மக்களின் ஆன்மீக நிலை பஞ்சபுதங்களாலும், நட்சத்திரங்களாலும் அடிப்படையில் மாறுபடுவதால் ஒரே வித்தை (பயிற்சி) பலருக்கு பலவிதமான அனுபவத்தைக் கொடுக்கும். ஆனால் முடிவு ஒன்று தான்.
ஆண்கள் பாதரச அம்சம். பெண்கள் கந்தக அம்சம். பெண்களின் சக்தி மாதம் ஒரு முறை குறைந்து விடுகிறது. அதனால் யோகமுறையில் அவர்களால் முன்னேறிச் செல்ல முடியவில்லை.
யோக நிலையில் மிக உயர்ந்த நிலையாகக் கருதப் படுவது நெற்றிக் கண் திறப்பது. நெற்றிக் கண் திறப்பது என்பது பெரிய செயல்.
நெற்றிக் கண்ணைத் திறக்கப் பல்வேறு உபாயங்கள் மனிதர்களால் செய்யப்பட்டு வருகின்றன.
திபெத் நாட்டில் வாழும் லாமாக்கள் நெற்றியில் ஓட்டை போட்டு குச்சியால் அடைக்கின்றனர்.
பழங்குடி மக்கள் புருவ மத்தியில் சூடு போடுகின்றனர்.
வைணவர்கள் சுழுமுனை நாடியில் நாமம் தரிக்கின்றனர்.
சாக்தர்கள் குங்குமம் இடுகின்றனர்.
பெண்கள் நெற்றி சுட்டி அணிகின்றனர்.
பிராமணர்கள் காயத்ரி மந்திரம் சொல்லி உபநயனம் செய்கின்றனர்.
யோகிகள் சுழுமுனை மந்திரத்தாலும், பிராணாயாமத்தாலும் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.
ரசவாதிகள் ரசமணியால் திறக்கின்றனர்.
மருத்துவர்கள் கண்ணுப் புழை என்னும் மூலிகையால் திறக்கின்றனர்.
ராஜ குருக்கள் வைரக் கற்களால் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.
மந்திரவாதிகள் ருத்திர பஸ்பத்தால் திறக்கின்றனர்.
சைவ மடாதிபதிகள் ஒரு முக ருத்திராட்சத்தால் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.
மீனவர்கள் சுறாமீனின் நெற்றிக் கல்லால் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.
கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஒளி மூலம் கண்ணைத் திறக்கப் பயிற்சி செய்கின்றனர்.
நாட்டு மருந்துக் கடையில் சுருமாக்கல் அல்லது அஞ்சனக்கல் எனக் கேளுங்கள். 5 கிராமிற்குக் குறையாமல் 10 கிராமிற்கு மிகாமல் ஒரே கல்லாக வாங்கவும். கோணல் மாணலாக இருக்கும். அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். வாங்கிய கல்லை உப்புத் தாளில் தேய்த்துக் கொள்ளவும்.
அதிலுள்ள ஒளிக்கற்றை சூட்சுமமாக வெளிப்படும். தரையில் விரிப்பு விரித்துத் தலையணை வைக்காமல் விளக்குகளை அணைத்து இருளில் படுக்கவும். வடக்கு தவிர இதரப் பக்கம் தலை வைத்து மல்லாந்து படுக்க வேண்டும்.
இரவில் சுமார் 7 மணிக்குப் பால் சிறிது சாப்பிட்டு 10 மணிக்கு மேல் இப்பயிற்சியை ஆரம்பிக்கலாம். அஞ்சனக் கல்லை கண்களை மூடியோ அல்லது மூடாமலோ இரு புருவங்களுக்கு மத்தியில் வைக்கவும். சுருமாக்கல்லில் உள்ள கண்ணுக்குத் தெரியாத தெய்வீக ஒளிக்கற்றைகள் நெற்றிக் கண் ஜவ்வை சிறிது சிறிதாக கிழிக்கும். ஒளி சிறிது சிறிதாக வெளிவரும்.
அதே கல்லை உபயோகித்துப் பின் மறுநாளும் பயிற்சி செய்யலாம். அவசரப் பட வேண்டாம். பொறுமையும் நிதானமும் அடக்கமும் தேவை.
ஒளி நிலை கூடுதலாகி நெற்றிக்குள் பு+ரண சந்திரன் போல் காட்சி கொடுக்கும். அருள்நிலை பெருகும். 90 நாள் பயிற்சியில் வெற்றி பெறுவீர்கள் .
பொதுவாக ஏதாவது ஒரு பொருளைப் படுத்த நிலையில் நெற்றி நடுவில் வைத்தால் அதில் ஒரு உறுத்தல் ஏற்படும். பின் அங்குள்ள இருள் விலகும்.
குண்டலினி யோகப் பயிற்சிக்கு மட்டும் கால வரையறை கிடையாது. மற்ற எல்லா வித்தைகளையும் 90 நாள் தொடர்ச்சியான சாதனையால் முடித்து விடலாம். இந்த காலத்தில் முடிக்க முடியாதவர்கள் மன ஊக்கத்துடன் பயிற்சியைத் தொடரலாம்.
thaangal edum pathivzugal anaithum miga sirandha pokishangal, thangalin pani thodara ellam valla sivan arul kidaikkatum. vazhthukal!!!!
ReplyDeletethanks
Deleteவணக்கம் நான் கே.சீ மோகன்
ReplyDeleteஇலங்கையில் இருக்கிறேன்
சுருமாக்கல் அல்லது அஞ்சனக்கல் இலங்கையில் எங்கே உள்ளது தங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள். இல்லாவிடி யார்ரிடமாவது கேட்டு சொல்லுங்கள்
வணக்கம் ஐயா,
ReplyDeleteஎவ்வளவு நேரம் அஞ்சனக்கல்லை புருவங்களுக்கு மத்தியில் வைக்க வேண்டும் ஐயா?
நன்றி