருக்கும்

எவ்வளவு தான்
மனைவியும், பிள்ளைகளும்
சம்பாதித்து குடும்பத்தை
கவனித்துக் கொண்டாலும்
குடும்பத் தலைவர்
சம்பாதிக்காமல்
சும்மா வீணாக
சுற்றிக் கொண்டும்
குடித்துக் கொண்டும்
சண்டையிட்டுக் கொண்டும்
கடன் வாங்கிக் கொண்டும்
அலைந்து கொண்டிருந்தால்
குடும்பம் எப்படி
நன்றாக இருக்கும்

ஒரு குடும்பம் நன்றாக
இருக்க வேண்டுமென்றால்
குடும்பத் தலைவரான
தந்தை நன்றாக இருக்க
வேண்டும்
குடும்பத் தலைவர்
நேர்மையான வழியில்
சம்பாதித்து
குடும்பத்தை காப்பாற்ற
வேண்டும்
இல்லை என்றால்
குடும்பம் கஷ்டப்படும்
என்ற காரணத்தினால் தான்
கொண்டு வந்தால் தான்
தந்தை
அதாவது சம்பாதித்து
கொண்டு வந்து
வீட்டிற்கு கொடுத்து
குடும்பத்தை நடத்தினால்
குடும்பம் நிம்மதியாக
இருக்கும்
என்ற அர்த்தத்தில் தான்
கொண்டு வந்தால் தந்தை
என்று சொன்னார்கள்

எவ்வளவு உயர்ந்த
கருத்தை பின்பற்ற
சொன்ன நம்
முன்னோர்கள் புத்திசாலிகள்

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////