இயேசு கிறிஸ்து-திருமூலர்-பதிவு-9
“”பதிவு ஒன்பதை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
இயேசு கிறிஸ்து :
வாழ்க்கையை வாழ்வதற்கு வழி காட்டும் குரு ,
ஆன்மீக பாதையில் வெற்றி அடைவதற்கு வழி காட்டும் குரு ,
என்ற இரு வேறு பட்ட நிலைகளில் குருவானவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை ,
வழி தெரியாத ஒரு செயலுக்கு வழி காட்டுபவர் எப்படி இருக்க வேண்டும், எத்தகைய தன்மைகளைக் கொண்டு இருக்க வேண்டும் என்பதை,
இயேசு கீழ்க்கண்ட வசனத்தின் மூலம் விளக்குகிறார்:
“அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள் ; குருடனுக்குக் குருடன் வழி காட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.”
மத்தேயு - 15 : 14
குரு :
"கு" என்றால் அஞ்ஞான இருள் என்று பொருள் .
"ரு" என்றால் நீக்குபவர் என்று பொருள் .
"குரு" என்றால் ஆன்மாக்களின் அறியாமை இருளை நீக்குபவர்; அகற்றுபவர்; என்று பொருள் .
குருவை - இரு வகையாகப் பிரிக்கலாம் :
1. அறிவுக் குரு
2. ஞானக் குரு
அறிவுக் குரு :
வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக ,
வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக ,
வாழ்க்கைத் தேவையை தீர்த்துக் கொள்வதற்காக ,
வாழ்க்கைத் தேவையை அடைவதற்காக ,
வழி காட்டும் குரு அறிவு குரு .
ஞான குரு :
அஞ்ஞான இருளை கழித்து ,
ஆன்மீகத்தின் இறுதி நிலையை தொட வைத்து ,
கர்ம வினைகளைக் கழிக்கும் வழி முறைகளை அளித்து ,
பிறவிப் பெருங்கடைலைக் கடக்க வைத்து ,
பிறப்பு - இறப்பற்ற சூழ்நிலையை அடைவதற்கான முறைகளை கொடுத்து,
முக்தி அடைவதற்குரிய திறவுகோலை ஒப்படைத்து ,
ஞானக் கண்ணைத் திறந்து ,
சொர்க்க வாசலுக்கு வழிகாட்டியாக இருந்து ,
வழிகாட்டுபவர் ஞான குரு ,
புத்தகங்கள் பலவற்றைப் படித்து ,
சிந்தனையில் உயர்வு பெற்று ,
அறிவில் விளக்கம் பெற்று ,
அர்த்தம் தெரியாமல் ,
அர்த்தம் தெரிந்து கொள்ள ஆசைப்படாமல் ,
பலர் பாராட்ட வேண்டும் என்ற நினைப்பில் ,
மனப்பாடம் செய்து ஒப்புவித்து ,
எல்லாவற்றையும் அறிந்தவன் நான் என்ற நினைப்பில்
அனுபவ அறிவு இல்லாமல் ,
கடவுளைப் பற்றிய விளக்கங்களை
புத்தகங்களில் படித்து விட்டு ,
புத்தகங்களில் உள்ளவை எவை உண்மை ,
புத்தகங்களில் உள்ளவை எவை பொய் ,
என்று உணராமல் ,
அதில் உள்ள கிறுக்கல்களை
உண்மை என்று நம்பி ,
கடவுளை அடைவதற்கான வழி முறைகளையும் ,
கடவுளை அடையக் கூடிய வழிமுறைகளில் உள்ள இடையூறுகளையும் ,
கடவுளை அடையும் வழிகளில் உள்ள நன்மை - தீமைகளையும் ,
கடவுளை அடைந்த பின் ஏற்படக் கூடிய அனுபவ நிலைகளில் உள்ள மாற்றங்களையும் ,
அறியாமல் வெறும் ஏட்டுச் சுரைக்காயை மட்டும் வைத்துக் கொண்டு ,
குரு என்ற பெயரில் ஆசிரியன் என்ற நிலையில்,
வழி காட்டி என்ற பொருளில் பொய் வேடம் தரித்து ,
கபட நாடகம் புனைந்து ,
சூழ்ச்சி வலை விரித்து ,
பொய் கதைகள் பேசித் திரிந்து ,
நயவஞ்சக நடிப்பு நடித்து ,
போலி குருமார்கள் கணக்கில் அடங்காமல் ,
எளிதில் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு உலா வருகின்றனர்.
அத்தகைய போலி குருமார்களை உண்மையான குரு என்று நம்பி முக்திக்கான திறவுகோலைத் தருவார் .
ஆன்மீக உயர்வுக்கு வழி காட்டுபவர் என்று அவரை நம்பி
அவரைப் பின்பற்றி செல்வது முறையாக இருக்குமா ?
கண் பார்வை இழந்த ஒருவர்,
கண் பார்வை இழந்த மற்றொருவருக்கு
எவ்வாறு வழி காட்ட முடியும் .
போக வேண்டிய பாதை
எவ்வாறு இருக்கும்,
எந்த நிலையில் இருக்கும் ,
கரடு முரடானதா ,
துன்பங்கள் நிறைந்ததா ,
என்ற விவரங்கள் தெரியாத ,
என்ற விவரங்கள் எதுவும் அறிந்திராத ,
கண் பார்வை இழந்த ஒருவர் ,
கண் பார்வை இழற்த மற்றொருவருக்கு வழி காட்டினால் எவ்வாறு இருக்கும்
இருவரும் செல்லும் பாதையில் உள்ள ,
குழியிலே விழுவார்கள் ;
மேடு பள்ளங்களில் விழுவார்கள் ;
இடர்ப்பாடுகளில் தடுக்கி கீழே விழுவார்கள் ;
பள்ளத்தில் விழுந்து துன்பமடைவார்கள் ;
அதைப் போல ,
உண்மை நிலை உணராதவர்கள் ,
கடவுள் நிலை அறியாதவர்கள் ,
கடவுள் நிலை அறியாதவர்களுக்கு ,
கடவுளை அடைய வழி காட்டினால் ,
இருவரும் கடவுள் நிலை அறியாமல் ,
கடவுள் நிலை உணர முடியாமல் ,
துன்பச் சகதியில் மாட்டிக் கொண்டு அலைய வேண்டியது தான் .
என்கிறார் இயேசு .
திருமூலர் :
“”“குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே””””
-------- திருமூலர் - திருமந்திரம்-----
“”“குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்”””””
மாதா ,பிதா ,குரு - இம் மூவரும் தான் தெய்வம் ,
இம்மூவரையும் மதித்து போற்றி உயர்வடைவதே ,
பிறவிப் பெருங்கடலை கடக்க வழி என்பது காலத்தால் மருவி ,
மாதா, பிதா, குரு ,தெய்வம் என்ற நான்காகி விட்டதால் ,
தெய்வத்தின் உண்மை நிலை உணரத் தவறி விட்டோம்.
ஆன்றோர்களின் கருத்துக்களை புரிந்து கொள்ள தவறி விட்டோம்.
மாதா ,பிதா ,குருவை மதிக்கத் தவறி விட்டோம் .
அன்னையும் - பிதாவும் முன்னறி தெய்வம் ,
முன்னறி தெய்வம் என்றால் முதலில் அறிந்து கொள்ள வேண்டிய தெய்வம் என்று பொருள் .
தாயையும் , தந்தையையும் மதித்து அவர்களுக்கு செய்ய வேண்டிய செயல்களைச் செய்து ,
அவர்கள் நமக்காக பட்ட துன்பங்களுக்கு கைமாறு செய்து ,
அவர்கள் மனதில் நிறைந்துள்ள கவலைகளை நீக்கி ,
அவர்கள் மனம் குளிரும் படி செய்ய வேண்டும் .
அத்தகைய செயலை செய்தால் தான் பின்னறி தெய்வம் என்று சொல்லப்படக் கூடிய,
குருவும் , தெய்வமும் நமக்குக் கிடைப்பார்கள் .
அன்னையும் , பிதாவும் முன்னறி தெய்வம் என்றால்
குருவும் , தெய்வமும் பின்னறி தெய்வம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் .
வாழ்க்கையில் முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய தெய்வம் தாயும், தந்தையும்,
வாழ்க்கையில் பிறகு அறியப்பட வேண்டிய தெய்வம் குருவும் , தெய்வமும் ஆகும் .
தாயும் , தந்தையும் அறிவுக் கண்ணைத் திறக்கும் குருவைக் காட்டுவார்கள்.
குரு அறிவுக் குருவாக இருந்தால் வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கான வழியைக் காட்டுவார்.
குரு ஞானக் குருவாக இருந்தால் ஞானம் அழ்வதற்கான வழியைக் காட்டுவார்.
மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் ஆன்மீக நிலையில் உயர்வடைவதற்கும் குரு என்பவர் மிக முக்கியம் .
கடவுளின் ஆதி - அந்தம் தெரியாமல் ,
கடவுளை அடையக் கூடிய வழி தெரியாமல் ,
கடவுளை உணராமல் ,
கடவுளை உணர்ந்தால் என்ன கிடைக்கும் என்று அறியாமல் ,
கடவுளை அனுபவ ரீதியாக உணராமல் இருப்பவர்களை ,
குருவாக ஏற்றுக் கொள்வர்;
குருவின் பின்னால் செல்வர் ;
குருவின் வழி நடப்பர் ;
கடவுளை காட்டச் சொல்வர்;
கடவுளை உண்மையாக உணர்ந்தவர்களை குருவாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் .
ஏனென்றால் உண்மையை எளிதில் உணர முடியாது .
அப்படியிருக்கும் பொழுது உண்மையாக குருவை எவ்வாறு அடையாளம் காண முடியும் .
அவரை எவ்வாறு குருவாக ஏற்றுக் கொள்ள முடியும் .
அவரை எவ்வாறு பின்பற்ற முடியும் .
உண்மையான குரு எப்படி இருப்பார் என்ற விவரங்கள் நமக்கு தெரியாது .
போலி குருவுக்கும் உண்மை குருவுக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்ந்து கொள்ளும் திறன் நமக்கு கிடையாது .
அவ்வாறு இருக்க நாம் எவ்வாறு உண்மையான குருவை தேர்ந்தெடுக்க முடியும் .
உண்மையான குருவுக்கு என்று சில அடிப்படை வரையறைகள் உள்ளன.
அவை எவை என்றும் ,
அவை யாருக்கு பொருந்துகிறது என்று பார்த்து அவர் தான் உண்மையான குரு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
உண்மையான குரு எப்பொழுதும் அமைதியாக இருப்பார்;
தன்னுடைய சக்திகளை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்;
புகழுக்கு ஆசைப்பட மாட்டார்;
பணத்தைத் தேடி அலைய மாட்டார்;
மாளிகைகளில் ஆடம்பரமாக இருக்க ஆசைப்பட மாட்டார்;
மற்றவர்களை தனக்கு அடிமையாக வைத்து இருக்க மாட்டார்;
மற்றவர்களின் அறியாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள மாட்டார்;
பெண்கள் சமுதாயத்தில் அடிமையாக இருப்பதை விரும்ப மாட்டார்;
விளம்பரங்கள் மூலம் புகழ் தேட ஆசைப் பட மாட்டார்;
பொய் கதைகள் பல பேசி தன்னை உயர்த்திக் காட்ட மாட்டார்;
வாய் ஜாலத்தால் மக்களை மயக்க மாட்டார்;
மற்றவர்களின் அறியாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள மாட்டார்;
தானே கடவுள் என்று வெளிப்படையாக சொல்ல மாட்டார்;
தன்னை வணங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்க மாட்டார்;
தன் படத்தை வைத்துக் கொண்டு தினமும் பூஜை செய்ய வேண்டும் என்று புலம்ப மாட்டார்;
ஆன்மீக உடை உடுத்த வேண்டும் என்று சொல்ல மாட்டார்;
ஆன்மீக சின்னங்கள் அணிய வேண்டும் என்று வற்புறுத்த மாட்டார்;
ஏமாற்று வித்தைகள் காட்ட மாட்டார்;
சித்து வேலைகள் செய்ய மாட்டார்;
இத்தகைய குணநலன்கள் கொண்ட ஒரு குரு கிடைப்பது கடினம்;
அவரை கண்டு பிடிப்பது கடினம்;
அவரிடம் சீடராக சேருவது கடினம்;
அத்தகைய உண்மையான குருவை அறிந்து குருவாக ஏற்றுக் கொள்ளாமல் ,
குருவாக இருப்பதற்கு தகுதி இல்லாதவரை தவறாக வழி காட்டுபவரை, குருவாக ஏற்றுக் கொள்வார்கள் .
“”””குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே””””
ஓன்றும் அறியாதவர்களை,
அறிந்தது போல் காட்டிக் கொள்பவர்களை,
அனுபவ ரீதியாக உணராதவர்களை,
கடவுளை அடையக் கூடிய வழி முறைகள் தெரியாதவர்களை,
குருவாக ஏற்றுக் கொண்டால்,
கண் பார்வை இழந்த ஒருவர்,
கண் பார்வை இழந்த மற்றொருவருக்கு,
வழி காட்டினால் இருவரும் குழியில் விழுந்து ,
எத்தகைய துன்பங்களை அனுபவிக்க நேருமோ?
அதைப்போல,
கடவுளை உண்மையாக உணராமல்
கடவுளைக் கண்டேன் என்று பொய் சொன்ன குருவைப்
பின்பற்றி சென்ற சீடனும்,
காலத்தை வீணாக்கி,
பணத்தை செலவழித்து,
இன்பங்களை தொலைத்து,
கவலைகளை இழுத்து,
துன்பச் சகதியில் மாட்டிக்கொண்டு,
அல்லல் பட வேண்டியது தான்.
கடவுளைக் காண முடியாது.
உண்மையாக கடவுள் நிலை உணர்ந்தவர்களை
குருவாக ஏற்றுக் கொண்டு அவரைப் பின்பற்றினால்
தான் கடவுளைக் காண முடியும்.
கடவுளின் உண்மை நிலை உணர முடியும் .
கடவுள் நிலை அடையாளம் என்கிறார் திருமூலர்.
இயேசு கிறிஸ்து – திருமூலர்:
இயேசு ,கடவுள் நிலை உணர்ந்தவர்களை குருவாக ஏற்றுக் கொண்டு கடவுளை உணர வேண்டும் என்கிறார்.
அவ்வாறே,
திருமூலரும் , கடவுள் நிலை உணர்ந்தவர்களை குருவாக ஏற்றுக் கொண்டு கடவுளை உணர வேண்டும் என்கிறார்.
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
போற்றினேன் பதிவுஒன்பது ந்தான்முற்றே “”
அருமை! அருமை! இறை நேயர்களால் தான், இயல்பான ஆன்மீகப் பதிவுகள் தர இயலும். தொடருங்கள் இனி தொடர்ந்து தளத்திற்கு வருகை தருகின்றேன்.
ReplyDeletehttp://atchaya-krishnalaya.blogspot.com
http://atchaya48.blogspot.com
சிறந்த பதிவு.
ReplyDelete