November 27, 2011

ஐயப்பன்- பூஜைமுறைகள்- பதிவு-6



                              ஐயப்பன்- பதிவு-6

“”பதிவு ஆறை விரித்துச் சொல்ல
   ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

ஐயப்பன் - பூஜை முறைகள்
சபரி மலை யாத்திரைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரைக்கு செல்வதற்கு முன்பு விரத நாட்களில் யாரேனும் பசி என்று வந்தால் அவர்கள் பசியை தீர்க்க வேண்டும்
தங்களால்  முடிந்தால் குறைந்தது பத்து பேருக்காகவாவது அன்ன தானம் செய்ய வேண்டும் வசதி படைத்தவர்கள் விரத நாட்களில் ஏதாவது ஒரு நாளில் ஐயப்பனுக்கு ஒரு பூசை செய்ய வேண்டும்
சபரி மலை யாத்திரைக்கு செல்வதற்கு முன்பு ஐயப்ப பக்தர்களால் செய்யப் படும் இந்த பூசைக்கு தாகம் வைப்பு (வெள்ளம் குடி) என்று பெயர்
இந்த வெள்ளம் குடி பூசையை ஒரு சுத்தமான இடத்தில் வைத்து துhய்மையான இடத்தில் வைத்துத் தான் செய்ய வேண்டும் ஐயப்பனுக்கு விரதம் இருப்பவர்களை அழைத்து அவர்கள் மனம் குளிரும்படி  தகுந்த விருந்து வைத்து அனைவரின் மனமும் குளிரும் படிச் செய்ய வேண்டும்

பூஜை முறை :
பூஜை என்றால் என்ன என்ற விவரங்களைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்
பூஜை,
                            1. ஆத்மார்த்தம் பூஜை 
                            2. பரார்த்தம் பூஜை
என இரு வகைப்படும்
1. ஆத்மார்த்தம் பூஜை
பூஜை செய்பவர்  தனக்கு நன்மை உண்டாக வேண்டுமென்றும் தன் குடும்பத்திற்கு நன்மை உண்டாக வேண்டுமென்றும் தன்னுடைய வீட்டில் வைத்து தன்னுடைய வருமானத்திற்கு ஏற்ற விதத்தில் தன்னுடைய சக்திக்கு ஏற்ற விதத்தில் பூஜை செய்வது ஆத்மார்த்தம் பூஜை எனப்படும்
இந்த பூஜையில் பிம்பம் சக்கரம் ஆகியவை யந்திரமாக பயன்படுத்தப் பட்டு பூஜை செய்யப் படுகிறது இந்த பூஜை முறைக்கு உள்ள விதிமுறைகள் ஆலய பூஜை முறைக்கு உள்ள விதிமுறைகளை ஒத்து இருக்கும்
மந்திரம் யந்திரம் தந்திரம் ஆகியவை இந்த பூஜை முறையில் சூட்சும விஷயமாகப் பயன் படுத்தப் படுகிறது

2. பரார்த்தம் பூஜை
பரார்த்தம் பூஜை எனப்படுவது ஆலயத்தில் செய்யப்படும் பூஜை ஆகும் ஆலயத்தில் இருக்கும் கடவுள் சிலைகளுக்கு அதாவது ஆலய மூர்த்திகளுக்கு ஆகம முறைப்படி ஆச்சாரியர்களைக் கொண்டு செய்யப்படும் பூஜை ஆகும்

இந்த பூஜை முறையிலும் மந்திரம் யந்திரம் தந்திரம் ஆகியவை சூட்சும விஷயமாகப் பயன்படுத்தப் படுகிறது

பூஜை செய்பவர்  உடல் சுத்தமும், உளச் சுத்தமும் கொண்டவராக இருக்க வேண்டும்
உடல் சுத்தம் - பெற நீராடுதல் திருநீறு இட்டுக் கொள்ளுதல் உருத்திராட்சம் அணிந்து கொள்ளுதல் துளசி மணி மாலை அணிந்து கொள்ளுதல் ஆகியவை இன்றியமையாதது ஆகும்
உளச் சுத்தம் - பெற ஐம்பூலன்களை அடக்குதல் தீட்சை பெறுதல் ஆகியவை இன்றியமையாதது ஆகும்

பஞ்ச சுத்தி
பூஜை செய்பவர்  பஞ்ச சுத்தி எனப்படும்
                                1. ஆத்ம சுத்தி
                                2. ஸ்தான சுத்தி
                                3. திரவிய சுத்தி
                                4. மந்திர சுத்தி
                                5. இலிங்க சுத்தி
ஆகிய சுத்திகளை அறிந்து தான் எத்தகைய பூஜைகளையும் செய்ய வேண்டும்
கோயிலில் செய்யப்படும் இந்த பஞ்ச சுத்தியை அடிப்படையாக வைத்தே அந்த விதிமுறைகளை பின்பற்றியே வீட்டில் எந்த தெய்வத்திற்கு பூஜை செய்தாலும் ஐயப்ப பூஜை செய்தாலும் இந்த பஞ்ச சுத்தியை அடிப்படையாக வைத்தே இதன் விதிமுறைகளைப் பின்பற்றியே செய்யப் படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

பஞ்ச சுத்தி என்றால் என்னவென்றும் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இப்பொழுது பார்ப்போம்
1.ஆத்ம சுத்தி
கோயில்களில் உள்ள தெய்வ சிலைகள் எவ்வளவு துhய்மையாகவும் ஆகம விதிப்படி எவ்வளவு பரிசுத்தமாக வைக்கப் பட்டிருக்கிறதோ அதைப் போலவே  பூஜை செய்பவர்  உடல் சுத்தமும் உளச் சுத்தமும் ஆன்ம சுத்தமும் கொண்டவராக இருக்க வேண்டும்

2. ஸ்தான சுத்தி
பூஜை செய்யும் ஆலயமும் ஆலயத்தில் கர்ப்ப கிரகத்தில் இருக்கும் தெய்வ சிலையும் ஆலயத்தில் உள்ள மற்ற தெய்வ சிலைகள் இருக்கும் இடங்களும் எப்பொழுதும் சுத்தமான நிலையில் இருக்க வேண்டும்  சுத்தமான நீரைக் கொண்டு கழுவி அனைத்து இடங்களையும் சுத்தமாக வைக்க வேண்டும்

3. திரவிய சுத்தி
பூஜைக்குரிய பாத்திரங்கள் பூஜைக்குரிய பொருட்கள் ஆகியவற்றை சுத்தமான நீரால் கழுவி வைக்க வேண்டும்

4. மந்திர சுத்தி
எந்த தெய்வத்திற்கு பூஜை செய்யப் போகிறோமோ அந்த தெய்வத்திற்குரிய பீஜாட்சர மந்திரத்தையோ மூல மந்திரத்தையோ பத்து முறை தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்

5. இலிங்க சுத்தி
அபிஷேக பாத்திரத்தில் நீரை நிரப்பி புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நீரை அதில் ஆவாகனம் செய்து இலிங்கத்தின் மேல் ஊற்றி அபஷேகம் செய்ய வேண்டும் இலிங்கத்தை துhய்மை செய்து சுத்தமான ஆடை கொண்டு இலிங்கத்திற்கு ஆடையை கட்ட வேண்டும்

ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் விரத நாட்களில் ஏதாவது ஒரு நாளில் வீட்டில் செய்யப்படும் வெள்ளம் குடி என்ற பூஜையும் ஆலயத்தில் செய்யப்படும் இந்த பூஜை முறைகளைப் பின்பற்றியே இந்த விதிமுறைகளை அடிப்படையாக வைத்தே செய்யப் படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

அடுத்து சபரி மலை யாத்திரைக்கு செல்பவர்கள் சுமந்து செல்லும் இருமுடி பற்றிய விளக்கங்களைப் பற்றி பார்ப்போம்

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
    போற்றினேன் பதிவுஆறும் தான்முற்றே “”

No comments:

Post a Comment