இயேசு கிறிஸ்து-வால்மீகர்-ஆமப்பா-பதிவு-47
“”பதிவு நாற்பத்திஏழை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
இயேசு கிறிஸ்து :
“பிலாத்து மறுபடியும் அரண்மனைக்குள் பிரவேசித்து , இயேசுவை அழைத்து : நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.”
-------யோவான் - 18 : 33
“இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக் குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.”
------யோவான் - 18 : 34
“பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா ? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக் கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.”
-------யோவான் - 18 : 35
“இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக் கொடுக்கப்படாத படிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.”
--------யோவான் - 18 : 36
“அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்கிறபடி நான் ராஜா தான்; சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.”
------யோவான் - 18 : 37
“அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான் .மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.”
-----யோவான் -18 : 38
கேள்வி இரண்டு நிலைகளில் கேட்கப்படுகிறது
ஒன்று : அறியாததை அறிந்து கொள்ள வேண்டும் என்று
அடக்க நோக்கில் கேட்கப்படுவது,
இரண்டு : தனக்கு எல்லாம் தெரியும் மற்றவருக்கு தெரியுமா?
என்று ஆணவ நோக்கில் கேட்கப்படுவது .
அடக்கமாக இருப்பவனால் மட்டுமே
அறியாததை அறிந்து கொள்ள முடியும்.
ஆணவத்துடன் இருப்பவனால் ஒன்றையும் அறிய முடியாமல்
விளக்கம் பெற முடியாமல் ,தன்னை உயர்ந்தவன் என்று
தன்னைத் தானே நினைத்துக் கொண்டு
மூளை பிசகிய நிலையில் இருந்து கொண்டு
சமுதாயத்தில் தன்னை பகட்டாய் அறிவாளியாய் உயர்ந்தவனாய்
எல்லாம் தெரிந்தவனாய் காட்டிக் கொண்டு
உண்மையின் உரு தெரியாமல்
அறியாமையில் மாட்டிக் கொண்டு
மண்ணோடு மண்ணாக மக்கித்தான் போக முடியும்.
காலத்தை கடந்து நிற்க முடியாது.
முட்டாள்தனமான கேள்வி என்று எதுவுமில்லை
முட்டாள்தனமான பதில் தான் உண்டு.
ஒருவர் சொல்லும் பதிலை வைத்தே அவர்
ஒன்றைப் பற்றி எவ்வளவு அறிந்திருக்கிறார்
ஒன்றில் எவ்வளவு தெளிந்திருக்கிறார் ;
ஒன்றில் எவ்வளவு ஆழ்ந்திருக்கிறார் ;
ஒன்றில் எவ்வளவு விளக்கம் பெற்றிருக்கிறார் ;
ஒன்றில் எவ்வளவு அறிவு பெற்றிருக்கிறார் ;
ஒன்றில் எவ்வளவு புத்தி உயர்வு அடைந்திருக்கிறார் ;
ஒன்றில் எவ்வளவு ஆழம் சென்றிருக்கிறார் ;
என்பதை உணர்ந்து கொள்ள முடியும் .
ஒருவரின் முட்டாள்தனமான பதிலைக் கொண்டு அவரின்
ஆளுமைத் தன்மையினை அறிந்து கொள்ள முடியும்.
இத்தகைய முட்டாள்தனமான பல கேள்விகள்
முட்டாள் தனமானவர்களால் இயேசுவை குற்றவாளியாக்க
இயேசுவை சிக்கலில் மாட்ட வைக்க
பல்வேறு நிலைகளில் , பல்வேறு சந்தர்ப்பங்களில்,
பல்வேறு காலங்களில் ,பல்வேறு தரப்பட்டவர்களால்,
பல்வேறு வார்த்தைகளைக் கொண்டு கேட்கப் பட்டன.
ஆனால் கேள்வி கேட்டவர்களே சிக்கலில் மாட்டிக் கொண்டு
தலைகுனிய வேண்டிய நிலை தான் ஏற்பட்டது.
கேள்வி என்பது அறிந்து கொள்ள வேண்டும்
என்ற நோக்கில் இருக்க வேண்டும்.
பிலாத்து இயேசுவை நோக்கி நீ யூதருடைய ராஜாவா என்றான்
அதற்கு இயேசு இதை நீ ,
அறிந்து கொண்டு கேட்கிறீரா ?அறியாமல் கேட்கிறீரா?
அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் கேட்கிறீரா?
மற்றவர்கள் சொன்னதை கருத்தில் கொண்டு கேட்கிறீரா?
மற்றவர்கள் என்னைப் பற்றி சொன்னதை
உண்மையாக இருக்குமா? பொய்யாக இருக்குமா?
என்ற மனநிலையில் இருந்து கொண்டு கேட்கிறீரா என்றார்.
அதற்கு பிலாத்து பிரதான ஆசாரியாரும் ,உன் ஜனங்களும் தானே
உன்னை குற்றவாளியாக்கி என்னிடம் ஒப்புக் கொடுத்து இருக்கிறார்கள்.
அப்படி இருக்க நீ என்ன செய்தாய் ஒன்றும் செய்யவில்லையே,
எதுவும் செய்யவில்லையே ,
அமைதியாகத் தானே இருக்கிறாய் என்றான்.
அதற்கு இயேசு நான் அமைதியாக இருக்கிறேன்
ஏனென்றால் என் ராஜ்யம் இவ்வுலகத்துக்கு உரியது அல்ல,
இவ்வுலகத்துக்குள் உட்பட்டதும் அல்ல,
இவ்வுலகத்துக்கு மட்டுமே உரியதும் அல்ல,
என் ராஜ்யம் இந்த உலகத்துக்கு மட்டுமே உரியதானால்
என் ராஜ்யம் இந்த உலகத்திற்கு மட்டுமே இருக்குமேயானால்
என் ஊழியக்காரர்கள் என்னை யூதர்களிடத்தில்
ஒப்புக் கொடுக்காத படிக்கு போராடியிருப்பார்கள்.
இந்தச் செயலிலிருந்து ,
இந்தச் செயல்கள் நிகழாமல் இருப்பதிலிருந்து,
இந்த நிகழ்வுகள் நடைபெறாததிலிலிருந்து,
தெரிந்து கொள்ள வேண்டாமா?
என் ராஜ்யம் இந்த உலகத்திற்குள் உட்பட்டதுமல்ல,
என் ராஜ்யம் இந்த உலகத்திற்கு மட்டுமே உரியதுமல்ல,
குறிப்பிட்ட எல்லைக்குள் உட்பட்டதுமல்ல,
குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்பட்டு இருப்பதுமல்ல,
குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்கம் பெற்று கிடப்பதுமல்ல,
எல்லைகளை கடந்து நிற்பது என்கிறார்.
அப்படியென்றால் நீ ராஜாவோ என்றான் பிலாத்து
அதற்கு இயேசு நான் ராஜா தான்
நீர் சொல்லுகிறபடி நான் ராஜா தான்
நீ நினைக்கிறபடி நான் ராஜா தான் என்கிறார்.
எதற்கு ராஜா ,எதன் அடிப்படையில் ராஜா,
என்பதை கீழ்க்கண்ட வசனங்கள் மூலம்
தெளிவு படுத்துகிறார் இயேசு.
சத்தியத்திற்கு சாட்சி கொடுக்கவே நான் பிறந்தேன்
அதற்காகவே நான் இந்த உலகத்தில் வந்தேன்.
சத்தியத்தை உணரத் துடிப்பவர்
சத்தியத்தை அறிய விருப்பப்படுபவர்
ஆகியோருக்கு நான் சத்தியமாக வழிகாட்டியாக
சத்தியத்தை உணர வைக்கும் வழிகாட்டியாக
சத்தியத்தின் சாயலாக
சத்தியத்தின் பிம்பமாக
இருப்பதால் சத்தியத்திற்கு ராஜாவாக இருக்கிறேன்.
ஏன் இருக்கிறேன்
எப்படி இருக்கிறேன்
எந்த விதத்தில் இருக்கிறேன்
எந்த வகையில் இருக்கிறேன்
என்று சத்தியத்தைப் பற்றி விளக்குகிறார் இயேசு.
சத்தியம் என்றும் இருப்பது ,
எல்லாவற்றுள்ளும் இருப்பது ,
எதனுள்ளும் இருப்பது ,
எல்லாவற்றுக்குள்ளும் இருப்பது ,
எதிலும் இருப்பது ,
என்றும் இருப்பது ,
எப்பொழுதும் இருப்பது ,
எக்காலமும் இருப்பது ,
சத்தியம் மாறக் கூடியதல்ல ,
மாற்றத்திற்கு உட்பட்டதல்ல ,
மாறும் நிலையைப் பெற்றதல்ல ,
மாறக்கூடிய தன்மையை உடையதல்ல ,
மாறாமல் இருப்பது சத்தியம்.
மாறினால் அது சத்தியமல்ல.
அனைத்திற்குள்ளும் இருந்து
அனைத்தையும் இயக்க ஒழுங்கு விதிப்படி மாறாமல்
அனைத்தையும் காத்து இயக்கி வருவது சத்தியம் .
சத்தியமே எல்லாவற்றும் ஆதி
சத்தியமே எல்லாவற்றும் அந்தம்
சத்தியமே எல்லாவற்றும் மூலம்
சத்தியமே எல்லாவற்றும் முதன்மை
சத்தியமே எல்லாவற்றும் அடிப்படை
இத்தகைய தன்மைகள் பலவற்றை
தன்னுள் கொண்ட சத்தியத்தை
சத்தியம் என்றால் என்ன என்றும் ,
அது எத்தகைய தன்மைகளைத்
தன்னுள் கொண்டுள்ளது என்றும் ,
சத்தியத்தின் உண்மைத் தன்மை என்ன என்றும் ,
சத்தியத்தின் பொருள் உணராமல் ,
சத்தியத்தின் உண்மை அறியாமல் ,
சத்தியத்தின் விளக்கம் தெரியாமல் ,
அறியாமையில் சிக்கிக் கொண்டு
மடமையில் மாட்டிக் கொண்டு
துன்பச் சகதியில் சிக்கி
கொன்றழிக்கும் கவலை என்னும் குழியில் வீழ்ந்து
மனிதர்கள் தள்ளாடுகின்றனர் ;
கண்ணீரில் வீழ்ந்து மூழ்குகின்றனர் ;
கொன்றழிக்கும் கவலையில் அழிகின்றனர் ;
மனம் வாடுகின்றனர் ;
அறிவை இழக்கின்றனர் ;
சிந்தனை தடுமாறுகின்றனர் ;
அறியாமையில் வீழ்கின்றனர் ;
மடமையில் மாட்டுகின்றனர் ;
புத்தியை விடுகின்றனர் ;
இந்த நிலை மாற வேண்டும்
மக்கள் மனம் தெளிய வேண்டும்
சத்தியம் உணர வேண்டும்
சத்தியத்தின் பொருளை அறிய வேண்டும்
என்ற நோக்கத்திலேயே சத்தியத்திற்கு
சாட்சி கொடுக்கவே நான் பிறந்தேன்
சத்தியத்தை வலியுறுத்தவே சத்தியத்தின் உண்மைப் பொருளை
விளங்க வைக்கவே இந்த உலகத்தில் வந்தேன்
சத்தியத்தை அறிய நினைப்பவர்
சத்தியத்தின் உண்மைப் பொருளை உணரத் துடிப்பவர்
சத்தியத்தின் வழியைத் தேடுபவர்
சத்தியம் என்றால் என்று ஆராய்பவர்
நான் சொல்லும் சத்தியத்தை
சத்தியத்தின் உண்மைப் பொருளை
கேட்டு அறிந்து நடந்து பின்பற்றி உயர்வடைவான்
என்கிறார் இயேசு.
அதற்கு பிலாத்து சத்தியம் என்றால் என்ன என்று
கேட்டதற்கு இயேசு பதில் உரைக்கவில்லை.
மௌனம் காத்தார் ; மௌனம் உரைத்தார் ;
மௌனம் வெளிப்படுத்தினார் ;
சத்தியத்தை வார்த்தைகளில் உரைக்க முடியாது ;
வார்த்தைகளில் உரைத்தால் அது சத்தியமாக இருக்காது ;
சத்தியம் மாறாதது ;
சத்தியம் அழிவில்லாதது ;
என்றும் இருப்பது ;
அனைத்தையும் காப்பாற்றுவது ;
எல்லாவற்றையும் வழிநடத்துவது ;
அனைத்தையும் இயக்குவது ;
என்றும் இருப்பது ;
எப்பொழுதும் இருப்பது ;
எக்காலத்தும் இருப்பது;
அத்தகைய சத்தியமே ஆண்டவர்; ஆண்டவரே சத்தியம்;
தன்னலமில்லா இருதயம் கொண்டு
கள்ளமில்லா உள்ளம் கொண்டு
கபடமில்லா நெஞ்சம் கொண்டு
அன்பினால் உயிர்களை அனைத்து
கருணையில் மனங்களை வாழவைத்து
இரக்கத்தினால் செயல்களை கைக்கொண்டு
சுயநலமில்லா பாதை கொண்டு
விசுவாசத்துடன் நம்பிக்கையுடன்
உயர்நெறி நடப்பவர்க்கே
சத்தியமே ஆண்டவர் ஆண்டவரே சத்தியம்
என்பதை உணர்ந்து கொள்வார்.
உள்ளம் உருகி கண்ணீரால் நனைத்து
இதயத்தால் நம்பி தேடும் சத்தியத்தை எப்படி
வார்த்தைகளை அடுக்கி மொழிகளை பயன்படுத்தி
சத்தியத்தை விளக்க முடியும்.
இயேசுவை உணர்ந்தவர் ; சத்தியத்தை உணர முடியும்;
சத்தியத்தை உணரத் துடிப்பவர்; இயேசுவை உணர வேண்டும்.
அதனால் தான் இயேசு என்னை உணர்ந்து பின்பற்றுபவன்
சத்தியத்தை உணர்வான்.
சத்தியத்தை உணர வேண்டுமானால் என்னை பின்பற்றினால்
சத்தியத்தை உணர்ந்து கொள்ளலாம் என்கிறார் இயேசு.
இயேசுவின் வார்த்தைகளையும்
மௌனத்தின் தன்மைகளையும்
தன்னுள் கிரகித்துக் கொண்ட பிலாத்து
நான் அவரிடத்தில் குற்றத்திற்கான எந்த ஒரு
தன்மையையும் , குணங்களையும் காணவில்லை
என்று வெளியே வந்து யூதர்களிடத்தில் கூறினான்.
இதன் மூலம் இயேசு சத்தியத்தை
வார்;த்தைகளால் உரைக்க முடியாது
தன்னை அறிந்து உணர்ந்து பின்பற்றுவதன் மூலம்
சத்தியத்தை உணர்ந்து
கொள்ள முடியும் என்கிறார்.
வால்மீகர்:
“ஆமப்பா வுலகத்தில் பெருநுhல் பார்த்தோர்
அவர்வர்கண் டதையெலாம் சரிதை யென்பார்
ஓமப்பா கல்செம்பைத் தெய்வ மென்றே
உருகுவார் பூசிப்பார் கிரியை யென்பார்
வாமப்பா யோகமென்று கனிகாய் தின்று
வாய்பேசா வூமையைப் போல் திரிகுவார்கள்
காமப்பா ஞானமென விண்டு மேலும்
காக்கைபித்தன் மிருகம்போல் சுற்று வாரே”
----வால்மீகர்--சூத்திர ஞானம் - 16 -------
எந்தக் கேள்விக்கும் பதில்களால் பதில் அளிக்க முடியாது
எப்படி நடக்கிறது என்று பதில் சொல்ல முடியும்
ஏன் நடக்கிறது என்று பதில் சொல்ல முடியாது.
ஹைட்ரஜனும் , ஆக்ஸிஜனும் சேர்ந்து
தண்ணீர் எப்படி உருவாகிறது என்று கேட்டால்
அது உருவாகும் முறையை
அது உருவாகும் விதத்தை
அது உருவாகும் விதிமுறைகளை
அது அப்படித்தான் நடக்கிறது
அது அப்படித்தான் என்று
அறிவியல் அறிஞர்கள் கூறுவார்கள்.
அது ஏன் நிகழ்கிறது எவ்வாறு நிகழ்கிறது என்று கேட்டால்
பதில் சொல்ல முடியாது.
ஹைட்ரஜனும் ,ஆக்ஸிஜனும் சேர்ந்தால் தான் நீர் கிடைக்குமா?
ஹைட்ரஜனும் ,ஆக்ஸிஜனும் சேராமல் நீர் கிடைக்காதா?
என்று கேட்டால் அவர்கள்
எங்களால் எப்படி நடக்கிறது என்று சொல்ல முடியும்
ஏன் நடக்கிறது என்று சொல்ல முடியாது என்பார்கள்.
விஞ்ஞானம் பகுத்தறிவுக்கு சான்றாக
தன்னை அடையாளபடுத்திக் கொள்கிறது.
மெய்ஞ்ஞானம் ஒரு போதும் தன்னை அடையாளப்
படுத்திக் கொள்வதுமில்லை.
பகுத்தறிவு பாசறையாக தன்னை
பிரகடனப்படுத்திக் கொள்வதுமில்லை.
அதனால் தான் விஞ்ஞானத்தால் ஏன்
என்பதற்கான பதிலை கண்டறிய முடிவதில்லை.
விஞ்ஞானத்தால் ஏன் என்பதற்கான
பதிலை சொல்ல முடிவதில்லை.
விஞ்ஞானம் ஏன் என்பதற்கான பதிலை
தேடுகிறது ,தேடுகிறது,
தேடிக் கொண்டே இருக்கிறது.
ஆனால் மெய்ஞ்ஞானம் ,
எல்லாவற்றையும் கடந்து செல்கிறது ;ஆழ்ந்து செல்கிறது;
பிரபஞ்ச ரகசியங்களை தெரிந்து கொள்கிறது;
ஏன் என்பதற்கான பதிலை அறிந்து கொள்கிறது;
எல்லாவற்றுக்கும் மூலம் பூரணம்
என்பதை உணர்ந்து கொள்கிறது .
ஆத்மாவோ ஒன்று , அதுவோ அசைவற்றது
ஆனாலும் விரைவானது மனதை விடவும்
அனைத்திற்கு முன்னும் அது சென்று விட்டதால்
அடையவோ முடியவிலலை ஐம்புலன்களாலும்,
ஆத்மாவோ ஓடுவதில்லை, நிலைபெற்றே நிற்கிறது
ஆனாலும் முந்துகிறது ஓடுகின்ற அனைத்தையுமே
ஆத்மாவின் இருப்பினால் பிராணன் , ஜீவர்களின் இயக்கங்கள்
அனைத்தையுமே அதுவே தாங்குகின்றது .
அது அசைகிறது ஆனாலும் அது அசைகிறதில்லை
அது தொலைவில் உள்ளது , அதுவே அருகிலும் உள்ளது
எல்லாவற்றிலும் உள்ளே இருப்பதும் அதுவே
எல்லாவற்றிலும் வெளியே இருப்பதும் அதுவே
ஆத்மாவில் அனைத்தும் அடங்கி யிருத்தலையும்
ஆத்மாவான தான் அனைத்துள்ளும் அடங்கியிருத்தலையும்
அறிகின்ற ஞானிக்கு பகை ஏது? பாசந்தான் ஏது?
அனைத்தையும் ஆத்மாவாக காணுகின்ற ஞானிக்கு
அனைத்தையும் ஒன்றெனவே அறிகின்ற ஞானிக்கு
அல்லல் ஏது? சோகந்தான் ஏது?
விருப்பு ஏது வெறுப்புத் தான் ஏது
அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
அருளொடு நின்றொளி வீசுவது அது
அதுவோ ரணமும் அற்றது , ஆசையும் அற்றது , உடலும் அற்றது
அது துhயது , அறியாமையை அறியாதது
அனைத்தையும் அறிந்தது , முக்காலத்தையும் உணர்ந்து
தானே உண்டாகித் தன்னையும் கடந்தது.
எக்காலத்தும் வேற்றுமையிலும் இணக்கமே கண்டது.
என்பதை இருப்பு நிலையான , இறைநிலையான , மூலநிலையை
மெய்ஞ்ஞானம் உணர்ந்து கொள்கிறது .
உண்மையான மெய்ஞ்ஞான உணர்வு பெற்றவர்களால் மட்டுமே
முழுமை அடைந்தவர்களால் மட்டுமே
ஏன் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியும்.
ஏன் என்ற கேள்விக்கு பதில் சொல்ல தெரியாதவர்கள்
முழுமை அடையாதவர்கள் மெய்ஞ்ஞானம் உணராதவர்கள்
மற்றவர்கள் வார்த்தையைக் களவாடி காலத்தை ஓட்டுபவர்கள்
என்று தெரிந்து கொள்ளலாம்.
உண்மையை உணர்ந்தவர்கள்
வார்த்தை ஜாலம் காட்ட மாட்டார்கள்
எழுத்துக்கள் மூலம் மயக்க மாட்டார்கள் , ஏனென்றால்
உண்மையை வார்த்தைகள் மூலமோ , எழுத்துக்கள் மூலமோ,
சொல்ல முடியாது என்று ,
உண்மையை உணர்ந்தவர்களுக்கு தெரியும்.
உண்மையை உணராதவர்கள்
உணமையை உணர்ந்தது போல நடிப்பவர்கள்
புத்தகங்கள் பலவற்றைப் படித்து
புத்தகத்தில் உள்ளது உண்மை என்று நம்பி
புத்தகத்தில் சொல்லப்பட்டது தனக்கு நடந்ததாக சரிபார்த்து
ஓப்பிட்டு நோக்கி தான் கண்டது உண்மை சத்தியம்
என்பார்கள்.
கல்லினால் செய்யப்பட்ட சிலையையும்
செப்பினால் வார்க்கப்பட்ட உருவத்தையும்
உண்மையான தெய்வம் என்று நம்பி பூஜிப்பார்கள்
உண்மை எது என்று தெரியாமல் வணங்குவார்கள்
உண்மையை அடைய முடியாமல் தடுமாறுவார்கள்
உண்மையை விட்டு விடுவார்கள்
உண்மையை அடையும் நிலையை துறப்பார்கள்
உண்மையை உணர்ந்து விட்டோம் என்று
மனதில் நினைத்துக் கொண்டு
பலவித யோகங்கள் செய்து
கனி ,காயை தின்று உலாவி
ஊமையைப் போல் பேசாமல் மௌனநிலை
இது மௌனத்தின் இறுதிநிலை என்று
கூறிக் கொண்டு அலைவார்கள்.
மேலும் ஞானி என்று தன்னை சொல்லிக் கொண்டு
சமுதாயத்தில் தன்னை ஞானி என்று காட்டிக் கொண்டு
மனிதனுக்குரிய செயல்களைச் செய்தால்
மனிதனுக்குரிய செயல்களைக் கடைபிடித்தால்
தன்னை மனிதர் என்று சொல்லி விடுவார்கள்.
மனிதர் பட்டியலில் தன்னை சேர்த்து விடுவார்கள்
என்று நினைத்து,
மனிதனுக்குரிய செயல்களைச் செய்யாமல்
கடவுளாக தன்னை நினைத்துக் கொண்டு
ஞானியாக தன்னை பாவித்துக் கொண்டு
உண்மை உணர்ந்தவனாக தன்னை நினைத்துக் கொண்டு
மனிதனுக்குரிய செயல்களிலிருந்து நழுவி
கடவுள் செயலாக நினைத்து
கடவுளுக்குரிய செயலாக நினைத்து
மிருகத்திற்குரிய செயலை செய்து கொண்டு
உண்மை அறியாமல்
உண்மை உணர்ந்தது போல் பேசிக் கொண்டு
மிருகம் போல சுற்றித்திரிவார்கள்.
உண்மையை உணர்ந்தவர்களை இந்த சமுதாயம் கண்டு கொள்ளும்
எவ்வளவு தான் அவர்கள் தங்களை மறைத்துக் கொண்டாலும்
உண்மையை உண்மையாக உணர்ந்தவர்கள்
இந்த சமுதாயத்தில் வெளிப்பட்டே ஆக வேண்டும்.
உண்மையை உணர்ந்தது போல் நடிப்பவர்கள்
தங்களை தாங்களே அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டும்
உயர்ந்தவர் போல் காட்டிக் கொள்ள வேண்டும்.
உண்மையை உணராதவர்கள்
உண்மையை வார்த்தையில் கூறுகிறேன் என்று
கிளம்பும் போது தெரிந்து கொள்ளலாம்
அவர்கள் உண்மையை உணரவில்லை என்று.
உண்மையை வார்த்தைகளில் கூறமுடியாது
வார்த்தைகளில் கூறினால் அது உண்மையாக
இருக்க முடியாது என்கிறார் வால்மீகர்.
இயேசு கிறிஸ்து - வால்மீகர்:
இயேசு,
சத்தியத்தை வார்த்தையால் கூற முடியாது.
இறைவனை விசுவாசித்து இறைவனுடன் இரண்டறக் கலப்பதன்
மூலமே சத்தியத்தை உணர முடியும் என்பதை விளக்குவதற்காக
மௌனத்தை கடைபிடித்து தனது செயலின் மூலம்
நிரூபித்துக் காட்டினார்.
அவ்வாறே,
வால்மீகரும்,
உண்மையை வார்த்தைகளால் சொல்ல முடியாது
வார்த்தையால் உண்மைகளை சொல்கிறேன் என்பவர்கள்
உண்மையை உணராமல் ஞானிகள் போல் தன்னை
காட்டிக் கொண்டு மிருகம் போல் அலைபவர்கள்
என்கிறார்.
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
போற்றினேன் பதிவுநாற்பத்திஏழு ந்தான்முற்றே “”
No comments:
Post a Comment