May 01, 2012

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-தீப்பால-பதிவு-37

  

         இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-தீப்பால-பதிவு-37

           “”பதிவு முப்பத்தியேழை விரித்துச் சொல்ல
                ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :    

உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?”
                                                           ------மத்தேயு - 7:9

மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? “
                                                          ------மத்தேயு - 7:10

ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது , பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறவர்;களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?”
                                                          ------மத்தேயு - 7:11

ஆதலால் , மனுஷர்  உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் ; இதுவே நியாயப் பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம்
                                                       --------மத்தேயு - 7:12

மடமை உலகத்தில்
மதிக்கு வேலையில்லை!
மதிக்கும் திறனறியா
மானிட ஜென்மங்கள் இருக்கும் வரை
இதயத்தில் அமைதி இல்லை !
இன்புற்று வாழ
இவ்வுலகு வழி கோலவுமில்லை!
இருக்கும் நிலையறிய உதவ ஒரு உதவியுமில்லை!
முடிக்கும் முடிவு தர
முழு மனது தர
முதலுக்கு மோசமில்லை!
முடிவறியா நாட்டில்
முடிக்கு பஞ்சமில்லை!
சாவு மேட்டில்
சங்கநாதம் எழுப்பும்
சரித்திரத்தை உரசிப் பார்க்கும்
உயிரற்ற பிம்பங்களினால்
உன்னத அறிவின் எழுச்சிக்கு
அமைதி இல்லை!
எனை காட்டாத எந்தன் நாட்டில்
பிறப்பெனக்கு இழிபிறப்பு தான்!
என்று இயம்பிட உறவின் உயிரோட்டங்களின்
காந்தக் கவர்  கர்ப்புப் பிணைப்பினால்
இல்லாத ஏக்கங்கள் இனிதே தீர்ந்திட
இருக்கும் சோகங்கள் எரிந்து கரைந்திட
எதை நான் காட்ட
உதாரணத்தின் உயிர்ப்பை
உயிர்கள் அனைத்தும்
உறவாகா விட்டால்
என்ற ஏக்கங்கள்
நெஞ்சினைத் தாக்க
உளக் குமுறல்கள்
உவகையை மாய்க்க
கேட்டவை கிடைக்கவில்லை
என்ற சோகங்கள் மனதை சாய்க்க

பிழையுள்ள உலகமடா - இது
பிழைக்க விடாத நரகமடா

அறிவில்லாத உலகமடா - இது
அன் பறியாத நரகமடா

பாழான உலகமடா - இது
பரி வில்லாத நரகமடா

அன்பில்லாத உலகமடா - இது
கண் ணில்லாத நரகமடா

மதியறியாத உலகமடா - இது
மன தில்லாத நரகமடா

பாசமில்லாத உலகமடா - இது
பண் பற்ற நரகமடா

தெரியாமல் பிறந்தேனடா - இது
தெரிந்தும் பிறக்க மாட்டேனடா

என்று  கேட்டது கிடைக்கவில்லையே
ஆசைபட்டது நடக்கவில்லையே
என்று சோக கீதம் பாடும் மனித இனம்

வேண்டும் வேண்டும் என்று
தேடி ஓடுகிறது
    
     ஆசைப்பட்டு அலைகிறது ;
     விருப்பப்பட்டு சுற்றுகிறது ;
     கனவுகளில் மிதக்கிறது ;
     மதிமயங்கி ஆடுகிறது ;
     அறிவிழந்து நாடுகிறது ;
     மறைகழன்று சிரிக்கிறது ;
     உண்மைதெரியாமல் உளறுகிறது ;
     மகிழ்ச்சியை தேடுகிறது ;
     இன்பத்தை கேட்கிறது ;
     உயர்வுகளை சிந்திக்கிறது ;
     உண்மைகளை மறக்கிறது ;
     மடமைகளில் வாழ்கிறது ;
     ஏழ்மையை வெறுக்கிறது ;
     ஏற்றத்தை விரும்புகிறது ;
     உண்மையை மறுக்கிறது ;
     பொய்மையை ஏற்கிறது ;
     சிந்தனையை இழக்கிறது ;
     சுயநலம் விரும்புகிறது ;
     அன்பை வெறுக்கிறது ;
     இரக்கத்தை கொல்கிறது ;
     கருணையை எரிக்கிறது ;
     அமைதியை புதைக்கிறது ;
        கலவரத்தை வளர்க்கிறது ;
     கொடுமையை போற்றுகிறது ;
     கல்லறைகளை பிறப்பிக்கிறது ;

தான் வாழ பிறரை அழிக்கிறது ;
தான் வாழ செய்யக் கூடாதவைகளை எல்லாம் செய்கிறது ;
தன் நிலை உயர மற்றவர்  நிலையை தாழ்த்துகிறது ;
தன் வாழ்வு செழிக்க மற்றவர்  வாழ்வை நாசம் ஆக்குகிறது ;
கருணையைக் கொன்று ,
இரக்கத்தைத் தின்று ,
ஆணவத்தின் உச்சியில்
அகம்பாவத்தில் நடனமாடுகிறது

தனக்கு தேவையானவை எவை என்றும் ,
தனது விருப்பத்தை நிறைவேற்றுவது எவை என்றும் ,
தனது வாழ்க்கையை வளமாக்குவது எவை என்றும் ,
தெரியாமல் அல்லாடுகிறது மனித இனம்

பசி என்று வந்த மகனுக்கு
அப்பசியைத் தீர்க்க தந்தை
மகனுக்கு உணவைக் கொடுப்பார்
உணவைக் கொடுக்காமல் பசியை தீர்க்காத
வேறு ஏதேனும் பொருளைக் கொடுப்பாரா?
மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா?
மகனின் தேவை எது என்று அறிந்து
அத்தேவையை தீர்க்கும்
அத்தேவையை பூர்த்தி செய்யும்
அத்தேவையை நிறைவேற்றும்
வகையில் தான் தந்தை செயல்படுவாரே ஒழிய
மகனின் தேவைக்கு எதிராக
எதிரான செயல்களைச் செய்ய மாட்டார்.

மகனின் தேவை அத்தியாவசியமாக இருந்தால்
உபயோகமுள்ளதாக இருந்தால்
மகனின் தேவையை தந்தை நிறைவேற்றுவார்.
அதைப்போல்
பாவிகளாகிய நாம்
பாவ மூட்டையை சுமந்து கொண்டு
பாவிகளாக திரியும் நாம்
உண்மையான தேவை எவை என்று உணர்ந்து
அதை தேவைப்பட்டவர்களுக்கு
தேவையான நேரத்தில் தேவையானவைகளைப்
பூர்த்தி செய்யும் போது
பரலோகத்திலிருக்கிற பிதா
தம்மிடம் வேண்டிக் கொள்கிறவர்களுக்கு
தேவையானவைகளைப் பெற நினைப்பவர்களுக்கு
தேவையானவைகளை அடைய நினைப்பவர்களுக்கு
தேவையானவைகளை தேவையான நேரத்தில்
கொடுப்பார்  என்பது முற்றிலும் உண்மை அல்லவா?

தம்மிடம் கேட்பவர்களுக்கு
தேவையானவைகளை பிதா கொடுப்பார்
என்பது சத்தியம் அல்லவா?
நமக்கு தேவையானவைகளை பிதாவிடம் கேட்டால்
பிதா கொடுப்பது உண்மையாக இருக்கும் போது
நாம் ஏன் மற்றவரை அழித்து வாழ முற்பட வேண்டும்.

மற்றவர்களை ஏன் துன்புறுத்த வேண்டும்
மற்றவர்களை ஏன் வருத்தப் பட வைக்க வேண்டும்
மற்றவர்  வாழ்க்கையில் ஏன் விளையாட வேண்டும்
இன்பம் , துன்பம் , அமைதி , பேரின்பம்
ஆகிய நாலும் அனைவருக்கும் சமமாக இருக்கும் போது
நாம் மட்டும் ஏன் சுயநலமாக இருந்து கொண்டு
நமது வாழ்க்கையில் அமைதி , நிம்மதி
தவழ வேண்டும் என்று
எப்படி எதிர்பார்க்கிறோமோ அப்படியே
தான் மற்றவர்களும் எதிர்பார்ப்பார்கள்.

நமது கையை கத்தியால் கீறினால் ரத்தம் வரும்
கண்ணில் கண்ணீர்  உண்டாகும்
உடலில் வலி ஏற்படும் .

அதே உணர்வுகள் தான் மற்றவர்களுக்கும் ஏற்படும்
என்ற அறிவு ஒவ்வொரு
மனுஷருக்கும் ஏற்பட வேண்டும் ;
மற்றவரை அழித்து வாழ வேண்டும் ;
ஒழித்து வாழ வேண்டும் ;
துன்பப்படுத்தி சிரிக்க வேண்டும் ;
என்ற எண்ணத்தை விட வேண்டும் ;
என்ற செயலை துறக்க வேண்டும் ;

மற்றவர்கள் நமக்கு துன்பங்களைச் செய்யும் போது
வருத்தப்படும் நாம்
கவலைப்படும் நாம்
அவர்களை துhற்றும் நாம்
அவர்களை வெறுக்கும் நாம்
அதே தவறுகளை துன்பங்களை
மற்றவர்களுக்கு நாம் செய்யும் போது
நாம் அடைந்த துன்பங்களை ,
நாம் அடைந்த இழப்புகளை ,
நாம் அடைந்த வருத்தங்களை ,
அவர்களுந்தானே அடைவார்கள்
என்பதை சிந்திக்க வேண்டும் .

மற்றவர்கள் நமக்கு எதைச் செய்ய வேண்டாம்
என்று நினைக்கிறோமோ?
அதை மற்றவர்களுக்கு நாம் செய்யக் கூடாது .

மற்றவர்கள் நமக்கு எதைச் செய்ய வேண்டும்
என்று நினைக்கிறோமோ?
அதையே நாம் மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்.

நமக்கு தேவையானவைகளை
பிதாவிடம் கேட்டு
பெற்றுக் கொள்ள வேண்டுமே ஒழிய
மற்றவர்களை அழவைத்து
துன்புற வைத்து
தனக்கு தேவையானவைகளை
பெற்றுக் கொள்ள செயல்கள் செய்யக் கூடாது
என்கிறார்  இயேசு.



திருவள்ளுவர் :

“”தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
   தன்னை அடல்வேண்டா தான்”””
                       ------திருக்குறள்--திருவள்ளுவர்---

உலகம் இருவேறுபட்ட
மாறுபட்ட நிலைகளில்
சமுதாயம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அனைவரையும் நேசி என்று கூறும் சமுதாயம்
பிறருடன் போட்டி போடு என்று கூறுகிறது.

நேசிப்பவனால் எப்படி போட்டி போட முடியும்
போட்டி போடுபவனால் எப்படி நேசிக்க முடியும்.

பிறரை நேசிக்க அன்பு கருணை வேண்டும்
போட்டியிட அன்பு கருணை தேவையில்லை.

மனதில் அன்பு கருணை வைத்துக் கொண்டு
மற்றவருடன் போட்டியிட முடியாது.

நேசிக்கும் போது நண்பராக இருக்கும் ஒருவர்
போட்டியிடும் போது பகைவராகி விடுகிறார்
விரோதியாகி விடுகிறார்
எதிரியாகி விடுகிறார்

எதிரியை அழிக்க வேண்டும் என்பதற்காக
எதிரியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக
எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக
செய்யப்படும் செயல்கள்
     உண்மைக்கு புறம்பானதாக இருக்கும் ;
     நீதிக்கு எதிரானதாக இருக்கும் ;
     சட்டத்தை ஏமாற்றுவதாக இருக்கும் ;
    அநீதியை வளர்ப்பதாக இருக்கும் ;
    உண்மையை கொல்வதாக இருக்கும் ;
    பொய்மையை வளர்ப்பதாக இருக்கும் ;
    அன்பை அழிப்பதாக இருக்கும் ;
    கண்ணியத்தை புதைப்பதாக இருக்கும் ;
    கருணையை எரிப்பதாக இருக்கும் ;
    தீமைகள் வளர்ப்பதாக இருக்கும் ;
    துன்பங்களை கொடுப்பதாக இருக்கும் ;
    அறிவை கெடுப்பதாக இருக்கும் ;
    நயவஞ்சகம் புரிவதாக இருக்கும் ;
    கருணையை மாய்ப்பதாக இருக்கும் ;
    விரோதத்தை வளர்ப்பதாக இருக்கும் ;
    சண்டையை ஏற்படுத்துவதாக இருக்கும் ;
    பண்பை கெடுப்பதாக இருக்கும் ;
    வெறுப்பை உருவாக்குவதாக இருக்கும் ;
    பகையை உண்டாக்குவதாக இருக்கும் ;
    பொய்களை பேசுவதாக இருக்கும் ;
    தவறுகளை செய்வதாக இருக்கும் ;
    தப்பானவைகளை சிந்திப்பதாக இருக்கும் ;
    சுயநலத்துடன் வாழ்வதாக இருக்கும் ;

இத்தகைய தன்மைகள் பலவற்றை தன்னுள் கொண்டு
மற்றவருடன் நாம் போட்டியிடும் போது
எவ்வாறு மற்றவரை நாம் நேசிக்க முடியும் .
போட்டியிட்டே பழக்கப்பட்ட நாம்
மற்றவருடன் போட்டியிட்டே
வாழ்க்கையை கழிக்கும் நாம்
வாழ்க்கையை வாழ்க்கையாக வாழாமல்
போட்டியாகவே கருதி
வாழ்க்கையோடே போட்டி போடும் நாம்
போட்டி போடுவதற்குரிய தன்மைகள்,  குணங்கள்
ஆகியவற்றைத் தான் நாம் பெற்றிருப்போமே ஒழிய
எப்படி நாம் மற்றவரை நேசிக்கும் தன்மையைப் பெற முடியும் .

படிப்பில் போட்டு போடும் போது தான் மட்டும்
அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக
தெரியாத ஒன்றைப் பற்றி
தெரியாக ஒருவருக்கு
ஏற்படும் சந்தேகத்தை கூட சொல்லிக்
கொடுக்காமல் மற்றவரை விரோதியாக
நினைத்து போட்டி போடுகிறோம் .

நல்ல வேலையில் தான் அமர வேண்டும் ;
உயர்  பதவி கிடைக்க வேண்டும் ;
செல்வாக்கு பெருக வேண்டும் ;                               
புகழ் ஓங்க வேண்டும் ;
தன் நிலை உயர வேண்டும் ;
ஊரார்  வாழ்த்த வேண்டும் ;          
உறவினர்கள் போற்ற வேண்டும் ;
என்ற நினைப்பில் ,
நல்ல வேளை கிடைக்காமல்
வாழ்க்கையை நடத்த வழி இல்லாமல்
அன்றாட தேவைகளை
பூர்த்தி செய்து கொள்ள முடியாமல்
தவிக்கும் ஒரு அறியாதவனுக்கு
வேலையைப் பற்றிய விழிப்புணர்வை கூட
அவன் மனதில் விதைக்காமல்
வாழ்க்கைக் கொரு வழியை காட்ட மனமில்லாமல்
தன்னை விட உயர்ந்த வேலையை வாங்கி விடக் கூடாது
என்ற குறுகிய நினைப்பில் வேலைக்காக
போட்டி போடுகிறோம்.

இந்த சமுதாயத்தில் போட்டி என்பது
இல்லாத இடமே இல்லை
போட்டி எங்கே இருக்கிறதோ?
அங்கே இரக்கம் இருக்காது
நயவஞ்சகமும் , குள்ள நரித்தனமும்
விரிந்து பரந்து கிடக்கும் .

நாம் ஒரு போட்டியாளர்  என்ற நிலைக்கு ஆளாகி விட்டால்
உலகமே நமக்கு பகையாகி விடுகிறது .
உறவினர்கள் , சுற்றத்தார் ,  குடும்பத்தார் ,  நண்பர்கள்,

அனைவரும் பகையாளி ஆகி விடுகின்றனர்
அனைவருமே விரோதியாகி விடுகின்றனர்
நாம் போட்டியாளராக மாறி நம்மைச் சுற்றியுள்ள
அனைவரும் பகைவராக மாறி விட்ட பிறகு
நாம் எப்படி பிறரை நேசிக்க முடியும்
அன்பு எப்படி மனதில் பிறக்கும்
கருணை எப்படி சுரக்கும் .

போட்டி என்று வந்து விட்ட பிறகு
வெற்றி பெறுவது முக்கியமாகி விடுகிறது
வெற்றி பெறுவதற்கு எதை
வேண்டுமானாலும் செய்யலாம்
எதை வேண்டுமானாலும் அழிக்கலாம்           
என்ற நிலைக்கு போட்டியாளன் தள்ளப்படுவான்.

உலகமே போட்டிக்குள் இயங்கும் போது
ஒவ்வொரு மனிதனும் போட்டிக்குள் தள்ளப்படும் போது
போட்டி போடாமல் வாழ முடியாது
என்ற நிலை இருக்கும் போது
போட்டி போடாமல் இந்த
உலகில் ஜீவத்திருக்க முடியாது
என்ற சூழ்நிலை இருக்கும் போது
ஒவ்வொரு மனிதனும் எப்படி
தன்னுள் அன்பையும் கருணையை வைத்திருப்பான்
அனைவரையும் நேசிப்பான்.

ஒவ்வொரு உள்ளத்திலும்
பொறாமை இருக்கிறது ;
வெறுப்பு இருக்கிறது ;
சினம் இருக்கிறது ;
பேராசை இருக்கிறது ;
சூழ்ச்சி இருக்கிறது ;
இத்தகைய தன்மைகளை
ஒவ்வொருவரும் பெற்று இருக்கும் போது
ஒருவரை ஒருவர்  எப்படி நேசிக்க முடியும்
அன்பு செலுத்த முடியும் .
உண்மையாக இருக்க முடியும்
பாசம் வைக்க முடியும்

மற்றவரிடம் பிறரை நேசி
என்று உபதேசம் செய்து விட்டு
தன்னுள் பல்வேறு வகையான
களங்கங்களை போட்டு
பூட்டி வைத்திருக்கிறோம்.

மற்றவர்கள் நமக்கு கெடுதல்களை செய்தால்
மனதை வாட்டும் துன்பங்களைச் செய்தால்

கண்ணீரை வரவழைக்கும் செயல்களைச் செய்தால்
கவலைகளை உண்டு பண்ணும்
காரியங்களைச் செயல்படுத்தினால்

     தன்னை வருந்த வைக்கிறான்
     வருத்தம் கொள்ள வைக்கிறான்
     கண்ணீர்  வரவழைக்க வைக்கிறான்
     வாழ்க்கையை வெறுக்க வைக்கிறான்

என்று கூச்சல் போடும் நாம்
அதே தவறுகளை
அதே தவறான செயல்களை
அதே தவறான வார்த்தைகளை
மற்றவர்  மீது பிரயோகிக்கும் போது
நாம் அடைந்த துன்பங்களை ,
நாம் அடைந்த கவலைகளை ,
நாம் அடைந்த இழப்புகளை ,
தான் அவரும் அடைவார்
என்ற எண்ணம் நமக்கு வந்தால்
என்ற அறிவு நமக்கு பிறந்தால்
என்ற சிந்தனை நமக்கு இருந்தால்

துன்பத்தால் தனக்கு ஏற்படும் வலிதானே
மற்றவருக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்து
மற்றவருக்கு துன்பம் செய்ய மாட்டான்
மற்றவரை போட்டியாளனாக நினைக்க மாட்டான் .

தானும் போட்டியாளனாக மாறி
அன்பையும் , கருணையையும் கொல்ல மாட்டான் .
தன் வாழ்க்கையை நேசிப்பது போலவே
மற்றவரையும் நேசிப்பான் .

துன்பத்தால் விளைந்த தீவினைகளின்
பலன்களை உணர்ந்தவர்
அனுபவித்து வேதனைப்பட்டவர்
துன்பப்படுத்தும் கொடுமைகளை விரும்பாதவர்
அத்தகைய துன்பம் தரும்
செயல்களை மற்றவர்களுக்கு
செய்யாமல் இருக்க வேண்டும்

மற்றவர்கள் நமக்கு எத்தகைய துன்பங்களை
செய்ய வேண்டாம் என்று நினைக்கிறோமோ?
அத்தகைய துன்பங்களை நாம் மற்றவர்களுக்கு
செய்யாமல் இருக்க வேண்டும் என்கிறார்  திருவள்ளுவர்.



இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர்:
இயேசு ,
மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டும் என்று
நினைக்கிறீர்களோ அதை மற்றவர்களுக்கு செய்யுங்கள்.

மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்யக் கூடாது என்று
நினைக்கிறீர்களோ அதை மற்றவருக்கு செய்யாதீர்கள் என்கிறார்.


அவ்வாறே,
திருவள்ளுவரும் ,
மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டாம் என்று
நினைக்கிறீர்களோ அதை மற்றவர்களுக்கு செய்ய வேண்டாம்
என்கிறார்.


        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                         போற்றினேன் பதிவுமுப்பத்துஏழு  ந்தான்முற்றே “”

No comments:

Post a Comment