May 10, 2012

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-அடுத்தது-பதிவு-39


       இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-அடுத்தது-பதிவு-39

           “”பதிவு முப்பத்தியொன்பதை விரித்துச் சொல்ல
                          ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது ; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.”
                                                     ----------லுhக்கா - 11 : 34

ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு
                                                  ------------லுhக்கா - 11 : 35

உன் சரீரம் ஒரு புறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறது போல, உன் சரீர முழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்றார்
                                                -----------லுhக்கா - 11 : 36

மனிதனுள் இரண்டு விதமான நடத்தைகள்
குடி கொண்டு இருக்கின்றன
ஓன்று அக நடத்தை , மற்றொன்று புற நடத்தை
மக்கள் பார்க்கும் போது
சமுதாயம் பார்க்கும் போது
உறவினர்கள் பார்க்கும் போது
சுற்றத்தார்  பார்க்கும் போது
குடும்பத்தார்  பார்க்கும் போது
நண்பர்கள் பார்க்கும் போது
ஒரு நடத்தை வெளிப்படுகிறது
இது புறநடத்தை .

தனிமையில் இருக்கும் போது
யாரும் பார்க்காத போது
வெளிப்படும் நடத்தை அக நடத்தை.

மனிதனுள் இருக்கும் இந்த அகநடத்தை
இந்த நடத்தை பெரும் பாலானவர்களில்
பெரும்பாலான மனிதர்களில் வெளிப்படுத்தப்படாமல்
மனிதர்களால் வெளிப்படுத்த முடியாமல்
சமுதாய கோட்பாட்டுக்குள் சிக்கி ,
ஒழுக்க நெறிகளுக்குள் சிக்கி ,
நல்லவை என்ற தத்துவத்துக்குள் சிக்கி ,
வரையறுக்கப்பட்ட நியதிக்குள் சிக்கி,
எழுதாத சட்டத்துக்குள் சிக்கி ,
வாய்பேச முடியாமல் ஊமையாகி ,
செயல்படுத்த முடியாமல் ஊணமாகி ,

தங்கள் கற்பனைகளை ,கனவுகளை
    இதயத்தில் பூட்டி வைத்து ,
    எண்ணத்தில் சிறை வைத்து ,
    சிந்தனைக்குள் காவல் வைத்து ,
    கனவுகளுக்குள் புதைத்து வைத்து ,
    கற்பனைகளுக்குள் கட்டி வைத்து ,
வாழ்கின்றனர்.

கடைசி வரை வெளிப்படுத்த முடியாமல் ;
உண்மையாக இந்த சமுதாயத்தில் நடமாட முடியாமல் ;
உண்மையாக வாழ முடியாமல் ;
உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் ;
உள்ளக் குமுறலை காட்ட முடியாமல் ;
உண்மைகளை உலவாவிட முடியாமல் ;
ஆசைகளை தீர்க்க முடியாமல்;
கனவுகளை செயல்படுத்த முடியாமல்;
கற்பனைகளை சுவைக்க முடியாமல்;
இன்பங்களை நுகர முடியாமல் ;
மகிழ்ச்சிகளை துய்க்க முடியாமல் ;
சிரிப்புகளை காட்ட முடியாமல் ;
தனக்கென்று இந்த சமுதாயத்தில் உள்ள உயர்வை
சமுதாயம் கொடுக்கும் அங்கீகாரத்தை
சமுதாயம் தரும் மதிப்பை                
சமுதாயத்தில் உள்ள தனது பெயரை காப்பாற்றுவதற்கும்
மேலும் உயர்த்துவதற்கும்
சமுதாயம் அங்கீகரிக்கும்
     ஒழுக்க நெறிகளை ,
     நடத்தை கோட்பாடுகளை ,
     எழுத்துக்களின் விவரங்களை ,
     வார்த்தைகளின் எல்லைகளை ,
     பேச்சுக்களின் வரையறைகளை ,
     செயல்களின் உருவங்களை ,
மட்டும் வெளிப்படுத்தி ,
தன் உயர்வை காப்பாற்றிக் கொள்கின்றனர்.

உண்மையல்லாத நடத்தையை வெளிப்படுத்தி விட்டு
உண்மை நடத்தையை உள்ளே
வைத்து பூட்டி வைத்திருக்கின்றனர்.
உள்ளே மறைத்து வைத்திருக்கும்
அக நடத்தையில் தான் - அவனது

இயல்பு தன்மைகள் அடங்கி இருக்கிறது ;
ஆசையின் தாக்கங்கள் மறைந்து இருக்கிறது ;
பேராசையின் சின்னங்கள் பொறிக்கப் பட்டு இருக்கிறது ;
சின்னத்தின் உருவங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது ;
கடும்பற்று உறங்கிக் கொண்டு இருக்கிறது ;
முறையற்ற பால்கவர்ச்சி உலவிக் கொண்டு இருக்கிறது ;
உயர்வு - தாழ்வு மனப்பான்மை அலைந்து கொண்டு இருக்கிறது ;
வஞ்சம் சிரித்துக் கொண்டு இருக்கிறது ;
பொய் வாழ்ந்து கொண்டு இருக்கிறது ;
சூது உறங்கிக் கொண்டு இருக்கிறது ;
கற்பு நெறி பிறழ்தல் தழுவிக் கொண்டு இருக்கிறது ;
பொய்மைகள் அரசாட்சி செய்து கொண்டு இருக்கிறது ;
தான் என்னும் அதிகாரப் பற்று ஆண்டு கொண்டு இருக்கிறது ;
தனது என்னும் பொருட்பற்று முடிசூட்டிக் கொண்டு இருக்கிறது ;
ஆணவம் இணைந்து கொண்டு இருக்கிறது ;
அதிகார போதை தலைவிரித்து ஆடிக்கொண்டு இருக்கிறது ;

இத்தகைய உண்மைத் தன்மைகள்
உண்மை நடத்தைகள்
ஒருவனுள் மறைந்து கிடக்கிறது
சமுதாயத்திற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது   
நாம் விருப்பப்பட்டு பார்க்க ஆசைப்படும் காட்சியானது
நம் கண் முன் இருந்தாலும்
சமுதாயத்திற்காக பார்க்காமல் இருந்து விட்டு
சமுதாயம் நம்மை பார்க்கும் போது
நாம் அந்த காட்சியை பார்க்காமல் தவிர்த்து விட்டு
சமுதாயம் நம்மை பார்க்காத போது பார்ப்பது என்பது
நமது ஒழுங்கின்மை தேவைகள் ,
ஒழுக்கக் குறைவான நடத்தைகள் ,
உண்மை நடத்தைகளின் செயல் வடிவங்கள் ,
வெளிப்படுத்த நாம் காலம் பார்ப்பதாகும்
நம்முடைய அக நடத்தைகள்
ஒழுக்கமுள்ளவைகளாக இருந்தால்
நாம் அதை வெளிப்படுத்த காலம் பார்க்க மாட்டோம்
சமுதாயப் பார்வை நம் மீது விழுகிறதா என்று ஆராயவும் மாட்டோம்.

அக நடத்தைகள் ஒழுக்கமானவைகளாக இருந்தால்
அது எப்பொழுது வேண்டுமானாலும் வெளிப்படும்.
அக நடத்தைகளே துhய்மையற்றவையாக இருந்தால்
வெளிப்பட காலம் பார்க்கும்.

விளக்கானது இருளை நீக்கி ஒளியைத் தர வல்லது
ஐம்புலன்கள் எனப்படும் மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய ஐந்தினுள்
கண் தான் அதிக அளவில் செயல்படுகிறது.
கண் தான் ஒருவருடைய குணத்தை காட்டும் கண்ணாடியாக இருக்கிறது
அகத்தை வெளிக்காட்டுகிறது
குணத்தை வெளிப்படுத்துகிறது

அக நடத்தை துhய்மையாக இருந்தால்,
புறக் காட்சியானது துhய்மையானதாக இருக்கும் .

அக நடத்தை அழுக்காக இருந்தால்
புறக்காட்சியானது அசுத்தமாக இருக்கும்.

அக நடத்தை துhய்மையாக இருந்தால்
கண்ணால் காணப்படும் காட்சியானது
கண்ணால் வெளிப்படுத்தப்படும் காட்சியானது
துhய்மையானதாக இருக்கும் .

அக நடத்தை துhய்மையற்றதாக இருந்தால்
கண்ணால் காணும் காட்சி ஒழுக்கமற்றதாக
கண்ணால் வெளிப்படுத்தப்படும் காட்சி
ஒழுக்கமற்றதாக இருக்கும்.

அகம் துhய்மை பெற கண்ணால்
காணும் காட்சி துhய்மை பெறும்
அகம் அசுத்தம் அடைய கண்ணால்
காணும் காட்சி அழுக்கு அடையும்.

ஒருவனுடைய கண்ணானது அசுத்தங்களையும்,
ஓழுக்கமற்றவைகளையும் ,
ஓழுக்கக் கேடுகளையும் பார்த்தால் அவனது
அகம் இருளால் சூழ்ப்பட்டிருக்கிறது
தீயவைகளால் நிரம்பியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்
இதனால் அவனது சரீரம் அவனது அவயங்கள்
அசுத்தமான அக நடத்தையால்
அசுத்தக் கேடாக மாறியிருக்கிறது
இருளடைந்து இருக்கிறது
பாழடைந்து இருக்கிறது
என்று உணர்ந்து கொள்ளலாம்.

ஒருவனுடைய கண்ணானது நல்லவைகளையும்
ஒழுக்கமானவைகளையும் கண்டால்
அவனது அகம் ஒளியால் நிரம்பி இருக்கிறது
துhய்மையால் சூழப் பட்டிருக்கிறது
நல்லவைகளால் விதைக்கப் பட்டிருக்கிறது
என்று தெரிந்து கொள்ளலாம்.
இதனால் அவனது சரீரம் சுத்தமான அக நடத்தையால்
அவனது அவயங்கள் சுத்தமாக மாறியிருக்கிறது
வெளிச்சமாக இருக்கிறது
என்று உணர்ந்து கொள்ளலாம்.

கண்ணானது மனிதன் தன்னுள் புதைத்து வைத்திருக்கும்
நடத்தைகளை வெளிப்படுத்தும் கண்ணாடியாக இருக்கிறது
மறைத்து வைத்திருக்கும் நடத்தைகளை
வெளிக் காட்டும் விளக்காக இருக்கிறது
அன்றாடம் ஒருவன் வெளிப்படுத்துவது புற நடத்தை ஆகும்

அக நடத்தை வெளிப்படும் போது தான்
ஒருவனின் உண்மைத் தன்மை விளங்கும்
ஒருவனுடைய உண்மைத் தன்மையை வெளிக் காட்டும்
விளக்காக இருப்பது நம் உடலில் உள்ள கண்கள்
கண்களே நம்முடைய உண்மைத் தன்மைகளை விளக்கும் விளக்கு
நம்முடைய அகம் இருள் அடையாத படி ஒழுக்கமற்றவைகளால்
நிரப்பப் படாத படி
தேவையற்றவைகளால் சிதைவுறாத படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

சரீரமானது நல்லவைகளாலும் ,தீயவைகளாலும்
பாவங்களாலும் , புண்ணியங்களாலும் நிரப்பப் பட்டிருந்தால்
சரீரமானது இருளாலும் ,வெளிச்சத்தாலும் சூழ்ப்பட்டிருக்கும்
அதாவது இன்பத்தாலும் ,துன்பத்தாலும் தழுவப்பட்டிருக்கும்

சரீரம் வெளிச்சமாயிருக்கும் என்றால்             
சரீரம் இன்பத்தால் நிரப்பப் பட்டிருக்கும் என்று பொருள்.
சரீரம் இருளாயிருக்கும் என்றால்
சரீரம் துன்பத்தால் சூழப்பட்டிருக்கும் என்று பொருள்.

சரீரமானது நல்லவைகளாலும் ,புண்ணியத்தாலும் மட்டும்
நிரப்பப் பட்டிருக்கும் போது,
சரீரமானது முழுவதும் வெளிச்சமாயிருக்கும் இருளே இருக்காது
அதாவது இன்பங்களால் நிரம்பியிருக்கும் துன்பங்கள் இருக்காது.

ஒரு விளக்கை ஏற்றி வைத்தால்
அறை முழுவதும் இருள் இல்லாமல்
எவ்வாறு பிரகாசமாக இருக்கிறதோ? அதைப் போல
அக நடத்தை துhய்மையாக உள்ளவர்
சரீரமானது வெளிச்சம் நிரம்பியதாக இருக்கும்
அதாவது அவனது சரீரம் முழுவதும் துhய்மையானதாக
உண்மை நிரம்பியதாக இருக்கும் .

சரீரத்தின் ஒவ்வொரு அணுவும்
ஒவ்வொரு அவயங்களும் இன்பத்தால்
சுகத்தால் நிரப்பப் பட்டிருக்கும்
நோயற்ற தன்மையால் சூழப்பட்டிருக்கும்படி
மகிழ்ச்சியால் நிரப்பட்டிருக்கும் என்கிறார்  இயேசு .



திருவள்ளுவர் :

   “””அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
       கடுத்தது காட்டும் முகம்”””
                 -------திருக்குறள்------திருவள்ளுவர்----
 
தெரியாத ஒன்றைப் பற்றி தெரியாதவர்
தெரியாத ஒருவரிடம் சென்று கேட்டால்
அந்தத் தெரியாதவர்
தனக்குத் தெரியாததை தெரியாது என்று சொல்லாமல்
தனக்குத் தெரிந்த மாதிரி  அந்தத் தெரியாதவரிடம் சொல்ல !
அந்தத் தெரியாதவர்; தெரியாததைப் பற்றி தெரியாதவரிடம்
கேட்டுத் தெரிந்து கொண்ட - அந்தத்
தெரியாத விஷயத்தை தெரியாத வேறொருவரிடம் தெரிவிப்பார்
தெரியாத விஷயங்கள் பெரும்பாலும்
மறைவாகத்தான் வைக்கப் பட்டிருக்கிறது

இந்த உலகத்தில்,

தோல்வின் முகவரி  தெரிந்தால் தான்
    வெற்றியின் இருப்பிடம் தெரியும் !
இலக்கணத்தின் இறுதி தெரிந்தால் தான்
    கவிதையின் அழகு தெரியும்!
பாசறையில் அடி பாட்டால் தான்
    வாளின் வரலாறு தெரியும்!
காட்சியை கற்பனை தொட்டால் தான்
    இயற்கையின் எழில் தெரியும்!
வார்த்தையை அர்த்தம் தொட்டால் தான்
    எழுத்தின் எழுச்சி தெரியும்!
குங்குமம் நெற்றியை தொட்டால் தான்
    திலகத்தின் பெருமை தெரியும்!
விழிகளை கண்ணீர்  தொட்டால் தான்
    துயரத்தின் ஆழம் தெரியும்!
இதழை இதழ் தொட்டால் தான்
    இன்பத்தின் எல்லை தெரியும்!
கேள்வியை பதில் தொட்டால் தான்
     அறிவின் ஞானம் தெரியும்!
பல்லவியை சரணம் தொட்டால் தான்
     பாடலின் முழுமை தெரியும்!
வில்லை அம்பு தொட்டால் தான்
     வீரத்தின் விளைவு தெரியும்!
சிந்தனையை சாதனை தொட்டால் தான்
    உழைப்பின் மேன்மை தெரியும்!
மார்பை ஈட்டி தொட்டால் தான்
    துணிவின் துணை தெரியும்!
வரலாறை குருதி தெரிட்டால் தான்
    புரட்சியின் எழுச்சி தெரியும்!
பதவியை பரிவு தொட்டால் தான்
    அன்பின் அரவணைப்பு தெரியும்!
இளமையை இன்பம் தொட்டால் தான்
    வாலிபத்தின் வாழ்க்கை தெரியும்!
தீமையை நன்மை தெரிட்டால் தான்
    இனிமையின் இனிப்பு தெரியும்!
மானை வேங்கை தொட்டால் தான்
    கொடுமையின் இலக்கணம் தெரியும்!
விதி ரேகையைத் தொட்டால் தான்
    வாழ்க்கையின் அர்த்தம் தெரியும்!
இரவை உதயம் தொட்டால் தான்
    விடியலின் விடிவு தெரியும்!
கரையை கடல் தொட்டால் தான்
    நட்பின் ஆழம் தெரியும்!
உயிர்  உடலை தொட்டால் தான்
    பிறப்பின் பலன் தெரியும்!
உடலை இறப்பு தொட்டால் தான்
    வாழ்க்கையின் முடிவு தெரியும்!

எது எதை தொட்டால் தெரியாதது தெரியும் என்பதை
முதலில் உணர்ந்து கொண்டால்
தெரியாததை தெரிந்து கொள்ளலாம்
எது எதை தொட்டால் தெரியும் என்பதை
தெரியாமல் விட்டு விட்டால் தெரியாதது
தெரிந்து கொள்ள முடியாமல் போய் விடும்

முதலில் தெரிந்து கொள்வது எப்படி என்பதைத்
தெரிந்து கொள்ள வேண்டும்
வெட்ட வெளிச்சமாக வெளிப்படையாக யாவரும்
உணர்ந்து கொள்ளும் விதத்தில்
யாவரும் அறிந்து கொள்ளும் விதத்தில்
உள்ளவைகளை தெரிந்து கொள்ளலாம்
பளிங்கு தன் முன் உள்ளவற்றை உள்ளது உள்ளபடியே
புறத்தோற்றத்தின் வடிவங்களை எடுத்துக் காட்டும்.
கண்ணாடியும் தன் முன் உள்ளவற்றை புறத்தோற்றத்தின்
வடிவத்தின் அமைப்புகளை அளவு உருவம் ஏற்ப விளக்கி காட்டும்.

ஆனால் மறைத்து வைக்கப் பட்டவைகளை ,
மனிதனுள் மறைத்து வைக்கப் பட்டவைகளை ,
மனிதன் தன்னுள் ஒளித்து வைத்திருப்பவைகளை ,
எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது
அவைகள் நல்லவைகளா? தீயவைகளா? என்று அறிந்து கொள்வது
நல்லவைகளாக இருந்தால் அப்படிப் பட்டவனிடம் நட்பு கொண்டும்
கெட்டவைகளாக இருந்தால் அப்படிப் பட்டவனிடம்
அவனிடம் இருந்து விலகி இருக்கலாமே .
ஒருவன் தன்னுடைய தீய குணங்களை
பெரும்பாலும் வெளிப்படுத்துவதில்லை .
அப்படி இருக்கும் பொழுது எப்படி ஒருவனுடைய
உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்வது
இரு வேறு தன்மைகளைத் தன்னுள் கொண்டு
உள்ளத்தில் அழுக்கையும் , உவகையில் அமைதியையும்
தவழவிடும் போலித்தன ஆசாமிகளை எவ்வாறு
அடையாளம் கண்டு கொள்வது
    மனதில் மறைத்து உள்ளதை
   உள்ளத்தில் மறைத்து வைத்ததை
  நெஞ்சத்தில் மறைத்து வைத்ததை
முகம் தெளிவாக காட்டும்
           நல்லவற்றை கடைப் பிடிப்பவனாக
          நல்லவற்றை செய்பவனாக
         நல்லவற்றை எழுதுபவனாக
         நல்லவற்றை பேசுபவனாக
        நல்லவற்றை பின்பற்றுபவனாக
எவ்வளவு தான் நல்லவனாக நடித்தாலும்
முகமானது உண்மைத் தன்மையை
உண்மை நிலையை வெளிக் காட்டி விடும்

   அன்பின் வடிவங்கள் ;
   ஆசையின் தாக்கங்கள் ;
   இன்பத்தின் அருமைகள் ;
   ஈகையின் உணர்வுகள் ;
   எளிமையின் சாயல்கள் ;
   ஏக்கத்தின் கண்ணீர்  விளக்கங்கள் ;
   சினத்தின் சிணுங்கல்கள் ;
    உணர்வின் வெளிப்பாடுகள் ;
    துன்பங்களின் குமுறல்கள் ;
    கவலையின் சின்னங்கள் ;
    இன்பத்தின் முடிவுகள் ;
    ஏக்கங்களின் பிம்பங்கள் ;
ஆகியவற்றை எவ்வளவு தான் மறைத்து வைத்தாலும்
மறைவுகள் முகம் வெளிப்பட்டுவிடும் .
விதைக்கப் பட்ட விதை முளைவிட்டு வளரத் தொடங்கும் போது
விதைக்குள் மறைந்திருப்பவை வெளிப்படத் தொடங்கும்
வெளிப்படும் போது விதையின் உள் தன்மை புரியும்.

அதைப் போல உணர்வுகளை எவ்வளவு தான்
அடியாழத்தில் வைத்து புதைத்து வைத்தாலும்
முகமானது அதை வெட்ட வெளிச்சமாக வெளிக் காட்டிவிடும்.

கண்ணானது உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணாடியாகவும்
வார்த்தையானது உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவியாகவும் இருக்கிறது.
மனதில் போட்டு உண்மைத் தன்மைகளை எவ்வளவு தான்
மறைத்தாலும் முகமானது வெளிப்படுத்தி விடும்.
புறத்தோற்றத்தை பளிங்கு எப்படி காட்டுகிறதோ அவ்வாறே     
அகத் தோற்றத்தை முகமானது வெளிக் காட்டி விடுகிறது.
என்கிறார்  திருவள்ளுவர்.



இயேசு கிறிஸ்து – திருவள்ளுவர்:
இயேசு ,
கண்ணானது ஒருவனுள் ஒளிந்து கொண்டிருக்கும்
உண்மை தன்மைகளை வெளிக்காட்டுகிறது என்கிறார்.

அவ்வாறே,
திருவள்ளுவரும் ,
முகமானது ஒருவனுள் ஒளிந்து கொண்டிருக்கும்
உண்மை தன்மையினை வெளிப்படுத்துகிறது என்கிறார்.


            “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                  போற்றினேன் பதிவுமுப்பத்தியொன்பது  ந்தான்முற்றே “”

No comments:

Post a Comment