March 19, 2020

பரம்பொருள்-பதிவு-158


                ஜபம்-பதிவு-406
              (பரம்பொருள்-158)

உலூபி  :
“நீ எந்தவொரு
செயலைச் செய்யும்
போதும் அந்த செயல்
சரியான செயலாகத்
தான் இருக்கும் என்ற
காரணத்தினால் தான்
நீ எந்தவொரு
செயலைச் செய்யும்
போதும் நான்
எந்தவிதமான
தடையையும்
ஏற்படுத்தியதில்லை “

“இப்போது நீ செய்யப்
போகும் களப்பலி என்ற
செயலுக்குக் கூட நான்
தடையை ஏற்படுத்தவில்லை”

“தடையை ஏற்படுத்த
முடியாது என்பது
எனக்குத் தெரியும் “

“இருந்தாலும் நான் செய்த
செயல்கள் அனைத்தும்
பெற்ற மகனின் உயிரைக்
காப்பாற்றுவதற்காக
ஒரு தாய் செய்யும்
செயல்கள் தான்  ;
ஒரு தாய் செய்யும்
செயல்களைத் தான்
நானும் செய்தேன் ; “

“முடிந்தவரை முயற்சி
செய்தேன் உன்னுடைய
களப்பலியைத் தடுப்பதற்கு ;
முடியாது என்பதை
முயற்சி செய்தபின்
தான் தெரிந்து கொண்டேன் “

“நீ செய்யப் போகும்
களப்பலி என்ற செயல்
சரியானது தான்
என்பதை நான்
தாமதமாகத் தான்
தெரிந்து கொண்டேன்”

“பரந்தாமன் ஶ்ரீகிருஷ்ணன்
உன்னிடம் கையேந்தி
நின்றார் என்ற
காரணத்திற்காகவோ ;
உன்னுடைய தந்தை
ஒப்புதல் அளித்தார்
என்ற காரணத்திற்காகவோ  ;
உன்னுடன் இரத்த
சம்பந்தம் கொண்டவர்கள்
ஒப்புதல் அளித்தார்கள்
என்ற காரணத்திற்காகவோ ;
நான் உன்னை ஆசிர்வாதம்
அளித்து உன்னை
களப்பலிக்கு வழியனுப்பி
வைக்கப் போவதில்லை “

“என்னுடைய மகன்
அரவான் செய்யும் செயல்
சரியான செயலாகத் தான்
இருக்கும் என்ற
காரணத்திற்காகத் தான்
நான் உன்னை ஆசிர்வதித்து
களப்பலிக்கு வழியனுப்பி
வைக்கப் போகிறேன்”

“என்னுடைய மகன்
அரவான் ஒரு செயலைச்
செய்தால் அதில் ஆயிரம்
நன்மைகள் இருக்கும்
என்ற காரணத்திற்காகத் தான்
நான் உன்னை ஆசிர்வதித்து
களப்பலிக்கு வழியனுப்பி
வைக்கப் போகிறேன்”

“மற்றவர்கள் வாழ்வதற்காக
உன்னுடைய வாழ்க்கையையே
அழித்துக் கொள்வதற்காக
தயாராகிக் கொண்டிருக்கும்
உன்னுடைய செயலைக்
கண்டு நான் பெருமை
அடைகிறேன் என் மகனே”

“தியாகத்தின் உருவமாக
திகழ்ந்து கொண்டிருக்கும்
உன்னை பெற்று எடுத்ததற்காக
நான் மிகுந்த மகிழ்ச்சி
அடைகிறேன் என் மகனே”

“யாருக்கும் கிடைக்காத
மிகப்பெரிய பாக்கியம்
உனக்கு கிடைத்திருக்கிறது
ஆமாம் !
தாயே தன்னுடைய
மகனை களப்பலிக்கு
அனுப்பும் மிகப்பெரிய
பாக்கியம் உனக்கு
கிடைத்திருக்கிறது “

(என்று சொல்லி விட்டு
உலூபி சுவரில் மாட்டி
வைக்கப்பட்டிருந்த
வாளை எடுத்தாள் ;
தன்னுடைய கட்டை
விரலால் வாளில்
அழுத்தமாகக் கீறினாள் ;
உலூபியின் கட்டை
விரலில் இருந்து
இரத்தம் அருவியென
கொட்டியது இரத்தத்தால்
நனைந்திருந்த கட்டை
விரலால் உலூபி
தன்னுடைய மகன்
அரவானின் நெற்றியில்
இரத்தத்தால்
திலகம் இட்டாள் )

(இந்த உலகத்தை
காப்பாற்றுவதற்காக
தன்னுடைய இரத்தத்தையே
கொடுப்பதற்காக காத்துக்
கொண்டு இருக்கும்
அரவானின் நெற்றியில்
உலூபி தன்னுடைய
கட்டை விரலில் இருந்து
வழியும் இரத்தத்தால்
இரத்தத் திலகமிட்டாள்)

“செல் மகனே செல் !”

“இந்த உலகத்தை
காப்பாற்றக் கூடிய
மிகப்பெரிய பொறுப்பு
உன்னிடம்
ஒப்படைக்கப்பட்டிருக்கிறது”

“உனக்கு அளிக்கப்பட்ட
பொறுப்பை
நிறைவேற்றுவதற்காக
செல் மகனே செல் !”

“வருங்கால உலகத்தை
காப்பாற்றுவதற்காக
செல் மகனே செல் ! “

(தாயிடம் ஆசிகள் பெற்று
விட்டு அரவான்
உலூபியின் அறையை
விட்டு வெளியே
சென்று கொண்டிருந்தான் ;
அரவான் செல்லும்
திசையையே பார்த்துக்
கொண்டிருந்தாள் உலூபி ;
அவளையும் அறியாமல்
அவள் கண்களிலிருந்து
சிந்திய கண்ணீர் இந்த
பூமியை நனைத்தது)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 19-03-2020
//////////////////////////////////////////

March 18, 2020

பரம்பொருள்-பதிவு-157


              ஜபம்-பதிவு-405
            (பரம்பொருள்-157)

அரவான் :
“அம்மா உங்களை
நான் புரிந்து கொண்டவன்
என்பதால் கேட்டேன்”

“நீங்கள் அனைத்து
உண்மைகளையும்
புரிந்து கொள்பவர்
என்பதால் கேட்டேன் “

“நான் சொல்லும்
உண்மைகள் அனைத்தையும்
நீங்கள் புரிந்து கொள்வீர்கள்
என்பதால் கேட்டேன்”

“என்னைப் போலவே
நீங்களும் உண்மையை
உணர்ந்திருப்பீர்கள்  ;
களப்பலிக்கு என்னை
ஆசிர்வதித்து
வழியனுப்பி வைப்பீர்கள்
என்பதால் கேட்டேன் ; ”

“நான் நல்லது
செய்வதற்காக என்னை
ஆசிர்வதிக்க வேண்டும்
என்பதால் கேட்டேன்”

“இந்த உலகத்தையே
தனக்குள் வைத்து கட்டி
காப்பாற்றிக் கொண்டிருக்கும்
பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணனே
என்னைத் தேடி
வந்து நின்று - என்
முன்னால் தலை
குனிந்து நின்று
தன்னுடைய இரண்டு
கைகளையும் ஏந்தி நின்று
பாண்டவர்கள் சார்பாக
என்னுடைய உயிரை
களப்பலியாகத் தர
வேண்டும் என்று
யாசகம் கேட்டு
நின்றார் என்றால்
அவர் செய்த செயலின்
பின்னால் உள்ள
உண்மைகளைப் புரிந்து
கொள்ளுங்கள் அம்மா “

“வருங்கால உலகத்தில்
வாழக்கூடிய மக்கள்
அனைவரும் நிம்மதியாக
வாழ வேண்டும்
என்பதற்காகத் தான் ;
பாண்டவர்கள் சார்பாக
நான் களப்பலியாக
வேண்டும் என்று
என்னுடைய உயிரை
களப்பலியாகக் கேட்டு
பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணன்
என் முன்னால்
கையேந்தி நின்றார் “

“வருங்கால உலகத்தில்
வாழக்கூடிய ஒவ்வொரு
பெண்ணும் மானத்தோடு
வாழ வேண்டும்
என்பதற்காகவும் ;
பெண்கள் அனைவரும்
அச்சம் நீங்கி நிம்மதியாக
வாழ வேண்டும்
என்பதற்காகவும் ;
தன்னுடைய கற்புக்கு
எந்தவிதமான களங்கமும்
ஏற்படாமல் வாழ வேண்டும்
என்பதற்காகவும் தான்
பாண்டவர்கள் சார்பாக
நான் களப்பலியாக வேண்டும்
என்று என்னுடைய உயிரை
களப்பலியாகக் கேட்டு
பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணன்
என் முன்னால்
கையேந்தி நின்றார் “

“இந்த உலகத்தில்
அதர்மம் அழிய வேண்டும்
என்பதற்காகவும் ;
தர்மம் நிலைபெற்று
இருக்க வேண்டும்
என்பதற்காகவும் ;
பாண்டவர்கள் சார்பாக
நான் களப்பலியாக
வேண்டும் என்று
என்னுடைய உயிரை
களப்பலியாகக் கேட்டு
பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணன்
என் முன்னால்
கையேந்தி நின்றார்  

“வருங்கால உலகத்தில்
கெட்டவர்கள் அனைவரும்
அழிந்து நல்லவர்கள்
வாழக்கூடிய இடமாக - இந்த
உலகம் இருக்க வேண்டும்
என்பதற்காகவும்  ;
வருங்கால உலகம்
தீமைகள் அழிந்து
நல்லவைகள் பிறக்கும்
இடமாக இருக்க வேண்டும்
என்பதற்காகவும் ;
பாண்டவர்கள் சார்பாக
நான் களப்பலியாக
வேண்டும் என்று
என்னுடைய உயிரை
களப்பலியாகக் கேட்டு
பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணன்
என் முன்னால்
கையேந்தி நின்றார் “

“பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணனே
என் முன்னால் கையேந்தி
நின்றார் என்றால் என்
பிறவியின் நோக்கமான
களப்பலி எவ்வளவு
முக்கியமானது என்பதை
நீங்கள் தெரிந்து
கொள்ளுங்கள் அம்மா “

“பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணனே
என் முன்னால்
கையேந்தி நின்றார்
என்றால் என்னுடைய
களப்பலி இந்த உலகத்திற்கு
எவ்வளவு தேவையானது
என்பதைத் தெரிந்து
கொள்ளுங்கள் அம்மா”

“இந்த உலகத்தில் உள்ள
மக்கள் அனைவரும்
தங்களுடைய நன்மைக்காக
பரந்தாமன் கிருஷ்ணனிடம்
கையேந்தி யாசித்து
நிற்கும் போது இந்த
உலகத்தில் உள்ள மக்கள்
அனைவருடைய
நன்மைக்காக அந்த
பரந்தாமனே என்னிடம்
வந்து கையேந்தி
யாசித்து நின்றார் என்றால்
பாண்டவர்கள் சார்பாக
நான் களப்பலியாவது
எவ்வளவு அவசியம்
என்பதைத் தெரிந்து
கொள்ளுங்கள் அம்மா ”

“பரந்தாமன் கிருஷ்ணன்
மேற்கொண்டிருக்கும்
செயலுக்கும் என்னுடைய
பிறவியின் நோக்கத்திற்கும்
எந்தவிதத் தடையையும்
ஏற்படுத்தாமல்
ஆசிர்வதித்து வழியனுப்பி
வையுங்கள் அம்மா”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 18-03-2020
//////////////////////////////////////////

March 16, 2020

பரம்பொருள்-பதிவு-156


                ஜபம்-பதிவு-404
               (பரம்பொருள்-156)

உலூபி :
“என்ன வார்த்தை
சொல்லி விட்டாய்
என் மகனே ! “

“இந்த வார்த்தையை
உன்னால் எப்படி
சொல்ல முடிந்தது ? “

“என்னைப் பற்றித்
தெரிந்திருந்தும்
எப்படி இப்படி ஒரு
வார்தையை சொன்னாய் ? “

“நீ !  சொன்ன
வார்த்தைகளைக்
கேட்டு விட்டு - என்
இதயம் இன்னும்
வெடிக்காமல் இருக்கிறதே ? “

“நான் இன்னும்
இறக்காமல் 
இருக்கிறேனே ! “

“ஐயோ! நான்
என்ன செய்வேன் ?”

“என்னைச் சுற்றி
உள்ளவர்கள் அனைவரும்
என்ன வார்த்தைகளை
பேசக்கூடாதோ ? - அந்த  
வார்த்தைகளை எல்லாம்
பேசியதைக் கேட்டும்
என்னுடைய மனம்
கலக்கமடையவில்லை “

“ஆனால் நீ சொன்ன
இந்த ஒரு வார்த்தை
என்னுடைய மனதை
கலக்கமடையச்
செய்து விட்டது “

“உன்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைக்கச் சொல்கிறாய்
உலகத்தில் உள்ள
எந்தத் தாயாவது
தன்னுடைய மகனின்
வாழ்க்கையை
முடித்து வைப்பாளா ? “

“மகனின் உயிருக்கு
ஆபத்து என்றால்
தன்னுடைய உயிரைக்
கொடுத்தாவது தன்னுடைய
மகனுடைய வாழ்க்கையை
காப்பாற்றத் தானே எந்தத்
தாயும் முயற்சி செய்வாள்  

“இந்த உலகத்தில் உள்ள
எந்த ஒரு தாயையும்
எடுத்து கொண்டால்
தன்னுடைய மகனுடைய
உயிருக்கு ஆபத்து என்றால்
தன்னுடைய உயிரைக்
கொடுத்தாவது தன்னுடைய
மகனின் உயிரை காப்பாற்றத்
தானே முயற்சி செய்வாள்
அதையே தானே
நானும் செய்தேன் “

“அப்படி இருக்கும் போது
எப்படி தாயான என்னை
உன்னுடைய வாழ்க்கையை  
முடித்து வைக்கச் சொல்கிறாய் “

“பத்து மாதம் உன்னை
கஷ்டப்பட்டு பெற்றெடுத்து
மார்பிலும் தோளிலும்
போட்டு வளர்த்தது
எதற்காக ?
உன்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைத்து உன்னை
களப்பலிக்கு அனுப்பி
வைப்பதற்காகவா ? “

“நீ பேசிய பேச்சிலும்  ;
சிந்திய சிரிப்பிலும் ;
செய்த சேட்டையிலும் ;
என்னுடைய கணவர்
என்னுடன் இல்லாததை
மறந்து இருந்தேனடா
எதற்காக ?
இதற்கு காரணமான
உன்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைத்து உன்னை
களப்பலியாக அனுப்பி
வைப்பதற்காகவா ?”

“இந்த உலகத்தில்
எனக்கு ஆதரவாக
யாருமே இல்லாத
போதும் நீ ஒருவன்
எனக்காக இருக்கிறாய்
என்று கவலையை
மறந்து உனக்காகவே
வாழ்ந்து
கொண்டிருக்கிறேனே
எதற்காக?
இதற்கு காரணமான
உன்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைத்து உன்னை
களப்பலியாக அனுப்பி
வைப்பதற்காகவா ?”

“இந்த உலகமே நீ
தான் என்று - நீ
விடும் சுவாசக்
காற்றில் வாழ்ந்து
கொண்டிருக்கிறேனே
எதற்காக?
இதற்குக் காரணமான
உன்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைத்து உன்னை
களப்பலியாக அனுப்பி
வைப்பதற்காகவா ?”

“உன்னை களப்பலியாகக்
கொடுப்பதற்கு - இந்த
உலகத்தில் உள்ளவர்கள்
பல்வேறு நியாயங்களைக்
கற்பிக்கிறார்கள் ;
நீதி என்கிறார்கள் ;
நியாயம் என்கிறார்கள் ;
தர்மம் என்கிறார்கள் ;
ஆனால் யாரும் என்னுடைய
மனதை புரிந்து கொள்ளாமல்
என்னுடைய மனதை
புண்படுத்தும்படித் தான்
பேசிக் கொண்டிருக்கிறார்கள் “

“அவர்களைப் போலவே
நீயும் என்னைப் புரிந்து
கொள்ளாமல் உன்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைக்கச் சொல்கிறாய்  ;
களப்பலிக்கு ஆசிர்வாதம்
கேட்கிறாய் ; “

“நீ பேசும் பேச்சு
ஒரு தாயினுடைய மனதை
எந்த அளவிற்கு
பாதிப்பை ஏற்படுத்தும்
என்பது உனக்குத்
தெரியாதா மகனே ! “

“தெரிந்திருந்தால் நீ
இப்படி பேசி
இருக்க மாட்டாய் ? “

“இந்தத் தாயைப்
புரிந்து கொள் மகனே ! “

“இந்தத் தாயின் மனதைப்
புரிந்து கொள் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 14-03-2020
//////////////////////////////////////////