போகர்-7000- சாயா தரிசனம் - நிழல் தவம் - பதிவு-1
"“”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
சாயா தரிசனம் - விளக்கம் :
சாயா என்றால் நிழல் என்று பொருள் .
சாயா தரிசனம் என்றால் நிழலை தரிசனம் செய்து பெறப்படும் சக்திகள் என்று பொருள்.
சாயா தரிசனம் - நிழல் தவம் ,விஸ்வரூப தரிசனம் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப் படுகிறது .
உலகில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களால் மட்டுமே சாயா தரிசனம் செய்யப்படுகிறது .
அதற்கு கீழ்க்கண்டவை முக்கிய காரணங்களாக சொல்லப் படுகிறது:
1 சாயா தரிசனத்தின் மகிமைகள், சாயா தரிசனத்தை செய்வதால் கிடைக்கும் சக்திகள் மக்களில் பலருக்கு தெரியவில்லை.
2 ஆன்மீக உலகில் சாயா தரிசனத்தைப் பற்றிய விளக்கங்கள் சரியான வகையில் இல்லாமல் இருக்கிறது.
3 சாயா தரிசனத்தைப் பற்றிய விளக்கங்கள், செய்யும் முறைகள் ,செய்வதால் கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றை விளக்கும் புத்தகங்கள் இந்த உலகத்தில் அரிதாக உள்ளன.
4 சாயா தரிசனத்தின் சூட்சும ரகசியங்கள் குரு – சீடர் பரம்பரை மூலமாக ரகசியமாக பாதுகாக்கப் பட்டு வருகிறது.
5 சாயா தரிசனத்தை அறிந்து செய்பவர்கள் குறைவு .அதிலும் சாயா தரிசனத்தை தொடர்ந்து செய்து பலன் அடைந்தவர்கள் அதை விட மிகக் குறைவு ஆகும்.
6 சாயா தரிசனத்தை விளக்கமாக சொல்லித் தரக்கூடிய ஆசிரியர்கள் இல்லை.
சாயா தரிசனம் இந்த உலகத்திற்கு கிடைத்த விதம் பற்றியும் ,
சாயா தரிசனத்தின் சிறப்புகள் பற்றியும் ,
சாயா தரிசனத்தைச் செய்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் ,
போகர் தன்னுடைய --போகர் - 7000 --- என்ற புத்தகத்தில் தெளிவாக விளக்கி இருக்கிறார்.
சாயா தரிசனத்தை என்னுடைய குரு மூலமாக நான் கற்றுக் கொண்டு ,சாயா தரிசனத்தைச் செய்து ,n>,மகிமைகளை உணர்ந்து கொள்ள ஆசைப்படுபவர்,
பயன் பெறும் வகையில் எளிமையாகவும், புரிந்து கொள்ளும் வகையிலும் அனைவருக்கும் என்னால் முடிந்த அளவு சூட்சும ரகசியங்களை உடைத்து விளக்குகிறேன் .
பயன் பெறும் வகையில் எளிமையாகவும், புரிந்து கொள்ளும் வகையிலும் அனைவருக்கும் என்னால் முடிந்த அளவு சூட்சும ரகசியங்களை உடைத்து விளக்குகிறேன் .
சாயா தரிசனத்தை தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர் தெரிந்து செய்து பலன்களைப் பெற்று மகிழ்ச்சி அடையட்டும்.
சாயா தரிசனத்தை தொடர்ந்து படித்து சாயா தரிசனத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சாயா தரிசனம் - வரலாறு :
பாடல் -1சாயா தரிசனத்தை இந்த உலகம் பயன்படுத்துவதற்கு வெளிப்படுத்தப் பட்ட வரலாறை கீழ்க்கண்ட பாடல்களின் மூலம் போகர் கூறுகிறார் :
”””தென்திசையில் அகத்தியனார் முனிவர்தானும்
செப்பினார் இந்தமுறை செப்பினார்பாரே
பாரேதான் சரநுhலாம் பஞ்சபட்சி
பாரினிலே மாணாக்கள் பிழைக்கஎன்று
நேரேதான் சாத்திரத்தை பாடிவைத்தார்
நீதியுடன் சாயாவின் தரிசனத்தை
சேரேதான் தரிசனத்தைக் காண்பதற்கு
செம்மலுடன் வழிசொன்னார் மைதான்இல்லை
கூரேதான் மையினது மார்க்கம்தன்னை
கூறினேன் காலங்கி கடாட்சந்தானே”””””
-----------------போகர்- 7000--------
“””””தென்திசையில் அகத்தியனார் முனிவர்தானும்
செப்பினார் இந்தமுறை செப்பினார்பாரே”””””””
தெற்கு திசையில் இருந்த வாழ்ந்த அகத்தியர் என்ற மாமுனிவர் சாயா தரிசனம் என்ற ஒரு பயிற்சி முறை என்ற ஒன்று உள்ளது என்று கூறியுள்ளார்
”””பாரேதான் சரநுhலாம் பஞ்சபட்சி
பாரினிலே மாணாக்கள் பிழைக்கஎன்று
நேரேதான் சாத்திரத்தை பாடிவைத்தார்””””
சரம் பார்த்தலின் ரகசியத்தை எல்லாம் சொல்லும் பஞ்ச பட்சி சாஸ்திரம் என்ற அரிய நுhலை ,இந்த உலகத்தில் உள்ளவர்கள் கற்று பின் பற்றி உயர்வடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பாடி வைத்தார் அகத்தியர்.
மாணாக்கள் என்றால் படித்து பின்பற்றுபவர்கள் என்று பொருள் .
போகர் இந்த இடத்தில் படித்து பின்பற்றும் மக்களை எல்லாம் மாணாக்கள் அதாவது மாணாக்கர்கள் என்று குறிப்பிடுகிறார்
பிழைக்க என்றால் மரணம் அற்று வாழக் கூடிய ஒரு நிலை என்று பொருள்.

மரணம் இல்லாத ஓரு நிலையை ,மரணத்தை வென்று வாழக் கூடிய ஒரு நிலையை ,அடைவதற்கு தேவையான சாத்திரத்தை பாடி வைத்தார் அகத்தியர் என்கிறார் போகர்.
சாத்திரம் என்றால் எழுதியதை செயல்படுத்திப் பார்த்தால் உண்மை விளங்கும் என்று பொருள்.
”””””நீதியுடன் சாயாவின் தரிசனத்தை
சேரேதான் தரிசனத்தைக் காண்பதற்கு
செம்மலுடன் வழிசொன்னார் மைதான்இல்லை”””
இத்தகைய சிறப்பு வாய்ந்த சாத்திரங்கள் பலவற்றின் ரகசியங்களை எல்லாம் சொன்ன அகத்தியர் சாயா தரிசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்றும்,
சாயா தரிசனத்தை முறைப்படி செய்து எவ்வாறு பலன்களை அடைய வேண்டும் என்றும் ,
இந்த உலகத்திற்கு தேவையான ஆன்மீக விளக்கங்களை அகத்தியர் எடுத்துக் கூறவில்லை.
சாயா தரிசனத்தை முறைப்படி செய்து எவ்வாறு பலன்களை அடைய வேண்டும் என்றும் ,
இந்த உலகத்திற்கு தேவையான ஆன்மீக விளக்கங்களை அகத்தியர் எடுத்துக் கூறவில்லை.
“””””””கூரேதான் மையினது மார்க்கம்தன்னை
கூறினேன் காலங்கி கடாட்சந்தானே”””””
மையினது என்றால் சாயா தரிசனத்தின் மையமான கருப்பொருள் அறிவதற்கான வழி என்று பொருள்.
சாயா தரிசனத்தின் மையமான கருப்பொருளை காலங்கி நாதரின் சீடரான போகராகிய நான் அவருடைய அருள் ஆசியினால் சாயா தரிசனத்தின் சிறப்புகளையும் ,மகிமைகளையும் சாயா தரிசனத்தை செய்யக் கூடிய முறைகளையும் கூறினேன் என்கிறார் போகர்.
பாடல் - 2
சாயா தரிசனத்தின் வரலாற்றை பாடல்கள் மூலம் விவரித்துக் கூறும் போகர், மேலும் விவரித்து அடுத்த பாடல்களில் சாயா தரிசனத்தின் வரலாற்றை கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
””தானான சித்துமுனி கும்பயோனி
தாரணியில் கருவுதனை மறைத்தும்போட்டார்
மானான காலங்கி எந்தன்நாதர்
மகாதேவர் கடாட்சமது கிருபையாலே
தேனான கருக்குருவை யானும்கற்று
தெளிவான மாணாக்கர் பிழைக்கஎன்று
பானான சாஸ்திரங்கள் யாவும்பார்த்து
பாருலகில் பாலகர்க்குப் பாலித்தேனே””””””
--------போகர்-7000-------
“””””தானான சித்துமுனி கும்பயோனி
தாரணியில் கருவுதனை மறைத்தும்போட்டார்””””
சித்தர்களின் தலைவரும் சித்தர்களில் உயர்வான தவ நிலையில் உள்ளவரும் சித்தர்களில் சிறந்தவரும் ஆகிய அகத்திய முனிவர் சாயா தரிசனத்தில் உள்ள மையக் கருவையும் ,சூட்சும ரகசியங்களையும் சொல்லாமல் மறைத்து வைத்தார்
””மானான காலங்கி எந்தன்நாதர்
மகாதேவர் கடாட்சமது கிருபையாலே
தேனான கருக்குருவை யானும்கற்று
தெளிவான மாணாக்கர் பிழைக்கஎன்று
பானான சாஸ்திரங்கள் யாவும்பார்த்து
பாருலகில் பாலகர்க்குப் பாலித்தேனே””””””
என்னுடைய குருவான காலங்கி நாதரின் ஆசியாலும் ,அவருடைய அருளாலும் ,சாயா தரிசனத்தின் மையக் கருவை நான் கற்றுக் கொண்டேன் .
பிழைக்க என்றால் மரணம் அற்று வாழக் கூடிய ஒரு நிலை என்று பொருள்.
மரணம் இல்லாத ஓரு நிலையை ,
மரணத்தை வென்று வாழக் கூடிய ஒரு நிலையை அடைவதற்கு வேண்டிய பயிற்சி முறைகளை ,
இந்த உலகத்தில் உள்ளவர்கள் கற்று உயர்வடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில்,
இந்த உலகத்தில் உள்ளவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளும் வகையில் ,
புரிந்து செயல்படுத்தும் வகையில்,
சாஸ்திரங்கள் பலவற்றை அலசி ஆராய்ந்து பார்த்து ,
இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு தனது பாடல்களில் சாயா தரிசனத்தைப் பற்றி பாடி வைத்தேன் என்கிறார் போகர்.

""“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”""
No comments:
Post a Comment