இயேசு கிறிஸ்து-ஔவையார்-உதவி-பதிவு-63
“”பதிவு அறுபத்திமூன்றை
விரித்துச்
சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன்
காப்பாகும்””
இயேசு கிறிஸ்து :
“அப்பொழுது
, பிசாசு
பிடித்த
குருடும்
ஊமையுமான
ஒருவன்
அவரிடத்தில்
கொண்டு
வரப்பட்டான்
; குருடும் ஊமையுமானவன்
பேசவுங்
காணவுந்தக்கதாக
அவனைச்
சொஸ்தமாக்கினார்.“
மத்தேயு
- 12 : 22
“ஜனங்களெல்லாரும்
ஆச்சரியப்பட்டு
: தாவீதின்
குமாரன்
இவர்
தானோ?
என்றார்கள்.”
மத்தேயு
- 12 : 23
“பரிசேயர்
அதைக் கேட்டு : இவன்
பிசாசுகளின்
தலைவனாகிய
பெயெல்செபூவினாலே
பிசாசுகளைத்
துரத்துகிறானேயல்லாமல்
மற்றப்படியல்ல
என்றார்கள்.”
மத்தேயு
- 12 : 24
“இயேசு
அவர்கள்
சிந்தனைகளை
அறிந்து
, அவர்களை
நோக்கி
தனக்குத்
தானே
விரோதமாய்ப்
பிரிந்திருக்கிற
எந்த
ராஜ்யமும்
பாழ்ய்ப்போம்
; தனக்குத்
தானே
விரோதமாய்ப்
பிரிந்திருக்கிற
எந்தப்
பட்டணமும்
எந்த
வீடும்
நிலை
நிற்க
மாட்டாது.”
மத்தேயு
- 12 : 25
“சாத்தானைச்
சாத்தான்
துரத்தினால்
தனக்கு
விரோதமாகத்
தானே
பிரிவினை
செய்கிறதாயிருக்குமே
; அப்படிச்
செய்தால்
அவன்
ராஜ்யம்
எப்படி
நிலை
நிற்கும்
?”
மத்தேயு
- 12 : 26
“நான்
பெயெல்செபூவினாலே
பிசாசுகளைத்
துரத்தினால்
, உங்கள்
பிள்ளைகள்
அவைகளை
யாராலே
துரத்துகிறார்கள்
? ஆகையால் , அவர்களே
உங்களை
நியாயந்
தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.”
மத்தேயு
- 12 : 27
“நான்
தேவனுடைய
ஆவியினாலே
பிசாசுகளைத்
துரத்துகிறபடியால்
, தேவனுடைய
ராஜ்யம்
உங்களிடத்தில்
வந்திருக்கிறதே.”
மத்தேயு
- 12 : 28
“அன்றியும்,
பலவானை முந்திக்
கட்டினாலொழியப்
பலவானுடைய
வீட்டுக்குள்
ஒருவன்
புகுந்து
, அவன்
உடைமைகளை
எப்படிக்
கொள்ளையிடக்கூடும்?
கட்டினானேயாகில்
, அவன்
வீட்டைக்
கொள்ளையிடலாம்.”
மத்தேயு
- 12 : 29
“என்னோடே
இராதவன்
எனக்கு
விரோதியாயிருக்கிறான்
; என்னோடே
சேர்க்காதவன்
சிதறடிக்கிறான்.”
மத்தேயு
- 12 : 30
“ஆதலால் , நான்
உங்களுக்குச்
சொல்லுகிறேன்
: எந்தப்
பாவமும்
எந்தத்
துாஷணமும்
மனுஷருக்கு
மன்னிக்கப்படும்
;
ஆவியானவருக்கு விரோதமான துாஷணமோ
மனுஷருக்கு மன்னிக்கப்
படுவதில்லை.”
மத்தேயு
- 12 : 31
“எவனாகிலும்
மனுஷகுமாரனுக்கு
விரோதமான
வார்;த்தை
சொன்னால்
அது
அவனுக்கு
மன்னிக்கப்படும்;
எவனாகிலும் பரிசுத்த
ஆவிக்கு
விரோதமாகப்
பேசினால்
அது
இம்மையிலும்
மறுமையிலும்
அவனுக்கு
மன்னிக்கப்படுவதில்லை.”
மத்தேயு
- 12 : 32
இழிவு படுத்துவது என்பது சமுதாயத்தில்
சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு
நிகழ்வு .
தனிப்பட்ட
ஒருவரையோ அல்லது
ஒரு சமுதாயத்தையோ அல்லது
ஒரு இனத்தையோ அல்லது
ஒரு பண்பாட்டையோ அல்லது
ஒரு கலாச்சாரத்தையோ என்று
பல்வேறு
தரப்பட்டவைகளை
பல்வேறு
நிலைகளில் உள்ளவர்கள்
பல்வேறு
தன்மைகளைக் கொண்டு
இழிவு படுத்துகின்றனர்.
முதலாம்
நபர் இரண்டாம்
நபரை இழிவு படுத்தினால்
மூன்றாம்
நபர் முதலாம்
நபரை நோக்கி
ஏன் இரண்டாம் நபரை இழிவுபடுத்துகிறாய் என்று
கேட்பதில்லை .
ஏனென்றால்
சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு நபரும்
தனிப்பட்ட
காரணங்களுக்காகவே
சமுதாயத்தை
சீர்படுத்துகிறேன் என்று கூறிக்கொண்டே
தவறான வார்த்தைகளை பிரயோகித்தோ
முகம் சுளிக்கும் கருத்துக்களை வெளியிட்டோ
ஓவ்வொருவரும்
மற்றவரை தொடர்ந்து
இழிவு படுத்தி வருவதால்
ஒருவர் மற்றவரை இழிவு
படுத்தும் போது
யாரும்
அவரை
இழிவு படுத்தாதே என்று கூறுவதில்லை.
இழிவு படுத்துதல் என்பது
சமுதாயத்தில்
இரண்டு நிலைகளில் நடைபெற்று வருகிறது :
ஒன்று : தெரியாமல் இழிவு படுத்துவது
இரண்டு : தெரிந்து
இழிவு படுத்துவது
தெரியாமல்
இழிவு படுத்துவது என்பது
ஒருவரை
நாம் இழிவு படுத்துகிறோம்
என்று தெரியாமல் இழிவு படுத்துவது .
தெரியாமல்
இழிவு படுத்துபவர்களுக்கு
கீழ்க்கண்டவற்றை
உதாரணமாகக் கூறலாம் .
ஒன்று : மிமிக்ரி
மூலம் இழிவு படுத்துதல்
இரண்டு : ரீமிக்ஸ்
மூலம் இழிவு படுத்துதல்
தன் திறமையை வெளிப்படுத்தும் கலைகளில்
ஒன்று மிமிக்ரி
மிமிக்ரி
என்பது ஒருவர் மற்றவரை
போலப் பேசுவது ஆகும்.
அவ்வாறு
பேசுவது என்பது ஒரு திறமை.
ஆனால் அவ்வாறு பேசும் போது
யாரை நாம் மிமிக்ரி செய்கிறோமோ
யாருடைய
குரலில் நாம் பேசுகிறோமோ
அவரை நகைச்சுவையாக சித்தரிப்பது
இரட்டை
அர்த்த வசனங்களைக் கொண்டு பேசுவது
என்பது
சம்பந்தப்பட்ட நபரை
நாம் இழிவு படுத்துவது போலாகும்
.
மற்றவர்
போல்
பேசிக் காட்டுவது என்பது ஒரு திறமை.
ஆனால் அவ்வாறு செய்யும் போது
தவறாக
அவர் பேசுவது
போல இழிவான
வார்த்தைகளைக்
கொண்டு பேசுவது என்பது
அவரை தெரியாமல் இழிவு படுத்துவது போலாகும்
.
ரீமிக்ஸ்
என்ற பெயரில்
பழைய பாடலை எடுத்துக் கொண்டு
தற்காலத்திய
நாகரிகத்திற்கு ஏற்றபடி
மாற்றி
அமைக்கிறோம்
என்று சொல்லிக் கொண்டு
பழைய பாடலை சிதைத்து ,
இனிமையைக்
குலைத்து ,
அற்புதமான
கவிதை வரிகளை எரித்து ,
வெண்கலக்
குரலைக் கழித்து ,
மாடர்ன்
பாடல் என்ற போர்வையில் - ஒருவருடைய
கடின உழைப்பை கற்பனை திறனை
இழிவு படுத்தும் வகையில் பாடலை அமைத்து
விட்டு
தன் பாடல் என்ற நினைவில்
பிறருடைய
பாடலை தெரியாமல்
இழிவு படுத்துகின்றனர் .
இவை இரண்டையும் தெரியாமல்
இழிவு படுத்தும் நிலையில்
உள்ளவைகள்
என்று சொல்லலாம் .
தெரிந்து
இழிவு படுத்துவதற்கு
கீழ்க்கண்டவைகளை
உதாரணமாகக் கூறலாம் :
வீரம் செறிந்த மொழி ,
உலகை ஆண்ட மொழி,
உண்மையை
உணர பயன்படுத்தப்படும் மொழி ,
நற்கருத்துக்கள்
பலவற்றை தன்னுள் கொண்ட மொழி
.
ஞானிகள்
சித்தர்கள் மறைபொருளை விளக்க
பயன்படுத்திய
மொழி ,
என்ற நிலையில் இருக்கும்
ஒருவருடைய
மொழியை -
இந்த மொழி ஒன்றுக்கும் உதவாத
மொழி,
இந்த மொழியை வைத்து வேலையை
வாங்க முடியாது,
இந்த மொழியில் மருத்துவம் பொறியியல் போன்ற
பல படிப்புகளுக்கு புத்தகங்கள் கிடையாது ,
இந்த மொழியை வைத்துக் கொண்டு
உள்ளே உள்ள ஊரிலேயே வேலை
வாங்கமுடியாது ,
அப்படியிருக்க
வெளிநாடுகளுக்கு சென்று
எப்படி
வேலை வாங்க முடியும் ,
வெளியூர்
மற்றும்
வெளிநாடு சென்று
வேலை வாங்குவதற்கு இந்த மொழி உதவாது
,
இந்த மொழி இந்த மொழியை
பயின்றவருக்கே
உதவாத நிலையில் ,
இந்த மொழியை பெருமையாக பேசுவதிலும்
,
அதன் பழம் பெருமையை பேசுவதிலும்
,
ஒரு பயனும் இல்லை என்று
குறிப்பிட்ட
மொழியை
பல்வேறு
தரப்பட்ட சிறப்புகள்
பலவற்றை
தன்னுள் கொண்ட மொழியை ,
இழிவுபடுத்தும்
நோக்கத்துடன்
அந்த மொழியின் மேல் உள்ள வெறுப்பால்
தன் மொழி தான் உயர்ந்தது
மற்றமொழி
தாழ்வானது
என்ற நினைப்பை மனதில் கொண்டவர்களின்
ஆணவ மிகுதியால் தெரிந்தே ஒரு மொழியை இழிவு
படுத்த
வேண்டும் என்ற நோக்கத்துடன்
ஒரு மொழியை இழிவு படுத்துவது
என்பது
தெரிந்தே
இழிவு படுத்துவது ஆகும் .
தெரியாமல்
இழிவு படுத்துவதற்கும்
தெரிந்து
இழிவு படுத்துவதற்கும் பெரிய அளவில்
வேறுபாடு
என்பது கிடையாது .
தெரியாமல்
இழிவு படுத்துபவர்களிடம்
அவர்களிடம்
உள்ள குறைகளை
சுட்டிக்
காட்டினால்
அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டு
தன்னை மாற்றிக் கொள்வார்கள் .
தன்னை திருத்திக் கொள்வார்கள் .
ஆனால் ,
தெரிந்து
இழிவு படுத்துபவர்களிடம்
எவ்வளவு
தான் அவர்களிடம் உள்ள குறைகளை சொன்னாலும்
அவர்கள்
செய்த செயல் தவறானது என்று
சுட்டிக் காட்டினாலும்
அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள் ;
தன்னை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் ;
தன் நிலையை திருத்திக் கொள்ள
மாட்டார்கள் ;
தெரியாமல்
இழிவு படுத்துபவர்கள்
தன் திறமையை வெளிப்படுத்தும் நோக்கத்தில்
இருப்பதால்
தெரியாமல்
இழிவு படுத்துவார்கள் .
ஆனால் ,
தெரிந்து
இழிவு படுத்துபவர்கள்
தன் திறமையை வெளிப்படுத்தும் நோக்கத்தில்
செய்வதில்லை .
ஒன்றை இழிவு படுத்த வேண்டும்
என்ற
நோக்கத்திலேயே
செய்கின்றனர்.
தெரியாமல்
இழிவு படுத்துபவர்களை மாற்றி விடலாம்
தெரிந்து
இழிவு படுத்துபவர்களை மாற்ற முடியாது.
தெரியாமல்
இழிவு படுத்துபவர்கள்
தன்னை வெளிப்படுத்த வேண்டும்
என்ற நோக்கத்தில் செய்கின்றனர்
ஆனால் ,
தெரிந்து
இழிவு படுத்துபவர்கள்
தான் வாழ வேண்டும்
தன் குடும்பம் வாழ வேண்டும்
என்ற குறுகிய நோக்கம் கொண்டு
செயல்படுவதால்
அவர்கள்
எந்த எல்லைக்கும் சென்று
ஒருவரை
இழிவு படுத்த தயங்குவதில்லை .
ஒருவரை
அல்லது ஒன்றை
இழிவு படுத்துவதன் மூலம்
தன் வாழ்வு செழிக்கும் என்றால்
,
அதற்காக
எதையும் துணிந்து செய்வர்
தெரிந்து
இழிவு படுத்துபவர்கள்.
தெரியாமல்
இழிவு படுத்தினாலும்
தெரிந்து
இழிவு படுத்தினாலும்
இழிவு படுத்தியது இழிவு படுத்தியது தான்.
இழிவு படுத்தப்படுபவர்
சமுதாயத்தால்
அங்கீகரிக்கப்பட்டவராக இருப்பார் ;
சமுதாயத்தால்
தெரிந்து கொள்ளப்பட்டவராக இருப்பார் ;
சமுதாயத்தில்
உயர்ந்த நிலையில் இருப்பவராக இருப்பார் ;
ஒரு குறிப்பிட்ட துறையில் கடின உழைப்பால்
மேல் நிலைக்கு வந்தவராக இருப்பார் ;
இத்தகைய
ஒரு நிலையில் இருப்பவரைத் தான்
இழிவு படுத்துபவர்கள்
இழிவு படுத்துவார்கள்.
தான் வாழ வேண்டும்
தன் குடும்பம் வாழ வேண்டும்
என்ற நிலை இருக்கும் இருப்பவர்கள்
தான்
இழிவு படுத்துவார்கள் .
சமுதாயத்தில்
இழிவு படுத்தப்பட்டவரையும்
இழிவு படுத்துபவரையும் உற்று நோக்கினால்
இழிவு படுத்தப்படுவது எதற்காக
என்பதைத் தெரிந்து
கொள்ளலாம் .
இயேசுவை
இழிவு படுத்த வேண்டும் என்ற
நோக்கத்துடன்
அலைந்து
கொண்டிருந்த கும்பல்
இயேசுவை
இழிவு படுத்த நேரத்தை எதிர்பார்த்துக்
கொண்டிருந்தது.
காலத்தை
உற்று நோக்கிக் கொண்டு இருந்தது.
அப்பொழுது
பிசாசு பிடித்த குருடும், ஊமையுமான
ஒருவனை
அவரிடத்தில் கொண்டு வந்தார்கள் .
இயேசு குருடும் ஊமையுமானவனை
பேசத் தக்கவனாய் .
காணத் தக்கவனாய் .
அவரை சொஸ்தமாக்கினார்.
பழைய நிலையிலிருந்து
புதிய நிலைக்கு அவனை மாற்றினார்.
இந்த நிகழ்வைக் கண்டவர்கள்
இந்த அதிசயத்தைக் கண்டு
ஆச்சரியப்பட்டுப்
போனவர்கள்
தாவீதின்
குமாரன் இவர் தானோ
என்று
பிரமிப்பில்
மூழ்கிப் போனார்கள்.
இயேசுவை
இழிவு படுத்த வேண்டும் என்ற
நோக்கத்துடனே
அலைந்து
கொண்டிருந்த கும்பல் இந்த செயலைக்
கண்டு
இவன் பிசாசுகளின் தலைவனாகிய
பெயெல்செபூ
வினாலே பிசாசுகளைத் துரத்துகிறான்.
பிசாசுகளை
வைத்து ,
பிசாசுகளை
துரத்துகிறான் .
வேறு எந்த ஒன்றையும் கொண்டு
அவன்
பிசாசுகளைத்
துரத்தவில்லை
என்றார்கள் .
இயேசுவின்
கருணைமிக்க செயலை ,
அன்பு வழிந்தோடிய செயலை ,
இரக்கம்
ததும்பிய செயலை ,
தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து
அவரை இழிவு படுத்த வேண்டும்
;
சமுதாயத்தின்
முன் அவரை தலை குனிய
வைக்க வேண்டும் ;
சமுதாயம்
அவரை புறக்கணிக்கும்
படி செய்ய வேண்டும் ;
சமுதாயம்
அவரை அவமதிக்கும் படி செய்ய வேண்டும்;
என்ற நோக்கத்துடனே ,
இயேசுவின்
செயலை தெரிந்தே இழிவு படுத்தினர் .
இயேசு அவர்களுடைய தவறான நோக்கத்தை அறிந்து
அவர்களுடைய
சிந்தனையை அறிந்து
தன்னை இழிவு படுத்த வேண்டும்
என்ற நோக்கத்துடன்
இழிவு படுத்த முயற்சி செய்கின்றனர்
என்பதை
உணர்ந்து
அவர்களை
நோக்கி பேசினார்.
உண்மையை
உண்மை என்று தெரியாமல்
பொய்யை
உண்மை என்று நம்புபவர்கள்
சத்தியத்தை
உணராமல்
தவறானவைகளை
பின்பற்றுபவர்கள் - தான்
நல்லதை
பின்பற்றுகிறோமோ
தவறானவைகளை
பின்பற்றுகிறோமோ
என்று தெரியாமல்
உண்மையானவை
என்று
தவறானவைகளை
பின்பற்றுபவர்கள்
அதாவது
தன்னை உணராமல் தன்
நிலையை உணராமல்
நாம் நல்லதை பின்பற்றுகிறோமோ
கெட்டதை
பின்பற்றுகிறோமோ என்று தெரியாமல்
தனக்குள்
இரண்டாக பிளவு பட்டு இருப்பவர்கள்
,
தனக்கு
விரோதமாய்
தன்னை உணராமல் வாழ்பவர்கள் ,
அவர்கள்
வாழும் வீடு
, ஊரு , நாடு , பட்டணம்
அனைத்தும்
பாழாய்ப் போகும் .
மனக்குழப்பம்
இல்லாமல் தெளிவுமனம் கொண்டவர்கள்
வாழும்
வீடு பட்டணம் நாடு வாழும்
.
தெளிவு
இல்லாமல் மனக் குழப்பம் கொண்டவர்கள்
வீடு ,
பட்டணம், நாடு
பாழாய்ப் போகும் என்றார்.
இருளை இருளால் விலக்க முடியுமா
?
கெட்டவைகளை
கெட்டவைகளால் மாற்ற முடியுமா ?
சாத்தானை
சாத்தானால் அழிக்க முடியுமா ?
என்று யோசித்துப் பார்த்தால் தெரியும் .
இருளை ஒளியால் விலக்க முடியும்
கெட்டவைகளை
நல்லவைகளால் மாற்ற முடியும் என்று
அப்படியிருக்கையில்
சாத்தான்
சாத்தானை எவ்வாறு துரத்த முடியும்
.
சாத்தானை
சாத்தான் துரத்தினால்
சாத்தான்
எவ்வாறு
நிலை பெற்று இருக்க முடியும்
;
சாத்தான்களுக்குள்
பிளவு தானே ஏற்படும் ;
சாத்தான்களின்
எண்ணிக்கை தானே குறையும் ;
சாத்தான்களுக்குள்
சண்டை தானே அதிகரிக்கும் ;
இந்த நிலை ஏற்பட்டால் சாத்தான்களால்
ராஜ்யத்தை
எவ்வாறு ஏற்படுத்த முடியும் ;
இத்தகைய
நிலையில்
சாத்தான்களால்
ராஜ்யம் உருவாக்கப்பட்டால்
அது எப்படி நிலைத்து நிற்கும்
.
நான் பெயெல்செபூவினாலே பிசாசுகளைத் துரத்தினேனேயாகில்
உங்களைச்
சார்ந்தவர்கள் பிசாசுகளை வைத்துத் தான்
பிசாசுகளைத்
துர்த்துகிறார்களா
அவர்கள்
நல்லவைகளை வைத்துத் தான்
கெட்டவைகளை
துரத்துகிறார்கள் என்றால்
நான் மட்டும் எவ்வாறு
கெட்டவைகளை
வைத்து கெட்டவைகளை விலக்க முடியும் .
கெட்டவைகளை
கெட்டவைகளால் விலக்க முடியாது ,
கெட்டவைகளை
நல்லவைகளால் தான் விலக்க முடியும்
என்பதை
அவர்கள் உணர்ந்திருப்பார்களேயாகில்
கெட்டவைகளை
கெட்டவைகளால் விலக்க முடியாது
கெட்டவைகளை
நல்லவைகளால் மட்டுமே விலக்க முடியும்
என்பதை
உங்களுக்கு உண்மையை உணர்த்தும் காலம்
வரும் .
மேலும்
நான் தேவனுடைய ஆவியினாலே
பிசாசுகளைத்
துரத்துகிற படியால்
தேவனுடைய
ராஜ்யம் வர வேண்டுமென்றால்
கெட்டவைகளை
கெட்டவைகளால் விலக்க கூடாது
கெட்டவைகளை
நல்லவைகளால் தான் விலக்க வேண்டும்
.
கெட்டவைகளை
நல்லவைகளால் விலக்கும் போது தான்
அப்போது
தான் தேவனுடைய ராஜ்யம் வரும் .
இதனை உணர்ந்தவன்
தெரிந்து
கொள்கிறான் ; அறிந்து கொள்கிறான் ;புரிந்து
கொள்கிறான்.
ஒருவன்
ஒரு வீட்டைக் கட்டினால் தான்
அந்த வீட்டிலிருந்து பொருட்களை களவாட முடியும் .
ஒருவன்
ஒரு வீட்டை கட்டாவிட்டால்
வீட்டிலிருந்து
பொருள்களை எவ்வாறு களவாட முடியும்
.
முதலில்
வீடு கட்ட வேண்டும் ,
அடுத்து
வீட்டினுள் பொருட்கள் இருக்க வேண்டும் ,
பிறகு தான் வீட்டினுள் புகுந்து
வீட்டில் உள்ள பொருட்களை
திருட முடியுமே ஒழிய
வீடு இல்லாமல் வீட்டினுள் பொருட்கள் இல்லாமல்
களவாட முடியாது .
அதைப் போலத் தான் தேவனுடைய
ராஜ்யம் வந்தால் தான்
தேவனுடைய
ஆசிர்வாதத்தைப் பெற முடியும் .
தேவனுடைய
ராஜ்யம் வராமல் நாம் எவ்வாறு
தேவனுடைய
ஆசிர்வாதத்தைப் பெற முடியும் .
தேவனுடைய
ராஜ்யம் வர வேண்டும் என்றால்
கெட்டவைகளை
நீக்கி நல்லவைகளை உருவாக்க வேண்டும் .
கெட்டவைகள்
நீக்கப்பட்டு நல்லவைகள் உருவாகும் போது
தேவனுடைய
ராஜ்யம் நம்மிடத்தில் உருவாகி
தேவனுடைய
ராஜ்யத்தில் இருந்து தேவனுடைய அருளையும்
ஆசிர்வாதத்தையும்
பெற முடியும் .
இந்தக்
கருத்துக்களைப் புரிந்து கொள்பவன்
என்னுடைய
கருத்துக்களை உணர்ந்து மன தெளிவு அடைகிறான்
;
என்னை விசுவாசித்தவன் என்னோடே கூட இருக்கிறான்
;
என்னை உணர்ந்து கொள்ளாதவன்
என்னிலிருந்து
விலகி இருக்கிறான் ;
விரோத நிலையில் இருக்கிறான் ;
பகைமை நெஞ்சம் கொண்டு இருக்கிறான்
;
ஆகவே நான் உங்களுக்கு சொல்வது
என்னவென்றால்
எந்தப்
பாவமும் ,எந்த துாஷணமும்
மனுஷருக்கு மன்னிக்கப்படும் ;
மனுஷகுமாரனுக்கு
எதிரான வார்த்தைகளை சொன்னாலோ
செயல்களைச்
செய்தாலோ அது மனுஷருக்கு மன்னிக்கப்படும்
.
ஆனால் ஆவியானவருக்கு விரோதமாகச்
செய்யப்படும்
துாஷணமும்
பரிசுத்த
ஆவிக்கு எதிராகப் பேசப்படும் பேச்சுக்களும்
அது இளமையிலும் ,மறுமையிலும்
அவனுக்கு
மன்னிக்கப் படுவதில்லை .
உண்மையான
ஒன்றை அல்லது உண்மையான ஒருவரை
தவறான எண்ணங் கொண்டு இழிவு
அவரை படுத்த நினைப்பவர்கள்
தான் தாழ்வான நிலைக்கு தள்ளப்படுவார்களே
ஒழிய
உண்மையான
உள்ள ஒன்று அல்லது
உண்மையாக
உள்ள ஒருவர்
உயர்ந்த
நிலையைத் தான் அடைவாரே ஒழிய
தாழ்வான
நிலையை அடைய மாட்டார்
என்கிறது பைபிள்.
ஔவையார்:
“”நஞ்சுஉடைமை தான்அறிந்து நாகம் கரந்துஉறையும்
அஞ்சாப் புறம்கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில்
கரவுஉடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவு இலா நெஞ்சத்து அவர்””
----ஔவையார்--மூதுரை----
இழிவு படுத்துதல் என்பது
சமுதாயத்தில்
பல்வேறு விதமாக ,
பல்வேறு
நிலைகளில் ,
பல்வேறு
உருவங்களில் ,
விரவிக்
கிடக்கிறது .
இழிவு படுத்துபவர்கள்
தெரிந்தவரை
இழிவு படுத்துபவர்கள்
தெரியாதவரை
இழிவு படுத்துபவர்கள்
என்ற நிலை
இருந்தாலும்
தெரிந்தவரில்
தவறு செய்தவரை இழிவு படுத்துதல்
தெரிந்தவரில்
தவறு செய்யாதவரை இழிவு படுத்துதல்
என்றும்
தெரியாதவரில்
தவறு செய்தவரை இழிவுபடுத்துதல்
தெரியாதவரில்
தவறு செய்யாதவரை இழிவு படுத்துதல்
என்றும்
இழிவுபடுத்துதல்
பல்வேறு பிரிவுகளை
தன்னுள்
கொண்டுள்ளது .
தெரிந்தவரில்
தவறு செய்தவரை இழிவு படுத்துதல்
தெரிந்தவரில்
தவறு செய்யாதவரை இழிவு படுத்துதல்
என்று இரு வேறுபட்ட இழிவு
படுத்துதல்
தெரிந்தவரை
இழிவு படுத்துதல் என்ற நிலைக்குள் வருகிறது
.
இந்த இழிவு படுத்துதல் சமுதாயத்தில்
பெரும்பாலனவர்களால்
பின்பற்றப் படுகிறது .
பல்வேறு
துறையில் உள்ளோர் ;
பல்வேறு வேலையில் உள்ளோர்
;
என்பதோடு
மட்டுமின்றி வயது வேறுபாடின்றி
எல்லோராலும்
பயன்படுத்தப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.
நம்முடன்
படித்த ஒருவர் ;
நம்முடன்
பழகிய ஒருவர் ;
நம்மோடு
நண்பராக இருந்த ஒருவர் ;
கருத்து
வேறுபாடு ஏற்பட்டு
பிரிந்து
சென்றால் அவர் விரோதி.
நம்மோடு
இருந்தால் நண்பர் ;
நம்மை விட்டு பிரிந்தால்
விரோதி ;
நம்மை விட்டு பிரிந்தவர் தவறு செய்தால் ,
நமக்கு
எதிரான செயல்களைச் செய்தால்
,
தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து நம்மை அவமதித்தால் ,
நம்மை விட உயர்ந்த நிலையில்
இருந்து கொண்டு
நம் ஏழ்மையை எள்ளி நகையாடினால்
,
நம் திறமையை குறை சொன்னால்
,
நம் உழைப்பை ஏற்றுக் கொள்ள
மறுத்தால் ,
பதவி ,
அதிகாரம் , பணம் என்று அதிகார
நிலையில் இருந்தால் ,
நமக்கு
கெடுதல் செய்தவர் உயர்வான
நிலையில் இருந்தால்,
நம்மால்
எதுவும் எதிர்த்து செய்ய முடியாத
தாழ்வான
நிலைக்கு தள்ளப்பட்டால் ,
அவருடன்
போராடக்கூடிய வலிமை
நமக்கு
இல்லாமல் இருந்தால் ,
உடலும்
, உள்ளமும் பாதிக்கப்பட்டால் ,
உடலும்
உள்ளமும் போராடக் கூடிய
தன்மையை
இழந்து விட்டால் ,
நாம் கையில் எடுக்கும் ஆயுதம்
- அவரை
இழிவு படுத்துதல் .
எதிரி தவறு செய்தான் என்பதற்காக
இழிவு படுத்துதல் சரியானதா
என்பதை
யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை .
ஒருவன்
செய்த தவறை சுட்டிக் காட்ட
வேண்டுமேயொழிய
அவரை இழிவு படுத்தக் கூடாது
.
ஒருவன்
செய்த தவறை சுட்டிக்காட்டும் போது
அவன்
தன் தவறை உணர்ந்து திருந்த
வாய்ப்பு உள்ளது .
அதற்கு
மாறாக அவரை இழிவு படுத்தும்
போது
அவர் மேலும்
மேலும் தவறு செய்யத் தான்
செய்வார் .
திருந்துவதற்கான
வாய்ப்பை அவர் தவற
விடுவார்.
ஒருவன்
தான் செய்த தவறை உணர்ந்து
திருந்த வேண்டுமானால்
அவன் செய்த தவறை சுட்டிக்
காட்ட வேண்டுமேயொழிய
அவரை இழிவு படுத்தக் கூடாது.
இது தெரிந்தவரில் தவறு செய்தவரை
இழிவு படுத்துதல் .
நம்மோடு
நட்பாக இருந்தவர் ;
நம்மோடு
நெருங்கிப் பழகியவர் ;
நம்மோடு
நண்பராக இணைந்து இருந்து
நம்மிடையே
பிரிந்து சென்று விரோதி ஆனவர்
;
தெரிந்தவரில்
தவறு செய்யாதவராக இருந்தால்
அவர் நம்மை
விட புத்திசாலியாக இருந்தால் ;
சமுதாயத்தால்
புகழப்படுபவராக இருந்தால் ;
படிப்படியாக
உயர்வான பதவிகள்
அதிகாரங்கள்
அவருக்கு கிடைத்தால்;
சமுதாயம்
அவரை மதித்து போற்றினால் ;
அவர் சிந்தும்
வார்த்தைக்காக பலர் காத்திருந்தால் ;
அவருடைய
எழுத்துக்காக எழுத்துலகம் காத்திருந்தால்;
இசை உலகம் இசைக்காக தவம்
இருந்தால் ;
நடிப்புலகம்
அவர் நடிப்புக்காக
காத்திருந்தால் ;
செங்கோல்கள்
அவருக்காக வரிசையில் நின்றால் ;
அவர் உதட்டிலிருந்து
சிந்தும் வார்த்தைக்காக
சிந்தனை
உலகம் காத்திருந்தால் ;
அத்தகையவரை
அத்தகைய நிலையில் உள்ளவரை ,
இவ்வாறான
சிறப்பம்சங்கள் பலவற்றை தன்னுள் கொண்டு
சமுதாயத்தில்
உயர்வான நிலையில் இருக்கும் ஒருவரை ;
நேற்று
நண்பராக இருந்து ,
இன்று விரோதி ஆன ஒருவரை
எதிர்ப்பது
அவ்வளவு சுலபமல்ல .
அதுவும்
தெரிந்தவரில்
தவறு செய்யாதவராக ,
உண்மை உள்ளவராக ,
நேர்மை
மிக்கவராக ,
அறம் தவறாதவராக ,
உழைப்பை
மதிப்பவராக ,
உண்மைக்கு
மதிப்பு கொடுப்பவராக ,
உண்மை வழி நடப்பவராக ,
உண்மையை
பின்பற்றுபவராக,
உண்மையை
உணர்ந்தவராக இருந்து விட்டால் ,
அவரை எதிர்ப்பது கடினம் .
எதிரியை தாக்க
முடியாமல்
நேருக்கு
நேர் நின்று போரிட
முடியாமல் இருப்பவரால்
பயன்படுத்தப்படும்
ஆயுதம் தான் ,
குறுக்கு
வழி தான் ,
இழிவுபடுத்துதல்.
நேருக்கு
நேர் நின்று
போரிட தயங்குபவர்கள் ;
நேருக்கு
நேர் நின்று
போரிட முடியாதவர்கள் ;
நேருக்கு
நேர் நின்று
போரிட்டால் தோற்று விடுவோம்
என்ற எண்ணத்தை
மனதில் கொண்டவர்கள் ;
வெற்றி
பெறுவது கடினம் என்ற சிந்தனையை வளர்த்தவர்கள் ;
நம்முடைய
நிம்மதி போய்
விடும் என்பதை உணர்ந்தவர்கள் ;
எடுக்கும் ஆயுதம்
தான்
இழிவு படுத்துவது .
எதுவும்
செய்ய முடியாதவர்கள் ;
போரிட லாயக்கற்றவர்கள் ;
கோழைத்தனம்
மனதில் கொண்டவர்கள் ;
பய உணர்ச்சியை விழிகளில் சுமப்பவர்கள் ;
தைரியத்தை
இழந்தவர்கள் ;
குழப்ப
மனப்பான்மை கொண்டவர்கள் ;
கலங்கிய
நெஞ்சத்தை கொண்டவர்கள் ;
குறுக்கு
புத்தி உடையவர்கள் ;
சதி செய்வதில் வல்லவர்கள் ;
சூழ்ச்சி
வேலை செய்வதில் கை தேர்ந்தவர்கள் ;
எடுக்கும்
ஆயுதம் தான்
இழிவு படுத்துதல் .
களங்கமற்ற
ஒன்றை களங்கப்படுத்த முடியும்
இழிவு படுத்த முடியும்.
களங்கமுள்ள
ஒன்றை களங்கப்படுத்த
இழிவுபடுத்தும்
முறையை கையாள வேண்டியதில்லை .
இழிவு படுத்துவது என்பது
ஒருவரை
மன ரீதியாக பாதிப்புக்கு உள்ளாக்குவது
,
மன உறுதியை குலைப்பது ,
வீரத்தை
சிதைப்பது ,
விவேகத்தை
அழிப்பது ,
சிந்தனையை
கரைப்பது ,
அறிவை மழுங்கடிப்பது .
ஒருவரை
மன ரீதியாக பாதிப்பு அடையச்
செய்து விட்டால்
அவரை எளிதாக வென்று விடலாம்
.
தெரிந்தவரில்
தவறு செய்தவருடைய
தவறை இழிவு படுத்தினால்
இழிவு படுத்தப்பட்டவர்
பெரும்பாலும்
அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்
.
நம்மோடு
இருந்து பிரிந்து சென்றவர்
காழ்ப்புணர்ச்சி
காரணமாக பொறாமையின் காரணமாக
தன் மேல் உள்ள வெறுப்பின்
காரணமாக புலம்புகிறார்
என்று பெரியதாக எடுத்துக் கொள்ள மாட்டார்.
மேலும்
பிரச்சினையை பெரிசு ஆக்கினால்
தனக்கு
ஏதாவது பிரச்சினைகள் வருமோ என்ற பயத்தினால்
இழிவு படுத்துவதை பெரிதாக
எடுத்துக்
கொள்ளா விட்டாலும்
இழிவு படுத்துப் பட்டவர்
இழிவு படுத்தியவரை அழிக்க நேரம் பார்த்துக்
கொண்டிருப்பார்.
மேலும்
தவறு செய்யாதவரை இழிவு படுத்தினால் அவர்
சும்மா
இருக்க மாட்டார்
தன் மேல் போடப்பட்ட பழியை
,
தன் மேல் சுமத்தப் பட்ட
குற்றச் சாட்டுகளை ,
இழிவு படுத்தும் நோக்கத்துடன்
தன் மேல் வீசப்பட்ட வார்த்தைகளை
,
உண்மை இல்லை என்பதை உலகுக்கு
காட்ட
முயற்சிகள்
மேற்கொள்வார் .
தன்னோடு
இருந்தவர்
அன்பாக
பழகியவர்
தனக்கு
எதிராக திரும்பி
உண்மைக்கு
மாறான கருத்துக்களைப்
பரப்பி
களங்கமில்லா
தன்னை களங்கமுள்ளவனாக
இந்த சமுதாயத்திற்கு மாற்றி காட்டி ,
பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு குற்றம் சுமத்தி
,
தன்னை வேதனைப்பட வைத்தவர்
இழிவு படுத்தியவர் - என்று
இழிவுபடுத்தப்பட்டவர்
நினைத்தால்
தான் குற்றமற்றவர் என்பதை நிருபிக்க
நான் உண்மையானவன்
கரை படியாதவன்
குற்றமற்றவன்
களங்கமில்லாதவன்
என்பதை
இந்த சமுதாயம்
ஏற்றுக்
கொள்ளும் படிச் செய்ய
உண்மையானவர்
தவறு செய்யாதவர்
இழிவு படுத்தப்பட்டவர்
திட்டங்கள்
வகுத்து செயல்களைச் செய்வார்.
தெரிந்தவரில்
தவறு செய்தவரை இழிவு படுத்தினால்
இழிவை நீக்க முயற்சிகள் மேற்கொள்ள
மாட்டார் .
வேறு ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொள்வோமோ
என்ற பயத்தில்
சமுதாயத்திற்கு
அஞ்சி அமைதியாக இருப்பார்.
தெரிந்தவரில்
தவறு செய்யாதவரை இழிவு படுத்தினால்
இழிவு படுத்தப் பட்டவர் தன்
மேல் உள்ள
குற்றத்தை
நீக்க எத்தகைய முயற்சிகளையும் மேற்கொள்வார்
எந்த எல்லைக்கும் செல்வார்
தான் குற்றமற்றவர் என்பதை
இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் வரை
போராடுவார்.
தெரியாதவரில்
தவறு செய்தவரை இழிவு படுத்துதல்
தெரியாதவரில்
தவறு செய்யாதவரை இழிவு படுத்துதல்
என்பது முற்றிலும்
மாறுபட்டதாகும் .
தெரிந்தவரை
இழிவு படுத்துவதற்கும்
தெரியாதவரை
இழிவு படுத்துவதற்கும் வேறுபாடு உள்ளது .
அர்சியலில்
ஒருவர் கோடி
கோடியாக
பணம் கொள்ளை அடிக்கிறார்
;
மக்களை
ஏமாற்றி திரிகிறார் ;
மக்களுக்கான
நலப்பணிகள் ஏதும் செய்யவில்லை ;
நல்ல திட்டங்கள் ஏதும் தீட்டவில்லை ;
வறுமையை
நீக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை ;
சாதி மோதல்களை மத சண்டைகளை இன
வேறுபாடுகளை
மொழி வெறியர்களால் நடத்தப்படும் இகழ்வுகளை
கண்டு கொள்ளாமல் அதனை வளர்த்து விட்டு
அரசியலில்
ஆதாயம் தேடி ஓட்டு வங்கிக்காக
மக்களை ஏமாற்றி
தன் வாழ்க்கைக்காக மக்களை சுரண்டி வாழும்
அதிகாரம்
மிக்க அரசியல்வாதி ,
தனக்காகவும்,
தன் சுய நலத்திற்காகவும் ,
தன் குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காகவும்,
பணம் ,
பதவி , அதிகாரம்
தனக்கு
கிடைக்க வேண்டும் என்பதற்காகவும்
நிலையான
அரியணை பெற்று செங்கோல் பிடித்து
அரசாட்சி
செய்ய வேண்டும் என்பதற்காகவும் ,
அரசியலில்
ஒரு சிலர் அதிகாரம்
மிக்க பதவியில்
இருந்து
கொண்டு தவறு செய்தால் ,
அவர் தவறை சுட்டிக் காட்டி
அவரை திருத்த முயற்சி செய்யலாமேயொழிய
இழிவு படுத்தக் கூடாது .
அவரை அவர் குடும்பத்தை
அவர் மனைவி
, மக்களை தகாத வார்த்தைகளால் திட்டியும்
,
நாக்கு
கூசும் சொற்களால் வசை பாடியும் ,
அருவெறுக்கத்த
தக்க வார்த்தைகளைப் போட்டு எழுதியும் ,
தரக்குறைவான
படங்களைப் போட்டு
இழிவுபடுத்துவது
என்பது
தகாத செயலாகும் .
தெரியாதவரில்
தவறு செய்தவரை
அவர் செய்த
தவறை சுட்டிக்
காட்டலாமேயொழிய இழிவு
படுத்தக் கூடாது .
இழிவு படுத்தப்பட்டவர் சும்மா
இருக்க மாட்டார்.
தன்னுடைய
அதிகாரம் பறி போய் விடக்
கூடாது என்பதற்காக
தனக்க எதிராக வேலை செய்பவர்களை
தன்னை இழிவு படுத்துபவர்களை
பழி வாங்க நேரம்
பார்த்துக் கொண்டு இருப்பார் ;
வாழ்வதற்காக வழிமுறைகளை
தடைசெய்வார் ;
வாழ்வில் நிம்மதியை
குலைப்பார் ;
இன்பத்தை அழிப்பார்
;
பய உணர்ச்சியை
ஏற்படுத்துவார் ;
தன் நிலை காப்பாற்றப்பட வேண்டும்
;
தன் உயர்வுகள் தாழ்நிலை அடையக்கூடாது ;
தன் ஏற்றங்கள் கீழே சரியக் கூடாது
;
தன் சுகங்கள் பறி போய் விடக்
கூடாது ;
என்பதற்காக
தன் மேல் உள்ள களங்கம்
களங்கமேயானாலும்
அது என் தவறல்ல
நான் செய்த பிழையுமல்ல
என் மேல் சுமத்தப் பட்டது
குற்றமேயல்ல
என்று வாதாடி செயல்கள் பல
செய்து
தன் மேல் உள்ள களங்கத்தை
நீக்க முற்படுவார்.
தெரியாதவரில்
தவறு செய்யாதவரை இழிவு படுத்துவது
சமுதாய
நலன் என்ற போர்வையில் நடத்தப்பட்டு
வருகிறது .
அவரிடம்
உள்ள தவறுகளை சுட்டிக் காட்டுகிறோம்
;
அவர் செய்யும்
செயல்களின் விளைவுகள்
நல்ல விளைவாக இருப்பதில்லை என்பதை
வெளிப்படுத்தி
காட்டுகிறோம் ;
நமக்கான
உரிமைகள் பறிபோய் விடக் கூடாது
என்பதற்காக
சாடுகிறோம் ;
தவறு செய்தவர்கள் சுக போகத்தில் திளைக்க
தவறு செய்யாத நாம் வறுமையில்
வாட வேண்டுமா
என்பதை
உணர்த்த பாடுபடுகிறோம் - என்று
உண்மையானவரை
தவறு செய்யாதவரை
தகாத வார்த்தைகளைக்கொண்டு
இழிவு படுத்தி
எழுதுவது பேசுவது மட்டுமில்லாமல்
அவருடைய
குடும்பம்
தாய் ,தந்தை ,அண்ணன் ,தங்கை
,
கணவன் ,மனைவி என்று
அனைத்து
தரப்பினரையும்
இழிவான
வார்த்தைகளை கொண்டு
இழிவு படுத்துவது
என்பது
ஆதாயம்
இருப்பவர்கள் மட்டுமே செய்யும் செயல்
.
தவறு செய்யாதவரை உண்மையாக இருப்பவரை
இழிவு படுத்தினால்
தன் குடும்பம் வாழும் ;
தன் சுற்றம் சுகித்திருக்கும் ;
இன்பங்களை
சுவைத்து மகிழலாம் ;
இனிமைகளை
தழுவி மகிழலாம் ;
மகிழ்ச்சிகளை
அனுபவித்து மகிழலாம் ;
என்ற நிலை கொண்டவரால்
மட்டும் தான்
தனக்கு
தெரியாதவரில்
தவறு செய்யாதவரை இழிவு படுத்த முனைவர்
.
ஆதாயம்
இருப்பவர் தான்
இத்தகைய
தகாத செயல்களைச் செய்வார்.
தனக்கு
ஆதாயம் இல்லாதவர்கள்
இத்தகைய
செயலை செய்ய மாட்டார்கள்.
இத்தகையவர்கள்
மிகவும் ஆபத்தானவர்கள்.
தான் வாழ்வதற்கு தேவையான சுகபோக வாழ்க்கை
தனக்கு
கிடைக்கிறது என்றால் ,
யாரையும்
காட்டிக் கொடுக்கக் கூட தயங்க மாட்டார்கள்
;
மானம் மரியாதை பற்றி கவலைப்
படமாட்டார்கள் ;
அசிங்கத்தைப்
பற்றி அச்சப்பட மாட்டார்கள் ;
சுய நல தன்மை கொண்டவர்கள்
;
தான் வாழ பிறரை அழிக்கத்
தயங்க மாட்டார்கள்;
தான் வாழ பிறரை ஏமாற்ற
தயங்க மாட்டார்கள் ;
இரக்கம்
கொன்ற பாவிகள் இவர்கள் ;
ஏமாற்றத்
தெரிந்த திருடர்கள் இவர்கள் ;
கள்ள உள்ளம் கொண்ட கருணை
அற்றவர்கள் ;
இரக்கத்தை
கொன்றவர்கள் ;
இத்தகையவர்கள்
தெரியாதவரில் தவறு
செய்யாதவரை
தவறு செய்ததாக சித்தரிக்கும் இவர்கள்
ஆபத்தானவர்கள்
,
மறை கழன்ற பேர்வழிகள் ,
பித்து
பிடித்த தன்னலம் மிக்கவர்கள் என்று
இந்த சமுதாயம் அவர்களை அடையாளம் காட்டுகிறது
.
இழிவு படுத்தப்பட்ட தவறு செய்யாதவர் ,
இந்த இழிவான நடை முறை
செயலுக்கு வருத்தப்பட மாட்டார் ,
இவையெல்லாம்
அவரை பெரிதும் பாதிக்காது .
காதலிக்காத
ஒரு நடிகை ஒருவரை காதலிப்பதாக
செய்தி
வந்தால் காதலிக்காத அந்த நடிகை
காதலிக்காத
தன்னைப் பார்த்து
காதலிப்பதாக
பொய் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
அதற்கு
கிசு கிசு என்று பெயரிட்டிருக்கிறார்கள்
என்ற செய்தியை
என்ற பொய் செய்தியைப் பார்த்து
விட்டு
காதலிக்காத
அந்த நடிகை
தான் பிழைப்பதற்காக
தானும் தன் குடும்பமும்
பிழைப்பதற்காக
அந்த வியாபாரிகள் அப்படி போட்டிருக்கிறார்கள்
என்று எள்ளி நகையாடி விட்டு
அந்த செய்தியை துாக்கி கிடப்பில் போட்டு
விட்டு
தன் கடமையை செய்ய போய்
விடுவார்.
தவறு செய்தவர் தான்
செய்த தவறை மறைக்க முயற்சி
செய்வார்.
தவறு செய்யாதவர் எதையும்
மறைக்க வேண்டிய அவசியம் இல்லை
.
தவறு செய்யாதவர் ; உண்மையாக
இருப்பவர் ;
தன்னை இழிவு படுத்தும்செயல்களை கண்டு
அதனை பெரிது படுத்தாமல் தன்
கடமையை ஆற்ற போய் விடுவார்;
சமுதாயத்தில்
சுதந்திரமாக சுற்றி திரிவார்;
மக்களோடு
மக்களாக இணைந்து இருப்பார் .
தவறு செய்தவரை இழிவு படுத்தினால் அது
அவரை பாதிக்கும்.
தவறு செய்யாதவரை இழிவு படுத்தினால்
இழிவு படுத்தியவர் தான் இழிவு படுத்தப்படுவார்
.
தெரிந்தவரில்
தவறு செய்தவரையும் ,
தெரிந்தவரில்
தவறு செய்யாதவரையும் ,
தெரியாதவரில்
தவறு செய்தவரையும் ,
தெரியாதவரில்
தவறு செய்யாதவரையும் ,
இழிவு படுத்துவது என்பது தவறான செயலாகும்
.
யாரும்
யாரையும் இழிவு படுத்தும்
உரிமை யாருக்கும் கிடையாது
.
இழிவு படுத்துபவர் நஞ்சுள்ள
பாம்பிற்கு சமம் ;
இழிவு படுத்தப்படும் உண்மையானவர் நஞ்சற்ற
பாம்பிற்கு சமம் ;
நஞ்சுள்ள
பாம்பு தன்னை புற்றுக்குள்
மறைத்துக்
கொண்டு வாழும் .
நஞ்சு இல்லாத தண்ணீர் பாம்பு வெளியே சுற்றும்
நஞ்சுள்ள
மனம் கொண்டவர்கள்
எப்போதும்
தங்களை மறைத்துக் கொண்டு வாழ்வார்கள் .
சமுதாயத்தில்
தன்னை வெளிப்படுத்திக் கொண்டு
வாழ மாட்டார்கள் ;
தன்னை மறைத்துக்கொண்டு வாழ்வார்கள் ;
தன்னை யார் என்று இந்த
சமுதாயத்திற்கு அடையாளம் காட்டி
பிறரை இழிவு படுத்தும் அளவுக்கு
தைரியமில்லாதவர்கள் ,
தன்னை அடையாளம் காட்டி இழிவு படுத்தினால்
தனக்கு
ஆபத்து ஏதேனும் ஏற்படுமோ ?
தன் வாழ்க்கை பாதிக்கப்படுமோ ?
தன் மன அமைதி குலையுமோ
?
என்ற காரணத்தினால் தான்
நஞ்சுள்ளம்
கொண்ட இழிவு படுத்துபவர்கள்
மறைந்து
வாழ்வார்கள் .
அவர்கள்
சமுதாயத்தில் சுதந்திரமாக வாழ்ந்தால்
சுதந்திரமாக
ஒருவரை இழிவு படுத்தினால்
வாழ்க்கையை
வாழ்க்கையாக வாழ முடியாது
என்ற காரணத்தினால் தான் .,
ஒருவரை
நேரடியாக எதிர்க்க முடியாத
கோழைத்
தனத்தினால் தான்
தன்னை மறைத்துக்கொண்டு இழிவு படுத்துவர்.
இழிவு படுத்தும் வஞ்சனை உள்ள தீயவர்கள்
சமுதாயத்தில்
தங்களை மறைத்துக் கொண்டே வாழ்வர் ;
இழிவு படுத்தப்பட்ட வஞ்சனை இல்லாத
நெஞ்சுள்ளம்
கொண்ட உண்மையானவர்
சமுதாயத்தில்
எல்லோரோடும் கலந்து இருப்பார்;
நஞ்சு உள்ள பாம்பு தன்னை
எப்படி புற்றுக்குள்
மறைத்துக்
கொண்டு வாழ்கிறதோ அதைப்போல ,
இழிவு படுத்தும் வஞ்சனை உள்ள தீயவர்கள்
சமுதாயத்தில்
தன்னை மறைத்துக் கொண்டே வாழ்வர்.
நஞ்சு இல்லாத நீர் ப்பாம்பு
வெளியே எப்படி சுதந்திரமாக
சுற்றி
திரிகிறதோ அதைப்போல ,
இழிவுபடுத்தப்பட்ட
வஞ்சனை இல்லாத நெஞ்சுள்ளம்
கொண்ட உண்மையானவர்
சமுதாயத்தில்
எல்லோரோடும் கலந்து இருப்பார்
என்கிறார்
மூதுரையில்
ஔவையார் .
இயேசு கிறிஸ்து – ஔவையார் :
பைபிள் ,
இழிவு படுத்துபவர்கள் சமுதாயத்தில்
மக்களோடு
மக்களாக இருக்க
மாட்டார்கள்
ஆனால்
இழிவு படுத்தப்பட்டவர் உண்மையானவராக
இருக்கும் பட்சத்தில்
அவர் சமுதாயத்தில்
இருந்து விலகி மறைந்து
வாழ வேண்டிய அவசியமில்லை
மக்களோடு
மக்களாக சுதந்திரமாக வாழ்வார்கள்
என்கிறது .
அவ்வாறே ,
ஔவையாரும் ,
நஞ்சுள்ளம்
கொண்ட இழிவு படுத்தும் தீயவர்கள்
சமுதாயத்தில்
தன்னை மறைத்துக் கொண்டு வாழ்வர் .
இழிவு படுத்தப்பட்ட நஞ்சற்ற வஞ்சனை இல்லாத
உண்மையானவர்
சமுதாயத்தில்
எப்போதும்
மக்களோடு
மக்களாக வாழ்வார்கள்
என்கிறார்.
No comments:
Post a Comment