இயேசு கிறிஸ்து- பகவத் கீதை -பதிவு-18
“”பதிவு பதினெட்டை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
இயேசு கிறிஸ்து :
வசனம் -1:
அதற்கான பதிலை இயேசு ,
“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் ; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்”
--------யோவான் - 14 : 6
தெரியாத மொழியைக் கற்றுக் கொள்வதற்கும் ;
தெரியாத விளையாட்டை அறிந்து கொள்வதற்கும் ;
புரியாத வியாபாரத்தை புரிந்து கொள்வதற்கும் ;
அறியாத பாடத்தை அறிந்து கொள்வதற்கும் ;
அறியாத சூட்சுமத்தை உணர்ந்து கொள்வதற்கும் ;
கற்காத கல்வியை கற்றுக் கொள்வதற்கும் ;
சுட்டிக் காட்டப்படும் முறை ,
விளக்கி சொல்லித் தரப்படும் முறை ,
வழி காட்டுதல் என்ற நிலைக்குள்
அடக்கி வைக்கப்படுகிறது .
நானே வழி என்று சொல்லும் போது
எதற்கான வழி ? என்ற கேள்வி எழுகிறது .
அதற்கான பதிலை இயேசு ,
அடுத்த வார்த்தையில் சொல்கிறார்
சத்தியத்திற்கு வழி - அதாவது
சத்தியத்திற்கு நானே வழியாக இருக்கிறேன் என்கிறார்.
சத்தியம் உண்மை என்ற வார்த்தையால் குறிப்பிடப் படுகிறது
பொய் ---- உண்மை இல்லாதது பொய்
உண்மை --- பொய் இல்லாதது உண்மை
உண்மைக்கும் பொய்யுக்கும் நுhலிழை வித்தியாசமே உண்டு .
சத்தியம் பொய் இல்லாதது ;
சத்தியம் என்றும் மாறாதது ;
சத்தியம் என்றும் அழியாதது ;
ஆண்டவனே சத்தியம் ;
ஆண்டவனே நித்தியம் ;
சத்தியமாகிய ஆண்டவனை அடையக் கூடிய
வழியாக நான் இருக்கிறேன் என்கிறார் இயேசு .
அடுத்து ஒரு கேள்வி எழுகிறது சத்தியத்தை
அடையக் கூடிய வழி என்ன?
இயேசு அடுத்து கூறுகிறார் - “”ஜீவனுமாயிருக்கிறேன்”””
ஜீவன் மூலமாக சத்தியத்தை உணர முடியும் .
சத்தியமாகிய ஆண்டவனை அடைய முடியும் .
என்னுடைய ஜீவன் மூலமாக
சத்தியமாகிய ஆண்டவனை
அடையக் கூடிய வழியாக
நான் இருக்கிறேன் என்கிறார் இயேசு .
ஏனென்றால் , பிதாவை நான் அறிந்திருக்கிறேன்
என்னை என் ஜீவனை எவன் பின்பற்றுகிறானோ
அவனுக்கு சத்தியமாகிய ஆண்டவனை
அடையக் கூடிய வழியை நான் காட்டுவேன்
அதற்கு நான் வழியாக இருக்கிறேன் .
ஆண்டவனை அடையக் கூடிய ,
ஆண்டவனை அடையக் கூடிய வழியைக் காட்டக் கூடிய ,
ஆண்டவனிடம் சேரக் கூடிய ,
ஆண்டவனிடம் அருள் பெறக்கூடிய ,
ஆண்டவனிடம் தன் பாவங்களை முறையிடக் கூடிய ,
ஆண்டவனிடம் தன் பாவங்களைத் தீர்க்கக் கூடிய ,
ஆண்டவனிடம் தன் குறைகளை முறையிடக் கூடிய ,
ஆண்டவனிடம் தன் தேவைகளை கேட்கக் கூடிய ,
ஆண்டவனிடம் தன் வாழ்வை வளமாக்கக் கூடிய ,
வுழியை காட்டக் கூடியவராய்
நான் இருக்கிறேன் என்கிறார் இயேசு .
என்னை , என் ஜீவனை , எவன் பற்றிக் கொள்ளுகிறானோ ,
அவனுக்கு சத்தியமாகிய ஆண்டவனை ,
அடையக் கூடிய வழியைக் காட்டும் வழியாக நான் இருக்கிறேன்
இருப்பேன் என்கிறார் இயேசு .
நானே வழியும் , சத்தியமும் , ஜீவனுமாயிருக்கிறேன்
என்பதற்கு இது தான் பொருள்
வசனம் -2 :
“என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்”
--------யோவான் - 14 : 7
என்னை ஆண்டவன் என்று நம்பினால் ,
என்னை ஆண்டவன் என்று அறிந்தால் ,
என்னை ஆண்டவன் என்று உணர்ந்தால் ,
என்னை ஆண்டவன் என்று விசுவாசித்தால் ,
என்னை ஆண்டவன் என்று பின்பற்றினால் - மட்டுமே
பிதாவை அறிய முடியும் ;
பிதாவை உணர முடியும் ;
பிதாவினிடத்தில் வர முடியும் ;
பிதாவை அடைய முடியும் ;
என்கிறார் இயேசு .
வசனம் -3 :
பிலிப்பு அவரிடம் பிதாவை எங்களுக்கு
காண்பிக்க வேண்டும் என்கிறார்.
பிதா யார்? என்பதை அறிந்து கொள்வதற்காக ,
அவர் எத்தகைய சக்தி படைத்தவர்
என்பதை தெரிந்து கொள்வதற்காக ,
அவர் எவ்வளவு பெரிய அற்புதங்களை செய்வார்
என்பதை உணர்ந்து கொள்வதற்காக
பிலிப்பு இயேசுவிடம் பிதாவை எங்களுக்கு காண்பியும் என்றான் .
அதற்கு இயேசு ,
“பிலிப்புவே இவ்வளவு காலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் ; அப்படியிருக்க பிதாவை எங்களுக்கு காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?”
--------யோவான் - 14 : 9
இவ்வளவு காலம்
என்னுடன் உறவாடிக் கொண்டு இருக்கிறாய் ;
என்னுடன் பழகிக் கொண்டு இருக்கிறாய் ;
என் வார்த்தைகளை கேட்கிறாய் ;
என் வசனங்களை கேட்கிறாய் ;
என் செயல்கனை நோக்குகிறாய் ;
என் விளக்கங்களை அறிகிறாய் ;
என் சிந்தனைகளை உணர்கிறாய் ;
என் அற்புதங்களை பார்க்கிறாய் ;
என் தீர்க்கதரிசனங்களை கேட்கிறாய் ;
குருடர் பார்வையடைவதை ;
ஊமை பேசுவதை ;
செவிடர் கேட்பதை;
இறந்தவர் உயிர் பெற்று எழுவதைப் பார்த்தும்;
இன்னும் உனது மனம் தெளிவு அடையவில்லையா ?
அறிவு விளக்கம் பெற வில்லையா?
புத்தி ஆராய்ந்து நோக்கவில்லையா?
அப்படி இருந்தும் நீ எப்படி இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறாய் .
நான் வேறு அல்ல , பிதா வேறு அல்ல
என்னில் பிதாவும் , பிதாவில் நானும் இருக்கிறேன்
பிதாவில் நான் இருக்கிறேன் , என்னில் பிதா இருக்கிறார்
என்னைக் கண்டவன் , பிதாவைக் கண்டவன்
பிதாவைக் கண்டவன் , என்னைக் கண்டவன்
பிதாவைக் கண்டவன் , என்னைக் காண்பான்
என்னைக் கண்டவன் , பிதாவைக் காண்பான்
நான் இருக்கும் இடத்தில் பிதா இருப்பார்
பிதா இருக்கும் இடத்தில் நான் இருப்பேன்
என்னை அறிந்தவன் , பிதாவை அறிவான்
பிதாவை அறிந்தவன் , என்னை அறிவான்
இவற்றை எல்லாம் எவன் அறியவில்லையோ ?
இவற்றை எல்லாம் எவனுக்கு உணர்ந்து
கொள்ளும் சக்தி இல்லையோ ?
இவற்றை எல்லாம் யாருக்கு புரிந்து கொள்ளும்
மனப்பக்குவம் இல்லையோ?
அவர்கள் தான் என்னையும் ,
பிதாவையும் வேறு படுத்தி பார்ப்பார்கள்
பிதா வேறு , நான் வேறு என்று பார்ப்பார்கள் .
நீ இன்னும் மனது தெளிவு பெறாத காரணத்தால் தான்
பிதாவை எனக்கு காண்பியும் என்கிறாய்
என்று பிலிப்புவை நோக்கி இயேசு கூறுகிறார்.
பகவத்கீதை - கிருஷ்ணர் :
“””ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாச்ரய :
மத்ப்ரஸாதாதவாப்நோதி சாச்வதம் பதமவ்யயம் “”””
அத்தியாயாம் - 18 : மோசஷ ஸந்யாஸ யோகம் : சுலோகம் - 56
“””என்னையே புகலாகக் கொண்ட கர்மயோகி எலலாக் கர்மங்களையும் எப்பொழுதும் செய்து கொண்டிருப்பினும் எனது அருளால் நிலையான என்றுமுள்ள அழியாத பரமபதத்தை அடைகிறான்”””
----பகவத்கீதை--(பதவுரை-பொழிப்புரை)--ஜயதயால் கோயந்தகா--
அறியாமையை விலக்கித் தான் ;
ஆசையை அறுத்துத் தான் ;
இன்பத்தை எரித்துத் தான் ;
ஈவதில் உயர்ந்து தான் ;
ஊழ்வினையை கழித்துத் தான் ;
வந்த கடமையை முடிக்கத் தான் ;
மனிதனாக பிறவி எடுப்பதற்கு காரணம் தான் ;
மனிதன் பிறவி எடுப்பதே கர்ம வினைகளை கழிப்பதற்குத் தான் ;
பிறப்பு - இறப்பு சுழற்சியை அறுப்பதற்குத் தான் ;
பிறப்பு - இறப்பற்ற நிலையை அடைவதற்குத் தான் ;
எங்கிருந்து வந்தோமோ அந்த இடத்திலேயே இணைவதற்குத் தான் ;
எதிலிருந்து எல்லாம் தோன்றியதோ ,
எது எல்லாவற்றையும் காத்து வருகின்றதோ ,
எதில் எல்லாம் போய் ஒடுங்கப் போகிறதோ - அதைத் தான்
அந்த நிரந்தரமானதைத் தான் ;
அந்த அழிவில்லாததைத் தான் ;
ஆதி - அந்தம் இல்லாததைத் தான் ;
பிறப்பு - இறப்பு அற்றத்தைத் தான் ;
குணத்தைக் கடந்ததைத் தான் ;
உருவத்தில் அடக்க முடியாததைத் தான் ;
எழுதுக்களில் எழுத முடியாததைத் தான் ;
வார்த்தைகளில் சொல்ல முடியாததைத் தான் ;
உவமித்து காட்ட முடியாததைத் தான் ‘
எல்லாம் வல்ல பரம்பொருளைத் தான் ;
அப்பாலுக்கும் அப்பால் உள்ளதைத் தான் ;
எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பதைத் தான் ;
வேறுபடுத்தி காட்ட முடியாததைத் தான் ;
விஞ்ஞானத்தால் உணர முடியாததைத் தான் ;
ஐம்புலன்களுக்குள் அடக்க முடியாததைத் தான் ;
துhணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என்று
சொல்லப்படுவதைத் தான் ;
அன்றும் என்றும் இன்றும் உள்ளத்தைத் தான் ;
நித்தியமாக உள்ளதைத் தான் ;
எதை இதுகளால் அதை உணரமுடியவில்லையோ
அதைத் தான் ;
அந்த உண்மையைத் தான் ;
அந்த சத்தியத்தைத் தான் ;
அடைய வேண்டுமானால்
இணைய வேண்டுமானால் - என்னை சரணடை
அதாவது கிருஷ்ணனை சரணடை ,
அதாவது இறைவனை சரணடை ,
இறைவனுடன் இணைந்தவன் அவனும் இறைவனாகிறான்
அது அது ஆக மாறுகிறது .
மனிதன் இறைவனை அடைய வேண்டுமானால் ,
கர்ம வினையைக் கழிக்க வேண்டும் .
இறைவனை அடைந்து விட்டால் ,
கர்ம வினை தன்னுள் எரிந்து விடும் .
நாம் நம் கர்ம வினையை
கழிக்க பல்வேறு பிரச்சனைகள் கஷ்டங்கள் தாங்கி
கண்ணீர் விட வேண்டி இருக்கும்
கண்ணீரை இரத்தமாக சிந்த வேண்டி இருக்கும் ;
குடும்பத்தை வெறுக்க வேண்டி இருக்கும் ;
வாழ்க்கையை வெறுக்க வேண்டி இருக்கும் ;
பந்தத்தை அறுக்க வேண்டி இருக்கும் ;
செல்வத்தை இழக்க வேண்டி இருக்கும் ;
ஆசையை துறக்க வேண்டி இருக்கும் ;
என்ற காரணத்தாலேயே
என்னை சரண் அடை என்கிறார்.
அது தான் பரிபூரண சரணாகதி
எல்லாமே நீ தான் என் வாழ்க்கையில் நடக்கும்
இன்பம் - துன்பம் ; உயர்வு – தாழ்வு ;
ஏற்றம் - இறக்கம் ; மகிழ்ச்சி - கவலை ; சோகம் – துக்கம் ;
போன்ற அனைத்திற்கும் நீ தான் காரணம் என்று ,
இறைவனை சரண் அடைந்து விட்டால்
இறைவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான் .
நிம்மதியான வாழ்வை அளித்து
நிலைத்த பேரின்பத்தை
மரணமில்லா பெருவாழ்வு
முக்தி என்னும் நிலையை
ஞானத்தை அளித்து காப்பான் என்கிறார்
பகவத் கீதையில் கிருஷ்ணர்.
என் வழியால் வந்தால் உனக்கு துன்பமில்லை
நான் வழி காட்டுவேன் என்கிறார் கிருஷ்ணர்.
இயேசு கிறிஸ்து-பகவத்கீதையில் கிருஷ்ணர்:
இயேசு ,
பிதாவை அடைவதற்கான வழியாக
நான் இருக்கிறேன் என்கிறார்.
அவ்வாறே ,
பகவத் கீதையில் - கிருஷ்ணரும் ,
கடவுளை அடைவதற்கான வழியாக நான் இருக்கிறேன் என்கிறார்.
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
போற்றினேன் பதிவுபதினெட்டு ந்தான்முற்றே “”
No comments:
Post a Comment