June 22, 2020

திருக்குறள்-நிறைநீர-பதிவு-1


            திருக்குறள்-நிறைநீர-பதிவு-1

“நிறைநீர நீரவர்
கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு”

------------திருக்குறள்
------------திருவள்ளுவர்

”நல்லவர் நட்பு
வளர்பிறை போல
நாளும் வளரும் ;
தீயவர் நட்பு
தேய்பிறை போல
நாளும் தேயும் ;
என்பதே இந்தத்
திருக்குறளுக்கு
பொதுவாக
சொல்லப்படும்
விளக்கம்”

“இந்தத் திருக்குறளுக்கு
கீழ்க்கண்டவாறும்
விளக்கம்
சொல்லலாம்”

“இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரும்
மூன்று
செயல்களைச்
செய்து
கொண்டிருக்கின்றனர்.
மூன்று
செயல்களையும்
ஒருவரே
செய்வதில்லை”.

“இரண்டு
செயல்களைச்
செய்பவர்கள்
ஒரு செயலைச்
செய்வதில்லை “

“ஒரு செயலைச்
செய்பவர்
இரண்டு
செயல்களைச்
செய்வதில்லை”

“மனிதர்கள்
செய்யும்
இரண்டு
செயல்கள்

ஒன்று  :
“அறிவுரை சொல்வது”

இரண்டு :
“குறை சொல்வது”

மனிதர்கள்
செய்யாத
ஒரு செயல்

ஒன்று :
“உதவி செய்வது”

“அறிவுரை சொல்வது
குறை சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்பவர்கள்
ஒரு செயலான
உதவியை செய்ய
மாட்டார்கள்”

“ஒரு செயலான
உதவியை
செய்பவர்கள்
அறிவுரை சொல்வது
குறை சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்ய மாட்டார்கள்”

“நாம் பல
ஆண்டுகளாக
புதியதாக
ஒரு தொழிலைத்
தொடங்க
வேண்டும்
என்று சிந்தனை
செய்து
கொண்டிருக்கிறோம் ‘”

“புதிய தொழிலைத்
தொடங்குவதற்கு
தகுந்த
சூழ்நிலைக்காகவும்
சரியான
காலத்திற்காகவும்
காத்துக்
கொண்டிருக்கிறோம்”

“புதிய தொழிலைத்
தொடங்குவதற்கு
பணத்தின்
வரவிற்காகக் காத்துக்
கொண்டிருக்கிறோம்”

“இடம் நேரம்
காலம் சூழ்நிலை
ஆகியவை
அமைந்த போது
பல்வேறு
இடையூறுகளையும்
கஷ்டங்களையும்
துன்பங்களையும்
கடந்து நாம் பல
ஆண்டுகள் சிந்தனை
செய்து முடிவு செய்து
வைத்திருந்த
தொழிலைத்
தொடங்குகிறோம் “

“அறிவுரை சொல்வது
குறை சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்பவர்கள்
புதியதாக
நாம் தொழிலைத்
தொடங்கும்
போது முதலில்
அறிவுரை
சொல்ல
வருவார்கள்”

“இது எல்லாம்
உனக்கு தேவையா?”

“தெரியாத
விஷயத்தை
ஏன் செய்கிறாய் “

“உனக்கு இது
ஒத்து வராது”

“யாரும் செய்ய
முடியுமா என்று
யோசிப்பதை நீ
ஏன் செய்கிறாய்”

“யாரும் செய்ய
முயற்சிக்காததை
நீ ஏன் செய்கிறாய்”

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------22-06-2020
/////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-34


              ஜபம்-பதிவு-526
        (அறிய வேண்டியவை-34)

(அனைவரும்
கிருஷ்ணன் மனதில்
தாங்கள் தான்
இருப்போம் ;
தாங்கள் தான்
இருப்போம் - என்று
ஒருவொருக்கொருவர்
சண்டையிட்டுக்
கொண்டு இருந்தனர்)

தர்மர் :
“கிருஷ்ணா எங்களுக்குள்
ஏற்பட்ட சண்டை தீர
வேண்டுமானால்
நீங்கள் மாயக்கண்ணாடி
முன்னால் வந்து
நிற்கத் தான் வேண்டும்”

கிருஷ்ணன் :
“நாம் எந்த விஷயத்தைத்
தெரிந்து கொள்ள
வேண்டுமோ - அந்த
விஷயத்தைத் தான்
தெரிந்து கொள்ள வேண்டும்”

“எந்த விஷயத்தைத் தெரிந்து
கொள்ளக் கூடாதோ
அந்த விஷயத்தைத்
தெரிந்து கொள்ள முயற்சி
செய்யக் கூடாது”

“இந்த விஷயமும்
அப்படித் தான் தெரிந்து
கொள்ளாமல் இருப்பது
நன்மை பயக்கும்”

திரௌபதி :
“நீங்கள் மாயக்கண்ணாடி
முன்னால் நின்று தான்
ஆக வேண்டும்  ;
உங்களுடைய மனதில்
யார் இருக்கிறார்கள்
என்பதை நாங்கள் தெரிந்து
கொள்ள ஆசைப்படுகிறோம் “

(அனைவருடைய
வற்புறுத்தலினால்
கிருஷ்ணன் மாயக்
கண்ணாடி முன்னால்
வந்து நின்றார்
மாயக்கண்ணாடியில்
சகுனி தெரிந்தார்)

அர்ஜுனன் :
“என்னது சகுனியா
என்ன மாய வித்தை
இது கிருஷ்ணா?”

சகாதேவன் :
“கிருஷ்ணா மாயம்
ஏதேனும் செய்கிறீர்களா?”

நகுலன் :
“நீங்கள் மாயம் செய்வதன்
காரணம் என்ன”

கிருஷ்ணன் :
“நான் தான் முன்பே
வேண்டாம் என்று
சொன்னேன் - நீங்கள்
தான் வற்புறுத்தினீர்கள்
நான் நின்றேன் ;
இப்போது நான் மாயம்
செய்கிறேன் என்கிறீர்கள் “

திரௌபதி :
“பரந்தாமா உண்மையைச்
சொல்லுங்கள்”

கிருஷ்ணன் :
“மாயக்கண்ணாடியில்
சகுனி தெரிவது
உண்மை தான்  
நான் எந்தவிதமான
மாயமும் செய்யவில்லை”

“என்னை அழிப்பதற்காக
திட்டங்களைத் தீட்டி
என்னையே நினைத்துக்
கொண்டிருப்பவன் சகுனி”

“நான் என்ன திட்டம்
தீட்டப் போகிறேன் ;
அதனை எப்படி
செயல் படுத்தப்
போகிறேன் ; என்பதை
சிந்தித்து அதனை
எதிர்கொள்வதற்கு
எத்தகைய
தீட்டங்களைத் தீட்டலாம்
என்பதை யோசித்து
எனக்கு எதிராக
திட்டங்களைத் தீட்டிக்
கொண்டிருப்பவன் சகுனி”

“நான் என்ன
செய்யப் போகிறேன்
என்பதை அறிந்து
கொள்வதற்காக
தூக்கத்தில் கூட
என்னையே சிந்தித்துக்
கொண்டிருப்பவன் சகுனி”

“மற்றவர்கள் அனைவரும்
துன்பம் வந்தால்
மட்டும் தான் என்னை
நினைப்பார்கள்”

“ஆனால் சகுனி
அப்படி அல்ல
இன்பத்தில் இருந்தாலும்
துன்பத்தில் இருந்தாலும்
என்னை வீழ்த்துவது
ஒன்றையே வாழ்க்கையின்
குறிக்கோளாகக் கொண்டு
எனக்கு எதிராக
சதித் திட்டங்களை
தீட்டுவதற்காக
நான் என்ன
செய்யப் போகிறேன்
என்பதை
சதாசர்வ காலமும்
யோசித்துக் கொண்டு
என்னையே சிந்தித்துக்
கொண்டிருக்கிறான் சகுனி”

“என்னை எப்படி
எண்ணுகிறார்கள்
என்பது முக்கியமல்ல  ;
கணநேரமும் என்னை
மறக்காமல் இருப்பவர்கள்
யார் என்பது
தான் முக்கியம்”

“என்னை கணநேரமும்
மறக்காமல் இருப்பவர்கள்  
என்னுடைய
மனதில் இருப்பவர்கள் “

“அதனால் தான்
சகுனி என்
மனதில் இருக்கிறான்”

“உயர்ந்தவர் தாழ்ந்தவர்
ஏழை பணக்காரர்
படித்தவர் படிக்காதவர்
நல்லவர் கெட்டவர்
என்ற பேதம் இல்லாமல்
யாராக இருந்தாலும்
இறைவனை
சதா காலமும்
சிந்தித்துக்
கொண்டிருந்தால்
இறைவனுடைய
மனதில்
அவர் இருப்பார்
என்பதே
இந்தக் கதையின்
மூலம் நாம்
அறிய வேண்டிய
உண்மை ஆகும் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 22-06-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-33


              ஜபம்-பதிவு-525
         (அறிய வேண்டியவை-33)

உத்தரை :
“முனிவர் ஒருவர்
எனக்கு
மாயக்கண்ணாடி
ஒன்றை பரிசாகக்
கொடுத்தார் ;
அந்த மாயக்கண்ணாடி
முன்னால் வந்து
யார் நிற்கிறாரோ
அவருடைய
மனதில் யார்
இருக்கிறாரோ
அவருடைய
உருவம்
தெரியும்”

“என்னுடைய
கணவர் மனதில்
யார் இருக்கிறார்
என்பதை அறிந்து
கொள்ளும்
ஆவலில்
மாயக்கண்ணாடி
முன்னால் வந்து
நில்லுங்கள்
என்றேன் “

திரௌபதி :
“நின்றாரா?”

உத்தரை :
“நின்றார்”

திரௌபதி :
“தெரிந்து
கொண்டாயா?”

உத்தரை :
“தெரிந்து
கொண்டேன்”

திரௌபதி :
”யார்
தெரிந்தார்கள்”

(உத்தரை
வெட்கத்தால்
தலை குனிந்தாள் )

திரௌபதி :
“அபிமன்யுவின்
மனதில் யார்
இருக்கிறார்
என்பதை
மாயக்கண்ணாடி
வைத்தா தெரிந்து
கொள்ள வேண்டும்”

உத்தரை :
“சும்மா
விளையாடினேன்”

திரௌபதி :
“உங்கள்
விளையாட்டிற்கு
அளவே
இல்லாமல்
போய் விட்டது

(பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும்
சிரிக்கின்றனர்;

அப்போது
கிருஷ்ணன்
அந்த அறைக்குள்
வருகிறார்)

கிருஷ்ணன் :
“அனைவரும்
சந்தோஷமாக
இருக்கிறீர்கள்
போல இருக்கிறது
நானும்
அதில் கலந்து
கொள்ளலாமா?”

“என்ன விஷயம்
அனைவரும்
சிரிப்பில் மிதந்து
கொண்டிருக்கிறீர்கள்”

திரௌபதி :
“பரந்தாமா
உத்தரைக்கு
முனிவர் ஒருவர்
மாயக்கண்ணாடி
ஒன்றை பரிசாகக்
கொடுத்து
இருக்கிறார் ;
அந்த மாயக்கண்ணாடி
முன்னால் வந்து
யார் நிற்கிறாரோ
அவருடைய
மனதில் யார்
இருக்கிறாரோ
அவருடைய
உருவம் தெரியும்
அதைப் பற்றித்
தான் பேசிக்
கொண்டிருந்தோம்
நீங்கள்
வந்து விட்டீர்கள் “

“நீங்கள் அந்த
மாயக்கண்ணாடி
முன்னால்
வந்து நில்லுங்கள்
உங்கள் மனதில்
யார் இருக்கிறார்
என்பதைப்
பார்த்து
விடலாம்”

அர்ஜுனன் :
“பரந்தாமன்
கிருஷ்ணன்
மனதில் யார்
இருப்பார்கள்
நான் தான்
இருப்பேன்
என்னைத் தவிர
வேறு யார்
இருப்பார்கள்”

பீமன் :
“நான் தான்
பரந்தாமன்
கிருஷ்ணனுக்கு
பிடித்தவன்
என்னைத் தவிர
வேறு யாரும்
இருக்க
மாட்டார்கள்”

தர்மர் :
“நான் தான்
தெரிவேன் “

திரௌபதி :
“என்னை விட்டால்
வேறு யாரும்
பரந்தாமன்
கிருஷ்ணன்
மனதில் யாரும்
இருக்க
மாட்டார்கள் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 22-06-2020
//////////////////////////////////////////