இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர் - பிறர்க்குஇன்னா- பதிவு-66
“””பதிவு அறுபத்துஆறை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்”””
இயேசு கிறிஸ்து :
”வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்.”
---மத்தேயு - 21 : 33
“கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி
தன் ஊழியயக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான்.”
---மத்தேயு - 21 : 34
“தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப்பிடித்து, ஒருவனை அடித்து,
ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.”
---மத்தேயு - 21 : 35
“பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை
அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.”
---மத்தேயு - 21 : 36
“கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி,
தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.”
---மத்தேயு - 21 : 37
“தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக் கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;”
---மத்தேயு - 21 : 38
“அவனைப் பிடித்துத் திராட்சத் தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலை செய்தார்கள்.”
---மத்தேயு - 21 : 39
“அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார்.”
---மத்தேயு - 21 : 40
“அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்கவேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள்.”
---மத்தேயு - 21 : 41
“இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?”
---மத்தேயு - 21 : 42
“ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.”
---மத்தேயு - 21 : 43
“இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுககிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”
`---மத்தேயு - 21 : 44
வேலை நடைபெறும் விதத்தைப் பொறுத்து
மனிதர்களை இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்:
ஒன்று : வேலை செய்பவர்கள்
மற்றொன்று : வேலை செய்யாதவர்கள்
வேலை செய்பவர்கள் எப்போதும்
தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்வார்கள்;
உண்மையாக வேலை செய்வார்கள் ;
அரட்டை அடிக்க மாட்டார்கள் ;
காலத்தை வீணாக்க மாட்டார்கள் ;
வேலை செய்வது போல் நடிக்க மாட்டார்கள் ;
அதிக வேலை பளு உள்ளது போல்
காட்டிக் கொள்ள மாட்டார்கள் ;
தனக்குத் தான் பிறரை விட அதிக வேலை என்று
காட்டிக் கொள்ளமாட்டார்கள் ;
வேலை செய்பவரை தொல்லை கொடுக்கமாட்டார்கள் ;
வேலை நடைபெறுவதற்கு இடைஞ்சலாக இருக்க மாட்டார்கள் ;
தன் வேலையை மற்றவர்கள் மேல் போட மாட்டார்கள் ;
வேலை செய்யாதவர்கள் மத்தியில் இருந்தாலும்
வேலையை திறம்பட செய்ய முயலுவார்கள் ;
பிறர் வேலையில் குறை காண முயல மாட்டார்கள் ;
உண்மையாக வேலை செய்பவர்களைப்
பார்த்தால் உதவுவார்கள் ;
போலியாக வேலை செய்வது போல்
நடிப்பவர்களிடமிருந்து விலகுவார்கள் ;
வேலை செய்பவர்கள் யார் ?
வேலை செய்யாதவர்கள் யார் ?
என்று உணர்ந்து வேலை செய்பவருடன்
நட்பு கொள்வார்கள் ;
வெட்டி அரட்டை,
வீண் கதை,
பொல்லாங்கு பேசுவது,
புறங் கூறுவது,
அநாகரிகமாக நடந்து கொள்வது,
பிறர் மனதை வருத்தப்பட வைப்பது,
போன்ற செயல்களில் ஈடுபடாமல்
தன் வேலையில் மட்டுமே
கவனமாக இருப்பார்கள்
உண்மையாக வேலை செய்பவர்கள்.
வேலை செய்யாதவர்களை,
ஒன்று : வேலை செய்வது போல் நடிப்பவர்கள்
மற்றொன்று : வேலையில் ஈடுபாடு இல்லாமல் வேலை
செய்பவர்கள்
என்ற இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்.
செய்பவர்கள்
என்ற இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்.
இந்த இரண்டு நிலையிலும் உள்ளவர்கள்
மிகவும் ஆபத்தானவர்கள்
இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
கவனமாக நடந்து கொள்ள வேண்டும்
தான் வாழ எந்த நிலைக்கும் செல்ல தயங்காதவர்கள்;
எந்த தவறையும் துணிந்து செய்ய பயப்படாதவர்கள்;
தன்னை நிலைநிறுத்திக் கொள்ள
எந்த தவறான வழியையும் பின்பற்ற
தயங்காதவர்கள்;
தன் வேலையை தக்க வைத்துக் கொள்ள
எந்த ஒழுக்கக் கேடான செயலையும் துணிந்து செய்பவர்கள்;
இந்த நிலையில் உள்ளவர்களுக்கு
வேலை செய்பவர்களைக் கண்டால் பிடிக்காது
அவர்கள் மேல் பொறாமை கொள்வார்கள்;
காழ்ப்புணர்ச்சி கொள்வார்கள்;
பகைமையை நெஞ்சில் வைத்துக் கொண்டு
பல்லிளித்துக் கொண்டு திரிவார்கள்;
வேலை செய்பவர்களுக்கு எதிராக
வேலை செய்வது போல் நடிப்பார்கள்
வேலையில் ஈடுபாடு இல்லாதவர்கள் ;
வேலையற்றதுகள் கும்பலில் சேர்ந்து கொள்வார்கள்;
வேலை செய்பவர்களுக்கு இடையூறு செய்வார்கள்;
அவர்கள் மனதை வருத்தப்பட வைப்பார்கள்;
தன் வேலையை வேலை செய்பவர்கள்
தலையில் கட்ட சூது செய்வார்கள்;
வேலை செய்யாமல் சும்மா இருப்பதால்
வேலை செய்பவருக்கு தொல்லை கொடுப்பார்கள்;
அவர்கள் மனம் வருந்தும்படி சதித் திட்டம் தீட்டி
உயரதிகாரிகள் கால் பிடித்து
தங்கள் வேலைகளை
வேலை செய்பவர்கள்
தலையில் கட்டி விடுவார்கள்;
இத்தகையவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
இத்தகைய தவறான எண்ணம் கொண்ட
தகாத வேலை செய்பவர்களின் செயல்களால்
உண்மையாக வேலை செய்பவர்களையும்
வேலை செய்ய விடாமல் தடுத்து,
மனம் வெறுக்க வைத்து,
உள்ளம் வருத்தப்பட வைத்து,
கண்ணீர் சிந்த வைத்து,
இதயம் நொறுங்க வைத்து,
நெஞ்சம் கலங்க வைத்து,
வாழ்வை நோக வைத்து,
வேலை செய்யவிடாமல் தடுத்து,
வேலையே தனக்கு வேண்டாம் என்று
சொல்லும் நிலைக்கு
ஆளாக்கி வைத்து விடுவார்கள்
இவர்கள்.
இத்தகைய போலியான ஆட்களாலும்
அவர்களை வழிநடத்தும் அதிகாரிகள்
அவர்களை நம்பி
அவர்கள் பின்னால்
செல்வதாலும் தான்
பல கம்பெனிகள்,
பல தொழில்கள்,
இருந்த இடம் தெரியாமல்
காணாமல் போய் இருக்கிறது.
உண்மையாக வேலை செய்யாதவர்களை
உணர்ந்து கொள்ளாத
அதிகாரிகளும் முதலாளிகளும்
இருந்த இடம் தெரியாமல்
காணாமல் போனது இதனால் தான்
உண்மையாக வேலை செய்யும் தொழிலாளர்களை
மதிக்காத எந்த தொழிலும்,
எந்த தொழில் துறையும்,
எந்த கம்பெனியும்,
உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.
தவறான தொழிலாளர்களை,
வேலை செய்வது போல் நடிப்பவர்களை ,
வேலையில் ஈடுபாடு இல்லாதவர்களை,
வேலையில் அமர்த்துவது என்பது
வேலையில் அமர்த்துபவருக்கே
கேடாக அமைந்து விடும்:
உண்மையானவர்களை அறிந்து
வேலைகளை ஒப்படைக்க வேண்டும்
அப்பொழுது வேலை நடைபெறும்:
தவறானவர்களிடம் வேலையை ஒப்படைத்தால்
நமக்குத் தான் கேடு
நாம் தான் வருத்தப்பட வேண்டும்.
வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன்
ஒரு திராட்சத் தோட்டத்தை உண்டாக்கி
அதைச் சுற்றிலும் வேலியடைத்து
அதில் ஒரு ஆலையை நாட்டி
கோபுரத்தை கட்டி
அதை உண்மையாக வேலை செய்பவர்கள்
யார் என்று அறியாமல்
நம்பிக்கையானவர்கள் யார் என்று உணராமல்
போலியாக இருப்பவர்களிடம்
உண்மையாக இல்லாமல்
போலியான தன்மைகளைத் தன்னுள் கொண்ட
தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு
புறதேசத்துக்குப் போயிருந்தான்.
கனிகாலம் சமீத்தபோது
அதனுடைய கனிகளை வாங்கி வரும்படி
தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பி
கனிகளை வாங்கி வரும்படி சொன்னான்
எஜமானர் எண்ணத்திற்கு மாறாக தோட்டக்காரர்
அந்த ஊழியக் காரரைப் பிடித்து
ஒருவனை அடித்து,
ஒருவனைக் கொலை செய்து ,
ஒருவனைக் கல்லெறிந்து,
கொன்றார்கள்.
எஜமான் முன்பு அனுப்பிய எண்ணிக்கையை விட
அதிகமான எண்ணிக்கையில்
வேறு ஊழியக்காரர்களை அனுப்பினான்.
அவர்களையும் அந்த தோட்டக்காரர்கள் விட்டு வைக்காமல்
முன்பு அனுப்பிய ஊழியக் காரர்களுக்கு
என்ன செய்தார்களோ அதையே இவர்களுக்கும் செய்தார்கள்.
அனுப்பிய யாருக்கும்
அவர்கள் அஞ்சவில்லை என்பதை உணர்ந்து
கடைசியில் எஜமான்
தன்னுடைய குமாரனுக்கு
அஞ்சுவார்கள் என்று சொல்லி
தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
தோட்டக்காரர் எஜமான் மகன் என்றும் பாராமல்
இவன் சுத்தமானவன்
இவனைக் கொன்று
இவன் சுதந்தரத்தை
நாம் அடைந்து கொள்வோம் வாருங்கள் என்று
ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு
அவனை பிடித்துக் கொண்டு போய்
திராட்சத் தோட்டத்திற்குப்
புறம்பே தள்ளிக் கொண்டு போய்
கொலை செய்தார்கள்.
உண்மையாக இல்லாமல்
போலியாக இருப்பவர்களை
எஜமானர்கள் நம்பினால்
எஜமானர்களுக்கு இந்த கதி தான் ஏற்படும்.
தவறானவர்களையும்,
வேலை செய்வது போல் நடிப்பவர்களையும் ,
வேலை செய்ய பிடிக்காதவர்களையும்,
வேலைக்கு அமர்த்தும் எஜமானர்களுக்கு
இந்த நிலை தான் ஏற்படும்.
அதனால் தான் இயேசு,
திராட்சத் தோட்டத்தின் எஜமான் வரும்போது அந்தத்
தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார்.
அதற்கு அவர்கள்
அந்தக் கொடுமைக்கார
தோட்டக்காரரை தேடிப்பிடித்து
கொடுமையாய் அழித்து
ஏற்ற காலங்களில் தனக்குக்
கனிகளைக் கொடுக்கத் தக்க
வேறே தோட்டக்காரரிடத்தில்
திராட்சத் தோட்டத்தைக்
குத்தகையாகக் கொடுப்பான்
என்றார்கள்.
தவறானவர்களை உண்மையானவர்கள் என்று நம்பி
ஒரு செயலை ஒப்படைத்தால்
அவர்கள் நம்பிக்கை துரோகம்
தான் செய்வார்கள்
எஜமான் அழியக் காரணமாவார்கள்.
அத்தகையவரை விலக்கி
உண்மையானவர்களை உண்மையாக
வேலை செய்பவர்களை
வேலை செய்ய அமர்த்தினால் மட்டுமே
எஜமானர் பிழைப்பார்
அதனால் தான் இயேசு கேட்ட கேள்விக்கு
அவர்கள்
அந்தக் கொடியவரை அழித்து
ஏற்ற காலங்களில்
தனக்குக் கனிகளைக் கொடுக்ககத்தக்க
வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத் தோட்டத்தைக்
குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள்
இயேசு அவர்களை நோக்கி
வீடு கட்டுகிறவர்கள்
வீடு கட்டும்போது
வீடு கட்டுவதற்கு உபயோகப்படும் கல்லையே
வீடு கட்டுவதற்கு பயன்படுத்துவார்கள்
வீடு கட்டுவதற்கு உபயோகப் படாத கல்லை
ஒன்றாக குவித்து ஓரிடத்தில்
ஒதுக்குப் புறமாக வைப்பார்கள்.
அதைப்போல் வேலை செய்யாதவர்கள்
வேலை செய்வது போல் நடிப்பவர்கள்
உண்மையாக இல்லாமல்
போலியாக இருப்பவர்கள்
ஒன்றாக கூடி இருப்பார்கள்.
தேவனுடைய ராஜ்யமானது
இத்தகைய தவறான
எண்ணம் கொண்டவர்களிடமிருந்தும்
தகாத செயல்கள் செய்பவர்களிடமிருந்தும்
நம்பிக்கை துரோகம் செய்பவர்களிடமிருந்தும்
நீக்கப்பட்டு
உண்மையானவர்களிடம்
உண்மையாக இருப்பவர்களிடம்,
உண்மையாக நடந்து கொள்பவர்களிடம்,
இத்தகைய தன்மைகளைக் கொண்ட
ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.
‘
அதாவது தேவனுடைய ராஜ்யம்
போலியானவர்களுக்கு கொடுக்கப்படாமல்
உண்மையானவர்களுக்கே கொடுக்கப்படும்.
கெட்டவர்களிடத்தில்
சேருபவனும் கெட்டவனாவான்;
கெட்டவன் யாருடன் சேருகிறானோ
அவனையும் கெட்டவன்
கெடுத்து விடுவான்;
எனவே, நல்ல எண்ணம் கொண்டு
நல்லவர்களிடம் மட்டுமே சேர வேண்டுமே தவிர
கெட்டவர்களிடத்தில் சேரக்கூடாது.
உண்மையாக இல்லாமல்
போலியாக நடித்து
நம்பிக்கை துரோகம் செய்பவர்களுக்கு
தேவனுடைய ராஜ்யம் கிடைக்காது.
உண்மையான உள்ளம் கொண்டு
உண்மையாக நடந்து கொள்பவர்களுக்கே
தேவனுடைய ராஜ்யம் கிடைக்கும்
என்கிறார் இயேசு.
திருவள்ளுவர்:
“”””””பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் நமக்குஇன்னா
பிற்பகல் தானே வரும்”””””
-------திருக்குறள்----திருவள்ளுவர்
பெயர் எடுப்பதில் மனிதர்கள் இரண்டு
நிலைகளைப் பயன்படுத்துகின்றனர்:
ஒன்று : தான் கஷ்டப்பட்டு உழைத்து கிடைக்கும்
வெற்றியின் மூலம் பெயர் எடுப்பது
வெற்றியின் மூலம் பெயர் எடுப்பது
மற்றொன்று : பிறர் உழைப்பால் கிடைத்த வெற்றியை
தன்னுடையது என்று காட்டி பெயர் எடுப்பது
தன்னுடையது என்று காட்டி பெயர் எடுப்பது
அதாவது உண்மையாக பெயர் எடுப்பது
பிறரை ஏமாற்றி பெயர் எடுப்பது.
உண்மையாக பெயர் எடுப்பவர்களை விட
ஏமாற்றி பெயர் எடுப்பவர்கள் தான் அதிகம்.
உண்மையைக் கொன்று பெயர் எடுக்கிறவர்கள்
இருக்கின்ற காரணத்தினால்,
போலியாக நடிப்பவர்கள் இருக்கின்ற காரணத்தினால்,
தவறு செய்ய அஞ்சாதவர்கள் இருக்கின்ற காரணத்தினால்,
இரக்கத்தை கொன்று வாழ்பவர்கள்
இருக்கின்ற காரணத்தினால்,
கருணை மனம் இல்லாமல் அலைபவர்கள்
இருக்கின்ற காரணத்தினால்,
பாவம் செய்ய துணிந்தவர்கள்
துணிந்து பாவம் செய்கின்ற காரணத்தினால்,
ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள்;
ஏமாற்று வேலை செய்பவர்கள்;
ஏமாற்றி பெயர் எடுப்பவர்கள்;
சமுதாயத்தில் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்.
ஏமாற்றுபவர்கள் எண்ணிக்கை
வளர்ந்து கொண்டே இருக்கிறது;
தவறு செய்பவர் எண்ணிக்கை
பெருகிக் கொண்டே வருகிறது;
தவறுகள் வளர்ந்து கொண்டே
பெருகிக் கொண்டே வருகிறது;
தவறுகள் பெருகிக் கொண்டே வருவதற்கும்
தவறு செய்பவர்கள் எண்ணிக்கை
உயர்ந்து கொண்டே வருவதற்கும்
சமுதாய கண்ணோட்டம்
ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
மனிதனுடைய பார்வையைப் பொறுத்து
கண்ணோட்டம் மாறுபடுகிறது
கண்ணோட்டம் ஒவ்வொருவருடைய
மனதைப் பொறுத்து வேறுபடுகிறது.
பார்வை என்பது பார்ப்பவரைப் பொறுத்து ஏற்படுகிறது
நல்லவைகளோ, கெட்டவைகளோ
அதைப் பார்க்கும்
பார்வையாளர்களின் பார்வையைப் பார்த்து
கண்ணோட்டம் மாறுபடுகிறது.
பார்வையும், கண்ணோட்டமும்
ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது
அது மட்டுமல்ல
செயல், பார்வை, எண்ணம், கண்ணோட்டம்
ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.
ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது
ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கிறது;
பிணைந்திருக்கிறது;
இணைந்திருக்கிறது;
ஒரு செயல் நல்ல செயலாக இருக்கும்போது
நல்ல எண்ணம் கொண்டவர்கள் பார்க்கும்போது
அவர்கள் கண்ணோட்டம்
அதை ஒரு நல்ல செயலாக பார்க்கிறது.
ஒரு செயல் நல்ல செயலாகவோ அல்லது
தவறான செயலாகவோ
இருக்கும்போது
நல்ல எண்ணம் கொண்டவர்கள்
தவறான எண்ணம் கொண்டவர்கள்
பார்க்கும் பார்வையைப் பொறுத்து
கண்ணோட்டம் மாறுபடுகிறது.
தவறு செய்பவர்கள்
நன்றாக வாழ்வதைக் கண்டு
அதைப் பார்க்கும் பலர்
தவறு செய்தவன் நன்றாக இருக்கிறான்
தவறு செய்யாத நாம் கஷ்டப்படுகிறோம்
என்று நினைக்கின்றனர்.
நல்லது செய்து இச்சமுதாயத்தில்
கஷ்டப்படுவதை விட தவறு செய்து
நன்றாக வாழலாம் என்று நினைக்கின்றனர்.
தவறான ஒரு செயலை
தவறான எண்ணம் கொண்டு
தவறான பார்வை கொண்டு பார்ப்பதால் தான்
தவறான கண்ணோட்டம் உண்டாகிறது
தவறுகள் வளரவும்
தவறானவர்கள் பெருகவும் காரணமாகிறது
தவறான ஒன்றை உண்மை என்று நம்பி
அதனை பின்பற்றுபவர்களால்
தவறான பாதையில் சென்றவர்களின் பாதையை
பின்பற்றுவதால்
தவறுகள் நடப்பதற்கும்
தவறானவர்கள் உருவாவதற்கும்
காரணமாக அமைகிறது.
தவறானவை எவை என்றும்
தவறான பாதை எவை என்றும்
தவறானவர்கள் யார் என்றும்
தவறானவைகளை நினைத்தால்
தவறானவைகளை செயல்படுத்தினால்
என்ன நடக்கும் என்று
சமுதாயத்திற்கு தெரியாத காரணத்தினால்
தவறானவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள்
நலமாக இருக்கிறார்கள் என்று பார்த்து
மனதிற்குள் ஒரு எண்ணம் வளர்த்து
தவறானவை செய்தவர்களே
நன்றாக இருக்கும் போது
நல்லது செய்து
நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும்
நல்லது நினைத்து
நல்லது சொல்லி
நல்லது செய்து
ஒரு பயனும் இல்லை,
நான் தொடர்ந்து
கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்;
வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன்;
கவலையில் வருந்திக் கொண்டிருக்கிறேன்;
சோகத்தில் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறேன்;
துன்பத்தில் துவண்டு போய் இருக்கிறேன்;
கலக்கத்தில் கலங்கிப் போய் இருக்கிறேன்;
தவறு செய்பவர்களே நன்றாக இருக்கும்போது
நல்லது செய்து
நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று,
ஒரு செயலை
ஒரு நிகழ்வை தான் பார்க்கும் போது
பார்வையில் தவறான எண்ணம் கொண்டு
நல்லவர்கள்
தவறானவர்களைப் பின்பற்றுவதால்
தவறுகள் வளர்ந்து
கொண்டே இருக்கிறது
தவறானவர்கள் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள்.
நியூட்டனின் மூன்றாவது விதிப்படி,
ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமாக
ஆனால் எதிர் திசையில் உள்ள
ஓர் எதிர்வினை உண்டு.
இந்த விஞ்ஞான விதி
விஞ்ஞானததிற்கு மட்டுமல்ல
மெய்ஞ்ஞானத்திற்கும் பொருந்தும்.
நாம் செய்யும்
ஒவ்வொரு செயலுக்கும் விளைவு உண்டு
விளைவு இல்லாத செயல் என்ற ஒன்று இல்லை
ஒவ்வொரு செயலுக்குள்ளும் விளைவு
அதனுள்ளே கலந்திருக்கிறது
செயலும், விளைவும்
ஒன்றுடன் ஒன்று பிணைந்தவை;
செயலும், விளைவும் தனித்தனியாக இயங்காது.
சக்தியும், சிவனும் எப்படி
ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கிறதோ
அப்படியே செயலும் விளைவும்
ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கிறது.
ஒரு நல்ல செயலை செய்தால் விளைவு
நல்ல விளைவாக இருக்கும்;
ஒரு கெட்ட செயலை செய்தால் விளைவு
கெடட விளைவாக இருக்கும்;
நாம் எந்த செயலைச் செய்தாலும்
காலம், செயலின் அழுத்தம்
ஆகியவற்றைப் பொறுத்து
விளைவானது தகுந்த காலத்தில் வெளிப்படும்.
தீயினில் விரலை வைத்தால்
அது உடனே சுடுகிறது கை எரிகிறது
தீயினில் விரலை வைப்பது செயல்
சுடுவது விளைவு
இது உடனே வெளிப்படுவது.
பந்தை சுவற்றில் அடித்தால்
திரும்பி நம் கைக்கு வருகிறது
பந்தை சுவரில் அடிப்பது செயல்
சுவரில் பட்ட பந்து மீண்டும்
நம் கைக்கு வருவது விளைவு.
நாம் ஒரு தவறான செயலையோ அல்லது
ஒரு நல்ல செயலையோ
மனதால் சிந்திக்கும் போதே
அதற்குரிய பலன்
50 சதவீதம் நமக்கு கிடைத்து விடும்
நல்ல நினைவு என்றால்
அதற்குரிய விளைவு 50 சதவீதமும்,
கெட்ட நினைவு என்றால்
அதற்குரிய விளைவு 50 சதவீதமும்,
நமக்குக் கிடைத்து விடும்.
பின்னர் அதை செயல்படுத்தும் போது
முழுவிளைவு 100 சதவீதம் வந்து விடும்
ஒரு செயலை
நினைக்கும் போது 50 சதவீதமும்
அதை செயல்படுத்தும் போது 50 சதவீதமும்
ஆக மொத்தம் 100 சதவீதம்
அந்த செயலுக்குரிய
விளைவு வரும்.
செயலுக்கேத்த விளைவு
செயல்படுத்தும் போது மட்டுமல்ல
சிந்திக்கும் போதே
அதற்குரிய விளைவு பதிவாகி விடும்.
அதனால் தான்
நல்லதே நினை
நல்லதே சொல்
நல்லதே செய்
நல்லதே நடக்கும் என்று
கூறுகிறார்கள்.
நல்ல செயலுக்குள் நல்ல விளைவு இருக்கும்;
கெட்ட செயலுக்குள் கெட்ட விளைவு இருக்கும்;
நல்ல செயலைச் செய்யும் விளைவு
நல்ல விளைவாக இருக்கும்;
கெட்ட செயலைச் செய்யும் போது விளைவு
கெட்ட விளைவாகத் தான் இருக்கும்;
ஒரு செயலைச் செய்து விட்டால்
அதற்குரிய விளைவை
அனுபவித்தே ஆக வேண்டும்.
ஒரு செயலைச் செய்து விட்டு
அதற்குரிய விளைவை அனுபவிக்காமல்
யாரும் தப்பிக்க முடியாது.
செயலுக்குரிய விளைவை
செயலைச் புரிந்தவர் அனுபவித்தே ஆக வேண்டும்
அது நல்ல செயலாக இருந்தாலும்
கெட்ட செயலாக இருந்தாலும்
செயலுக்குரிய விளைவை
அனுபவித்தே ஆக வேண்டும்.
செயலுக்குரிய விளைவு
உடனே வெளிப்படலாம்;
நாள் கடந்து வெளிப்படலாம்;
வாரம் கடந்து வெளிப்படலாம்;
மாதம் கடந்து வெளிப்படலாம்;
ஆண்டுகள் கடந்து வெளிப்படலாம்;
அல்லது
ஜென்மம் கடந்து வெளிப்படலாம்;
ஜென்மங்கள் கடந்து வெளிப்படலாம்;
ஆனால் செயலுக்குரிய விளைவு
வெளிப்பட்டே ஆக வேண்டும்.
ஜென்மங்கள் பல கடந்து கூட
செயலுக்குரிய விளைவு வெளிப்படும்
வெளிப்பட்டே தீரும்.
செயலுக்குரிய விளைவை குறைக்கலாம்
ஆனால் செயலுக்குரிய விளைவை
வெளிப்படாமல் தடுக்க முடியாது.
செயலுக்குரிய விளைவை தடுக்க முடியாது
ஆனால் செயலுக்குரிய விளைவை குறைக்கலாம்.
மழை பெய்வது விதி
அதை தடுக்க முடியாது
ஆனால் குடை பிடித்து மழையில் இருந்து
நம்மை காப்பாற்றி கொள்ளலாம்
இது மதி.
மழை என்ற விளைவை
நம்மால் நிறுத்த முடியாது.
ஆனால் அதன் தாக்கத்திலிருந்து
ஓரளவு நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.
அதைப்போலத் தான் விளைவும்
தவறான செயலை செய்து விட்டு
அதற்குரிய விளைவு
நம்மை பாதிக்காமல் இருக்க
முயற்சி செய்தால் முடியாது;
ஏனென்றால் விளைவை நிறுத்த முடியாது;
ஆனால், அதன் தாக்கத்திலிருந்து
ஓரளவு நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.
100 சதவீதம் பாதிப்பு வரும் என்றால்
70 சதவீதம்
80 சதவீதம்
வரை குறைக்கலாம்
100 சதவீதம் விளைவை நிறுத்த முடியாது.
நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப
பாவ புண்ணியங்கள்
கர்மவினைப் பதிவுகளாக பதிந்து விடுகிறது
இந்த கர்மவினைப் பதிவுகளை
நாம் அனுபவித்து விட்டால்
நாம் கழித்து விட்டால்
பிறவி கிடையாது.
கர்மவினைப் பதிவுகள்
இருக்கின்ற காரணத்தினால் தான்
நமக்கு பிறவிப் பெருங்கடல்
நீள்கிறது.
நாம் செய்யும் செயல்கள்
காலம்,
செயலின் அழுத்தம்,
கோள்களின் சஞ்சாரம்,
இவைகளைப் பொறுத்து
உண்டாகும் கர்மவினைப் பதிவுகள்
உடனே வெளிப்படலாம் அல்லது
ஜென்மம் கடந்து கூட வெளிப்படலாம்.
கர்மவினை கழிந்தவருக்கு
பிறவி கிடையாது
கர்மவினை உள்ளவருக்கு
பிறவி உண்டு.
இவைகளை மனதில் கொண்டு
நல்லது செய்தால் நல்லது கிடைக்கும்
கெட்டது செய்தால் கெட்டது கிடைக்கும்
என்பதை நினைவில் கொண்டு
நம் செயல்களைச் செய்ய வேண்டும்
அதனால் தான் திருவள்ளுவர்
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்
பிறர்க்கு நாம்
நல்லது செய்தாலும்
கெட்டது செய்தாலும்
அதற்குரிய விளைவை
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
அதை அனுபவித்தே
ஆக வேண்டும்
ஒரு ஜென்மத்தில்
பிறர்க்கு நாம் செய்யும்
செயலுக்குரிய விளைவை
அந்த ஜென்மத்தில்
அனுபவிக்கா விட்டாலும்
கர்மவினை கழியும் வரை
எடுக்கும் ஏதேனும் ஒரு ஜென்மத்தில்
விளைவை அனுபவித்தே ஆக வேண்டும்
அதனால் தான் திருவள்ளுவர்
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்
நாம் பிறர்க்கு ஒரு செயலை செய்தால்
தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்
அதற்குரிய விளைவானது
அடுத்து நாம் எடுக்கப்போகும்
ஏதேனும் ஒரு ஜென்மத்தில் வெளிப்படும்
அந்த விளைவை நாம் அனுபவித்தே
ஆக வேண்டும் என்கிறார்.
ஒரு செயலைச் செய்து விட்டு
அதற்குரிய விளைவிலிருந்து
யாரும் தப்பிக்க முடியாது,
இந்த நிலையில் தவறை செய்து விட்டு
தவறான விளைவை ஏன் அனுபவிக்க வேண்டும்.
விளைவிலிருந்து தப்பிக்க முடியாது
என்ற நிலை இருக்கும்போது
ஏன் தவறு செய்ய வேண்டும்;
கர்மவினையைப் பெருக்க வேண்டும்;
பிறவியை நீள வைக்க வேண்டும்;
பிறவி உருவாகாமல் இருக்க,
கர்மவினைகள் எழும்பாமல் இருக்க,
நாம் தவறு செய்யாமல் இருக்க வேண்டும்.
அதனால் தான் திருவள்ளுவர்,
தவறான செயலுக்குரிய விளைவு
தவறானதாக வெளிப்படும் என்ற
நிலை இருக்கும்போது
தவறானவைகளை விலக்கி
நல்லதையே
செய்து வாழ வேண்டும்.
கர்மவினைகளில்
பாவங்கள் கழிய வேண்டும்
புண்ணியமும் கழியும் போது
பிறவி சுழல் நிற்கிறது;
பிறப்பு நின்று விடுகிறது;
நாம் ஒரு ஜென்மத்தில் செய்யும்
செயலுக்குரிய விளைவை
நாம் ஏதேனும் ஒரு ஜென்மத்தில்
அனுபவிக்காமல் தப்பிக்க முடியாது.
எனவே நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
என்கிறார் திருவள்ளுவர்.
இயேசு கிறிஸ்து – திருவள்ளுவர் :
இயேசு,
ஒருவன் தான் செய்யும்
செயலுக்குரிய விளைவை அனுபவித்தாலும்
இறைவனுடன் இணைவதன் மூலம்
இறைவனுடைய அருளாசியைப் பெறுவதன் மூலம்
அதன் தாக்கத்தைக் குறைக்கலாம்
என்கிறார்
இயேசு,
ஒருவன் தான் செய்யும்
செயலுக்குரிய விளைவை அனுபவித்தாலும்
இறைவனுடன் இணைவதன் மூலம்
இறைவனுடைய அருளாசியைப் பெறுவதன் மூலம்
அதன் தாக்கத்தைக் குறைக்கலாம்
என்கிறார்
அவ்வாறே,
திருவள்ளுவரும்,
திருவள்ளுவரும்,
ஒருவன் ஒரு ஜென்மத்தில்
எந்த செயலை செய்கிறானோ
அந்த செயலுக்குரிய விளைவை
எடுக்கும் ஏதேனும் ஒரு ஜென்மத்தில்
அனுபவித்தே ஆக வேண்டும் என்கிறார்.
“””””போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
போற்றினேன் பதிவு அறுபத்துஆறு ந்தான்முற்றே”””
No comments:
Post a Comment