February 28, 2012

இயேசு கிறிஸ்து- பகவத்கீதை-கடமையைச் செய்- பதிவு-17


இயேசு கிறிஸ்து- பகவத் கீதை -பதிவு-17
      
                                “”பதிவு பதினேழை விரித்துச் சொல்ல
                                                                      ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
இயேசு தர்மம் என்றால் என்ன என்பதைப் பற்றியும் ,
தர்மம் எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் ,
தர்மத்தை எந்த முறையைப் பின்பற்றி செய்தால்
பலன் கிடைக்கும் என்பதைப் பற்றியும் ,
எத்தகைய முறையைப் பின்பற்றி  செய்யப்படும்
தர்மத்தை ஆண்டவர்  ஏற்றுக் கொள்வார்  என்பதைப் பற்றியும் ,

தர்மத்தை எந்த வழியைப் பின்பற்றி செய்தால்
பலன் இல்லை என்பதைப் பற்றியும் ,
எத்தகைய தர்மத்தை ஆண்டவர்  
ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதைப் பற்றியும் ,
இயேசு கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார் :

வசனம் - 1:

மனுஷர்  காண வேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் ; செய்தால் , பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
                                                                            -------- மத்தேயு - 6:1 ------   
இந்த சமுதாயத்தில் உள்ள மக்கள் தன்னைப்
           போற்ற வேண்டும் ;
           புகழ வேண்டும் ;
           பாராட்ட வேண்டும் ;
வியந்து பார்க்க வேண்டும் ;
ஆச்சரியத்தில் மூழ்க வேண்டும் ;
என்ற எண்ணத்தை மனதில் கொண்டு
தவறான கண்ணோட்டத்தை மனதில் நிறுத்தி

தர்மம் செய்ய வேண்டும் என்ற உண்மையான எண்ணம் இல்லாமல் ;
உதவி செய்ய வேண்டும் உண்மையான உள்ளம் இல்லாமல் ;
ஆதரவு காட்டி அரவணைக்க வேண்டும் என்ற அன்பு இல்லாமல் ;
கண்ணீர்த் துளிகளை கைகளால் துடைக்க வேண்டும்
என்ற கருணை இல்லாமல் ;
வறுமையை நீக்கி ஏற்றத்தைக் கொடுக்க வேண்டும்
என்ற சிந்தனை இல்லாமல் ;
அறியாமை இருளை நீக்கி , அறிவு விளக்கை ஏற்ற வேண்டும்
என்ற பொது நலம் இல்லாமல் ;
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டை நீக்கி
தாழ்ந்தவனை துhக்கி விட வேண்டும் என்ற மனப்பான்மை இல்லாமல் ;
எந்த வித உயர்ந்த குறிக்கோளும் இல்லாமல் ;
நல்ல மனம் இல்லாமல் ;
எந்த வித பிரதி பலனும் இல்லாமல் செய்ய வேண்டும்
என்ற உயர்ந்த நோக்கம் இல்லாமல் ;

குறுகிய மனப்பான்மைக் கொண்டு ,
புகழ் பெற வேண்டும் ,
பெயர்  பெற வேண்டும் ,
அதன் மூலம் தன் வாழ்வாதார நிலையை
உயர்த்திக் கொள்ள வேண்டும் ,
தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் - என்ற
நிலையில் இருந்து தர்மம் செய்யக் கூடாது .

அவ்வாறு தர்மம் செய்வதால் ஒரு பலனும் இல்லை
இது புண்ணிய கணக்கிலும் சேராது
பரலோகத்தில் இருக்கிற பிதாவும் இதை
ஏற்றுக் கொள்ள மாட்டார்  என்கிறார்  இயேசு .



வசனம் - 2:

ஆகையால் நீ தர்மஞ் செய்யும் போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர்  ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வது போல , உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே ; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
                                                         ------மத்தேயு - 6 : 2--------

எப்படி தர்மம் செய்யப் போகிறேன் ;
என்ன தர்மம் செய்யப் போகிறேன் ;
எப்படிப்பட்ட தர்மம் செய்யப் போகிறேன் ;
எந்த விதத்தில் தர்மம் செய்யப் போகிறேன் ;
என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக ,

பத்திரிக்கைகளில் பெரிய அளவில் விளம்பரங்கள் கொடுப்பதும் ;
பெரிய அளவுகளில் கட் - அவுட்கள் வைப்பதும் ;
கவிதைகள் பல இயற்றி புகழ்ந்து கொள்வதும் ;
தொலைக் காட்சிகளில் புகழ் மாலைச் சூட்டிக் கொள்வதும் ;

வீதிகள் தாரை தம்பட்டம் முழங்க ,
மேளதாளங்கள் வாசிக்க ,
ஆடிப் பாடியும் ,
பூ மாலையால் தரையில் கோலம் போட்டும் ,
பாமாலையால் மேடையில் வாய் வீச்சு வீசியும் ,
தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்டு
செய்யப் படும் தர்மம் ஒரு பலனையும் அளிக்காது
அதன் பலனை அவர்கள் அடைய மாட்டார்கள் .

பொய் வேஷம் போட்டுக் கொண்டு ,
கபட வார்த்தை பேசிக் கொண்டு ,
நயவஞ்சக வேலை செய்து கொண்டு ,
மனதில் காழ்ப்புணர்ச்சியை வைத்துக் கொண்டு ,
அருவெறுக்கத் தக்க குணங்களை மனதில் இருத்திக் கொண்டு ,
பலனை கணக்கில் வைத்துக் கொண்டு ,
செய்யப் படும் தர்மத்திற்கு உரிய தண்டனையை
ஆண்டவன் நிச்சயம் கொடுப்பார் - என்று
உங்களுக்கு சத்தியமாக , நிச்சயமாக , உண்மையாக ,மெய்யாக
உங்களுக்குச் சொல்கிறேன் என்கிறார் இயேசு .



வசனம் - 3:

தர்மம் எப்படி செய்யக் கூடாது என்று சொன்ன இயேசு
தர்மம் எப்படி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்:

நீயோ தர்மஞ் செய்யும் போது , உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக் கடவது.”
                                                                          -------மத்தேயு - 6 : 3-------
புகழை எதிர்பார்க்காமல்
அமைதியான நிலையில்
             தர்ம சிந்தனையுடன் ;
             கருணை மனப்பான்மையுடன் ;
             தீதில்லா எண்ணத்துடன் ;
             கள்ளமில்லா உள்ளத்துடன் ;
             கரையில்லா கருணையுடன் ;
             வாழ்த்தில்லா செய்கையுடன் ;
             ஆடம்பரமில்லா நடத்தையுடன் ;

தர்மமானது அந்தரங்கமாகவும்
ஒருவரும் அறியாமலும்
பிறருக்கு தெரியாத விதத்திலும்
தர்மமானது ரகசியமாக
அந்தரங்கமாக இருக்க வேண்டும்

இதனை ஒரு உவமை மூலம் இயேசு விளக்குகிறார் .


ஒரு மனிதன் உடலில் இரண்டு கைகள் இருக்கின்றன ;
சில சமயம் இரண்டு கைகளும் இணைந்து செயலாற்றுகின்றன ;
சில சமயங்களில் இரண்டும் தனித்தனியாக செயல்படுகின்றன ;
உடலில் தான் இரண்டு கைகளும் உள்ளன
அவ்வாறு இருக்கும் பொழுது ஒரு கை அறியாமல்
மற்றொரு கையால் எவ்வாறு உதவுவது தர்மஞ் செய்வது
உதவ வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால்
உடனே ஒரு கையால் பொருளோ ,பணமோ
அள்ளிக் கொடுத்து விட வேண்டும்
உதவி செய்யலாமா வேண்டாமா என்று யோசிக்கக் கூடாது .

அதாவது அனிச்சைச் செயலாக நடந்து விட வேண்டும் ,
அனிச்சைச் செயலாக செய்து விட வேண்டும் ,
தீயை தொட்டவுடன் எப்படி கை உடனே எடுத்துக் கொள்கிறதோ
அவ்வாறே உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால்
உடனே ஒரு கையால் செய்து விட வேண்டும் .

யோசித்தால் மனது மாறி விடும்
செய்யலாமா வேண்டாமா ?
செய்தால் நன்மையா ?
செய்யா விட்டால் துன்பமா ?
இதனால் தனக்கு ஏதாவது இழப்பு ஏற்படுமா?
போன்ற சிந்தனைகள் எழுந்து விட்டால் ,
எண்ணங்கள் ஓட ஆரம்பித்து விட்டால் ,
அறிவு வேலைச் செய்ய ஆரம்பித்து விட்டால் ,
நாம் உதவி செய்வது கடினமே !

அதனால் தான் ,
ஒரு கை அறியாமல் மற்ற கையால் செய்ய வேண்டும்.
அதாவது அனிச்சைச் செயலாக செய்து விட வேண்டும் .
மேலும் வலது கையா? இடது கையா?
நல்ல கையா ? கெட்ட கையா? என்பதை எல்லாம் பார்க்கக் கூடாது
தர்மம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால்
அனிச்சைச் செயலாக உடனே செய்து விட வேண்டும் என்கிறார்  இயேசு .

ஓவியம் வரைபவன் தன் ஓவியத்தின் கீழே
தன் பெயரை போட்டுக் கொள்கிறான்.
கவிதை எழுதுபவன் ,
கட்டுரை எழுதுபவன் ,
கதை எழுதுபவன் ,
அதன் கீழே தன் பெயரை போட்டுக் கொள்கிறான் .
தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக ,
தனக்கு புகழ் உண்டாக்க ,
தனக்கு பெயர்  கிடைக்க ,
பெயர்  போட்டுக் கொள்கிறான் .

இந்த உலகத்தை அழகாக ,
பிரமிப்பாக படைத்த இறைவன் ,
எந்த இடத்திலும் தன் பெயர்  போட்டுக் கொள்ளவில்லை .
அதைப்போல , தர்மம் செய்பவர்
ஆடம்பரமின்றி அடக்கமாகச் செய்ய வேண்டும் என்கிறார்  இயேசு .



பவத் கீதை – கிருஷ்ணர்:   
இரண்டாவது அத்யாயம்  ( ஸாங்க்ய யோகம் ) - சுலோகம்-47
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந!         
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோஸ்த்வகர்மணி !!

உனக்கு கர்மங்களை ஆற்றுவதில் தான் பொறுப்பு உண்டு
அவற்றின் பயன்களில் ஒரு காலும் உரிமையில்லை .
ஆகவே , நீ கர்மங்களின் பயன்களைக் கோருவதற்குக் காரணமாக ஆகாதே! 
என்பது இதற்கு பொருள் .

இந்த சுலோகம் தான்  ,
“”கடமையைச் செய்;பலனை எதிர்பார்க்காதே””
என்று பொருள் கொள்ளப்படுகிறது

கடமையைச் செய்
பலனை எதிர்பார்க்காதே -என்பது
வாழ்க்கையில் ஒவ்வொரும் பின்பற்ற வேண்டியது ;
கடைப் பிடிக்கப் பட வேண்டியது ;
அறிந்து உணர்ந்து சிந்திக்கப்பட வேண்டியது ;

பொதுவாக கேட்கப் படும் கேள்வி
நாம் ஒரு நாள் வேலை செய்கிறோம்
அதற்குரிய கூலியை பலனை எவ்வாறு பெறாமல் செய்வது?
ஒரு மாதம் அலுவலகத்தில் நாயாக திரிந்து ,
பேயாக அலைந்து ,
வியர்வையை இரத்தமாக்கி உழைக்கிறோம் .
அந்த மாத இறுதியில் ,
உழைப்பிற்கான கூலியை சம்பளத்தை எவ்வாறு பெறாமல் செல்வது ?

கடமையை செய்து விட்டு பலனை எதிர்பார்க்காதே
என்றால் எப்படி பொருந்தும்
நடை முறை வாழ்க்கைக்கு எவ்வாறு ஒத்து வரும்

சொல்லில் குறை உள்ளதா ,
வாக்கியத்தில் பிழை உள்ளதா ,
என்று கேட்கத் தோன்றும்
இப்படிப் பட்ட கருத்துக்கள்
சமுதாயத்தில் மக்கள் மனங்களில் நிலவுகின்றது
இதற்கான விளக்கத்தை கீழ்க்கண்டவாறு சொல்லலாம் .

கருத்து – 1:
நாம் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கிறோம்
நம் முன் செல்பவர்  கால் இடறி கீழே விழுந்து விடுகிறார் .
நாம் ஓடிச் சென்று அவரைத் துhக்கி விட்டு ,
அவருக்கு வேண்டிய முதலுதவி
அவர்  குணம் பெற சரியாக
என்ன செய்ய வேண்டுமோ ?
அதை செய்ய வேண்டும் .
பிறகு நீங்கள் தனியாக செல்ல முடியுமா ?
நடக்க முடியுமா ? என்று கேட்டு விட்டு அவரை
வழி அனுப்பி வைத்து விட்டு சென்று விட வேண்டும் .

நாம் நம் வழியைப் பார்த்து அந்த இடத்தை
விட்டு அகன்று விட வேண்டும் .
நாம் அவருக்கு உதவி செய்ததின் பயனாக
அவர்  நன்றி சொல்வார்  என்றும் ,
நன்றி என்ற வார்த்தையை எதிர்பார்த்தும்
நன்றி என்ற வார்த்தையை சொல்லவில்லையெனில்
நன்றி சொல்லவில்லையே என்று
நினைத்துக் கொண்டும் இருக்கக் கூடாது .

நாம் நம் கடமையாகிய உதவியை செய்து விட்டோம் .
அதற்கு பிரதிபலனாகிய பலனை நன்றியை எதிர்பார்க்கக் கூடாது .
அப்பொழுது நாம் செய்த உதவிக்கு உரிய பலன்
அதாவது புண்ணியம் நிச்சயம் உண்டு .

இது தான் கடமையைச் செய்
பலனை எதிர்பார்க்காதே என்று பொருள் .



கருத்து - 2 :
நாம் ஏழை மாணவர்  சிலரை படிக்க
வைக்க வேண்டும் என்று நினைக்கிறோம் ;

மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்க்கைத் தேவைகளை
நிறைவேற்றிக் கொடுக்க ஆசைப்படுகிறோம் ;

ஏழைப் பெண்களுக்கு ,
திருமணம் ஆகாத பெண்களுக்கு ,
திருமணம் செய்ய முயலுகிறோம் ;

சமுதாயத்தால் புறக்கணிக்கப் பட்டவர்கள் ,
வறுமையால் தள்ளாடுபவர்கள் ,
வாழ்வை வெறுத்தவர்கள் ஆகியவர்களுக்கு
உதவி செய்ய ஆசைப்பட்டால்
தனித்து தனிமையாக
யாரும் அறியாமல் செய்து விட வேண்டும் .

                               மயில்கள் ஆட ,
                               குயில்கள் பாட ,
                               அன்னங்கள் நடை பயில ,
                              தோரணங்கள் கட்டி ,
                              விளம்பரங்கள் செய்து ,

                                                         அன்பில் உயர்ந்தவனே ;
                                                         ஆண்மையில் சிறந்தவனே ;
                                                         இதயத்தில் இருப்பவனே ;
                                                         ஈவதில் கர்ணனே ;
                                                        உலகம் தொழுபவனே ;
                                                        ஊரெல்லாம் வாழ்த்துபவனே ;
                                                         எளியவர்க்கு இரங்குபவனே ;
                                                         ஏழைக்கு உதவுபவனே ;
                                                                           ஐசுவரியத்தை அளிப்பவனே ;
                                                         ஓற்றுமையின் இலக்கணமே ;
                                                         ஓய்வுஒழிச்சலின்றி உழைப்பவனே ;
                                                         ஓளஷதகுணம் உடையவனே ;
            
                    என்று புகழ் வார்த்தை பாடாமல்
                   ஆடம்பரம் இல்லாமல்
                   அமைதியாக செய்ய வேண்டும் .

இத்தகைய வாழ்த்துக்கள் ,
பாராட்டுகள் ,
போற்றுதல்கள் ,
புகழ் மாலைகள் ,
கிடைக்கும் என்று நினைத்தும் ,

இத்தகைய செயலைச் செய்யச் சொல்லியும் ,
இத்தகைய செயல்களைச் செய்தும் ,
உதவி செய்து புகழையும் ,
புகழுக்காக உதவியும் ,
செய்யக் கூடாது .

உதவி செய்ய வேண்டும்
அதற்குரிய போற்றுதலையும் ,புகழையும்
எதிர்பார்க்கக் கூடாது என்கிறார்
பகவத் கீதையில் கிருஷ்ணர்.



இயேசு கிறிஸ்து-பகவத்கீதையில் கிருஷ்ணர்:
இயேசு தர்மம் செய்யும் பொழுது
இடது கை செய்வது வலது கைக்கு தெரியாமல்
எவ்வித புகழையும் , போற்றுதலையும்
எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும் என்கிறார்.

அவ்வாறே ,
பகவத் கீதையில் கிருஷ்ணரும்
நாம் நம் கடமையை , உதவியை,  தர்மத்தைச் செய்யும் பொழுது
அதற்குரிய பலனை
புகழை போற்றுதலை எண்ணி செய்யக் கூடாது
என்கிறார்.


                        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                           போற்றினேன் பதிவுபதினேழு  ந்தான்முற்றே “”




February 26, 2012

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-அகழ்வாரை-பதிவு-16





               இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-அகழ்வாரை-பதிவு-16
      
                      “”பதிவு பதினாறை விரித்துச் சொல்ல
                                                         ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

பிதாவே , இவர்களை மன்னியும் , தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.”
                                                                                    --------லுhக்கா----23 : 34

                          கண்களில் கருணை இல்லாதவர் ;
                          இதயத்தில் இரக்கம் இல்லாதவர் ;
                           உள்ளத்தில் அன்பு இல்லாதவர்  ;

                           தவறுகள் பல செய்து
                           தன்னை உயர்த்திக் கொண்டவர் ;

                          கால்கள் பல பிடித்து
                           பதவிகள் பல பெற்றவர் ;

                          அடிமை நிலையை உருவாக்கி
                          ஆதிக்க வர்க்கத்தின்
                          அதிகார போதையில்
                          சிக்கித் திளைத்தவர் ;

எண்ணத்தால் கூட தீண்ட முடியாத செயல்கள் பல செய்து
சமுதாயத்தில் தன்னை உயர்ந்தவன் - என்று
அடையாளப் படுத்திக் கொண்டவர் ;

தவறுக்கு மேலான தவறுகள் பல செய்து
உத்தமன் என்ற பொய் வேடம் தரித்து
நல்லவர்  என்ற பெயரில் உலாவரும் கசடர்கள் ;

                                     தன்மானம் இழந்து
                                     பதவிக்காக பல பேர் முன்பு பல்லிளித்து
                                     கால்கள் பல பிடித்து
                                     பதவி மோகத்தில் திளைத்து
                                      சுகத்தில் சுழன்றாடி வரும் வீணர்கள் ;

ஓன்று சேர்ந்து
அன்பின் திருவுருவை ,
மாசற்ற மாணிக்கத்தை ,
கருணைக் கடலை ,
இரக்கத்தின் உதாரணத்தை ,
சிலுவை சுமக்க வைத்து
சிலுவையில் அறைந்து
சந்தோஷத்தில் திளைத்தனர் ;
மகிழ்ச்சியில் நீராடினர் ;
இயேசுவை
அவமான வார்த்தைகளால் துhற்றினர்  ;
மனது ஒவ்வாத சொற்களைக் கூறினர் ;

                                        இத்தனை அட்டூழியங்கள் ;
                                        அவமான சொற்கள் ;
                                        உடலை காயப் படுத்திய காயங்கள் ;
                                        மனதை வருத்திய வார்த்தைகள் ;
                                        ஏளனப் பேச்சுக்கள் ;
                                       ஆகிய அனைத்தையும்
                                       தாங்கிய பிறகும் கூட
                                      பிதாவே , இவர்களை மன்னியும்
                                      என்கிறார்  இயேசு .


தனக்கு துன்பம் செய்தவரையும்  ;
கொடுமையான இன்னல்களுக்கு உட்படுத்தியவரையும் ;
ஆற்றொணத் துயரை கொடுத்தவரையும் ;
வலியில் கண்களில் இரத்தத்தை வர வழைத்தவரையும் ;
வருத்தத்தால் இதயத்தில் கவலையை உண்டாக்கியவரையும் ;
மன்னிப்பது என்பது சாதாரண மனிதனால் முடியாது .

                                          அன்பே உருவாக  ,
                                          கருணையே வடிவமாக ,
                                          இரக்கமே புன்னகையாக ,
                                          அன்பே உள்ளமாக ,
                                          பாசமே பண்பாக ,
                                          கொண்ட இறைவனாகிய இயேசு கிறிஸ்துவால்
                                          மட்டும் தான் முடியும் .
                                         அவரால் மட்டுமே முடிந்தது .

மேலும் இயேசு ,
மன்னிப்பை எதற்கு கேட்கிறார் ;
மன்னிப்பை பிதாவின் மூலமாக ஏன் அருளச் சொல்கிறார் ;
அதை மேலும் விளக்குகிறார் ;
தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் இருக்கிறார்களே என்றார் .



தவறு - தப்பு :
தவறு , தப்பு என்ற
இரண்டு இருக்கிறது .

தவறு:
தவறு என்பது தவறி செய்வது .
தவறு என்பது நம்மை அறியாமல் செய்யும் பிழை .

நமக்கே தெரியாமல்
நாம் உணராமல் செய்யும் பிழை .

மண்ணினால் செய்யப் பட்ட பானை நம் கை தவறி
கீழே விழுந்து விடுகிறது
இது நாம் அறியாமல் செய்யும் பிழை .

தப்பு:
தப்பு என்பது தெரிந்து செய்யும் பிழை .
தப்பு என்பது நாம் தெரிந்து செய்யும் பிழை .

மண்ணினால் செய்யப்பட்ட பானையை நாம் வேண்டும் - என்றே
துhக்கி போட்டு உடைப்பது
இது நாம் தெரிந்து செய்யும் பிழை .

தவறு என்று சுய உணர்வு இன்றி செய்வது
தப்பு என்பது சுய உணர்வுடன் செய்வது

தவறு செய்தவன் மீண்டும் ஒரு முறை அந்த செயல்
நடைப் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
திருந்த வேண்டும் .
தப்பு செய்தவன் தான் செய்த செயலுக்கு
மனம் வருத்தப் பட வேண்டும்
தப்பு செய்து விட்டேன் என்று
உள்ளம்  வருந்த வேண்டும் .
வருந்தியாகணும் .


இயேசுவை துன்பப் படுத்தியவர்கள் அனைவரும்
தாங்கள் செய்தது தவறு என்றும் ,
நீக்க முடியாத பெருங்குற்றத்தை செய்கிறோம் என்றும் ,
கழிக்க முடியாத பாவத்தை புரிகிறோம் என்றோம்
சுய நினைவு இன்றி செய்கிறார்கள்.

ஆகவே , அவர்களை மன்னியும் என்கிறார்  இயேசு .

                                          தன்னுடைய ,
                                          சுய உணர்வு இன்றி
                                          செய்யப் பட்ட செயல்
                                          எவ்வளவு   
                                          கொடுமையானதாக இருந்தாலும்
                                         அதை மன்னித்து அருளும் படி கேட்கும்
                                         இந்த இடத்தில்
                                         இந்த நிகழ்வில்
                                         இந்த அவனியை
                                         காக்க வந்த ஆண்டவர்
                                         நல் வழிப் படுத்த வந்த துhயவர்
                                         என்பதை நிலைப் படுத்தி
                                        நிலை நாட்டினார்  இயேசு .



திருவள்ளுவர்:
           “”””அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
                  இகழ்வார்ப் பொறுத்தல் தலை””””
                                                            --------திருவள்ளுவர்----திருக்குறள்----

வீடு கட்டி வாழ்வதற்காக ஆழ குழிகள் தோண்டுபவரும் ;
வியாபாரம் செய்து உயர்வடைவதற்காக
கட்டிடங்கள் கட்ட நிலத்தை தோண்டுபவரும் ;
விவசாயம் செய்து வாழ்வதற்காக நிலத்தை ஆழ உழுபவரும் ;
விவசாயத்திற்கு தேவையான தண்ணீரைப் பெற
கேணியைத் தோண்டுபவரும் ;
எரிபொருள்கள் பெற நிலத்தை தோண்டுபவரும் ;
உலோகங்கள் பெற நிலத்தை தோண்டுபவரும் ;
கல்விக் கூடங்கள் கட்ட நிலத்தை தோண்டுபவரும் ;
கோயில்கள் கட்ட நிலத்தை தோண்டுபவரும் ;

நிற்பது அதே நிலத்தில் தான்
தன்னைத் தோண்டுகிறாரே
தன்னை வருத்துகிறாரே - என்று
வருத்தப் படாமல் அவரைத் தள்ளி விடாமல்
அவர்  நிலையாக இருக்க உதவுவதும் இதே நிலம் தான் .

அதைப் போல ,
தனக்கு துன்பம் செய்தவரை ;
தனக்கு தீமைகள் செய்தவரை ;
தன்னை வருத்தப்பட வைத்தவரை ;
தன்னை கண்ணீர் விட வைத்தவரை ;
தன்னை அவமானப் படுத்தியவரை ;
தனக்கு துன்பங்கள் கொடுத்தவரை ;
தனக்கு தொல்லைகள் கொடுத்தவரை ;
தன்னை முன்னேற விடாமல் தடுத்தவரை ;
தன்னை அழிக்க நினைத்தவரை  ;
தன்னை ஏளனப் படுத்தி சிரித்தவரை ;
தன்னை களங்கப் படுத்தி களித்தவரை ;
தன்னை உதாசீனப் படுத்தி நகைத்தவரை   ;
தன்னை கடுஞ்சொற்களால் சிதைத்தவரை ;

இத்தகைய செயல்கள் செய்தவரை ;
வாழ்வில் சந்தித்தாலும்
அவர்கள் மேல் கோபப்படாமல்

அவர்கள் அறியாமல் செய்யும்
தவறு இது என்று உணர்ந்து
அவர்கள்  செய்யும் செயலை மன்னித்து
மறந்து வாழ்வது தான் தலை சிறந்த பண்பாகும் .

நிலம் தன்னை காயப் படுத்தியவரின்
செயலை மன்னித்து மறந்து அவர்களை எப்படி
தாங்கிக் கொள்கிறதோ
அதைப் போல ,
நாமும் , நம்மை காயப் படுத்தியவர்களின்
செயலால் கோபப்படாமல்
அவர்கள் செயலை மன்னித்து
மறந்து விடுதல் தலை சிறந்த பண்பாகும் .



இயேசு கிறிஸ்து - திருவள்ளுர் :
இயேசு ,
தன் உடலை காயப்படுத்தியவர்களையும்
உள்ளத்தை துன்பப்பட வைத்தவர்களையும்
தான் மன்னித்ததோடு மட்டுமில்லாமல்
பிதாவிடம் அவர்களை மன்னியும் என்று கேட்டு ,
அறியாமல் செய்யும் பிழைகளை மன்னிக்க வேண்டும் என்று தன்
வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினார்


அவ்வாறே
திருவள்ளுவரும் ,
உடலை காயப்படுத்தியவர்களையும் ,
உள்ளத்தை வருத்தப்பட வைத்தவர்களையும் ,
மன்னித்து அவர்கள் மேல் கோபப்படாமல் இருப்பது தலை சிறந்த பண்பாகும்
என்கிறார்  .


                       “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                     போற்றினேன் பதிவுபதி  னாறும்முற்றே “”