இயேசு கிறிஸ்து-குதம்பைச் சித்தர்-மாங்காய்-பதிவு-24
“”பதிவு இருபத்துநான்கை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
இயேசு கிறிஸ்து :
தன்னுடைய சொந்தங்கள் யார் என்றும் ,
அவர்கள் எத்தகைய தன்மையைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் ,
கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் இயேசு விளக்குகிறார் :
“உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்க வேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்”
--------லுhக்கா - 8 : 20
“அதற்கு அவர் தேவனுடைய வசனத்தைக் கேட்டு , அதன்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்”
------லுhக்கா - 8 : 21
ரோஜாவுக்கு அழகு உண்டு
மல்லிகைக்கு மணம் உண்டு
ரோஜாவுக்கு மணம் இல்லை
மல்லிகைக்கு அழகு இல்லை
ரோஜாவுக்கு மணம் இல்லை என்று
அதை ஒதுக்கி விடுவதும் இல்லை
மல்லிகைக்கு அழகு இல்லை என்று
அதைத் தள்ளி விடுவதும் இல்லை
மணம் இல்லையென்ற குறையே
ரோஜாவை உயர்த்திக் காட்டுகிறது
அழகு இல்லையென்ற குறையே
மல்லிகையை உயர்த்திக் காட்டுகிறது
ரோஜாவுக்கு மணம் இல்லை என்ற குறையை
அதன் அழகு நிவர்த்தி செய்கிறது
மல்லிகைக்கு அழகு இல்லை என்ற குறையை
அதன் மணம் நிவர்த்தி செய்கிறது
ரோஜாவின் அழகே அதற்கு மணம்
தேவையில்லை என்பதை நீக்கி விடுகிறது
மல்லிகையின் மணமே அதற்கு அழகு
தேவையில்லை என்பதை நீக்கி விடுகிறது
அதன் நிறையே அதன் குறையை நிவர்த்தி செய்கிறது
அதன் குறையே அதனை விரும்பும் படிச் செய்கிறது
உன்னிடமுள்ள குறை கண்டு கவலைப் படாமல் காரியம் ஆற்று
உன்னுடைய குறையை நிறை பூர்த்தி செய்யும் .
உன்னுடைய நிறை வெற்றி நடை போட வழி செய்யும் .
தன்னிடம் உள்ள நிறைகளைக் காணாமல் ;
தன்னிடம் உள்ள அழகுணர்ச்சியைக் காணாமல் ;
தன்னிடம் உள்ள அறிவின் மேன்மையைக் காணாமல் ;
தன்னிடம் உள்ள உழைப்பின் தன்மைகளைக் காணாமல் ;
தன்னிடம் உள்ள சிந்தனையின் ஊற்றுகளைக் காணாமல் ;
தன்னிடம் உள்ள திறமைகளின் மதிப்புகளை காணாமல் ;
தன்னிடம் உள்ள பொதுநலத்தின் மேன்மையைக் காணாமல் ;
தன்னிடம் உள்ள வீரத்தின் வெளிப்பாட்டைக் காணாமல் ;
தன்னிடம் உள்ள விவேகத்தின் அடிச்சுவட்டைக் காணாமல் ;
தன்னிடம் உள்ள கற்பனைகளின் கவித்துவத்தை உணராமல் ;
தன்னிடம் இல்லாதவைகளை ;
தன்னிடம் உள்ள குறைகளை ;
முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டைகளாய் உள்ளவைகளை ;
ஏற்றத்திற்கு தடைக்கற்களாய் உள்ளவைகளை ;
மட்டும் நிறுத்திக் கொண்டு இல்லாதவைகளுக்காக
அலைந்து திரியும் மானிடர் இருப்பவைகளை உணராமல் ;
இருப்பவைகளை பயன்படுத்தும் வழி தெரியாமல் ;
இருப்பவைகளை செயல்படுத்தும் வகை உணராமல் ;
காலத்தின் மேல் பழியைப் போட்டு விட்டு
கருத்திழந்து இருக்கின்றனர்;
இவ்வுலக வாழ்க்கையை நடத்துவதற்கு
தேவையானவற்றை அடையும் முறையை அறியாமல்
பெறும் ரகசியத்தை உணராமல் இருப்பவர்களால் - எவ்வாறு
விண்ணுலகத்தின் பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களை உணரமுடியும் .
பிதாவைப் பற்றி அறிய முடியும்
பிதாவைப் பற்றி அறிந்தவர் ;
பிதாவின் மகிமைகளை உணர்ந்தவர் ;
பிதாவின் அன்பில் நனைந்தவர் ;
பிதாவின் கருணையில் திளைத்தவர் ;
பிதாவுக்குள் அடைக்கலம் ஆனவர் ;
அவர்களே என் உறவுகள் ; என்னுடைய சொந்தங்கள் ;
மற்றவர் யாரும் என்னுடைய சொந்தங்கள் இல்லை
பிதாவை கைக் கொள்ளாதவர் யாரும் என் சொந்தங்கள் இல்லை
பிதாவை உணர்ந்தவர் மட்டுமே என் சொந்தமாக இருக்க முடியும் .
பிதாவை உணராதவர் எவ்வாறு என் சொந்தமாக இருக்க முடியும் .
பிதாவை உணராதவர் யாரும் இல்லை எனில் ,
இந்த உலகத்தில் எனக்கு சொந்தங்கள் இல்லை என்று பொருள் .
பிதாவை உணர்ந்தவர் யாரேனும் உண்டு எனில் ,
அவர் மட்டுமே என் சொந்தமாக இருக்க முடியும் .
உலக வாழ்க்கையில் ஈடுபட்டு வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்ய
அலைந்து கொண்டிருக்கும் சாதாரண மனிதர்களை விட
உயர்ந்த மனப்பான்மை கொண்டு , மனது தெளிவு பெற்று ,
பிதாவை உணர்ந்தவர் மட்டுமே என் சொந்தக் காரராக இருக்க முடியும் .
பெற்றெடுத்த தாயும் , கூடப் பிறந்த சகோதரரும் ,
என்னுடன் உறவு முறையின் மூலம்
பிணைக்கப்பட்டவர்கள் என்ற காரணத்திற்காக,
அவர்கள் எவ்வாறு என் சொந்தங்களாக ஆக முடியும் .
பிதாவை உணர்ந்தவர்கள் மட்டுமே என்
சொந்தக் காரராக முடியும் என்கிறார் இயேசு.
குதம்பைச் சித்தர் :
""“மாங்காய்ப்பா லுண்டுமலைமே லிருப்போர்க்குத்
தேங்காய்ப்பா லேதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பா லேதுக்கடி”
-----குதம்பைச் சித்தர்----பெரிய ஞானக் கோவை--
ஐம்புலன்கள் எனப்படுபவை ,
மெய் , வாய் , கண் , மூக்கு , செவி ஆகிய ஐந்து ஆகும் .
ஐம்புலன்கள் வழியாக உணரப்படுபவை
பஞ்ச தன் மாத்திரைகள் எனப்படும் .
பஞ்ச தன் மாத்திரைகள் எனப்படுபவை ,
அழுத்தம் , ஒளி , ஒலி , சுவை , மணம் ஆகியவை ஆகும் .
பஞ்ச தன் மாத்திரைகள் ஐம்புலன்கள் வழியாக
கீழ்க்கண்டவாறு உணரப்படுகிறது :
மெய் வழியாக அழுத்தம் ,
வாய் வழியாக சுவை ,
கண் வழியாக ஒளி ,
மூக்கு வழியாக மணம் ,
செவி வழியாக ஒலி - என்று
ஐம்புலன்கள் வழியாக பஞ்ச தன் மாத்திரைகள் உணரப்படுகிறது .
வாய் என்ற புலன் வழியாக உணரப்படும் சுவையானது
அறுசுவைகளைத் தன்னுள் கொண்டது .
அறு சுவை எனப்படுபவை :
இனிப்பு , புளிப்பு , உவர்ப்பு , துவர்ப்பு , உறைப்பு , கசப்பு ,
ஆகியவை ஆகும் .
ஒவ்வொரு உணவுப் பொருளிலும் ஒரு சுவை உண்டு
சிலவற்றில் சில உணவுப் பொருள்களில்
இரண்டு அல்லது மூன்று சுவைகளும் உண்டு .
அறுசுவையும் அதாவது ஆறு சுவைகளையும்
தன்னுள் கொண்டது மாங்காய் .
இனிப்பு , புளிப்பு , உவர்ப்பு ,துவர்ப்பு , உறைப்பு ,கசப்பு
ஆகிய ஆறு சுவைகளையும் தன்னுள் கொண்டது .
தன்னகத்தே கொண்டது
தன்னகத்தே பெற்றிருப்பது மாங்காய் .
உணவுப் பொருளில் பல்வேறு உணவுப் பொருளில்
பல்வேறு சுவைகளை தேடிப்பிடித்து
சுவைத்து மகிழ விருப்பப்படுபவர்
ஒவ்வொரு சுவையையும் கொண்ட
உணவுப் பொருளைத் தேடி அலைவதை விட ,
அதற்காக நேரத்தை செலவிடுவதை விட ,
அதற்காக காலத்தை விரயமாக்குவதை விட ,
அதற்காக உழைப்பை வீணாக்குவதை விட ,
அதற்காக முயற்சிகளை செயல் படுத்துவதை விட ,
அதற்காக எண்ணத்தை உபயோகிப்பதை விட ,
அதற்காக செயல் திட்டங்கள் வகுப்பதை விட ,
அதற்காக செல்வத்தை செலவழிப்பதை விட ,
அறுசுவையும் அளிப்பது எது என்று உணர்ந்தால்
அறுசுவையும் தன்னுள் கொண்டது எது என்று அறிந்தால்
அறுசுவையும் எதில் கிடைக்கும் என்று தெரிந்தால்
அந்த உணவுப் பொருளை அடையாளம் காண்பதன் மூலம் ,
அந்த உணவுப் பொருளை அடைவதன் மூலம் ,
அந்த உணவுப் பொருளை பெறுவதன் மூலம் ,
அந்த உணவுப் பொருளிலிருந்து அறுசுவையையும்
ஒருங்கே ஒரு உணவுப் பொருளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் .
அதைப் போல ,
நமக்குத் தேவையானவைகளை ;
நாம் விருப்பப் படுபவைகளை ;
நம்முடைய கனவுகளை ;
நம்முடைய தேவைகளை ;
நம்முடைய எதிர்பார்ப்புகளை ;
நம்முடைய இன்பங்களை ;
தரக்கூடியவரை தேடி அலைந்து ஒவ்வொருவர் முன்பும்
கைகட்டி பெற்றுக் கொள்வதை விட ,
இவை அனைத்தையும் ஒருங்கே அளிப்பவன் ;
இல்லையென்று சொல்லாமல் கொடுப்பவன் ;
இத்தகைய தகுதியை உடையவன் ;
இத்தகைய தன்மைகளை உடையவன் ;
யார் என்று ஆராய்ந்து பார்த்து அவரிடம் கேட்க வேண்டும்.
நம் தேவைகள் அனைத்தையும் தீர்க்கக் கூடியவர் ;
வந்த மனக்குறைகளை நீக்குபவர் ;
மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துபவர் ;
இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை
என்பதை உணர்ந்து அவரிடம் கேட்க வேண்டும் .
மேலும் தான் அவனாக மாறும் போது
அனைத்தும் கிடைக்கும் ,
பேரின்பத்தின் வாசல் திறக்கும் ,
அமுதம் சுரக்கும் ,
அமுதத்தை உண்டவனுக்கு காலம் என்பது கிடையாது .
மேலும் பல்வேறு சிறப்புகளை ,
சத்தியத்தின் நிகழ்வுகளை ;
உண்மைகளின் சாட்சியங்களை ;
மறைபொருளின் மர்மங்களை ;
உணர்வுகளின் வெளிச்சங்களை ;
மனங்களின் அடித்தளங்களை ;
உயிர்களின் பிறப்பிடங்களை ;
இன்பங்களின் எழிலோவியங்களை ;
துன்பங்களின் சாவுமேடுகளை ;
நித்தியத்தின் நிரந்தரங்களை ;
மாற்றங்களின் மறுமலர்ச்சிகளை ;
விதைக்கப்பட்டவைகளின் விருட்சங்களை ;
புதைக்கப்பட்டவைகளின் புதுமைகளை ;
மறைக்கப்பட்டவைகளின் வெள்ளோட்டங்களை ;
கிரகங்களின் உள்ளிருப்புகளை ;
பஞ்சபூதங்களின் ஆணிவேர்களை ;
இயக்கநிலைகளின் ரகசியங்களை ;
கண்டு சிந்தை தெளியலாம் .
நானே அவனாக மாறி பேரின்ப வெள்ளத்தில்
நீந்திக் கொண்டிருப்பவருக்கு
வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்யும் சிற்றின்பங்கள்
எதற்கு என்கிறார் குதம்பைச் சித்தர் .
மாங்காய்ப்பால் என்றால் ,
அழிவில்லாத , சத்தியமான , நிரந்தரமான பேரின்பம் என்று பொருள் .
தேங்காய்ப்பால் என்றால் ,
வாழ்க்கைத் தேவையான சிற்றின்பங்கள் என்று பொருள் .
மலைகள் ஆதாரங்களுடன் ஒப்பிடப் படுகிறது .
ஏழு ஆதாரங்கள் என்று சொல்லப்படுவதும் இந்த ஏழு ஆதாரங்கள் தான்
மூலாதாரம் -------- முதல் மலை
சுவாதிட்டானம் ----- இரண்டாம் மலை
மணிப்பூரகம்---------- மூன்றாம் மலை
அனாகதம்------------- நான்காம் மலை
விசுக்தி----------------- ஐந்தாம் மலை
ஆக்கினை------------ ஆறாம் மலை
துரியம்----------------- ஏழாம் மலை
மூலாதாரம் என்ற முதல் மலையில் குடி கொண்டுள்ள
குண்டலினி சக்தியானது ,
ஓவ்வொரு ஆதாரமாக அதாவது ஒவ்வொரு மலையாகக் கடந்து
ஏழாவது மலை என்று சொல்லப்படக்கூடிய
பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் சேர்வதே
ஏழுமலையின் தத்துவம்
அதனால் தான் குதம்பைச் சித்தர் மலைமேல் என்றார்.
மூலாதாரத்தில் குடி கொண்டுள்ள குண்டலினி சக்தியை எழுப்பி ,
ஆறு ஆதாரங்களைத் துளைத்து ,
அவற்றில் உள்ள சக்திகளைப் பெற்று ,
ஆறு ஆதாரங்களைக் கடந்து படிப்படியாக மேலேறி ,
அதாவது மலை மேல் ஏறி ,
ஏழுமலை என்று அழைக்கப் படக்கூடிய ,
ஏழுமலை என்று உருவகப் படுத்தக்கூடிய ,
ஏழு ஆதாரங்களை கடந்து ,
ஏழாவது மலையான பிரம்மரந்திரத்தில் உள்ள ,
சிவனுடன் குண்டலினி சக்தி இணையும் போது ,
அமுதம் சுரக்கிறது .
மாங்காயை சாப்பிட்டால் எப்படி அறு சுவையும் கிடைக்குமோ?
அதைப் போல உலகத்தில் உள்ள அனைத்தும்
கிடைக்க வழி வகை செய்யும்
அமுதத்தை சாப்பிட்டு விட்டு ,
பேரின்பப் பெருவெள்ளத்தில் நீந்திக் களிப்பவனுக்கு
அன்றாட வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்யும்
சிற்றின்பங்கள் எதற்கு என்கிறார் குதம்பைச் சித்தர்.
இயேசு கிறிஸ்து - குதம்பைச் சித்தர்:
இயேசு , வாழ்க்கைத் தேவைகளை நிறைவாக அடைந்து
இன்பத்தை பெறுவதைக் காட்டிலும்
பிதாவை உணர்வது தான் முக்கியம் என்கிறார்.
அவ்வாறே ,
குதம்பைச் சித்தரும் , வாழ்க்கைத் தேவைகளான
சிற்றின்பத்தை அடைந்து இன்பத்தை பெறுவதைக் காட்டிலும்
பேரின்பமான இறைவனை உணர்வது தான் முக்கியம் என்கிறார்.
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
போற்றினேன் பதிவுஇருபத்துநான்கு ந்தான்முற்றே “”
No comments:
Post a Comment