November 16, 2018

திருக்குறள்-பதிவு-50


                        திருக்குறள்-பதிவு-50

மக்களுக்கு பயன்படும்
வகையில் கண்டு
பிடிக்கப்படும்
சரியான ஒரு செயலை
தவறு என்று சொல்வதற்கு
அந்தக் காலம் முதல்
இந்தக் காலம் வரை
இந்த உலகத்தில்
நிறைய பேர்கள்
இருந்து வந்திருக்கிறார்கள்

சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது என்று
சரியான ஒரு செயலை
கலிலியோ சொன்னதை
தவறு என்று சொல்லி
கலிலியோவை
விசாரணைக்கு அழைத்த
விசாரணைக்குழு முன்பு
கலிலியோ நின்று
கொண்டு இருந்தார்

பைபிளில்
சொல்லப்பட்டது போல்
தாலமி சொன்ன பூமியை
மையமாக வைத்து
சூரியன் சுற்றுகிறது
என்ற பூமி மையக்
கோட்பாடு சரி என்றும்
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
நிகோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
சூரியனை மையமாக 
வைத்து பூமி
சுற்றுகிறது என்ற
சூரிய மையக்
கோட்பாடு தவறு
என்றும் சொல்லி
எழுதி கொடுக்க
வேண்டும் என்று
போப்புகள் அடங்கிய நீதி
விசாரணைக் கூடத்தின்
தலைமைப் போப்பு
விசாரணைக்
கைதியாக இருக்கும்
கலிலியோவைப்
பார்த்து கூறினார்


தலைமைப் போப்பு
கலிலியோவைப்
பார்த்து நீ இறந்து
விடுவதற்கு முன்பாக
நீ சொன்ன உன்னுடைய
அறிக்கையை மாற்று
ஏனென்றால் நீ
சொன்ன கோட்பாடு
பைபிள் என்ற
புனிதமான நூலுக்கு
எதிராக இருக்கிறது;
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
இருக்கிறது;
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
யார் கருத்து
சொன்னாலும்
அது குற்றம் தான்;
அது தவறு தான்;
ஏனென்றால்
கிறிஸ்தவர்கள்
புனிதமாகக் கருதும்
பைபிள் கடவுளால்
அருளப்பட்டது
பைபிளில் உள்ள
கருத்துக்களை தவறு
என்று சொல்வதற்கு
யாருக்கும் அதிகாரம்
இல்லை என்று
கூறினார்

இந்த பிரச்சினை
ஒன்றும் பெரிய
பிரச்சினையும்
கிடையாது;
ஒன்றும் வருத்தப்பட
வேண்டிய
பிரச்சினையும்
கிடையாது;
எப்படி மாற்ற
வேண்டும் என்று
நீங்கள் நினைக்கிறீர்களோ
அப்படி நானே இதை
மாற்றி விடுகிறேன்;
கடவுள் பைபிளில்
என்ன சொல்லி
இருக்கிறாரோ அப்படியே
மாற்றி விடுகிறேன்;
அப்படியே அறிக்கை
விடுகிறேன்;
ஆனால் ஒரு
விஷயத்தை நீங்கள்
அனைவரும் புரிந்து
கொள்ள வேண்டும்

என்னுடைய அறிக்கையை
சூரியனோ அல்லது
பூமியோ படிக்கப்
போவதில்லை
அவைகள் தங்கள்
நிலையை மாற்றிக்
கொள்ளப் போவது
இல்லை;
உண்மையைப்
பொறுத்தவரை
அவைகள் தங்கள்
வேலையை மாற்றிக்
கொள்ளப் போவது
இல்லை;
பூமி எப்போதும்
சூரியனைச் சுற்றியே
வலம் வரும் என்ற
நிலை இருக்கும் போது
நீங்கள் ஏன் என்னை
மாற்றி சொல்ல
வேண்டும் என்று
இப்படி வற்புறுத்துகிறீர்கள்

நான் இந்த
ஆராய்ச்சியை
செய்வதற்காக
என்னுடைய வாழ்க்கையை
முழுவதுமாக
செலவு செய்திருக்கிறேன்
நான் ஆராய்ச்சி
செய்து உண்மையைக்
கண்டுபிடித்ததற்கான
ஆதாரங்கள
என்னிடம் இருக்கின்றன

மற்ற விஞ்ஞானிகள்
அனைவரும் என்னுடைய
ஆராய்ச்சி சரி என்றும்
என்னுடைய கருத்து
சரி என்றும்
என்னுடைய கோட்பாடு
சரி என்றும்
ஏற்றுக் கொண்டு
உள்ளனர்

என்னுடைய கருத்தை
இன்று நீங்கள்
ஏற்றுக் கொள்ளாமல்
இருக்கலாம்
ஆனால் வருங்காலத்தில்
நீங்களும் என்னுடைய
கருத்தை ஏற்றுக்
கொள்ளத்தான்
போகிறீர்கள்

ஏனென்றால்
“உண்மை மறைந்து
இருக்கும்
ஆனால் ஒரு
போதும் உண்மை
இறந்து விடாது”
என்பதை மட்டும்
நினைவில்
கொள்ளுங்கள்
என்றார் கலிலியோ

---------  இன்னும் வரும்
---------  16-11-2018
///////////////////////////////////////////////////////////


November 15, 2018

திருக்குறள்-பதிவு-49


                           திருக்குறள்-பதிவு-49

இல்லாதவன்
விவசாயம் செய்வதற்காக
இலவச மின்சாரம்
வழங்கப்பட்டது ;
இல்லாதவன்
பொருளாதாரத்தில்
முன்னேற வேண்டும்
என்பதற்காக
இலவச ஆடுகள்
இலவச மாடுகள்
வழங்கப்பட்டது;
இல்லாதவன் வெப்பத்தின்
தாக்கத்திலிருந்து
தன்னை காத்துக்
கொள்ள வேண்டும்
என்பதற்காக
இலவச மின்விசிறி
வழங்கப்பட்டது.;
இல்லாதவனுடைய
சமையல் வேலையை
எளிமைப்படுத்துவதற்காக
இலவச மிக்ஸி
இலவச கிரைண்டர்
வழங்கப்பட்டது.;
இல்லாதவன் நாட்டு
நடப்பை தெரிந்து
கொள்வதற்கு
இலவச தொலைக்காட்சி
வழங்கப்பட்டது ;
இல்லாதவனும்
இல்லாமை நீங்கி
இருப்பவனாக குடும்பம்
நடத்தி வாழ வேண்டும்
என்பதற்காக எவை
எல்லாம் தேவையானவையோ
அவைகள் அனைத்தும்
இலவசம் என்ற பெயரில்
உதவியாக வழங்கப்பட்டது

இல்லாதவனின் பிள்ளைகள்
ஏழ்மையில் வாடி
படிக்க இயலாமல்
இருந்து விடக்கூடாது
என்பதற்காக
இலவச கல்வி
வழங்கப்பட்டது;
பசியினால் படிப்பை
பாதியில் நிறுத்தக்கூடாது
என்பதற்காக
இலவச உணவு
வழங்கப்பட்டது.;
பள்ளிச் சீருடை
இல்லை என்பதற்காக
படிக்காமல் போய்
விடக்கூடாது என்பதற்காக
இலவச சீருடை
வழங்கப்பட்டது;
புத்தகம் வாங்க முடியாமல்
படிப்பு நின்று
விடக்கூடாது என்பதற்காக
இலவச பாடபுத்தகங்கள்
வழங்கப்பட்டது;
நீண்ட தூரம் சென்று
படிக்க இயலாமல்
படிப்பை நிறுத்தி விடக்
கூடாது என்பதற்காக
பேருந்தில்
பிரயாணம் செய்ய
இலவச பஸ் பாஸ்
வழங்கப்பட்டது.;
பேருந்து செல்ல
முடியாத இடங்களில்
உள்ள பிள்ளைகள்
படிக்காமல் படிப்பை
விட்டு விடக்கூடாது
என்பதற்காக
இலவச மிதிவண்டி
வழங்கப்பட்டது.;
தற்போது உள்ள
அறிவியல் நுட்பத்துடன்
போட்டி போட முடியாமல்
இருந்து விடக்கூடாது
என்பதற்காக அறிவை
வளர்த்துக் கொள்வதற்காக
இலவச மடிக்கணினி
வழங்கப்பட்டது.
இவ்வாறு இல்லாதவன்
பிள்ளைகளும்
படிப்பை பாதியில்
நிறுத்தி விடக்கூடாது
என்பதற்காக கல்வியின்
பல்வேறு நிலைகளில்
தேவைப்படும்
முக்கியமான அனைத்தும்
இல்லாதவர்களுக்கு
இலவசம் என்ற பெயரில்
உதவி வழங்கப்பட்டது

இல்லாதவனின்
ஏழைப் பெண் திருமணம்
செய்து கொள்வதற்காக
இலவச தாலி
உதவி என்ற பெயரில்
வழங்கப்பட்டது;

இவ்வாறு
இல்லாதவன் குடும்பம்
நடத்துவதற்கும்;
இல்லாதவன் பிள்ளை
படிப்பதற்கும்;
இல்லாதவன் பிள்ளை
திருமணம் செய்து
கொள்வதற்கும்;
இலவசம் என்ற பெயரில்
உதவி வழங்கப்பட்டது

இல்லாதவன் இந்த
சமுதாயத்தில் இல்லாமை
நீங்கி இருப்பவனாக
வாழ வேண்டும்
என்பதற்காகவும்;
இல்லாதவன் அடிமையாக
இருக்கக் கூடாது
என்பதற்காகவும்;
இல்லாதவன் இருப்பவனுடன்
சமாமாக ஆக வேண்டும்
என்பதற்காகவும்;
இலவசம் என்ற பெயரில்
உதவி வழங்கப்பட்டது.;

இல்லாதவன் இருப்பவனாக
மாற வேண்டும்
என்பதற்காக இலவசம்
என்ற பெயரில்
வழங்கப்பட்ட உதவி என்ற
சரியான ஒரு செயலை
தவறு என்று சொல்வதன்
மூலம் சரியான செயலை
தவறாக மாற்றி விடலாம்
என்று சில தவறானவர்கள்
ஒன்று கூடி தவறான
செயலைச் செய்கிறார்கள்
என்பதை நாம் உணர்ந்து
கொள்ள வேண்டும்

இல்லாதவன் எப்போதும்
இல்லாதவனாக
இருக்க வேண்டும்,
இல்லாதவன் எப்போதும்
அடிமையாக
இருக்க வேண்டும்
இல்லாதவன் எப்போதும்
இருபபவனுடன்
சரிசமமாக ஆகக்கூடாது
என்பதற்காக சொல்லப்பட்ட
வார்த்தை தான்
இலவசம் கொடுக்க
வேண்டாம் என்பதை
புரிந்து கொண்டால்
அதிகார வர்க்கத்தின்
சூழ்ச்சியும்,
பணக்கார வர்க்கத்தின்
சூதும் நமக்கு தெரியவரும்

மக்களுக்கு பயன்படும்
வகையில் கண்டு
பிடிக்கப்படும்
சரியான ஒரு செயலை
தவறு என்று சொல்வதற்கு
சமுதாயத்தில்
அந்தக் காலம் முதல்
முதல் இந்தக் காலம்
வரை சரியானவர்களாக
தங்களை இந்த
சமுதாயத்திற்கு
காட்டிக் கொண்டு
வாழ்ந்து கொண்டு
இருக்கும் தவறானவர்கள்
இந்த சமுதாயத்தில்
நிறைய எண்ணிக்கையில்
இருக்கிறார்கள் என்பதை
மட்டும் நாம் நினைவில்
கொள்ள வேண்டும்

---------  இன்னும் வரும்
---------  14-11-2018
///////////////////////////////////////////////////////////



November 13, 2018

திருக்குறள்-பதிவு-48


                       திருக்குறள்-பதிவு-48

உலகம் முழுவதும்
வாழும் மக்கள்
பெறும் இலவசங்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்,.

ஒன்று : இல்லாதவர்கள்
        பெறுவது.

இரண்டு: இருப்பவர்கள்
         பெறுவது.

இலவசம் என்பது
இல்லாதவர்களுக்காக
வழங்கப் படுவது
இருப்பவர்களுக்காக
வழங்கப்படுவது இல்லை

இல்லாதவர்களுக்காக
வழங்கப்படும்
இலவசத்தை
இருப்பவர்கள்
பெறும்போது
இருப்பவர்கள்
தங்களிடம்
இந்த பொருள்
இருக்கிறது
எனவே,
இந்தப் பொருளை
இல்லாதவர்களிடம்
கொடுங்கள் என்று
தான் சொல்ல
வேண்டும்

அவ்வாறு சொல்லாமல்
இருப்பவர்கள்
“இலவசம் கொடுக்க
வேண்டாம்”
என்று சொல்வதில்
உள்ள வார்த்தையின்
அர்த்தத்தை நன்றாக
உற்று நோக்கி
ஆராய்ந்து பார்த்தால்
அதிகார வர்க்கத்தின்
சூழ்ச்சியும்;
பணக்கார வர்க்கத்தின்
சூதும்;
அந்த வார்த்தையில்
இருப்பது புரியும்

எங்களுக்கு இலவசம்
வேண்டாம் என்று
இருப்பவர்கள் சொல்லும்
அந்த வார்த்தையில்
உள்ள அர்த்தம்
இது தான் அதாவது
“இல்லாதவன்
எப்போதும்
இல்லாதவனாக
இருக்க வேண்டும்
என்பதையும்; 
இல்லாதவன்
இருப்பவர்களுக்கு
சரிசமமாக
உயரக் கூடாது
என்பதையும்;
இல்லாதவன்
இருப்பவனுக்கு
எப்போதும் அடிமையாக
இருக்க வேண்டும்
என்பதையும்; “
குறிக்கும்

அந்தக் காலம் முதல்
இந்தக் காலம் வரை
இல்லாதவன் எழுந்து
இருப்பவனாக மாறும்
நிலையை அடைய
முயற்சிக்கும்
போதெல்லாம்
இருப்பவர்கள்
ஒன்று கூடி
இல்லாதவன்
இருப்பவனாக
மாறக் கூடாது;
இல்லாதவன்
இருப்பவனாக
மாறிவிட்டால்
நமக்கு சரிசமமாக
அமர்வான்;
நமக்கு அடிமையாக
இருக்க மாட்டான்;
நம் முன் கைகட்டி
நிற்க மாட்டான்;
நமக்கு மரியாதை
செலுத்த மாட்டான்;
என்பதற்காக
பல்வேறு கால
கட்டங்களில்,
பல்வேறு நிலைகளில்,
பல்வேறு ஆட்களை
தங்களுக்கு
சாதகமாக பயன்படுத்தி,
அவர்களை
“சரியான ஒரு
செயலை தவறான
செயல்”
என்று பேசவைத்து
இல்லாதவன்
இல்லாதவனாகவே
இருப்பதற்கான
வழிவகைகள்
காலம் காலமாக
இந்த உலகத்தில்
செய்யப்பட்டு
வந்திருக்கின்றன
என்பதை உலக
வரலாற்றை எடுத்துப்
பார்த்தாலே புரியும்.

தொலைக்காட்சி
இல்லாதவர்களுக்கு
தொலைக்காட்சி
பார்ப்பதற்காக
தொலைக்காட்சி
கொடுக்கும் செயலை
உதவி இலவசம்
என்ற பெயரில்
செய்யப்படுகிறது
என்றும் சொல்லலாம்
இலவசம் உதவி
என்ற பெயரில்
செய்யப்படுகிறது
என்றும் சொல்லலாம்

தொலைக்காட்சி வைத்து
இருப்பவர்களுக்கு
இலவசமாக
தொலைக்காட்சியை
கொடுக்கும் செயலை
இலவசம் என்று
மட்டுமே எடுத்துக்
கொள்ள முடியும்

இல்லாதவர்களுக்கு
தான் இல்லாத
பொருளை இலவசமாக
கொடுக்கும் போது
இலவசத்தின்
அருமை தெரியும்;
இருப்பவர்களுக்கு
எந்த பொருளை
இலவசமாக கொடுத்தாலும்
அவர்களுக்கு
இலவசமாக கொடுக்கும்
பொருளின் அருமை
தெரியாது

---------  இன்னும் வரும்
---------  13-11-2018
///////////////////////////////////////////////////////////