இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-அகழ்வாரை-பதிவு-16
“”பதிவு பதினாறை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
இயேசு கிறிஸ்து :
“பிதாவே , இவர்களை மன்னியும் , தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.”
--------லுhக்கா----23 : 34
கண்களில் கருணை இல்லாதவர் ;
இதயத்தில் இரக்கம் இல்லாதவர் ;
உள்ளத்தில் அன்பு இல்லாதவர் ;
தவறுகள் பல செய்து
தன்னை உயர்த்திக் கொண்டவர் ;
கால்கள் பல பிடித்து
பதவிகள் பல பெற்றவர் ;
அடிமை நிலையை உருவாக்கி
ஆதிக்க வர்க்கத்தின்
அதிகார போதையில்
சிக்கித் திளைத்தவர் ;
எண்ணத்தால் கூட தீண்ட முடியாத செயல்கள் பல செய்து
சமுதாயத்தில் தன்னை உயர்ந்தவன் - என்று
அடையாளப் படுத்திக் கொண்டவர் ;
தவறுக்கு மேலான தவறுகள் பல செய்து
உத்தமன் என்ற பொய் வேடம் தரித்து
நல்லவர் என்ற பெயரில் உலாவரும் கசடர்கள் ;
தன்மானம் இழந்து
பதவிக்காக பல பேர் முன்பு பல்லிளித்து
கால்கள் பல பிடித்து
பதவி மோகத்தில் திளைத்து
சுகத்தில் சுழன்றாடி வரும் வீணர்கள் ;
ஓன்று சேர்ந்து
அன்பின் திருவுருவை ,
மாசற்ற மாணிக்கத்தை ,
கருணைக் கடலை ,
இரக்கத்தின் உதாரணத்தை ,
சிலுவை சுமக்க வைத்து
சிலுவையில் அறைந்து
சந்தோஷத்தில் திளைத்தனர் ;
மகிழ்ச்சியில் நீராடினர் ;
இயேசுவை
அவமான வார்த்தைகளால் துhற்றினர் ;
மனது ஒவ்வாத சொற்களைக் கூறினர் ;
இத்தனை அட்டூழியங்கள் ;
அவமான சொற்கள் ;
உடலை காயப் படுத்திய காயங்கள் ;
மனதை வருத்திய வார்த்தைகள் ;
ஏளனப் பேச்சுக்கள் ;
ஆகிய அனைத்தையும்
தாங்கிய பிறகும் கூட
பிதாவே , இவர்களை மன்னியும்
என்கிறார் இயேசு .
தனக்கு துன்பம் செய்தவரையும் ;
கொடுமையான இன்னல்களுக்கு உட்படுத்தியவரையும் ;
ஆற்றொணத் துயரை கொடுத்தவரையும் ;
வலியில் கண்களில் இரத்தத்தை வர வழைத்தவரையும் ;
வருத்தத்தால் இதயத்தில் கவலையை உண்டாக்கியவரையும் ;
மன்னிப்பது என்பது சாதாரண மனிதனால் முடியாது .
அன்பே உருவாக ,
கருணையே வடிவமாக ,
இரக்கமே புன்னகையாக ,
அன்பே உள்ளமாக ,
பாசமே பண்பாக ,
கொண்ட இறைவனாகிய இயேசு கிறிஸ்துவால்
மட்டும் தான் முடியும் .
அவரால் மட்டுமே முடிந்தது .
மேலும் இயேசு ,
மன்னிப்பை எதற்கு கேட்கிறார் ;
மன்னிப்பை பிதாவின் மூலமாக ஏன் அருளச் சொல்கிறார் ;
அதை மேலும் விளக்குகிறார் ;
தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் இருக்கிறார்களே என்றார் .
தவறு - தப்பு :
தவறு , தப்பு என்ற
இரண்டு இருக்கிறது .
தவறு:
தவறு என்பது தவறி செய்வது .
தவறு என்பது நம்மை அறியாமல் செய்யும் பிழை .
நமக்கே தெரியாமல்
நாம் உணராமல் செய்யும் பிழை .
மண்ணினால் செய்யப் பட்ட பானை நம் கை தவறி
கீழே விழுந்து விடுகிறது
இது நாம் அறியாமல் செய்யும் பிழை .
தப்பு:
தப்பு என்பது தெரிந்து செய்யும் பிழை .
தப்பு என்பது நாம் தெரிந்து செய்யும் பிழை .
மண்ணினால் செய்யப்பட்ட பானையை நாம் வேண்டும் - என்றே
துhக்கி போட்டு உடைப்பது
இது நாம் தெரிந்து செய்யும் பிழை .
தவறு என்று சுய உணர்வு இன்றி செய்வது
தப்பு என்பது சுய உணர்வுடன் செய்வது
தவறு செய்தவன் மீண்டும் ஒரு முறை அந்த செயல்
நடைப் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
திருந்த வேண்டும் .
தப்பு செய்தவன் தான் செய்த செயலுக்கு
மனம் வருத்தப் பட வேண்டும்
தப்பு செய்து விட்டேன் என்று
உள்ளம் வருந்த வேண்டும் .
வருந்தியாகணும் .
இயேசுவை துன்பப் படுத்தியவர்கள் அனைவரும்
தாங்கள் செய்தது தவறு என்றும் ,
நீக்க முடியாத பெருங்குற்றத்தை செய்கிறோம் என்றும் ,
கழிக்க முடியாத பாவத்தை புரிகிறோம் என்றோம்
சுய நினைவு இன்றி செய்கிறார்கள்.
ஆகவே , அவர்களை மன்னியும் என்கிறார் இயேசு .
தன்னுடைய ,
சுய உணர்வு இன்றி
செய்யப் பட்ட செயல்
எவ்வளவு
கொடுமையானதாக இருந்தாலும்
அதை மன்னித்து அருளும் படி கேட்கும்
இந்த இடத்தில்
இந்த நிகழ்வில்
இந்த அவனியை
காக்க வந்த ஆண்டவர்
நல் வழிப் படுத்த வந்த துhயவர்
என்பதை நிலைப் படுத்தி
நிலை நாட்டினார் இயேசு .
திருவள்ளுவர்:
“”””அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை””””
--------திருவள்ளுவர்----திருக்குறள்----
வீடு கட்டி வாழ்வதற்காக ஆழ குழிகள் தோண்டுபவரும் ;
வியாபாரம் செய்து உயர்வடைவதற்காக
கட்டிடங்கள் கட்ட நிலத்தை தோண்டுபவரும் ;
விவசாயம் செய்து வாழ்வதற்காக நிலத்தை ஆழ உழுபவரும் ;
விவசாயத்திற்கு தேவையான தண்ணீரைப் பெற
கேணியைத் தோண்டுபவரும் ;
எரிபொருள்கள் பெற நிலத்தை தோண்டுபவரும் ;
உலோகங்கள் பெற நிலத்தை தோண்டுபவரும் ;
கல்விக் கூடங்கள் கட்ட நிலத்தை தோண்டுபவரும் ;
கோயில்கள் கட்ட நிலத்தை தோண்டுபவரும் ;
நிற்பது அதே நிலத்தில் தான்
தன்னைத் தோண்டுகிறாரே
தன்னை வருத்துகிறாரே - என்று
வருத்தப் படாமல் அவரைத் தள்ளி விடாமல்
அவர் நிலையாக இருக்க உதவுவதும் இதே நிலம் தான் .
அதைப் போல ,
தனக்கு துன்பம் செய்தவரை ;
தனக்கு தீமைகள் செய்தவரை ;
தன்னை வருத்தப்பட வைத்தவரை ;
தன்னை கண்ணீர் விட வைத்தவரை ;
தன்னை அவமானப் படுத்தியவரை ;
தனக்கு துன்பங்கள் கொடுத்தவரை ;
தனக்கு தொல்லைகள் கொடுத்தவரை ;
தன்னை முன்னேற விடாமல் தடுத்தவரை ;
தன்னை அழிக்க நினைத்தவரை ;
தன்னை ஏளனப் படுத்தி சிரித்தவரை ;
தன்னை களங்கப் படுத்தி களித்தவரை ;
தன்னை உதாசீனப் படுத்தி நகைத்தவரை ;
தன்னை கடுஞ்சொற்களால் சிதைத்தவரை ;
இத்தகைய செயல்கள் செய்தவரை ;
வாழ்வில் சந்தித்தாலும்
அவர்கள் மேல் கோபப்படாமல்
அவர்கள் அறியாமல் செய்யும்
தவறு இது என்று உணர்ந்து
அவர்கள் செய்யும் செயலை மன்னித்து
மறந்து வாழ்வது தான் தலை சிறந்த பண்பாகும் .
நிலம் தன்னை காயப் படுத்தியவரின்
செயலை மன்னித்து மறந்து அவர்களை எப்படி
தாங்கிக் கொள்கிறதோ
அதைப் போல ,
நாமும் , நம்மை காயப் படுத்தியவர்களின்
செயலால் கோபப்படாமல்
அவர்கள் செயலை மன்னித்து
மறந்து விடுதல் தலை சிறந்த பண்பாகும் .
இயேசு கிறிஸ்து - திருவள்ளுர் :
இயேசு ,
தன் உடலை காயப்படுத்தியவர்களையும்
உள்ளத்தை துன்பப்பட வைத்தவர்களையும்
தான் மன்னித்ததோடு மட்டுமில்லாமல்
பிதாவிடம் அவர்களை மன்னியும் என்று கேட்டு ,
அறியாமல் செய்யும் பிழைகளை மன்னிக்க வேண்டும் என்று தன்
வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினார்
அவ்வாறே
திருவள்ளுவரும் ,
உடலை காயப்படுத்தியவர்களையும் ,
உள்ளத்தை வருத்தப்பட வைத்தவர்களையும் ,
மன்னித்து அவர்கள் மேல் கோபப்படாமல் இருப்பது தலை சிறந்த பண்பாகும்
என்கிறார் .
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
போற்றினேன் பதிவுபதி னாறும்முற்றே “”
No comments:
Post a Comment